Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை தேவிபாரடைஸ் திரை அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
    டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " திரைப்பட ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (21/08/2016) மாலை 6.30 மணியளவில் மிகுந்த எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் , பலத்த ஆரவாரங்களுக்கிடையே ,ரசிகர்கள் /பக்தர்கள்
    ஆர்ப்பரிப்புடன் வெகு சிறப்பாக துவங்கியது .

    அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்களின் / ரசிகர்களின் கூட்டமைப்பு, மற்றும்
    ஒருங்கிணைப்பு குழு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது .

    தேவி பாரடைஸ் அரங்க நுழைவு வாயிலில் பிரம்மாண்ட பேனர்கள் , மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன .

    மாலை 4 மணியளவில் இருந்தே பக்தர்கள் குவிய ஆரம்பித்தனர் .
    மாலை 5 மணியளவில் பேண்ட் வாத்திய குழுவினர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
    பாடல்கள் இசைத்த வண்ணம் இருந்தனர்.

    5.30 மணியளவில் பட்டாசுகள்/சரவெடிகள் , அண்ணா சாலையில் வெடிக்கப்பட்டன. பின்பு வெடிகுண்டு / அணுகுண்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன .சுமார் 30 நிமிடங்கள் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .மிகுந்த சிரமங்களுக்கு இடையே , காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்து வதை காண முடிந்தது.

    பிரம்மாண்ட பேனர்களுக்கு , பூசணி , தேங்காய், எலுமிச்சம் பழம் ஆகியவற்றில்
    கற்பூரம் ஏற்றி பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அப்போது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் வாழ்க!, ஓங்குக ! என பக்தர்கள் முழக்கம் இட்டனர் .
    பின்னர், இளநீர், பன்னீர் ,பால், சந்தனம் போன்றவற்றால் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு அபிஷேகம் செய்தனர் .

    மாலை 6 மணியளவில் திரை அரங்கத்தினுள் ரசிகர்கள் /பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களை , அந்த காலத்தில்
    முதல் நாள், முதல் காட்சியே படம் பார்த்திடவேண்டும் என்கிற உத்வேகத்துடன்
    ரசிகர்கள் அலை அலையாய் திரண்டு வந்து அரங்கை முற்றுகையிட்டது போன்ற காட்சிகளை நினைவூட்டும் வகையில் , ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு , இருக்கைகளில் இடம் பிடிக்க பாய்ந்தனர் .

    6.15 மணியளவில் அரங்கம் நிறைந்து , சுமார் 300க்கு மேற்பட்டோர் ஆங்காங்கே
    சிலர்கைகளில் இலவச டிக்கட் இருந்தும் இருக்கைகளில் அமரமுடியாமல் தவிப்பதை காண முடிந்தது . அரங்கத்தின் காவல்காரர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாத வண்ணம் திகைத்து இருந்தனர்.

    6.30 மணியளவில் சிறப்பு விருந்தினர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்த வண்ணம் இருந்தனர். சத்யா மூவிஸ் அதிபர், மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் திரு.மயில்சாமி, திரு. சின்னி ஜெயந்த், கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. சண்முகம், ஆல்பட் தியேட்டர் திரு. மாரியப்பன் , திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம், இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன், முருகன் தியேட்டர் அதிபர் திரு.பரமசிவ முதலியார் மகன் திரு.
    சுப்ரமணியம், நடிகர் திரு.வின்சென்ட் அசோகன் ,சத்யஜோதி பிலிம்ஸ் அதிபர் திரு. தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.



    இடையில் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒருங்கிணைப்பு குழு சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன .

    டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " தயாரிப்பாளர்கள் ஆன திரு. கிருஷ்ணகுமார் , திரு. மணி, திரு.ராமு ஆகியோர் அனைவரையும் வரவேற்ற வண்ணம் இருந்தனர்.

    6.40 மணியளவில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் எழில்மிகு தோற்றங்கள் கொண்ட காட்சிகள்,சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் காட்சிகள், படப்பிடிப்பு காட்சிகள் , பாரத் பட்டம் பெற்ற காட்சி, ஆகியன , ரசிகர்களின் பலத்த கைதட்டல், ஆரவாரங்களுக்கு இடையே அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது .
    ஒவ்வொரு காட்சியையும் காண்பித்தபோது அரங்கமே அதிர்ந்த வண்ணம்
    முதல் நாள் , முதல் காட்சியை பார்த்தது போல் இருந்தது என்று குறிப்பிட்டால்
    மிகையாகாது .

    பின்பு திரைப்படத்தின் முன்னோட்டமும் , அதையடுத்து, "அழகிய தமிழ் மகள் "
    மற்றும் "பம்பை உடுக்கை கொட்டி " பாடல்கள் முழுவதையும், மீண்டும்
    முன்னோட்டமும் காண்பித்து ரசிகர்களை / பக்தர்களை திக்கு முக்காடாகி செய்தனர் . மெல்லிசை மன்னரின் மென்மையான இசையும், காட்சி அமைப்பு ,
    மற்றும் புரட்சி தலைவரின் எழில்மிகு தோற்றம், நடிப்பு ,நடை, உடை, நடனங்கள் ரசிகர்களை கவர்ந்து , அவர்கள் எழுப்பிய கரவொலிகளும், ஆரவாரங்களும் .
    விண்ணை பிளக்கும் வகையில் இருந்தன.

    இரவு 7 மணியளவில் , சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு வரவேற்கப்பட்டனர் .

    நிகழ்ச்சி தொகுப்பாளர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அருமைகள்,பெருமைகள் ,சிறப்புகள், சாதனைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு சிலாகித்து பேசினார். 29/05/1971 ல் வெளியான "ரிக் ஷாக் காரன் "
    சென்னை தேவி பாரடைஸ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணாவில் 142 நாட்கள், சரவணாவில் 104 நாட்கள் , மதுரையில் 161 நாட்கள் , கோவை-ராஜா, திருச்சி -பேலஸ் ,நெல்லை -லக்ஷ்மி , சேலம் -அலங்கார் , ஈரோடு -கிருஷ்ணா ,
    தஞ்சை -யாகப்பா , குடந்தை -டைமண்ட் , மாயவரம் -சுந்தரம், ஆகிய அரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடி சாதனை புரிந்தது .
    51 நாட்களில் 50 லட்சம் வசூல்,செய்து அரசுக்கு வரியாக 20 லட்சம் செலுத்தியது அந்த காலத்தில் அபார சாதனை . 72 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதும் அந்த காலத்தில் மகத்தான சாதனை என்று பேசினார்.

    பின்னர் , டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " தயாரிப்பாளர்களான திரு. கிருஷ்ணகுமார் ,
    திரு. மணி, திரு ராமு , ஆகியோர் அனைவரையும், வரவேற்றும், மிகுந்த
    சிரமங்களுக்கு இடையே , நெகட்டிவ் பாதிப்புக்கு உள்ளானதை சுட்டிக்காட்டி
    பல சோதனைகளை சந்தித்து, தயாரித்துள்ளதாகவும் , , மீண்டும் மிக பெரிய சாதனை படமாக அமைய உங்கள் அனைவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம் என்று பேசினார்கள் .

    பின்பு, பட தயாரிப்பாளரும் , முன்னாள் அமைச்சரும் ஆன திரு. ஆர். எம்.வீரப்பன் பேசும்போது, இந்த படம்தான் புரட்சி தலைவருக்கு, பாரத் பட்டம்
    பெற்று தந்தது, அத்துடன் ,இந்தியாவிலேயே, ஒரு நடிகருக்கு பாரத ரத்னா
    கிடைத்தது என்றால் அது புரட்சி தலைவருக்கு மட்டுமே என்று பலத்த கரவொலிக்கு இடையில் பேசினார் . மேலும் அவர் பேசிய குறிப்புகள் இன்றைய
    தமிழ் இந்து தினசரியில் பிரசுரம் ஆகியுள்ளன .

    அடுத்து ,கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. சண்முகம்
    பேசியபோது, 1956 ல் வெளியான , தாய்க்கு பின் தாரம் முதல் 1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரையில் பல படங்களுக்கு வினியோக உரிமை பெற்று வியாபாரம் செய்த அனுபவத்தில் கூறுவது என்னவென்றால்
    அன்றும் , இன்றும், என்றுமே மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தான் வசூல் சக்கரவர்த்தி என்றார்.

    ஆல்பட் தியேட்டர் திரு. மாரியப்பன் , நேற்று, இன்று, நாளை என்றுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் வசூல் மன்னன். எங்கள் அரங்கில் சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியாகி , "ஆயிரத்தில் ஒருவன் " 190 நாட்கள் ஓடியதே
    இதற்கு ஒரு உதாரணம் என்றார் .

    அடுத்து நடிகர் மயில்சாமி பேசியபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
    அழகையும், வண்ண தோற்றத்தையும், எழில்மிகு காட்சிகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . மாம்பழம், பப்பாளி, மாதுளை , ஆப்பிள்
    போன்ற எந்த பழங்களுடனும் ஒப்பிட முடியாத , அப்படிப்பட்ட , அபூர்வ, மனிதநேய மிக்க மாபெரும் கலைஞன் , தலைவன், ஏன் இறைவன் என்றே சொல்லலாம் . இந்த அரங்கினுள் கூடிய கூட்டம் அந்த மகானுக்காகத்தான்
    நானும் பார்க்கிறேன், பல புதிய படங்கள் தயாராகின்றன, வெளியாகின்றன,
    ட்ரைலர் வெளியீட்டிற்கு வாகனங்களை அனுப்பியோ , பணம் கொடுத்தோ,
    சிபாரிசுகள் செய்தோ, கெஞ்சி கூத்தாடி ஆட்களை வரவைக்கின்றனர்.
    ஆனால் ,இங்குள்ள கூட்டம் தானாக வந்தது, மக்கள் தலைவருக்காக ,மக்களை நேசித்த மனிதநேய மாணிக்கத்திற்காக .

    ஒரு முறை , தயாரிப்பாளர்களை அழைத்து, என் வருமானத்தில் ரூ.50,000/- கூட்டி கொள்ளலாம் என்று நினைக்கிறேன், உங்கள் அபிப்பிராயம் என்ன என்றாராம். அதற்கென்ன, தாராளமாக கூட்டி கொள்ளுங்கள், நீங்கள்தான் வசூல்
    சக்கரவர்த்தி ஆயிற்றே .என்றார்களாம் .ஆனால் தலைவரே பதிலும் சொன்னாராம் .இதை காரணம் காட்டி டிக்கட் கட்டணம் ஏற்றிவிட்டால் கஷ்டப்படுவது என்னுடைய ரசிகர்கள்தான் .என்னுடைய ரசிகர்கள், தொழிலாளர்கள், ரிக் ஷா இழுப்பவர்கள், பாட்டாளிகள், வாகன ஓட்டிகள்,
    பரம ஏழைகள் , அவர்களுக்கு மேலும் எந்த சுமையும் ஏற்றக்கூடாது என்றாராம்

    ஆயிரத்தில் ஒருவன் , படப்பிடிப்பு கோவாவில் ஒரு தீவில் நடைபெற்றபோது
    மதிய உணவு தயார் செய்து ஒரு மோட்டார் படகில் அனுப்பப்பட்டது . எதிர்பாராதவிதமாக வந்த பெரிய அலையில் சிக்கி , படகில் உள்ள உணவு பொருட்கள் சேதம் அடைந்தன. மீதம் இருந்தது, சோறு, கூட்டு, பொரியல், சாம்பார் மட்டுமே. தட்டுகள், இலைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன . மதிய உணவு இடைவேளை வந்ததும் , அனைவரும் பயத்தில் செய்வதறியாது திகைத்திருந்தபோது, விஷயத்தை உணர்ந்ததும்,அனைத்தையும் கலந்து ,தன் இரு கைகளில் விடுமாறு, முதல் மனிதராக நின்றதும், அத்துனை சக நடிக -நடிகைகள் , படப்பிடிப்பு தொழிலாளர்கள் உள்பட அனைவரும் வரிசையில் நின்று தங்கள் இரு கைகளில் சாப்பாடு ஏந்தி சாப்பிட்டனர். நிலைமையை யோசித்து சமயோஜிதமாக நடந்து கொண்டதை, பின்பு அனைவரும் பாராட்டினர்

    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட பாடல்களுக்காக , இறக்குமதி செய்யப்பட
    பலவித இசை கருவிகளை , மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி., தலைவரிடம்
    காண்பித்தார். தலைவர் திரு. எம்.எஸ். வியை . பாராட்டியதோடு நிற்காமல் ,
    மோனோ இசை கருவிகளை காண்பித்து, இதில் வாசித்தால்தான் பாடல் பதிவுக்கு ஒத்துக்கொள்வேன் .ஏனென்றால் என்னுடைய ரசிகனுக்கு விலையுயர்ந்த டேப் ரிக்கார்டர்களை வாங்கி உபயோகிக்கும் வசதி இல்லை.
    தமிழகத்தில் எல்லா அரங்குகளிலும் 35 எம்.எம். திரைதான் உள்ளது. அதனால்தான் சினிமாஸ்கோப் மற்றும் 70 எம் எம்.மில் எடுக்காமல் , அனைத்து
    ரசிகர்களும் கண்டுகளிக்க வசதியான வகையில் படப்பிடிப்பு , பாடல் பதிவு
    நடத்த உத்தேசித்துள்ளேன் என்றாராம். ஆக , தலைவர் மக்களை நேசித்தார் .
    அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு , தனது கலைப்பணியை
    ஆற்றி ,மக்களை மகிழ்வித்தார் . இப்போது உள்ள நடிகர்கள் யாராவது மக்களை
    பற்றியோ, நாட்டை பற்றியோ சிந்திக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை.
    நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டிற்கு சென்றாலும் , என் தலைவனின் சிறப்புகளை, பெருமைகளை பறை சாற்ற தயங்குவதே இல்லை.
    வாழ்க ! என் தலைவனின் புகழ் . என்று பேசினார்.


    நடிகர் சின்னி ஜெயந்த் , பேசும்போது, தமிழகத்தின் கலைக்கடவுள் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் . எனவே அவர் பாணியில், என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஆரம்பித்தார்.நானும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான் நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் உறவாடியது இல்லை. அவருடன் நடித்ததில்லை .பழகியதும் இல்லை . ஆனால் பல நண்பர்கள் மூலமாகவும், கலைத்துறையில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள்,தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் மூலமாக அவரது நற்குணங்கள், கொடை தன்மை, உதவிகள் , மக்களுடன் நெருங்கி பழகிய விதம் , வசூல் சக்கரவர்த்தியான விதம் போன்ற பல விஷயங்கள் தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவர் ஒரு தனிப்பிறவி. அவருடைய பாடல்களின் சிறப்புகள் தெரிந்து கொண்டு இப்போது நிறைய இன்னிசை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வருகிறேன்.பாட்டு புத்தகம் இல்லாமலேயே அவரின் கருத்தான பாடல்களை பாடலாம்.இப்போது வரும் பாடல்கள் நிலையானவை அல்ல. அவர் கலைத்துறையில் இருந்தபோது நான் நடிக்கவில்லை. இருப்பினும் பல தலைமுறை கடந்து ,மறைந்தும் மறையாமல் வாழும் உன்னத தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவரது பாடல்கள் பாடி , அவருடன் நடித்ததாக நாங்கள் பெருமைபட்டுக் கொள்கிறோம் . தெய்வ நிலையை அடைந்த ஒரு மகா நடிகன் யார் என்றால் அது நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். அவரது திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு என் போன்ற கலைஞனையும் வரவழைத்து, கௌரவித்ததற்காகவும் , பேச வாய்ப்பு அளித்ததாகவும் மிகவும் நன்றி.
    இந்த வையகம் உள்ளவரையில் அவர் புகழ் நீடிக்கும், நிலைக்கும் என்பது
    திண்ணம் .வாழ்க ! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ். என்று பேசினார் .

    இறுதியில் டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " இசை தட்டு வெளியீடு பற்றி அறிவிப்பு
    வெளியிடப்பட்டது . அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
    பின்பு திரு. கிருஷ்ணகுமார் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததற்காகவும் , பிரம்மாண்ட வெற்றி அடைய செய்ததற்க்காகவும்
    நன்றி தெரிவித்துக் கொண்டார் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •