Results 1 to 10 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

Threaded View

  1. #13
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 33

    சிவந்த மண் - சுற்றுலா காட்சி


    நடிகர் திலகத்தின் நடிப்பின் இலக்கணத்தைப் பற்றிய இத்தொடரில் பல்வேறு பாத்திரங்களில் எப்படி கையாண்டு நடித்திருக்கிறார் என்பது விளக்கப்பட்டுள்ளது.
    இந்த 33வது தொடரில், அவர் நடிப்பிற்கு தன்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்கிறார், அவருடைய நடிப்பிற்கு உத்வேகம் - ஆங்கிலத்தில் Inspiration -எப்படி கிடைக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

    வியட்நாம் வீடு பிரஸ்டிஜ் பத்மநாபன் டி.வி.எஸ். அதிபரும், கௌரவம் பாரிஸ்டர் பாத்திரத்திற்கு அந்நாளைய பிரபல வழக்கறிஞர் கோவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களும், திருவருட்செல்வர் அப்பர் பாத்திரத்திற்கு காஞ்சி மகா பெரியவரும் உருவகமளித்ததாக கேள்விப்பட்டதுண்டு. ஆனால் யாரும் அதிகம் அறிந்திராத மக்களும் நடிகர் திலகத்திற்கு உத்வேகமளித்துள்ளனர் என்பதும் அதிகம் மக்கள் அறிந்திராத செய்தி.

    தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு, அதே போல் ஸ்பெயினில் காலம்காலமாக BULL FIGHT என்ற பெயரில் அந்நாட்டு சுற்றுலாவின் முக்கிய அம்சமாக பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது. சற்றே கொடூரமான விளையாட்டாக இருக்கும் இதில் பங்கேற்கும் காளைகளை அடக்க வீர்ர்கள் கூர்மையான கத்தியைப் போன்ற ஆயுத்த்தினால் குத்தி அதை அடக்குவார்கள்.

    சிவந்த மண் படத்தில் நாயகி தான் நாயகனோடு பல நாடுகளுக்கு சுற்றுலா போவதாக கனவு காணுகிறாள். இந்த கனவுக் காட்சியின் மூலம் வெவ்வேறு நாடுகள் படத்தில் இடம் பெறுகின்றன. நாயகனும் நாயகியும் ரோம், மாட்ரிட், பாரீஸ் என ஐரோப்பிய முக்கிய நகரங்களுக்கு சுற்றுலா போகிறார்கள். ஸ்பெயினில் இந்த காளை அடக்கும் விளையாட்டையும் பார்க்கிறார்கள். இதைத் தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் போகிறார்கள் என்பதாக படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    சிவந்த மண் ஒரே சமயத்தில் தர்த்தி என்ற பெயரில் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டதால், அதில் நடித்த ராஜேந்திர குமார் மற்றும் வகீதா ரஹ்மான் இருவரும் தமிழில் நடிகர் திலகம், காஞ்சனா இருவரும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடுத்தடுத்து இரு மொழிக் காட்சிகளும் எடுக்கப்பட்டன. அதில் மேற்கூறிய கனவுக் காட்சியும் ஒன்று.

    அந்த கனவுக் காட்சியில் மேற்கூறிய ஸ்பெயின் காளை அடக்கும் காட்சியும் இதே போல் ஒரே சமயத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் இரண்டும் படமாக்கப்பட்டது.

    இந்தக் காட்சியில் பார்வையாளர் காலரியில் நடிகர் திலகம் காஞ்சனா இருவரும் அமர்ந்திருப்பதை காமிரா அடிக்கடி காண்பிக்கும். அவர்களுக்க்குக் கீழேயே ராஜேந்திர குமார் மற்றும் வஹீதா ரஹ்மான் இருவரும் அமர்ந்திருப்பார்கள்.



    இந்தக் காட்சியில் காளையை அடக்கும் வீர்ர்கள் - Matadors என அழைக்கப்படுபவர்கள் - அந்தக் கூர்மையான கொம்பினால் குத்தும் போது அவர்களின் உடல் மொழி மிகவும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக அந்தக் காளையை அடக்கி முடித்தவுடன் அவர்கள் தரும் போஸ் கம்பீரமாக இருக்கும் உடலை சற்றே வளைத்து தலையை நிமிர்த்தி அவர்கள் பார்க்கும் பார்வையில் வெற்றிக் களிப்புத் தென்படும்.

    பொதுவாக இது போன்ற காட்சியில் மற்ற நடிகர்கள் சாதாரணமாக பார்வையாளனாக நடித்து விட்டு அடுத்த காட்சிக்குப் போய் விடுவார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்புப் பசியில் இந்த போஸ் மிகப் பெரிய தீனியாய் அமைந்து விட்டது.

    அந்த போர்வீரனின் வெற்றித் தோற்றம் அவரை வெகுவாக்க் கவர்ந்திருந்தது.



    அது மட்டுமின்றி இந்தக் காட்சியில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை மிகச் சிறப்பாய் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய சாகசங்கள் நடைபெறும் போது அந்நாட்டு இசை கூடவே எப்படி வாசிக்கப்படும் என்பதை கவனித்திருப்பவரைப் போல இங்கிருந்தே அவ்வளவு அருமையான இசையை பின்னணியில் அமைத்திருப்பார். தனக்கே உரிய தனித்தன்மையில் சற்றும் ஒற்றுமை தென்படாத வகையில் தன் கற்பனையால் அபாரமான இசைக்கோர்வையை அமைத்து அதற்குத் தேவையான ஐரோப்பிய இசைக்கருவிகளின் ஒலியைக் கொண்டு வந்திருப்பார். இந்தக் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசையை நடிகர் திலகமும் கூட இருந்து கேட்டிருப்பார் போலத் தெரிகிறது.

    இந்தப் பின்னணி இசையில் ட்ராம்போன் ட்ரம்பெட் இசைக்கருவிகள் மிகச்சிறப்பா இசைக்கப்பட்டிருக்கும். அந்த மெட்டை மிகவும் நடிகர் திலகம் ரசித்திருக்கிறாரோ என்னவோ, அதை அப்படியே சொர்க்கம் படத்தில் பொன்மகள் வந்தாள் பாட்டில் சரணத்தில் மெல்லிசை மன்னர் பயன்படுத்தியிருப்பார். வெல்வெட்டின் சிரிப்பை ரசிப்பேன் என்ற பல்லவியின் மெட்டு அப்படியே சிவந்த மண் காளை மாட்டை அடக்கும் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும்.

    விளையாட்டின் போது மற்றவர் பார்வை விளையாட்டில் லயித்திருக்க, நடிகர் திலகமோ அந்த வீர்ர்களின் உடல் மொழியை மிகவும் உன்னிப்பாக உள்வாங்கியிருக்கிறார்.

    அதற்கேற்ப அந்த இசையும் அவரை ஈர்த்திருக்க, பொன்மகள் வந்தாள் பாடல் காட்சியில் அந்த பின்னணி இசை பல்லவியின் மெட்டாக அமைந்த வுடன் தலைவர் அந்த ஸ்பெயின் மட்டார் வீரனின் உடல் மொழியை அங்கே மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.






    பொன் மகள் வந்தாள் பாடலில் பெரும்பாலும் அவர் இந்த ஸ்பெயின் விளையாட்டு வீர்ரின் உடல் மொழியைப் பயன் படுத்தியதற்குக் காரணமும் உள்ளது. ஒரு சாதனையை நிகழ்த்திய பெருமிதமாக அந்த வீர்ர்கள் தங்கள் உடல் மொழியை வெளிப்படுத்துவது போல், இந்தப் பாடல் காட்சியில் தான் செல்வந்தனானதை ஒரு சாதனையாக மனதில் வரித்துக் கொண்டு நாயகனை உருவகப்படுத்தி அதே உடல் மொழியைக் கொண்டு வந்திருக்கிறார் நடிகர் திலகம்.

    தன் கண்ணில் படும் எந்த அம்சமானாலும் அதை உள் வாங்கி அதை எங்கே எப்போது எப்படி பிரயோகிப்பது என்கிற உத்தியை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமின்றி, அதைத் தன் ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்பதையும் கிரகிக்கும் சக்தியும் அவருக்கு உண்டு.

    சும்மாவா சொன்னார்கள் அவரை நடிகர் திலகம் என்று.

    சும்மாவா சொல்கிறோம் நாங்களெல்லாம் சிவாஜி வெறியர்களென்று..
    Last edited by RAGHAVENDRA; 13th November 2016 at 03:17 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks saradhaa_sn, Gopal.s thanked for this post
    Likes saradhaa_sn, Gopal.s liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •