-
1st June 2016, 02:22 PM
#1
Senior Member
Veteran Hubber
நீங்கதான் ரியல் ஹீரோ : சூர்யாவை புகழ்ந்த பிரபல நடிகர்
சென்னை அடையாறு மேம்பாலத்தில் காரில் வந்த பெண்மணியிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை நடிகர் சூர்யா தடுத்த விவகாரத்தில், அவரை பிரபல நடிகர் புகந்துள்ளார்.
சென்னை அடையாறு திருவிக மேம்பாலத்தில் ஒரு பெண்மணி ஓட்டிய கார் மீது, மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் மோதியதால், அந்த வாலிபருக்கும், அந்த பெண்மனிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த நடிகர் சூர்யா, அந்த இளைஞனை அடித்ததாகவும் கூறப்பட்டது.
அந்த வாலிபர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த வாலிபரை அடிக்கவில்லை என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டது. அந்த வாலிபரும் சூர்யா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண்மணியான புஷ்பா கிருஷ்ணசுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் சரியான நேரத்தில் தனக்கு சூர்யா உதவினார் என்றும், தன்னிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் தன்னை தாக்கவிடாமல் அவர் பார்த்துக் கொண்டார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜி அமரன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ நீங்கதான் ரியல் ஹீரோ” என்று நடிகர் சூர்யாவை பாராட்டியுள்ளார்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
1st June 2016 02:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks