Already Rajini murugan was more like the left over scenes, cut portions and scratch music from varuthapadatha vaalibar sangam garnished with some fresh ideas here and there....... ithula 3rd film eppadi irukka pogutho
Already Rajini murugan was more like the left over scenes, cut portions and scratch music from varuthapadatha vaalibar sangam garnished with some fresh ideas here and there....... ithula 3rd film eppadi irukka pogutho
கபாலி இசை வெளியீட்டால் 'ரெமோ' ஃபர்ஸ்ட் லுக் தள்ளிவைப்பு
'கபாலி' படத்தின் இசை வெளியீட்டால், சிவகார்த்திகேயனின் 'ரெமோ' பர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஆர்.டி.ராஜா தனது 24 am ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 'ரெமோ' முதல் பாடல் ஜூன் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' படத்தின் இசை வெளியீடும் ஜூன் 9ம் தேதியே நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 'ரெமோ' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்திருக்கிறது.
'ரெமோ' பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Sivakarthikeyan (@Siva_Kartikeyan)1 hour ago - View on Twitter#RemoFL and #RemoNeeKadhalan Theme song releasing today evening Need all ur wishes and support
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Sivakarthikeyan's Remo first look poster revealed
Actor Sivakarthikeyan's most ambitious project with newcomer director Baghyaraj Kannan has been titled as 'Remo'. Vikram played the character role in Anniyan as Remo who could make any girl go awestruck with his charm. Remo is an upcoming Tamil romantic comedy film directed by Bhagyaraj Kannan and produced by RD Raja under 24AM Studios banner. Starring Sivakarthikeyan and Keerthy Suresh in the lead role, while Sathish appears in the supporting role. The soundtrack of the movie was composed by Anirudh Ravichander. The cinematography is handled by PC Sreeram and edited by Ruben, while Resul Pookutty handles the sound design. The film developed under the tentative title of Nurse Akka, before Remo was finalised.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ரெமோ” படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்துவருகின்றன. இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை தற்பொழுது அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் ரெமோ. இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை ட்விட்டரில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது ரெமோ. அக்டோபர் 7ம் தேதி நவராத்திரி விடுமுறை என்பதால், அந்த நாளை படக்குழு தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்', 'மான்கராத்தே', 'காக்கிச்சட்டை' ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத், தான் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ரெமோவின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் ஜூன் 23 ம் தேதி பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெமோவுக்காக இளைஞன், முதியவர், நர்ஸ் என்று மூன்று கேரக்டர்களில் தோன்றுகிறார் சிவகார்த்திகேயன். அவரை கேமராவில் செதுக்கி இருப்பது பி.சி.ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
. @Siva_Kartikeyan - @KeerthyOfficial 's #REMO will be dubbed in Telugu and will have a simultaneous rel on Oct 7th! https://t.co/RoiXQ9ko7Z
'ரெமோ’ படத்தின் கதை என்ன? மினி சினிமா!
ஒன்பது படங்கள்.. ஓஹோன்னு புகழ் என இருக்கறவர் நம்ம சிவகார்த்திகேயன். பொது இடங்கள்ல அவரோட பணிவான பேச்சுக்கும், படங்கள்ல செம க்ரியேட்டிவா அவர் அடிக்கற கவுன்ட்டர் கமென்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்ஸ் கொட்டிட்டே இருக்காங்க.
அவரோட அடுத்த படம் ‘ரெமோ’. மோஷன் போஸ்டர் ரிலீஸ் விழாவே ‘ஆஹா’ என்று கவனிக்க வைத்தது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நர்ஸ் வேடம். ‘என்னது பெண் வேடத்தில் நடிக்கிறாரா’ என்று பார்த்தால் கூடவே செம ஸ்டைலிஷாகவும் ஒரு ஸ்டில் வெளியானது. உடனே றெக்கை கட்டிக் கொண்டது பரபரப்பு. ஒரு ஹீரோ பெண் வேஷம் போட்டா கதை எப்படி இருக்கும்னு நாலைஞ்சு டெம்ப்ளேட் இருக்குமே... அதுக்குள்ள ஒண்ணுதான் படத்தின் கதைனு கோடம்பாக்க தகவல்.அதோட சேர்த்து நம் பங்குக்கு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோம். இதோ... மினி சினிமாவே ஓட்டிட்டோம்..!
ஏற்கெனவே வெளிவந்த 'ரஜினி முருகன்' படத்தில் ஆரம்பத்தில் அநியாயத்துக்கு பிகு செய்வார் கீர்த்தி சுரேஷ். ஆக.. அதிலிருந்தே லீட் எடுப்போம்!
** ** ** ** ** ** ** ** ** ** ** **ஒரு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் மீது சிவகார்த்திகேயன் பார்வை விழுந்து, அது காதலாக மாறுகிறது.
அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘ஏம்ப்பா போன படத்துலயும் இதானெ பண்ணின? உடனே ஓ.கே சொல்லிட்டா நல்லாவா இருக்கும்? கொஞ்சம் பிகு பண்ணி அப்பறமா ஓகே சொல்லலாம்’ என்று நினைத்தாரோ என்னவோ... கீர்த்தி சுரேஷ் முகம் கொடுப்பதே இல்லை.’அதான் அப்பவே ஜோடி சேர்ந்துட்டோமே’ என்று சிவகார்த்திகேயன் கேட்க, ‘அது போன படம்.. இது வேற படம் டைரக்டர்கூட வேற வேற’ என்று கீர்த்தி சுரேஷ் சொல்லிவிட, ‘என்னம்மா இப்டி பண்றீங்களே’ என்று கடுப்பாகும் சிவகார்த்திகேயன் யோசிக்கிறார். அவரது கபாலத்தில், கன்னி மூலையில் கணநேரத்தில் ஒரு சிந்தனை உதிக்கிறது.முல்லைப் பூவா வாழ்க்கை மணக்கணும்னா, ’முள்ளை முள்ளால எடுக்கணும்’ பாணில நர்ஸ் மனசுல இடம் பிடிக்கணும்னா நர்ஸா மாறித்தான் ஆகணும்னு முடிவெடுக்கறார்.(இங்கே உங்க மைண்ட் வாய்ஸ்...‘ஹலோ... முள்ளுக்கும் முல்லைப்பூவுக்கும் நர்ஸுக்கும் என்ன சம்பந்தம்?’‘ஒரு ஃப்ளோவுல போறப்ப இப்டில்லாம் கேட்கக்கூடாது.. ஆமா!’)
காதல் கைகூட நர்ஸ் வேஷம் போட்டு, அதே மருத்துவமனைல சேருகிற ‘சிவகார்த்திகேயனி’, கீர்த்தியை ஃப்ரெண்ட் பிடிச்சு, ‘சிவா நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு’ன்னு அவ்வை ஷண்முகி ஃபார்முலாவை ஃபாலோ பண்றார்.இது ஒரு பக்கம் போய்ட்டிருக்கறப்ப, அந்த மருத்துவமனையில் ஒரு சிறுமி அட்மிட் ஆகறா. உயிருக்குப் போராடும் நிலையில் அட்மிட் ஆன அந்தக் குழந்தைக்கு சிவகார்த்திகேயனைப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. குழந்தைகளுக்கு சிவாவைப் பிடிக்காதா என்ன?இந்தக் குழந்தைக்கு இன்னும் அதிகமா அப்பா, அம்மாவைவிட சிவா மேல பாசம் வந்துடுது. ஒருநாள் சிவா, லீவு போட்டாகூட தேடற அளவுக்கு பாசம்.இதுக்கு நடுவுல, கீர்த்திக்கு ’சிவாவேதான் நர்ஸா வேஷம் போட்டிருக்கிறது’ அப்டிங்கற உண்மை தெரிஞ்சுடுது. ஹை ஹீல்ஸ் ஷூ அதிர நடந்து வந்து கோவப்படறாங்க. ‘இல்லம்மா... உன் மேல இருக்கற அதீத காதலுக்காகத்தானே இதப் பண்ணினேன். ப்ளீஸ் மா.. அண்டர்ஸ்டேண்ட் மீ’ என்று கெஞ்சுகிறார் சிவா. கீர்த்தி மனம் இளகவில்லை.’இந்த நாஆஆஆஆள்... உன் டைரில குறிச்சு வெச்சுக்க. என் காதலை நீ புரிஞ்சுக்கலை.. ஏத்துக்கல.. அதுக்கப்பறமும் நான் இங்க இருக்கறதுல அர்த்தம் இல்லை. அதுனால நான் போறேன். இனி இந்த ஆஸ்பத்திரி பக்கமே வரமாட்டேன்’ன்னு நர்ஸ் வேஷத்தைக் கலைச்சுட்டு வெளியேறிடறார்.அதுக்கப்பறம், மருத்துவமனைல அட்மிட் ஆகிருந்த அந்தக் குழந்தை மரணத்துடன் போராட, குழந்தைக்காக திரும்ப அங்க போறதா.. இல்லை காதல் சவாலுக்காக போகாம இருக்கறதா’ என்று மனக் குழப்பத்தில் தவிக்கிறார் சிவா.சிறுமியின் வாழ்க்கையா.. சிவாவின் காதலா.. என்ற முடிவை நோக்கி படம் பயணிக்கிறது!எப்பூடி? நல்லாருக்கா? இப்படி இருந்தா நல்லாத்தான் இருக்கும். சிவகார்த்திகேயன்ல.. இதை விடவும் நல்லா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்.எதுவானாலும் ரிலீஸ் வரைக்கும் வெய்ட் பண்ணுவோம்!
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Remo Songs Jukebox
Lyrics by Karthik, Inno Genga, Vivek & Vignesh ShivN
Music by Anirudh Ravichander
Last edited by mappi; 17th September 2016 at 03:52 PM.
Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India
Remo Stills
Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India
Remo Stills
Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India
Bookmarks