-
22nd July 2016, 09:49 AM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Aarthi Girija
நேற்று வேந்தர் டிவியில் தேர்த்திருவிழா படம் போட்டார்கள். முழுசாகப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் நடிக்கும் நாடகத்துக்கு தலைமை தாங்க மக்கள் திலகமாகவே வருவார். இந்தப் படத்திலும் எங்கள் தங்கம் படத்தின் அறிமுக காட்சியிலும்தான் மக்கள் திலகமாகவேதோன்றுவார் என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது படங்களில் அப்படி நிஜ எம்.ஜி.ஆராக வருவாரா?
நாகேஷ் நாடகம் முடிந்து புரட்சித் தலைவர் தலைமை தாங்கி பேசும்போது, பட வசனத்தை பேசுவதுபோல இல்லாமல் ஒரு விழா மேடையில் எப்படி பேசுவாரோ அப்படியே ரொம்பவும் இயல்பாக பேசுவார். நிகழ்ச்சி முடிந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆராக வரும் புரட்சித் தலைவரை வழியனுப்ப மக்கள் கூட்டம் கூடவே வந்து நெருக்கியடிக்கும். அந்த நெரிசலில் படத்தில் வரும் மக்கள் திலகமும் ஜெயலலிதாவும் முன்னால் வந்து புரட்சித் தலைவர் உட்கார்ந்திருக்கும் காருக்குள் தலையை நுழைத்து அவருக்கு வணக்கம் சொல்வார்கள். மக்கள் திலகத்தின் முகத்தில் ஒரு பெரிய நடிகரை பார்க்கும் ஆர்வமும் பிரமிப்பும் தெரியும். பின்னால் யாரோ கூட்டத்தில் தன்னை நெருக்குவதை மாதிரி திடீரென்று முகத்தை சுளித்து பின்னால் திரும்பிப் பார்ப்பார். பெரிய நடிகரைப் பார்க்கும் ஒரு கூட்டத்தில் சிக்கிய சாதாரண மனிதன் எப்படி இருப்பான் என்பதை மக்கள் திலகம் எப்படி உள்வாங்கி நடித்திருக்கிறார் என்று பார்த்து ஆச்சிரியப்பட்டேன்.
அந்தக் காட்சி முடிஞ்சதும் பணத்தை திருடிக் கொண்டு ஓடும் அசோகனுடன் மக்கள் திலகத்தின் சண்டை பயங்கர ஸ்பீடு. ஆற்றில் துரத்தியபடி நீஞ்சி வரும் மக்கள் திலகத்திடம் இருந்து தப்பிக்க கையில் உள்ள பண பேக்கை தூரத்தில் இருக்கும் பரிசலிலில் அசோகன் தூக்கி எறிவார். உடனே திரும்பி படு வேகமாக நீந்தி பரிசலுக்கு வரும் மக்கள் திலகம் பண பேக் இருக்கும் பரிசலை கரையை நோக்கி ஓட்டுவார். பின்னால் நீஞ்சி வரும் அசோகன் தந்திரமாக தன்னால் நீஞ்ச முடியவில்லை என்று சத்தம்போடுவார்.
எதிரியாக கெட்டவனாக இருந்தாலும் ஆபத்தில் உதவும் புரட்சித் தலைவருக்கே உரிய மனிதாபிமானம் வெளிப்படும். பரிசலை திருப்பி அசோகனை தண்ணீரில் இருந்து இழுத்து காப்பாற்றுவார். அந்த பெரிய பரிசலை ஓட்டும்போது குச்சியை ஆற்றுக்குள் செலுத்தி மணலில் ஊன்றி உண்மையிலேயே வலு போட்டு தள்ளியிருப்பார்.
படத்துக்காக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலேயும் இந்த மனிதாபிமானத்தால்தான் புரட்சி நடிகராக இருந்தவரை மக்கள் புரட்சித் தலைவராக ஆக்கினார்கள் என்பதே உண்மை.
படத்தில் சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு பாடலுக்கும் மக்கள் திலகத்தின் நடனம் அருமை. நல்ல ஸ்பீடான மூவ்மென்ட்களை அனாயசமாக செய்திருப்பார்.
நல்ல தொடக்கத்தின் அறிகுறியாய் - நான் வணங்கும் குல தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "தேர்த்திருவிழா" காவியம் பற்றிய சிறு அலசல். அருமை !
பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள் ! நன்றி !
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd July 2016 09:49 AM
# ADS
Circuit advertisement
Bookmarks