-
18th August 2016, 08:55 PM
#1801
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்திருக்கிறார். சபாநாயகர் தனபாலை ஒருமையில் பேசியுள்ளனர். பேப்பரையும் கர்சீபையும் வீசியுள்ளனர். இவர்களது கலாட்டாவால் போனவாரம் சட்டசபையே ஒத்திவைக்கப்பட்டது. நேற்று ஒரு மணி நேரம் போல பொறுத்துப் பார்த்து அதன்பிறகுதான் அவர்களை சபாநாயகர் வெளியேற்ற சொல்லிஇருக்கிறார். அதிலும் விளம்பர ஆசை. காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்ற வேண்டும் என்று அடம்பிடித்து சபையில் இருந்து வெளியேற மறுத்து பிறகு ஸ்டாலினை சபைக்காவலர்கள் தூக்கி வர அவர் சிரித்துக் கொண்டே அவர்கள் கையில் உட்கார்ந்து வருகிறார். திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் ஒருவாரம் சஸ்பென்ட் செய்திருக்கிறார்.
கொஞ்சமாவது ஒழுக்கம் அறிவு நாணயம் வேண்டாமா? இன்றும் சட்டசபைக்குப் போய் உள்ளே நுழைய முயன்று காவலர்களுடன் ஸ்டாலின் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இந்த மாதிரி அராஜகம் செய்பவர்களை ஆதரிக்கவும் ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் ஆதரிக்க ஒரு மானம் கெட்ட கூட்டம்.
சபாநாயகர் மதியழகன் இருக்கும்போதே பக்கத்தில் இன்னொரு சேர் போட்டு போட்டி சட்டசபை நடத்தி புரட்சித் தலைவர் மீது செருப்பு வீசிய கூட்டத்துக்கு ஜனநாயகம் பற்றி பேச தகுதி ஏது?
ஊழல் என்று எடுத்துக் கொண்டாலும் கருணாநிதியின் ஆரம்பகால ஊழல்களை விடுவோம். மக்களுக்கு தெரிஞ்ச கதைதானே? விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தார் என்று இந்திரா காந்தி சொல்லியது இருக்கட்டும். இந்த காலத்துக்கு வருவோம். 66 கோடி வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்தார் என்ற முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு பெரிசா? ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி 2ஜி ஊழல் பெரிசா? அது ஊகம் என்பார்கள். கருணாநிதி டி.வி.க்கு 200 கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் கொடுத்த வழக்கில் கருணாநிதி மகள் கனிமொழி 6 மாதம் சிறையில் இருந்தார். இன்னும் கேஸ் நடக்கிறது. தயாநிதி மாறன் சன் டிவி ஊழலில் சிபிஐயிடம் மாட்டி இருக்கிறார். எந்த ஊழல் பெரிசு? திமுக ஊழல்தான் பெரிசு என்று படிச்சவன் கூட வேண்டாம். ஆப்பம் விற்கும் படிக்காத கிழவிகூட சொல்லும்.
இப்படிப்பட்ட திமுகவை யாராவது ஆதரித்தால் அவர்கள் சொம்பு தூக்கவில்லையா? பக்கெட் தூக்குகிறார்கள் போல இருக்கிறது. திமுகவை ஆதரிப்பவன்தான் தமிழன். மற்றவன் தமிழின விரோதி. உண்மைதான். பதவி ஆசைக்காக இலங்கையில் ஒன்றரை லச்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்தான் பச்சை தமிழன். திமுகவை ஆதரிக்கிறவன்தான் தமிழன். திராவிடனாக இருந்தாலும் தமிழனாக இருந்தாலும் நாம்ப எல்லாம் அந்நியன். கபாம், குபீம் என்றுதான் பேசறோம்.
இவர்களைப் பற்றித் தெரிந்துதானே மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்? உடனே கட்சிகள் சிதறியதால் அதிமுக வெற்றி பெற்றது என்பார்கள். தனித்தனியாக நின்றால் ஜெயிக்க முடியாதாம். எல்லாரும் சேர்ந்து நின்றால் அதிமுகவை இவர்கள் ஜெயிப்பார்களாம். பலே!
இதெல்லாம் இங்கே எதுக்கு? அரசியல் எதுக்கு? என்று யாராவது நினைக்கலாம். புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் அதிமுக. இப்போதும் அந்தக் கட்சியின் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். புரட்சித் தலைவரின் அரசியல் விரோதிகள் செய்யும் தவறுகளையும் கடந்த காலங்களில் அவர்கள் எவ்ளவு ஜனநாயக விரோதமாக செயல்பட்டார்கள் என்பதையும் சொல்லத்தான் இந்தப் பதிவு. புரட்சித் தலைவருக்கு தொல்லை கொடுத்து மக்களை ஏமாற்றிய கூட்டம் இன்னும் ஏமாற்றப் பார்க்கிறது. மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை தேர்தலில் காட்டி விட்டார்கள். ஆகவே, இந்தப் பதிவு புரட்சித் தலைவரோடு சம்பந்தப்பட்ட பதிவுதான். பெயர் வைத்திருக்கும் திரிக்கு சம்பந்தமே இல்லாமல் பதிவிடவில்லை.
Last edited by SUNDARA PANDIYAN; 18th August 2016 at 09:35 PM.
-
18th August 2016 08:55 PM
# ADS
Circuit advertisement
-
18th August 2016, 08:57 PM
#1802
Junior Member
Senior Hubber
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உயிரிழந்தாரா கவிஞர் நா.முத்துக்குமார்?: பரபரப்பு தகவல்கள்
http://cinema.maalaimalar.com/Cinema...nformation.vpf
இந்த செய்தியை பார்த்து மனதுக்கு வருத்தமாக இருந்தது. எத்தனை சம்பாதனை, புகழ் இருந்து என்ன? கடைசியில் நா. முத்துக்குமார் என்ற கவிஞர் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாததால் இறந்திருக்கிறார் என்று தெரிகிறது. அதற்கு காரணம் பல தயாரிப்பாளர்கள் அவருக்கு போலியான காசோலைகள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இது இப்போது இல்லை. அந்தக் காலத்தில் இருந்தே நடக்கிறது. கதாநாயகன் மற்றும் முக்கியமானவர்களுக்கு கேட்டபடி சரியன பணம் கிடைத்துவிடும். சிறிய நடிகர்கள் தொழிலாளர்களுக்கு சொன்னபடி சரியான பணம் கிடைக்காது. இழுத்தடித்துதான் வரும். ஒரு சில தயாரிப்பாளர்களால் பலர் உழைத்த காசை பெறமுடியாமல் போய் இருக்கிறது.
இதுமாதிரி விபத்துக்கள் நடக்கக் கூடாது என்றுதான் புரட்சித் தலைவர் தனது படங்களில் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் நியாயமான சரியான சம்பளம் கிடைப்பதை உறுதி செய்வார். தனது சம்பளத்தைப் பற்றிக் கூட கவலைப்படமாட்டார். தயாரிப்பாளர் உண்மையிலேயே சிரமப்படுவது தெரிந்தால் தன் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வார். ஆனால் மற்றவர்களுக்கு சம்பளம் சரியாக கிடைக்கச் செய்வார். எல்லோருக்கும் செட்டில் ஆகிவிட்டதா என்று தெரிந்து கொண்டுதான் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். இல்லாவிட்டால் படப்பிடிப்புக்கு வரமாட்டார். இதனால், தனக்கு கெட்ட பேர் வந்தாலும் கவலைப்படமாட்டார். இந்தப் பொறுப்புணர்வும் மற்ற கலைஞர்கள் மேல் உள்ள அக்கறையும் போற்றப்பட வேண்டியது.
நடிகை எஸ்.என். லட்சுமியின் பேட்டி இங்கே போட்டிருக்கிறேன். பண்டரிபாய்க்கு புரட்சித் தலைவர் உதவியதை சொல்லியிருக்கிறார். புரட்சித தலைவரின் சிறப்பை சொல்லியவர் கடைசியில் அழுதே விட்டார் என்பதை படிக்கும் எல்லாருக்கும் கண்கலங்கும்.
-
19th August 2016, 06:14 AM
#1803
Junior Member
Platinum Hubber
1966ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை வண்ணப் படத்திற்கு பின் 1968ல் ஜனவரி 11 அன்று வெளிவந்த
வண்ணப்படம் ரகசிய போலீஸ் 115.
மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் .
இனிமையான 6 பாடல்கள்
புதுமையான சண்டை காட்சிகள்
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான ரீரெக்கார்டிங்
சிறப்பான ராமமூர்த்தியின் ஒளிப்பதிவு
பந்துலுவின் அருமையான தயாரிப்பு மற்றும் இயக்கம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு என்றென்றும் மன நிறைவு தந்த படம் .
48 ஆண்டுகளாக பல முறை திரை அரங்கில் கணக்கில்லாமல் வெளிவந்த படம் . தனியார் ஊடகங்களில் கணக்கில்லாமல் ஒளி பரப்பப்பட்ட படம் . இன்று டிஜிட்டல் வடிவில் நம்மை மகிழ்விக்க முதலில் மதுரை நகரில் அலங்கார் அரங்கில் அலங்கரிக்க வருகிறார் நம் புரட்சி தலைவர் ''ரகசிய போலீஸ் 115.''
-
19th August 2016, 12:11 PM
#1804
Junior Member
Regular Hubber
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
மக்கள் திலகம் நடித்த ரிக்க்ஷாக்காரன் திரைப்பட டிரெயிலர் வெளியீட்டு விழா வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
-
19th August 2016, 12:18 PM
#1805
Junior Member
Regular Hubber

இன்று அய்யா ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள். பெருந்தலைவர் காமராஜரின் சீடர். 1965-ம் ஆண்டிலேயே ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு தமிழக காங்கிரஸின் தூணாக இருந்தவர். காமராஜர் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் இணைப்பு விழாவில் மூப்பனார் அய்யாவைத்தான் அன்னை இந்திரா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவராக அறிவித்தார்.
1977-ம் வருஷம் பார்லிமென்ட் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணியின்போது புரட்சித் தலைவருடன் ஒரே மேடையில் மூப்பனார் அய்யா பிரசாரம் செய்தார்.
காங்கிரசுக்கு என்று தமிழகத்தில் பாரம்பரியமான ஓட்டு வங்கி உண்டு. எங்கள் குடும்பமே பரம்பரையாக காங்கிரஸ் குடும்பம்தான். நான்தான் முதல் தலைமுறையாக புரட்சித் தலைவர் படங்களைப் பார்த்தும் அவரது மனிதாபிமானத்தைக் கண்டும் அவரிடம் அன்பு கொண்டும் புரட்சித் தலைவர் தொண்டனாக மாறினேன். காங்கிரசுக்கு என்றே உள்ள அந்த ஓட்டு வங்கியும் உண்மையான கட்சித் தொண்டர்களும் மூப்பனார் அய்யா பின்னால் நின்றார்கள். 1989-ம் வருஷம் தேர்தலில் மூப்பனார் அய்யா தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸை சேதாரம் இல்லாமல் கட்டிக் காத்தார். கபிஸ்தலம் தொகுதியில் மூப்பனார் அய்யா வெற்றி பெற்றார்.
புரட்சித் தலைவர் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர் மூப்பனார் அய்யா அவர்கள். 1984-ம் வருஷம் புரட்சித் தலைவர் உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தபோது அன்னை இந்திரா காந்தி கொல்லப்பட்டார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த மூப்பனார் அய்யா, ராஜீவ் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார். அப்போதைய தேர்தலின்போது அதற்கு முன் ராஜிவ் காந்தி புரட்சித் தலைவரை நேரில் பார்த்தது கூட இல்லை. தமிழகத்தில் புரட்சித் தலைவர் பற்றியும் அதிமுக பற்றியும் அவரிடம் எடுத்துச் சொல்லி கூட்டணி அமைய மூப்பனார் அய்யா பின்புலமாக இருந்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோதும் தமிழ்நாட்டில் அவர்தான் காங்கிரஸ் என்று நிரூபிக்கப்பட்டது. சத்தியமூர்த்தி பவனை அகில இந்திய காங்கிரஸால் மீட்க முடியவில்லை. காங்கிரஸ் அலுவலகமாக இருந்த சத்தியமூர்த்தி பவன் தமாகா அலுவலகமாக மாறியது. 1996-ம் ஆண்டு அரசியலால் அணி மாறியபோதும் 2001-ம் வருஷம் மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். மறையும்போது அதிமுக கூட்டணியில்தான் இருந்தார்.
திரண்ட செல்வம் இருந்தபோதும் மூப்பனார் அய்யா எளிமையாக இருந்தார். புரட்சித் தலைவர் போலவே சொந்தப் பணத்தை அரசியலுக்கு செலவு செய்தார். புரட்சித் தலைவர் போலவே அரசியலில் அவர் எந்த சொத்தும் சம்பாதிக்கவில்லை. புரட்சித் தலைவர் மாதிரியே யாரையும் மரியாதைக் குறைவாக மூப்பனார் அய்யா பேசியது இல்லை. எல்லா தலைவர்களிடமும் கண்ணியத்தோடு பழகினார். புரட்சித் தலைவரின் நண்பராக விளங்கிய மூப்பனார் அய்யா பிறந்தநாளில் அவர் நினைவை போற்றுவோம்.
.
Last edited by MAHALINGAM MOOPANAAR; 19th August 2016 at 12:23 PM.
-
19th August 2016, 01:11 PM
#1806
Junior Member
Platinum Hubber
டைம் பாஸ் -27/08/2016
-
19th August 2016, 01:13 PM
#1807
Junior Member
Platinum Hubber
தினத்தந்தி -19/08/2016
-
19th August 2016, 01:18 PM
#1808
Junior Member
Platinum Hubber
இன்று (19/08/2016) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : திரு. பி.ஜி. சேகர்.
-
19th August 2016, 01:21 PM
#1809
Junior Member
Platinum Hubber
இன்று (19/08/2016) பிற்பகல் 2 மணிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"நல்ல நேரம் " புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது .
-
19th August 2016, 01:25 PM
#1810
Junior Member
Platinum Hubber
நாளை (20/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
Bookmarks