-
9th August 2016, 05:40 PM
#1531
Junior Member
Platinum Hubber

Originally Posted by
esvee
10.8.1973
மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டு பொன்னையா '' இன்று 43 ஆண்டுகள் நிறைவு தினம்

-
9th August 2016 05:40 PM
# ADS
Circuit advertisement
-
9th August 2016, 05:54 PM
#1532
Junior Member
Platinum Hubber
9.8.2016
MALAIMALAR

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ரிக்*ஷாக்காரன் திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம். வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து.
1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே ரிக்*ஷாக்காரன் திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திர பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாப்பத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்..., அழகிய தமிழ் மகள் இவள்..., கடலோரம் வாங்கிய காற்று..., பம்பை உடுக்கை கொட்டி... என இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாறு என்று சொன்னால் அதி மிகையாகாது. அதுமட்டுமின்றி, இந்த படத்தில் நடித்ததற்காக 1971 ஆம் ஆண்டின் இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் பாரத் விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததோடு, பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற புகழையும் அவருக்கு பெற்று தந்தது.
இப்படி பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடி தந்த ரிக்*ஷாக்காரன் படமானது தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி, மீண்டும் ஒருமுறை தமிழக ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது. இதன் முதற்படியாக நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் ரிக்*ஷாக்காரன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவானது, வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.01 மணியளவில், சென்னையில் உள்ள 'தேவி பாரடைஸ்' திரையரங்கில் நடைபெற இருக்கிறது.
ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கும் இந்த விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இயக்குனர்கள், நடிகர் - நடிகையர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என பலர் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.
சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ரிக்*ஷாக்காரன் படத்தின் டிஜிட்டல் பதிப்பை குவாலிட்டி சினிமா நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி.மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் பிலிம் விஷன் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ராமு வெளியிடுகின்றனர்.
இந்த விழாவை நாங்கள் எந்த அரங்கில் வைத்திருந்தாலும், இப்படி ஒரு சிறப்பு எங்களுக்கு அமைந்திருக்காது. ஏனென்றால், இதே தேவி பாரடைஸ் திரையரங்கில் தான் கடந்த 1971 ஆம் ஆண்டு ரிக்*ஷாக்காரன் படம் வெளியிடப்பட்டது.
தற்போது அதே இடத்தில் அந்த படத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள டிரைலரையும், பாடல்களையும் வெளியிடுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி மட்டுமின்றி பெருமையாகவும் இருக்கிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் இதில் கலந்து கொண்டு, விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்..." என்று குவாலிட்டி சினிமாவின் நிறுவனர் டி.கே. கிருஷ்ணகுமார் கூறுகிறார்.
-
9th August 2016, 06:12 PM
#1533
Junior Member
Platinum Hubber
Vetran producer and poet panju arunachalam - r.i.p
ever green song written by panju arunachalam
சிவகாமி..சிவகாமி....
ஒ ஓஓஓஓஓ
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ...
-
9th August 2016, 09:59 PM
#1534
Junior Member
Platinum Hubber

இரங்கல் செய்தி.
==============
பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஜோதி லட்சுமி , சென்னையில் மாரடைப்பால் இன்று காலமானார் .
நடிகை ஜோதிலட்சுமியின் மாமா , இயக்குனர் திரு. ராமண்ணா அவரை , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்துப் பெண் " திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.
பழம்பெரும் நடிகை டி. ஆர். ராஜகுமாரி அவரின் அத்தை ஆவார்.
தொடர்ந்து மக்கள் திலகத்துடன், அடிமைப்பெண், தேடி வந்த மாப்பிள்ளை,
ரிக் ஷாக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்த பாடல்கள் சில:
கட்டோடு குழலாட - பெரிய இடத்துப் பெண்
காலத்தை வென்றவன் - அடிமைப்பெண்
ஆடாத உள்ளங்கள் ஆட -- தேடி வந்த மாப்பிள்ளை
பம்பை உடுக்கை கொட்டி - ரிக்ஷாக்காரன்
நடிகை ஜோதிலட்சுமியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். அன்னாரின் குடும்பத்தினருக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
Last edited by puratchi nadigar mgr; 9th August 2016 at 10:04 PM.
-
9th August 2016, 10:06 PM
#1535
Junior Member
Platinum Hubber

இரங்கல் செய்தி .
-------------------------
பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் திரு. பஞ்சு அருணாச்சலம் உடல் நல
குறைவால் இயற்கை எய்தினார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த " பொன்னெழில் பூத்தது புது வானில் " என்கிற
கலங்கரை விளக்கம் பட பாடல் எழுதி புகழ் பெற்றவர் திரு. பஞ்சு அருணாச்சலம்
என்பது குறிப்பிடத்தக்கது .
திரு. பஞ்சு அருணாச்சலம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல
இறைவன் அருள் புரியட்டும். அன்னாரின் மறைவு குறித்து, அவரது குடும்பத்தினருக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் .
-
9th August 2016, 10:40 PM
#1536
Junior Member
Platinum Hubber

மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த மாதம் 22/07/2016 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் " ஆசைமுகம் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .
ஒரு வார வசூலாக ரூ.96,000/ க்கு மேலாக ஈட்டி அற்புத சாதனை நிகழ்த்தி , அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .
சமீபத்தில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த
"குடியிருந்த கோயில் " குறைந்த இடைவெளியில் வெளியாகி ஒரு வார வசூலாக சுமார் ரூ.1 லட்சம் ஈட்டி அரிய சாதனை படைத்தது
அதற்கு பின் வெளியான கருப்பு வெள்ளை மற்றும் பல வண்ண படங்களின்
வசூலை துவம்சம் செய்துள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆசைமுகம் "
செய்திகள் /புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
Last edited by puratchi nadigar mgr; 9th August 2016 at 11:25 PM.
-
9th August 2016, 10:44 PM
#1537
Junior Member
Platinum Hubber
இன்று (09/08/2016) பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தாயின் மடியில் " ஒளிபரப்பாகியது .
-
9th August 2016, 10:48 PM
#1538
Junior Member
Platinum Hubber
நாளை (10/08/2016) மதியம் 12 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .நடித்த
"தொழிலாளி " மெகா டிவியில் ஒளிபரப்பாகிறது .
-
9th August 2016, 10:49 PM
#1539
Junior Member
Platinum Hubber
-
9th August 2016, 10:50 PM
#1540
Junior Member
Platinum Hubber
Bookmarks