-
8th June 2016, 12:13 PM
#71
Senior Member
Veteran Hubber
Total Kamai Iraivi 6th Day Box Office Collection Worldwide Earning Report - www.dekhnews.com
Movie collected between 6.10 Crore from the very first day of release. And movie collected between 7.20 crore from the very second day of release also movie collected between 19.20 Crore from the very first weekend of release and that’s quite exciting.
Movie opened up with the good occupancy and collected good bucks for the makers and that’s amazing. Movie opened up with the 50% occupancy in very first day of release and that’s good also I like the way makers presented the story and that’s awesome.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
8th June 2016 12:13 PM
# ADS
Circuit advertisement
-
8th June 2016, 12:40 PM
#72
Senior Member
Veteran Hubber
திரை விமர்சனம்: இறைவி- TAMIL THE HINDU
ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும் பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் ‘இறைவி’.
அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி) துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி). இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மலர்விழியை மைக்கேல் காதலிக்கிறார், ஆனால் மலர்விழிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.
திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த சினிமாத்தனமான கனவுகள் கொண் டவர் பொன்னி (அஞ்சலி). பொன்னிக்கும் மைக்கேலுக்கும் திருமணமாகிறது.
பட வெளியீடு தொடர்பான தகராறு உச்சத்தை எட்ட, பல குளறுபடிகளும் விபரீ தங்களும் இந்தக் குடும்பங்களின் வாழ்வைக் கலைத்துப் போடுகின்றன. இவற்றின் முடிவு என்ன என்பதைச் சொல்கிறது இந்த நீண்ட படத்தின் கதை.
பெண்களைப் பற்றிய கவலையோ, புரிதலோ அற்ற ஆண்களின் போக்கு பெண்க ளின் வாழ்வை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதைப் படம் அழுத்தமாகக் காட்டுகிறது.
விசுவாசத்தின் அதீத எல்லைக்குள் பிரவேசிக்கும் மைக்கேல், அதனால் பெற்ற பாதிப்பைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அதே எல்லைக்குள் பிரவேசிக்கிறான். மது அடிமை மையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அருள் மீண்டும் தடாலடி முடிவை எடுக்கிறான். தன்னுடைய விருப்பத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும் ஜகனின் செயல்பாடு, பிறரது வாழ்வைச் சிதைக்கிறது. மனைவி மீதான தொடர் அலட்சியம் அருளின் தந்தையின் மீதான பெரும் குற்ற உணர்வாய்க் கவிகிறது. உணர்ச்சி சமநிலையோ, பொறுமையோ, நுண்உணர்வோ அற்ற ஆண்கள் திரும்பத் திரும்பச் சறுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். மழையைச் சுதந்திரத்தின் குறியீடாகக் காட்டியிருக்கும் விதம் கவித்துவமானது.
வசனங்கள் கூர்மையாகவும் வலுவாக வும் உள்ளன. எனினும், பல்வேறு கதாபாத் திரங்களின் கதைகளை சுவாரஸ்யமாகத் திரைக்கதையில் இணைத்துத் தருவதில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார். படத்தின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது. பாடல்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் சில இடங்களில் சமநிலை தவறுகிறது. ஆண் பெண் உறவு சார்ந்த சித்தரிப்பில் ஆழம் இல்லை. ஆண்கள் அனைவருமே நிதானமற்றவர்கள் என்பதுபோன்ற சித்தரிப்பு எதார்த்தத்துக்குப் புறம்பானது. கோவலன் கண்ணகி கதையாடலைச் சமகாலத்தில் பொருத்திக்காட்டும் முயற்சி முழுமை பெறவில்லை. சிலைத் திருட்டுக் காட்சிகள் படத்தின் ஆதார நோக்கத்தில் இருந்து கவனத்தை விலக்குகின்றன. இறுதிக் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் நாடகத்தன்மை தூக்கலாக உள்ளது. பாபி சிம்ஹாவின் பாத்திரப் படைப்பு பலவீனம்.
தனது பாலியல் தேவையை நியாயப்படுத் தும் மலர் கதாபாத்திரம் வலுவானது. ஆனால், இந்தப் பாத்திரம் புனிதமாக்கப்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.
எல்லா நடிகர்களும் தத்தமது கதாபாத்திரங் களை உணர்ந்து இயல்பாக நடித்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலம். எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி, கமலினி, பூஜா தேவாரியா, ராதா ரவி, பாபி சிம்ஹா, சீனுமோகன் ஆகியோரின் நடிப்பு அவர்களைக் கதாபாத்திரங்களாக மட்டும் காண வைக்கிறது. கிளைமாக்ஸில் சூர்யாவின் நடிப்பு அவரைத் தேர்ந்த நடிகராக அடையாளம் காட்டுகிறது. தன் பாத்திரத்தை உணர்ந்து ஆழமான நடிப்பைத் தந்துள்ளார் அஞ்சலி.
மழைக் காட்சியில் தொடங்கி மழைக்காட் சியில் முடியும் படத்தில் சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிக்குமான ஒளியமைப்பு (லைட்டிங்) கதைக்குப் பெருந் துணை. சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை கதை யோட் டத்தைத் தாங்கிப்பிடிக்கிறது. படத்தொகுப் பில் விவேக் ஹர்சன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தப் படமும் உபரிக் காட்சிகளுடன் மூச்சுமுட்ட வைக்கிறது.
பெண்களின் வலியையும் பாடுகளையும் அழுத்தமாகச் சொல்ல முயன்றதற்காக கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அதே நேரம் இதுபோன்ற தீவிரமான கதையைக் கட்டுக்கோப்பான கால அளவில், ஈர்க்கக்கூடிய படமாகத் தந்திருந்தால் இறைவி அருமையான தரிசனமாக அமைந்திருக்கும்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
8th June 2016, 12:47 PM
#73
Senior Member
Veteran Hubber
ஞானவேல்ராஜாவின் குற்றச்சாட்டு ஏற்கக் கூடியதா? - WEBULAGAM
இறைவி விவகாரத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜா தொடர்ச்சியாக கார்த்திக் சுப்பாராஜ் மீது குற்றம் சுமத்தி வருகிறார்.
'ஒன்றிரண்டு கோடிகளில் படம் எடுத்து வந்த சி.வி.குமாரை 13 கோடியில் படமெடுக்க வைத்துவிட்டார் கார்த்திக்' என்பது முக்கியமான குற்றச்சாட்டு.
'இறைவி படத்திற்கு அவர் சொன்ன பட்ஜெட்டைவிட அதிகம் செலவளித்துவிட்டார்' என்பது இன்னொன்று.
இந்த குற்றச்சாட்டுகளுடன், 'தயாரிப்பாளரை இறைவி படம் கொச்சைப்படுத்துகிறது' என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இவை போதாது என்று வாட்ஸ் அப்பில் மேலும் சில குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
"எத்தனையோ வருடங்கள் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கார்த்திக் சுப்பாராஜுக்கு கிடைத்தது. சினிமாவுக்கு வந்த 6 மாதங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. சி.வி.குமார் என்னும் புது தயாரிப்பாளர் அவருடைய கதையைக் கேட்டு, பிடித்துப்போய் அந்தக் கதையை படமாக எடுக்க ரிஸ்க் எடுத்து ஓர் இயக்குநராக அவரை உருவாக்கிவிட்டார். சொன்ன பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் இந்தப் படத்தை கார்த்திக் எடுத்திருக்கிறார். கார்த்திக்கின் முந்தைய இயக்குநர் கதிரேசன் படத்தை விட 2 மடங்கு கஷ்டத்தை இறைவியில் சி.வி.குமார் அனுபவித்திருக்கிறார். இந்தப் படம் நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரை உருவகப்படுத்திய படம் தான். இது யாருக்கு வலியோ இல்லையோ, அந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்திக்கை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஞானவேல்ராஜாவின் இந்த குற்றச்சாட்டுகள் ஏற்புடையதா?
இறைவி படத்தை சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன், ஞானவேல்ராஜா மூவரும் இணைந்து தயாரித்தனர். ஆனால், இறைவி பிரச்சனையில் சிக்கிய பிறகு, இறைவியை சி.வி.குமார் மட்டும் தயாரித்தது போல், அவரை மட்டும் முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார் ஞானவேல்ராஜா. இறைவி விவகாரத்தில் தனது பெயரையும் சேர்த்தால் சிம்பதி கிடைக்காது என்று சி.வி.குமாரின் பெயரை மட்டும் அவர் முன்னிலைப்படுத்துகிறாரா என்ற ஐயம் அனைவருக்கும் உள்ளது.
சி.வி.குமார் ஒன்றும் கைக்குழந்தையல்ல. தயாரிப்பின் நுணுக்கங்கள் லாப நஷ்டங்கள் அறிந்தவர். ஒன்றிரண்டு கோடிகளில் படம் செய்து வந்தவர் 13 கோடியில் இறைவியை தயாரிக்க முன்வந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். யாரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை.
இதே கார்த்திக் சுப்பாராஜ் அறிமுக இயக்குனராக சி.வி.குமாரை சந்தித்து கதை சொன்ன போது என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும். அப்போது கார்த்திக் சி.வி.குமாரிடம் சொன்னது ஜிகிர்தண்டா படத்தின் கதையை. ஜிகிர்தண்டாவை தயாரிக்க பல கோடிகள் வேண்டும். அறிமுக இயக்குனரான கார்த்திக்கை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பாத சி.வி.குமார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் ஒரு கதை கேட்டுள்ளார். அதன் பிறகு சி.வி.குமாரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப கார்த்திக் எழுதிய கதைதான் பீட்சா. அப்படம் சி.வி.குமாருக்கு எக்கச்சக்க லாபத்தை தந்தது.
அன்று சின்ன பட்ஜெட் கதையை கொண்டு வாருங்கள் என்று சொன்ன சி.வி.குமார், இன்று 13 கோடியில் இறைவியை தயாரிக்க சம்மதித்தார் என்றால் அதற்கு காரணம் உள்ளது. இரண்டே படங்களில் தனக்கென ஒரு பெயரை கார்த்திக் சுப்பாராஜ் தமிழகத்தில் உருவாக்கி வைத்துள்ளார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற நடிகர்களை வைத்து அவர் ஒரு படம் இயக்கினால், 13 கோடிகளை எளிதாக வசூலித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் சி.வி.குமாரும், ஞானவேல்ராஜாவும் இறைவியை தயாரிக்க முன்வந்தனர். இன்று படம் பிரச்சனையில் சிக்கியதும் சி.வி.குமாரை முன்வைத்து ஞானவேல்ராஜா புலம்புவது அர்த்தமில்லாதது.
எத்தனையோ வருடங்கள் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கார்த்திக் சுப்பாராஜுக்கு கிடைத்தது. சினிமாவுக்கு வந்த 6 மாதங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. சி.வி.குமார் என்னும் புது தயாரிப்பாளர் அவருடையக் கதையைக் கேட்டு, பிடித்துப்போய் அந்தக் கதையை படமாக எடுக்க ரிஸ்க் எடுத்து ஓர் இயக்குநராக அவரை உருவாக்கிவிட்டார்" என ஞானவேல்ராஜா பேசியிருக்கிறார். ஏதோ சி.வி.குமார் கார்த்திக் சுப்பாராஜுக்கு பிச்சை போட்டது போல்.
தயாரிப்பாளர் இல்லாமல் ஒரு இயக்குனர் உருவாகிவிட முடியாது என்று ஞானவேல்ராஜா கூறுவது போலவே, ஒரு இயக்குனர் இல்லாமல் தயாரிப்பாளரும் உருவாகிவிட முடியாது. இது பரஸ்பரம் சேர்ந்து உருவாகும் கூட்டு முயற்சி. அதில் தயாரிப்பாளரை மட்டும் பிரித்து முன்னிலைப்படுத்துவது சுயநலமேயன்றி வேறில்லை. எத்தனையோ வருடங்களாக உதவி இயக்குனர்களாக இருப்பவர்களுக்கு பரிந்து பேசும் ஞானவேல்ராஜா, உதவி இயக்குனர்களின் சீனியாரிட்டியை பார்த்து வாய்ப்பு வழங்குவதுதானே? ஏன் அதனை ஞானவேல்ராஜா உள்பட யாருமே செய்வதில்லை?
சினிமாவில் ஒருவன் எத்தனை வருடங்களாக இருக்கிறான் என்பது முக்கியமில்லை. அவனது திறமைதான் முக்கியம். அதற்குதான் மதிப்பு. சி.வி.குமார் ஒன்றும் ரோட்டில் போன ஒருவரை அழைத்து இயக்குனராக்கிவிடவில்லை. பீட்சா என்ற சுவாரஸியமான திரைக்கதையை படித்து, அது ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையில்தான் கார்த்திக்கின் கதையை தயாரிக்க முன்வந்தார். இது ஒன்றும் உதவியோ பிச்சையிடுதலோ அல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த சி.வி.குமாருக்கு பீட்சா என்ற சுவாரஸியமான கதையை கார்த்திக் தந்து அவரை தயாரிப்பாளராக்கியிருக்கிறார். சி.வி.குமார் போன்ற 100 தயாரிப்பாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஆனால், பீட்சா, ஜிகிர்தண்டா போன்ற படங்களை தரும் இயக்குனர்கள் எத்தனை பேர் தமிழில் இருக்கிறார்கள்? பீட்சா படத்தை தயாரிக்க சி.வி.குமாருக்கு வாய்ப்பு கிடைத்ததுதான் அவரது பாக்கியம்.
"இந்தப் படம் நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரை உருவகப்படுத்திய படம் தான். இது யாருக்கு வலியோ இல்லையோ, அந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்திக்கை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும்" என்று சி.வி.குமார் சார்பில் ஞானவேல்ராஜா துக்கப்படுகிறார்.
சி.வி.குமாரும், ஞானவேல்ராஜாவும் இறைவி படத்தின் ஸ்கிரிப்டை படிக்காமலா படத்தை தயாரிக்க ஒப்புதல் அளித்தார்கள்? இல்லை, முதலில் ஒரு கதையை சொல்லிவிட்டு பிறகு கார்த்திக் கதையை மாற்றி எடுத்தாரா?
பவுண்டட் ஸ்கிரிப்ட் எனப்படும் முழுமையான ஸ்கிரிப்ட் ஹாட் காப்பியாக இருந்தால் மட்டுமே படத்தை தயாரிக்கிறவர் சி.வி.குமார். திரைக்கதையை படித்துப் பார்க்காமல் அவர் படமே தயாரிப்பதில்லை. சரி, திரைக்கதையை படிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். படம் முடிந்த பிறகு டபுள் பாசிடிவ் கூடவா பார்க்கவில்லை?
படம் வெளியாவதுவரை மௌனமாக இருந்துவிட்டு, படம் சர்ச்சையில் சிக்கியதும், 'எனக்கொன்றும் தெரியாது கோவிந்தா' என்று கார்த்திக்கின் நெற்றியில் பட்டையடிக்க முயல்வதுதான் ஞானவேலின் இந்த பிலாக்கணம், கலப்படமில்லாத சுயநலம்.
படத்தின் பட்ஜெட்டை இழுத்துவிட்டார் என்பது தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்குமான தனிப்பட்ட பிரச்சனை. அதனை முறையிட, பஞ்சாயத்து செய்ய சங்கங்கள் இருக்கிறது. அதைவிட்டு பொதுவில் புலம்புவது, அதுவும் இப்படியொரு சந்தர்ப்பதில் பட்ஜெட் குறித்து கார்த்திக்கின் மீது குற்றஞ்சாட்டுவது சிம்பதியை கூட்ட ஞானவேல்ராஜா கையாளும் தந்திரம்.
ஞானவேல்ராஜாவின் புலம்பலிலும், அவர் முன் வைக்கும் குற்றச்சாட்டிலும் எள்ளளவும் நியாயமில்லை.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
8th June 2016, 03:09 PM
#74
Senior Member
Veteran Hubber
இறைவி படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா? - one india
முன் கோபம்
முன் கோபமானது புகை, குடி,போதை, மாது போன்றவற்றின் மீது கொண்டுள்ள மோகத்தை விட கொடியது. குடி உங்களை கொல்லும் எனில், முன் கோபம் உங்கள் வாழ்க்கையையே கொல்லும்.
மனைவி, குழந்தை
நட்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், உங்களை நம்பி இருக்கும் மனைவி மற்றும் குழந்தையையும் அது பாதிக்கும் எனில், அதை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு மறுத்து, ஒதுங்கிவிடுவது நல்லது. உங்களை நம்பி இருக்கும் உயிர் மற்றும் உங்களால் பிறந்த உயிருக்கு முன்னே வேறு எதுவும் பெரியதல்ல.
பட்டும் திருந்தாதவர்கள்
ஆண்கள் ஆட்டு மந்தையாக இருந்துவிட கூடாது. ஓர் தவறு செய்து அதற்கான தண்டனையும் பெற்ற பிறகு, மீண்டும் அதே தவறை செய்வது, உங்கள் மீதுள்ள மனிதன் எனும் அடிப்படை மரியாதையையே குறைக்க செய்யும் செயலாகும். இல்லறமாக இருப்பினும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி, செய்த தவறை மீண்டும், மீண்டும் செய்வது அடிமுட்டாள் தனம்.
பெண் சுதந்திரம்
பெண் சுதந்திரம் ஆண்கள் தருவதல்ல, பெண்களின் பிறப்பிலேயே இருப்பது. அதை, மறுக்கவும், தடுக்கவும், கட்டுப்படுத்தவும் யாருக்கும் உரிமையில்லை. ஆண்களை சார்ந்து இல்லாமல், பெண்களே தனித்து வாழும் சூழல் வரவேற்க்கத்தக்கது.
நிச்சய திருமணம்
நிச்சய திருமணத்தில் பெரும்பாலும் பெற்றோர் செய்யும் தவறு, குடும்பத்தை பற்றி மட்டும் விசாரிப்பது. மணமகன் எந்தளவு நல்லவன், அவனது குணாதிசயங்கள் என்ன, அவனது தனிப்பட்ட செயல்பாடுகள், நட்பு, வேலை குறித்தும் ஆராய்ந்து தெரிந்துக் கொண்ட பிறகு திருமணம் செய்வது தான் சரி.
இரண்டாம் திருமணம்
நமது சமூகத்தில் இரண்டாம் திருமணம் என்பது கூட, ஆண்கள் செய்தால் ஓர் பார்வையிலும், பெண்கள் செய்தால் மாறுபட்ட பார்வையிலும் நோக்கும் சுபாவம் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், இருவருக்கும் எதிர்பாலின துணை கட்டாயம் தேவை தான்.
இறைவி!
பொதுவாகவே நமது சமூகத்தில் பெண் குழந்தை பிறந்தால் மகாலக்ஷ்மி பிறந்துவிட்டாள் என்பார்கள். கிராம புரங்களில் பெண் குழந்தைகள் குல தெய்வமாக கருதுவதும் உண்டு. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் நமது குடும்பத்தை காக்கும் தெய்வங்கள் தான். இதை எல்லா ஆண்களும் புரிந்துக் கொண்டால், இல்லறத்தில் எந்த பிரச்னையும் எழாது.
மழையும் சமூகமும்
பெண்களை அழ வைப்பவன் ஆணாகவே இருக்க முடியாது. நீங்கள் ஓர் சிறந்த ஆணாக இருந்தால் அந்த பெண் உங்களை நினைத்து அழ வேண்டுமே தவிர, மாறாக உங்களால் அழக கூடாது. ஆண்களின் பலம் பெண்களை காப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் செய்வதை எல்லாம் பொறுத்துக்கொள்வதக்கு அல்ல.
வினை விதைத்தவன்
பெண்களை அழ வைக்கும் எந்த ஓர் ஆணின் வாழ்க்கையும் சந்தோசமாக இருக்காது. சிலர் அவர்கள் பிரிந்து செல்லும் போது உணர்வார்கள். பலர் அவர்கள் நிரந்திரமாக பிரிந்த பிறகு தான் உணர்கின்றனர்.
குடி பழக்கம்
குடி பழக்கம் வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல, நல்ல உறவுகளுக்கும் கேடு விளைவுக்கும். பெரும்பாலான வீடுகளில் இன்றளவும் பெண்கள் துன்புற காரணியாக இருப்பது இந்த குடி தான்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
8th June 2016, 05:24 PM
#75
Administrator
Platinum Hubber
Iraivi - Life is a big b**** party!
Peeve 1: Santhosh Narayan is hopeless in composing songs. He better just stick to BGM. (Condolences for Kabali.) 😳
Peeve 2: Why censor crucial scenes when it's already rated 18? 😠
Iraivi means statues of goddesses. Here the ones that have been left to rot are smuggled and sold to overseas markets where they are treasured.
A parallel is drawn with women who are neglected by men who then draw the interest of other men.
Karthik says he's heavily inspired by K. Balachander and the story indeed is KB-isque. Different women of all generations suffer the same neglect and how they cope with it is shown.
There are also tales of betrayal, friendship, murder and more.
Except for a couple of actors, the rest of them are the new-age cinema actors. Nice to see how Bobby Simha has matured as an actor.
Vijay Sethupathi is his excellent usual self and brings the laughs in the movie.
Verdict: Excellent movie minus the songs. Definitely repeat-worthy.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th June 2016, 06:12 PM
#76
Senior Member
Veteran Hubber
இறைவி - Dina Thanthi
நடிகர்-நடிகைகள்: எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி.
டைரக்ஷன்: கார்த்திக் சுப்புராஜ்.
கதையின் கரு: ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்கள்.
கோவில் (இறைவி) சிலைகளை வடிவமைக்கும் குடும்ப தலைவர், ராதாரவி. இவருடைய மகன்கள் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா. இவர்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார், ராதாரவியிடம் வேலை செய்தவரின் மகன், விஜய் சேதுபதி.
எஸ்.ஜே.சூர்யா, ஒரு திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய படம், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. அந்த விரக்தியில் எஸ்.ஜே.சூர்யா குடிகாரர் ஆகிறார். இவருடைய அழகான மனைவி, கமாலினி முகர்ஜி. ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இதேபோல் விஜய் சேதுபதிக்கும், அஞ்சலிக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
முடங்கிக் கிடக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் படத்தை திரைக்கு கொண்டு வர அவருடைய குடும்பமே முயற்சிக்கிறது. இதற்காக தேவைப்படும் பணத்தை கோவில் சிலைகளை திருடி விற்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என்று யோசனை சொல்கிறார், பாபி சிம்ஹா. அந்த யோசனையை ராதாரவியும் ஏற்கிறார். பாபி சிம்ஹாவும், விஜய் சேதுபதியும் சிலை திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
விஜய் சேதுபதி சிலை திருட்டில் ஈடுபடும்போது, அவரை போலீசில் காட்டிக் கொடுக்கிறார், பாபி சிம்ஹா. அவர் ஏன் காட்டிக் கொடுக்கிறார், விஜய் சேதுபதி போலீசிடம் சிக்கினாரா, காட்டிக் கொடுத்த பாபி சிம்ஹாவை அவர் என்ன செய்கிறார், எஸ்.ஜே.சூர்யாவின் படம் திரைக்கு வந்ததா? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீதி படம்.
நல்ல ஒரு படத்தை இயக்கி, அது திரைக்கு வராததால் ஏற்படும் விரக்தியையும், வேதனையையும் மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார், எஸ்.ஜே.சூர்யா. தன் சோகத்தை நினைத்து குடிபோதையில் அழுவதும், சிரிப்பதும், சீறுவதுமாக நடிப்பில் உச்சம் தொடுகிறார். அந்த கடைசி காட்சியில், ‘‘பொறுமையாக இருக்க முடியாது. சகித்துக் கொள்ள முடியாது. ஏன்னா ஆம்பள...ஆண்...’’ என்று தன் குற்றத்துக்கு விளக்கம் சொல்லும் காட்சி, எஸ்.ஜே.சூர்யாவின் திறமையான நடிப்பு வெளிப்படும் மற்றொரு இடம். நட்புக்காக, ஒரு கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு செல்பவராக-திரும்பி வந்தபின், மீண்டும் அதே நட்புக்காக சிலை திருட செல்பவராக விஜய் சேதுபதி. அவருடைய கதாபாத்திரமும், யதார்த்தமான நடிப்பும் கதையை தாங்கிப் பிடிக்கும் உயர்ந்த அம்சங்கள். பாபி சிம்ஹா நல்லவர் போல் வந்து கடைசியில் வில்லனாகி விடுகிறார்.
அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகிய இருவரில் அஞ்சலிக்கு நடிக்க வாய்ப்பு. அவர், விஜய் சேதுபதி கன்னத்தில் பளார்...பளார் என அறையும்போது, தியேட்டரில் நிறைய பேர் கைதட்டுகிறார்கள். ‘மலர்’ கதாபாத்திரத்தில் வரும் பூஜா, மிக பொருத்தமான தேர்வு. முக்கிய பாத்திரங்களில் ராதாரவி, கருணாகரன், வடிவுக்கரசி. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் படத்தின் ஜீவன்களாக அமைந்துள்ளன. கதையுடன் கச்சிதமாக பொருந்துகிறது, டைட்டில். எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகிய மூவருக்குமான உறவை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆரம்ப காட்சிகள் புதிராக அமைந்துள்ளன. நல்லவேளையாக, கிளைமாக்ஸ்சில், ‘‘நீ என் தம்பி மாதிரி. அவன் என் தம்பி’’ என்று எஸ்.ஜே.சூர்யாவை சொல்ல வைத்து, உறவுகளை புரியவைத்து விடுகிறார், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். அந்த வில்லத்தனமான தயாரிப்பாளரும், சிலை திருட்டில் விஜய் சேதுபதியை பாபி சிம்ஹா மாட்டி விடுவதும், யூகிக்க முடியாத திருப்பங்கள்.
‘இறைவி’யின் அருமை பெருமைகளை மனதில் பதிகிற மாதிரி இன்னும் ஆழமாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
9th June 2016, 10:12 AM
#77
Senior Member
Veteran Hubber
anandha vikatan - 43 marks
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
9th June 2016, 04:37 PM
#78
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
9th June 2016, 05:35 PM
#79
Senior Member
Veteran Hubber
Movie review Iraivi: Karthik Subbaraj's film is a hard hitting one!
Director: Karthik Subbaraj
Cast: Vijay Sethupathi, SJ Suryah, Anjali, Kamalinee, Pooja Devariya
Karthik Subburaj may be just two films old. But his quirky themes combined with compelling story telling ways has put him in high esteem in Kollywood. His recent offering Iraivi is no exception! The movie has a feminist theme, which is depicted in a hard-hitting manner and the bold women characters have semblance to one we used to see in K. Balachander’s films.
Arul (SJ Suryah) once a known filmmaker and now struggles to get his movie released as his producer refuses to do. Frustrated with life he drowns himself in alcohol. And his wife Yazhini (Kamlinee Mukherji), a liberated woman wants a divorce. Arul’s younger brother Jagan (Bobby Simha) is a student who has penchant for antique idols and more so of goddesses (Iravi). Michael (Vijay Sethupathi) works in their sculpture shop and he is treated like their brother. Despite in a relationship with Malar (Pooja Devaria) Michael ties the knot with Ponni (Anjali) against his wishes. He is insensitive towards his wife, who dreams to have a blissful life. A stage comes when all the three men join hands in a crime and what follows next is a series of unexpected twists and turns.
There are umpteen numbers of characters, but each one has a role to play in the intriguing plot. Karthik has extracted the best from the entire cast. It is SJ Suryah who steals the show with his lifetime performance. Anjali proves her mettle in a complex role. Vijay Sethupathi has in fact underplayed his character. Bobby, Pooja in a bold role, Kamalinee are adequate.
On the technical front Santhosh Narayanan songs are passable, while the BGM is good. Sivakumar Vijayan’s cinematography, Vivek Harshan’s editing and Vijay Murugan’s art work largely help the director to achieve his vision.
Despite some hiccups like every alternate scene depicts characters drinking and smoking and the raw violence soaked in blood and gore and the lack of fun elements, the film is an honest attempt from Karthik Subburaj and may go well with multiples audiences.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
9th June 2016, 08:20 PM
#80
Junior Member
Newbie Hubber
Thanks to Balaajee for the wonderful presentation & updates on his favourite filmstar SJ Surya's Iraivi Movie.
Iraivi
A Film by Karthik Subbaraj
Part One of Three
Recurring Phrase : But how much Karthik Subbaraj has convincingly projected his theory of interlocking two different beleifs of the same cultural faith depends purely on the experience of the viewer and not the expression of the film maker.
(SJ Surya as Arul)
Introduction
There are three forms on approaching a film to figure out what a filmmaker is trying to say in his work : formalist, realist & contextualist.
[Formalist : Deadpool (English, 2016), Vedalam (Tamil, 2015)]
[Realist : Inside Man (Korean, 2015), Visaranai (Tamil, 2015)]
The movie Iraivi should be approached contextually - a symptomatic interpretation look at the film as part of the broad context of society, reflecting and illustrating themes prevalent in the culture, in the time and place it was made, and possibly in the creator’s personal life experience. A psychological approach often identifies plot elements - looking for sexual symbolism, treatment of the subconscious, representations of the ego and superego.
A feminist analysis should concentrate on the portrayals of women in the film, whether they are strong, weak, stereotypes, protagonists or antagonists on a more of a broader context.
The genre of the film Iraivi, is a rare one. The movie comes under the genre 'Hyperlink Cinema', a word coined by Alissa Quart (nonfiction writer) in one of her reviews in 2005. This genre marks the story structure and relates it to spatial analysis in Sociology - horizontal experience of human life, the spatial dimension of individual behavior and social relations, as opposed to the vertical experience of history, tradition, and biography.
Iraivi is a multi-narrative film, a story that follows several protagonists rather than focusing on one main character. It extends itself to potray the relationship between the individual perspectives of characters inside a larger macro story. The film becomes hypernarrative during the final ACT, espicially while trying to connect the relationships established during the previous acts. During this ACT, Karthik tries to bring in an intensity by projecting as though the film is based on single-plot and this aspect makes the script wicked.
The film Iraivi aims for multiperspectivity, an aspect of narration or a mode of storytelling in which multiple and often discrepant viewpoints are employed for the presentation and evaluation of a story and its storyworld. The perspectival arrangements in multiperspective narrative fulfils a variety of different functions, mostly highlighting the perceptually, epistemologically or ideologically, the restricted nature of individual perspectives and may draw attention to various kinds of differences and similarities between the points of view presented therein. In this way, multiperspectivity frequently serves to portray the relative character of personal viewpoints or perspectivity in general.
'Roman a Clef' is a French term meaning 'novel with a key' refering to a film in which actual persons/events are disguised or masked as fictional characters, but with a 'key' the true persons/events are revealed. The character make up for the artist Vijai Murugan who plays a Film Producer in the film Iraivi, resembles the Jigardhanda producer Kathiresan. Jigardhanda release dates were shifted mercilessly without proper explanations and when the film's lead actor Siddharth expressed his displeasure over the production house for the delays, he was warned by the Production Council reminding him that he was a salaried worker and should not indulge in the distribution and decisions of the Production house. Jigardhanda was the second film directed by Karthik, and the episode containing a Producer character maybe a key to unlock the issue, about what might have happened during Jigardhanda film release.
The characters are handled in implicit manner, such that they are risened under slightly deeper level of interpretation - how the characters change, grow, and develop throughout the course of the film. None of the character mouths its action, but expresses it through emotions and reactions surrendering to the momentary suituations - refer to the 'Recurring Phrase' illustrated above.
(Characters vs Suituation as found in the film)
Instances
1/ Kanaki, Madhavi, Kovalan & Mr. X
With Ponni, Malar, Michael and Jagan fictional characters, Karthik attempts to make his own Silappatikaram. Kanaki & Madhavi from the epic are invisible to viewers so that the writer's characters and situations are always in the primary focus.
(Anjali as Ponni)
Jagan questions whether the soceity would have accepted Kanaki acquainted with another man after the Kovalan's debacle. This expression is the base of Jagan's character structure, which gets blown-up during the final ACT. Jagan's philosophy (reminder : faith, politics & philosophy are personal) slightly gets scratched when the brothers rejoice with drinks.
The character Malar, played by Pooja, is displayed as a bold skinned, but the death of her husband had made her more pessimistic (fear of loosing someone) which corners herself as a disgrace to the soceity. Malar and Michael share an intimacy as Madhavi and Kovalan. Malar rejects Michael for the same reason, social fear, and then weeps. Ponni, on the lines of a similar fear elopes eventhough she is attracted to Jagan.
(Pooja as Malar)
Apparantly and according to Karthik, Kanaki (represented by Ponni played by Anjali) did not have any problem with that principle of Jagan, whereas retelling it through Madhavi's POV, makes Madhavi and Kanaki float on the same boat.
Recurring Phrase.
2/ Nalayani
"If at all, I have lived the life of a chaste woman, dedicating myself to serving my Lord and Master and if my husband must die at sunrise tomorrow, then the sun shall not rise forever."
Yazhini, enacted by Kamalinee Mukherjee, is an alternate image of Malar. What Malar obtains after the end of her marital life, Kamalini does not get it while still being married. Yazhini pocesses all the items of an ideal life, and she serves her husband as the epic character Nalayni who had served her sick, stinking and bed ridden husband. Arul, Yazhini's husband, visits her only in the mornings depriving her the basic needs of a marital relationship. Yazhini tolerates him even when he stinks of alcohol. Arul is not impotent, the couple have a daughter, he is just depressed.
(Kamalinee Mukherjee as Yazhini)
(Arul and Yazhini (Kamalinee Mukherjee). Note the scribbling on the wall, indicating a child living/lived in that house)
When Nalayani is cursed that she will loose her husband in the morning, she halts the sunrise. Karthik bends this epic clause wildly, making Yazhini to discarde her relationship with Arul, so that she does not see him in the morning.
Recurring Phrase.
3/ Nala and Damayanti
(Michael and Ponni)
Ponni dreams about her marriage and just like the epic character Damayanti who had to pick one of the Gods Indra, Agni, Varuna; Ponni thinks he has a varied options to pick her husband personally (Kamal/Vijay/Ajith references). She falls for Michael considering him to be the most handsome (just like the swan). Arul and family gaurd the couple just like how Kali served for Nala and Damayanti. A statue theft leads a small conflict with Arul's family and the gap widdens similar to the absense of Kali when Nala forgets to wash his feet.
The life of Ponni and Michael disrupts where Ponni takes refuge elsewhere (just like Damayanti had done) while Michael had to fight his own demons (just like Nala) to reach Ponni (Othai ille nikurein di song sequence). When they meet, Ponni forgives Michael, just like Damayanthi forgives Nala after he had abandoned her in the jungle. Events forces Michael and Ponni to abscond and lead a peaceful life, when Micheal meets Jagan and then Arul.
Recurring Phrase.
Last edited by mappi; 9th June 2016 at 08:33 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks