-
12th June 2016, 06:49 AM
#3011
Senior Member
Seasoned Hubber
Come back Rajesh. You don't think you lost her. She is very well with you. You continue your routine and she will be taking part in all your ventures.
God bless You with enough strength and will power.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th June 2016 06:49 AM
# ADS
Circuit advertisement
-
12th June 2016, 08:03 AM
#3012
Junior Member
Veteran Hubber
சேற்றில் மலர்ந்த செந்தாமரைகள் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2016, 09:52 AM
#3013
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Come back Rajesh. You don't think you lost her. She is very well with you. You continue your routine and she will be taking part in all your ventures.
God bless You with enough strength and will power.
will try Raghav ji.
-
12th June 2016, 10:27 AM
#3014
Senior Member
Senior Hubber
வாங்க ராஜேஷ்.. நாங்க இருக்கோம் எங்க பிரார்த்தனைகள் இருக்கு..
-
12th June 2016, 05:56 PM
#3015
Junior Member
Veteran Hubber
With Love from the Treasure Island of GG!
The Cosmology and Seismology of Love!!
கண்ணும் பெண்ணும்......விண்ணும் மண்ணும்.....
The cosmic power of sky controls earth.....the seismic power of lady confuses the lad!
உலகின் நிகழ்வுகளைக் கண்ணுற்று மகிழவே நமக்கு இறைவன் கண்களைத் தந்திருந்தாலும் காதல் பருவத்தில் அகக்கண் மூடி புறக்கண் திறப்பது காதலியின் வனப்பை ரசித்திடவே!
மண்ணில் அரும்பும் துரும்பும் கரும்பும் விண்ணை நோக்கியே விரும்பும் திரும்பும்! மண்ணில் நிகழ்வுகள் விண்ணின் பார்வையிலேயே!!
காதலியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான் காதலன்....காதலன் விண்ணைப் பார்க்கிறான்....காதலியோ மண்ணைப் பார்க்கிறாள்....
பார்வைகள் நேர்கோட்டில் சந்திக்கும்போதோ பிரளய பூகம்பம்...மின்னல் பூக்கள்.....பாசமழை....
நேற்றுவரை அவன் யாரோ என்ன பேரோ....
அண்டாகாகசம் அபூகாகுசூம்.....மூடிடு சீசே!
இன்றுமுதல்... இவள் வேறோ இவன் வேறோ.....
அண்டாகாகசம் அபூகாகுசூம்..... திறந்திடு சீசே!
இதுதான்...இந்தப் பார்வையின்சங்கமம்தான்....புவிமாந்தரின் காதல் மந்திர மாளிகையின் கதவுகள் திறந்திடும் கடவுச்சொல்!
மண்ணை நோக்கி விண்ணையும் இறங்க வைக்கும் பெண்ணின் கண்களே காதலின் கலங்கரை விளக்கம்......காதல் மாலுமிக்கோ விண்ணில் நின்று வழிகாட்டும் துருவநட்சத்திரம்!!
விண்ணும் மண்ணும் வாழ வைக்கும்.... நம்மைக் காதலில் வீழ வைக்கும்..... பிரம்மாஸ்திரங்களே
பெண்ணும் கண்ணும் !!
The cosmic power anchors the love!
The seismic power cracks the love!!
Last edited by sivajisenthil; 12th June 2016 at 09:52 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th June 2016, 09:33 PM
#3016
Senior Member
Senior Hubber
பகுதி : 3
குர்குமா லோங்கா (அட திட்டல்லாம் இல்லீங்க) ஒரு மருத்துவ மூலிகையாகும்..இதன் தண்டில் உள்ள கிழங்கானது அழகிய ந்ங்கையர்க்கு மேலும் அழகூட்டும்..பல வித மருத்துவ குணங்கள் உள்ள இந்த மூலிகையின் இயற்பெயர் தமிழில் …மஞ்சள் என்பதாகும்..
வஞ்சி எழிலினை வாகாகக் கூட்டுவது
மஞ்சள் கிழங்கினால் ஆம்..
சஞ்சலங் கொண்டேன் சாகவா என்றே
வஞ்சியென் உள்ள வாட்டமும் அறியான்
கொஞ்சிய கோவும் கோதையைப் பிரிய
மஞ்சளும் சற்றே மாறலு மாச்சே..
என ஒரு சங்க காலப் பெண் காதலன் பொருள் சேர்க்கப் பிரிந்ததை நினைந்து புலம்புகிறாளாக்கும்..
ஹச்சோ மறந்துட்டேனே.. ஆமாம் தலைப்பு வைக்கத்தான்.. பரவாயில்லை எழுதப் போவது தமிழ் சினிமாவில் தலைப்பு என்ற கான்செப்டையே விட்டொழித்தவர் என்று கான்செப்ட் புகழ் செந்திலும் சில ஆன்றோர்களும் சொல்லியிருக்கிறார்கள்! 
சரி தலைப்பு.. சிம்ரனாயனம் -பகுதி 3
நாம் பார்க்கப் போகும் பாடலில் அப்படிப் பட்ட சிம்ரன் கிடையாது அடக்க ஒடுக்கமான ஆனால் மஞ்சள் பூசாத பஞ்சாபிப் பெண்ணாக ஆரம்பத்தில் வந்து பின் மஞ்சள் பூசி.. கனவே கலையாதேயில் வருவாராக்கும்..
எண்ணமது ஈடேற ஏந்திழையின் உள்ளத்தில்
கண்ணனின் தோற்றத்தைக் கண்டிங்கு – பொன்னென
மின்னும் முகமதியும் மீண்டும் பொலிவுறவே
முந்தினாள் மஞ்சளிடத் தான்..
ம்ம் பஞ்சாபிப் பெண் தமிழ்ப் பையன் காதல்..ஈடேறிச்சுன்னு நினைகக்றச்சே வேறு என்னவெல்லாமோ நடந்து கதை வேறு விதமாகப் போகும்.. சிம்ரன் நன்னாயிட்டு நடிச்சுருப்பார்..
*
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே வந்தது வாழ்வென்று
தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடேறுதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூறுதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
எண்ணம் போல் வாழ்வு கண்டேன் எல்லோரும் வாழ்த்தட்டுமே
முன்னூறு ஆண்டு வரை என் மஞ்சள் வாழட்டுமே
ஏழு பிறப்பினிலும் மறு பிறப்பினிலும்
இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பாடியது அனுராதா பட்வல்..கொஞ்சம் மென்மைக்குரலாய் ஏதோ ஒன்று ஈர்க்கிறது..
ம்ம் இனி பாட்..
அடுத்த பாடலில் சிம்முவை விட நாயகனை விட நடனத்தில் அசத்துபவர் இன்னொருவர்.. என்னவாக்கும் அந்தக்காதல் பாடல்..
ஆமாம் எங்கெங்கே அந்தப் பாட் அப்புறமா போடுவேன்.- இன்னொரு அத்தியாயத்தில்ல்..
பின்ன வாரேன்..
Last edited by chinnakkannan; 12th June 2016 at 09:36 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2016, 09:40 PM
#3017
Junior Member
Veteran Hubber
Gap filler....
Cosmology and Seismology of Love with the King of Romance!!
கண்ணும் பெண்ணும்......விண்ணும் மண்ணும்.....
The cosmic power of sky controls earth.....the seismic power of lady controls the lad!
பெண்ணைப் பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை.....
கண்ணைப் பார்த்தும் ஏன் கவிதை வரவில்லை
பெண்ணையும் கண்ணையும் தவிர்த்து விண்ணையும் மண்ணையுமே பார்த்துத் தவிக்கும் காதல் மன்னர் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2016, 10:05 PM
#3018
Senior Member
Senior Hubber
பண்ணினைப் பாடுகின்ற பாவையர் கண்ணிலே
வண்ணங்கள் துள்ளியே வாடாத மாலைகளாய்
இன்னும் பலவாய் இருக்கு மெழிற்காட்சி
எண்ணி லடங்காது தான்..
ம்ம் க க்கும் பெக்கும் என்னோட காண்ட்ரிப்யூஷன்..
கன்னிப்பெண்ணில் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது
பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல
அமர்ந்த வண்டும் வண்டல்ல
ஆடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th June 2016, 10:28 PM
#3019
Junior Member
Veteran Hubber
பண்ணினைப் பாடுகின்ற பாவையர் கண்ணிலே
வண்ணங்கள் துள்ளியே வாடாத மாலைகளாய்
இன்னும் பலவாய் இருக்கு மெழிற்காட்சி
எண்ணி லடங்காது தான்..
ம்ம் க க்கும் பெக்கும் என்னோட காண்ட்ரிப்யூஷன்..
Super சி க! நீங்களும் சின்னக் கலைவாணரே!!
பெக்கடித்தால் கக்க வேண்டியிருக்கும் என்பதை எவ்வளவு அழகாக கக்கும் பெக்கும் என்று கான்ட்ரிப்யுட் பண்ணியிருக்கிறீர்கள் !
கக்கும் பெக்கின் கிக்குக்காக விக்கும் திக்கும் மக்கு காதல் (தோல்வி) ரன்னர் !
Last edited by sivajisenthil; 13th June 2016 at 01:43 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th June 2016, 12:42 AM
#3020
Senior Member
Senior Hubber
ஹச்சோ க விற்கும் பெ விற்கும் அஃதாவது கண்ணுக்கும் பெண்ணுக்கும் என்று தானே சொல்லவந்தேன்..ஹச்சோ ஹச்சோ
Bookmarks