-
12th June 2016, 06:45 PM
#11
Junior Member
Veteran Hubber
Short on-the-way Rest Pause in my GG Island!!
Cosmology and Seismology of Love with the King of Romance!!
கண்ணும் பெண்ணும்......விண்ணும் மண்ணும்.....
The cosmic power of sky controls earth.....the seismic power of lady controls the lad!
உலகின் நிகழ்வுகளைக் கண்ணுற்று மகிழவே நமக்கு இறைவன் கண்களைத் தந்திருந்தாலும் காதல் பருவத்தில் அகக்கண் மூடி புறக்கண் திறப்பது காதலியின் வனப்பை ரசித்திடவே!
மண்ணில் அரும்பும் துரும்பும் கரும்பும் விண்ணை நோக்கியே விரும்பும் திரும்பும்! மண்ணில் நிகழ்வுகள் விண்ணின் பார்வையிலேயே!!
காதலியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான் காதலன்....காதலன் விண்ணைப் பார்க்கிறான்....காதலியோ மண்ணைப் பார்க்கிறாள்....
பார்வைகள் நேர்கோட்டில் சந்திக்கும்போதோ பிரளய பூகம்பம்...மின்னல் பூக்கள்.....பாசமழை....நேற்றுவரை அவன் யாரோ என்ன பேரோ....
இன்றுமுதல்... இவள் வேறோ இவன் வேறோ.....இதுதான்...இந்தப் பார்வையின்சங்கமம்தான்....புவிமாந்தரின் காதல் மந்திர மாளிகையின் கதவுகள் திறந்திடும் கடவுச்சொல்!
மண்ணை நோக்கி விண்ணையும் இறங்க வைக்கும் பெண்ணின் கண்களே காதலின் கலங்கரை விளக்கம்......காதல் மாலுமிக்கோ விண்ணில் நின்று வழிகாட்டும் துருவநட்சத்திரம்!!
விண்ணும் மண்ணும் வாழ வைக்கும் பிரம்மாஸ்திரங்களே
பெண்ணும் கண்ணும் !!
The cosmic power anchors the love!
The seismic power cracks the love!!
Last edited by sivajisenthil; 12th June 2016 at 09:33 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2016 06:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks