Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அலங்கார் தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்த நண்பன் சொன்னான்.. ரொம்ப நல்லா இருக்கு கண்ணா.. ப்ளஸ்டூ பருவம் என நினைக்கிறேன் முதலாவதோ இரண்டாவதோ நினைவில்லை..

    ஆனால் அவன் பார்த்த மறு நாளே விகடனில் வந்த விமர்சனத்தால் கிளர்ந்தெழுந்தது கூட்டம் அந்தப் படத்திற்கு.. இரண்டு நாள் கழித்து சென்ற எனக்கு நல்ல வேளை சைக்கிள் டிக்கட் கிடைத்தது..போய் ப்பார்க்க லொங்கு லொங்கு என்று அவ்வளவு தூரம் போன கஷ்டம் தெரியவில்லை ..(ரொம்ப தூரம் எனச் சொல்லமுடியாது.. இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் மேபி) படமும் பிடித்துத் தான போனது..பின் அது ஓடிய ஓட்டத்தில் அலங்கார் தியேட்டரில் சீட், பெய்ண்ட் எல்லாம் மாற்றினார்கள்.என நினைவு..படம் ஒரு தலை ராகம்..

    பல பாடல்கள் இருந்தாலும் கவர்ந்தது கூடையில கருவாடுகூந்தலிலே பூக்காடு.. ஒரு அழகான மெலடிகொண்ட கோரஸ் பாட்டு..சலசலவெனச் செல்லும்..

    இசை டி.ராஜேந்தர் ஏ.ஏ. ராஜ் எனப் போட்டிருந்தார்கள்..பின்னால் நான் தான் இசைத்தேன் என டி.ஆர் சொல்லி பல படங்கள் எடுத்து இசை கொடுக்க ஆரம்பித்தார்..ஆனால் இருவரும் சேர்ந்து இசை அமைத்த பாடல்களைக் கொண்ட ஒ த ரா போல இல்லை அதுவும் எஸ்பெஷலி போதோடு கோழி கூவுற வேலை மெலடி..

    காரணம் ஏ.ஏ.ராஜ் எனப் புரிந்தது நேற்று இந்தப் பாட்டைக் கேட்ட போது

    நம் மக மகா வில் போடாத பாடல்கள் இல்லை எனும் அளவிற்கு ஆகிவிட்டது.. அந்தப் பாடலின் வரிகளுக்காக கூகுளிட்டால் மமகா முதல்பாகம் பேஜ் என வர வந்து பார்த்தால் கிருஷ்ணா வரிகள் மட்டும்கொடுத்திருந்தார்.. பின்னூட்டத்தில் மிஸ்டர் கார்த்திக் அந்தப் படம் தண்டம் என எழுத நான் பாட்டைத்தானே சொன்னேன் என கிருஷ்ணா பதில் சொல்லியிருந்தார்..பட் பாடல் காணொளி இல்லாததினால் நான் கேட்கவில்லையோ என்னமோ..பட் சின்ன வயதில் இந்தப் பாட் கேட்டிருக்கிறேன்.. நன்றாகவும் இருக்கும்..

    ஏ.ஏ. ராஜ் இசையமைத்த படம் தணியாத தாகம்.. பி. நா. கொண்டாட்டத்திற்காகத் தேடியதில் அகப்பட்ட பாடல் இது. இதுவரை மூன்று முறை கேட்டுவிட்டேன்..காலையிலிருந்து இது ஒரு பின்னணியாய் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது..
    ஏ.ஏ ராஜ் பற்றியும் இந்தப் பாடலைப் பற்றியும் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு..
    http://www.jeyamohan.in/42900
    http://www.jeyamohan.in/43064

    பாடல் வரிகளைப் பார்க்கலாமா..(க்ருஷ்ணா ஜியிடமிருந்து கட் பேஸ்ட்)

    நடிப்பு டெல்லி கணேஷ்..சுபத்ரா..

    மலேசியா ஜானகி
    ஜானகியின் சிரிப்பு சிலிர்ப்பு

    பூவே …நீ ...
    யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
    நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
    நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
    உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்

    பூவே …நீ ...
    யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
    இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
    இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
    உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
    (பூவே)

    நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
    நான் ...
    என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
    (நீ கோவில் )
    என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
    என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
    புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்
    (பூவே )

    கோவில் கலசம் போல் என் தேவி
    ஆஹ (ஜானகி யின் சிலிர்ப்பு )
    இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
    (கோவில்)
    பூவிலும் பூ அவள் பொன் மேனி
    (ஜானகியின் சிரிப்பு)
    பூவிலும் பூ அவள் பொன் மேனி
    இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
    (பூவே)

    மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
    என் மைவிழி மயங்கிட சீராட்டு

    (மலேசியவின் சிரிப்பு)

    பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
    (ஜானகியின் சிரிப்பு)
    பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
    இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
    என் கரம் பட்டு

    அஹ (மீண்டும் ஜானகியின் சிலிர்ப்பு )

    (பூவே)
    இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
    நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
    உன்னோடு பாடிட வந்த புது மலர் ..
    புது மலர் புது மலர் ..



    **
    இன்னொரு அற்புதமான பாடல் கேட்டு என் கண்கள் கலங்கின.. வீணையும் புல்லாங்குழலும் ஜுகல் பந்தி செய்தபாடல்..கண்கள் கலங்கியகாரணம் என்னவென்றால்...
    அது ….

    *
    பின்ன வாரேன்..

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •