-
1st May 2016, 01:20 PM
#1
Senior Member
Veteran Hubber
3STR in AAA Anbanavan| Asarathavan | Adangathavan
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
1st May 2016 01:20 PM
# ADS
Circuit advertisement
-
1st May 2016, 04:40 PM
#2
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
8th June 2016, 05:55 PM
#3
Senior Member
Veteran Hubber
சிம்புக்கு அம்மாவாக நடிக்க த்ரிஷா மறுப்பு: நான் இன்னும் ஹீரோயினாகத்தான் நடிக்கிறேன்
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை த்ரிஷாவுக்கு இப்படி ஒரு சோதனையா?. சிம்புவை கதாநாயகனாக வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் படத்துக்கு அம்மா கேரக்டரில் நடிக்க த்ரிஷாவை அனுகியுள்ளனர்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. சிம்பு என்றாலே அதிகமாக கிசுகிசுக்கள் வரும். அந்த நேரத்தில் சிம்பு, த்ரிஷா இருவருக்கும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
அந்த படத்திற்கு பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்புவும், த்ரிஷாவும் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் 3 வேடங்களில் சிம்பு நடிக்க உள்ளார். இதில் ஒரு கேரக்டரில் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த த்ரிஷா நான் இன்னும் ஹீரோயினாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
20th June 2016, 11:42 AM
#4
Senior Member
Veteran Hubber
'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்' இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம்ஆதிக் ரவிச்சந்திரன் - சிம்பு இணையும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு நடிக்கவிருக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் சிம்பு "அப்படத்தின் இசையமைப்பாளரில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பகக்த்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார் யுவன்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
28th June 2016, 10:07 AM
#5
Senior Member
Veteran Hubber
சிம்புவின் கெட்டப் சீக்ரெட் இதுதானாம்!
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக சிம்புவை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் சிம்பு, 90 கிலோ எடையுடன் ஒரு கேரக்டர், நார்மலான சிம்பு மற்றும் டி.ராஜேந்தர் கெட்டப்பில் ஒரு கேரக்டர் என்று மொத்தம் மூன்று கேரக்டரில் சிம்பு நடிக்கவிருக்கிறார். டி.ஆர். கெட்டப்பில் சிம்பு இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் இயக்குநர் பகிர, இணையத்தில் வைரலடித்தது அந்தப் புகைப்படம். மேலும் அந்த புகைப்படத்தையும் டி.ஆர். படத்தையும் ஒப்பிட்டு பல மீம்ஸ்களும் இணையத்தை வட்டமிட்டுவருகிறது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். அந்த நடிக, நடிகைகளுக்கான தேர்வு தற்பொழுது மும்மரமாக நடந்துவருகிறது. மேலும் யுவன் இசையமைக்கும் இப்படத்தில் ஒன்பது பாடல்கள் இடம்பெறவிருக்கிறது. அதில் ஒரு பாடல் பதிவு முடிவுபெற்றுவிட்டதாகவும், அந்தப் பாடலுக்கு “டிரெண்டிங்” என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல் கட்டப் படப்பிடிப்பிற்கு டி.ஆர். கெட்டப்பில் தயாராகிவிட்டார் சிம்பு. ஜூலை இரண்டாம் வாரத்தில் மைசூரில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். தொடர்ந்து சசிகுமார், ஜெய் நடித்த “சுப்பிரமணியபுரம்” படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற மதுரை சுற்றுவட்டாரப் பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
4th July 2016, 05:27 PM
#6
Senior Member
Veteran Hubber
த்ரிஷாவா... ஸ்ரேயாவா... சிம்புவின் நாயகி இவர்களில் யார்?!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA). படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இந்தப் படத்திற்கான மூன்று பாடல்களை ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா முடித்துவிட்ட நிலையில், சிம்புவுக்கு பாடல்கள் மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு மூன்று வேடம். அதில் நடுத்தர வயது சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா , ஸ்ரேயா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில் ஸ்ரேயா பெரும்பாலும் ஒப்பந்தம் ஆவார் எனத் தெரிகிறது. த்ரிஷா சிம்புவுடன் இணைந்து ’அலை’, விண்ணைத் தாண்டி வருவாயா படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது
சிம்பு-ஸ்ரேயா ஜோடி திரையில் சற்று புதிதாகவும் இருக்கும். அதே போல் தோழா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஸ்ரேயாவும், தமிழில் கடைசியாக ரௌத்திரன் படத்தில்தான் நாயகியாக நடித்திருந்தார். எனவே இந்தப் படத்தில் ஒருவேளை ஒப்பந்தம் ஆகும் பட்சத்தில், ஸ்ரேயாவுக்கு அது மீண்டும் நல்லதொரு என்ட்ரியாக அமையும் என்பது மட்டும் உறுதி. சிம்பு ஷூட்டிங்கிற்கு சரியா ஒத்துழைப்பதில்லை என கௌதம் மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில் வருகை தந்து, படத்தை சொன்ன தேதிக்கு முடித்துக்கொடுப்பாரா என்பதை பார்க்கலாம்!
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
8th July 2016, 04:07 PM
#7
Senior Member
Veteran Hubber
சிம்புவின் புதிய பட நாயகிகளில் ஒருவர் ஆனார் ஸ்ரேயா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்துக்கு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.
3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்பு,முதல் கெட்டப்பிற்காக சிம்பு, நீளமாக முடிவளர்த்து தயாராகி வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். இதில் ஒரு நாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா தமிழில் நாயகியாக நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடப்பு விரைவில் மைசூரில் தொடங்க உள்ளது.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
14th July 2016, 09:42 AM
#8
Senior Member
Veteran Hubber
AAA Cast
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
18th September 2016, 07:21 PM
#9
Senior Member
Veteran Hubber
STR @iam_str Sep 17
Birthday wishes @Adhikravi God Bless. Life is gonna be great. #Sirappu
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
18th September 2016, 07:24 PM
#10
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Bookmarks