-
8th August 2016, 12:19 AM
#1511
Junior Member
Platinum Hubber
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
-
8th August 2016 12:19 AM
# ADS
Circuit advertisement
-
8th August 2016, 06:18 AM
#1512
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு லோகநாதன் சார் மக்கள் திலகத்தின் ''ரிக் ஷாக்காரன் ''- டிஜிட்டல் வெளியீடு விழா அழைப்பிதழ் மற்றும் சென்னையில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம் பற்றிய செய்திகள் , நிழற்படங்கள் மிகவும் அருமை நன்றி ..
-
8th August 2016, 06:38 AM
#1513
Junior Member
Platinum Hubber
பாரத் எம்ஜிஆர்
பாரத் பட்டம் பெற்று தந்த ரிக் ஷாக்காரன் ''எம்ஜிஆர் என்ற நடிகரின்
தனி மனிதனின் ஆளுமை
சமூக சிந்தனை
போராடும் குணம்
சட்டத்தின் மீது நம்பிக்கை
எதிரிகளை அடக்குதல்
வீரம் - கம்பீரம் - துணிவு போன்ற காட்சிகளில் திறமையாக நடித்து வெற்றி கண்டது மூலம் மக்கள் இதயங்களில் இன்னமும் பாரத் எம்ஜிஆராக வாழ்கிறார் .
-
8th August 2016, 11:40 AM
#1514
Junior Member
Regular Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் டிஜிட்டலில் வெளிவரப்போகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியாக உள்ளது. 1971-ம் வருடம் மிகப் பெரிய வெற்றி படம். மக்கள் திலகத்துக்கு பாரத் விருதை பெற்றுக் கொடுத்தது. சென்னையில் 143 நாள்கள் ஓடியது. தீபாவளிக்கு நீரும் நெருப்பும் படம் வந்ததால் ரிக்க்ஷாக்காரன் படம் மாற்றப்பட்டது. இல்லாவிட்டால் படம் வெள்ளிவிழா கொண்டாடி இருக்கும். அப்படி இருந்தாலும் வேறு தியேட்டருக்கு ஷிப்டிங் ஆகி 175 நாள்களை தாண்டி ஓடியது. இருந்தாலும் ஒரே தியேட்டரில் 175 நாள் ஓடினால்தான் நாம் வெள்ளிவிழா பட்டியலில் சேர்த்துக் கொள்வோம். இதுபோல் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெள்ளி விழாவை நூல் இழையில் தவறவிட்டிருக்கின்றன.
தஞ்சாவூரில் குலேபகாவலி படம் கொடிமரத்து மூலை கிருஷ்ணா டாக்கீஸில் 160 நாள்கள் ஓடியது. இன்னும் 15 நாள் ஓடியிருந்தால் படம் வெள்ளி விழா கண்டிருக்கும். மதுரையில் ஒளிவிளக்கு திரைப்படம் 147 நாட்கள் ஓடியது. இன்னும் 4 வாரம் அதே தியேட்டரில் ஓடியிருந்தால் வெள்ளி விழா பட்டியலில் அந்தப் படம் வந்திருக்கும். அதிகாரத்தை புரட்சித் தலைவர் துர்பிரயோகம் செய்தது இல்லை. கட்டாயமாக தனது படத்தை ஓட்ட வற்புறுத்தியது இல்லை. முதல்வர் ஆன பிறகும் கூட மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை 100 நாட்கள் ஓட்ட அவர் தவறான வழியில் செயல்பட்டது இல்லை.சென்னையில் 50 நாள்களை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தேவி பாரடைசில் கடந்தது. மதுரையில் 60 நாட்களை தாண்டியது. திருச்சியில் தியாகராஜ பாகவதர் மன்றம் தியேட்டரில் 50 நாட்களும் பிறகு ராஜா டாக்கீஸில் 28 நாட்களும் மொத்தம் 78 நாள்கள் ஓடியது. சத்தியம் தவறாத தர்மதேவன் புரட்சித் தலைவர். திரைப்படத்துறையிலும் அரசியல் துறையிலும் நேர்மையாக வெற்றி பெற்றார்.
இரண்டு ஆண்டுக்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படம் வெள்ளி விழா கொண்டாடி உலகில் புது சரித்திர சாதனை செய்தது போல இப்போது ரிக்ஷாக்காரன் படமும் வெள்ளி விழா காண வேண்டும். வாழ்த்துகள்.
-
8th August 2016, 12:50 PM
#1515
Junior Member
Regular Hubber
-
8th August 2016, 12:52 PM
#1516
Junior Member
Regular Hubber
பதிவிட முடியாத சூழ்நிலையில் திரிக்கு எப்படி வரவேண்டும் என்று தகவல் தந்த சுஹாராம் அய்யா அவர்களுக்கு நன்றி.
-
8th August 2016, 07:49 PM
#1517
Junior Member
Platinum Hubber
2016 ல் இதுவரை வந்த தமிழ் படங்களில் அப்பா என்ற ஒரு படத்தை தவிர மற்ற நடிகர்கள் நடித்த படங்களின் தலைப்பும் , ஏற்ற வேடங்களும் மனதில் நிற்கவில்லை . ஒரு பாடல் கூட மீண்டும் ஒரு முறை கேட்க தூண்டவில்லை .நடிகர்களுக்கு சமூக அக்கறையும் இல்லை .
1971ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் 45 ஆண்டுகள் கடந்த பின்னரும் அப் படத்தில் இடம் பெற்ற
மக்கள் திலகத்தின் நடிப்பு , காட்சிகளின் பிரமிப்பு , அருமையான உரையாடல்கள் , இனிமையான பாடல்கள்
புதுமையான சண்டை காட்சிகள் , சமூக சீர் திருத்த காட்சிகள் இன்றளவும் மனதில் நிலைத்து உள்ளது . மக்கள் திலகத்தின் எல்லா படங்களும் இனி எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் விறு விறுப்பாகவே இருக்கும் .
இதுதான் மக்கள் திலகத்தின் ஆளுமை . உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை .
-
8th August 2016, 07:56 PM
#1518
Junior Member
Platinum Hubber
-
8th August 2016, 08:00 PM
#1519
Junior Member
Platinum Hubber
-
8th August 2016, 08:02 PM
#1520
Junior Member
Platinum Hubber
Bookmarks