-
26th November 2016, 08:30 PM
#3241
Junior Member
Senior Hubber

மக்கள் திலகம் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல. சினிமாத்துறையில் அவருக்கு தெரியாதது எதுவும் கிடையாது. படத் தயாரிப்பு, இயக்கம், எடிட்டிங், கேமரா கோணங்கள், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, இசை ஞானம், வசனங்களின் முக்கியத்துவம், எந்த வசனங்களை, பாடல்களை எந்தக் காட்சியில் பயன்படுத்துவது என்ற நுண்ணறிவு, நடனத் திறமை, குதிரையேற்றம், சண்டைக் கலைகள்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு காட்சி சிறப்பாக அமைய கேமரா கோணங்கள் மிகவும் முக்கியம். அதைவிடவும் முக்கியமானது, அந்த கேமரா கோணத்துக்கு ஏற்றபடி அந்தக் காட்சியில் நடிக்கும் நடிகர் குறிப்பிட்ட இடத்தில் நிற்பது. அவ்வாறு குறிப்பிட்ட இடத்தில் நின்றால்தான் காட்சிக்கு மேலும் அழகு கூடும். கேமரா கோணத்துக்கு ஏற்றபடி மிகச் சரியான இடத்தில் நின்று போஸ் கொடுப்பதில் மக்கள் திலகத்துக்கு இணை யாருமில்லை.
நான் ஆணையிட்டால் படத்தில் இடம்பெற்ற, பிறந்த இடம் தேடி … பாடலில் வரும் ஒரு காட்சியின் ஸ்டில்லை இத்துடன் இணைத்துள்ளேன். மக்கள் திலகத்தை வரவேற்க அமைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்கு தனது தலைக்குப் பின்னணியில் வட்டமாக அழகாக தோன்றுமளவுக்கு மிகச்சரியான இடத்தில் நின்று மக்கள் திலகம் போஸ் கொடுக்கும் அழகைப் பாருங்கள். அவரது களங்கமில்லா எழில் முகம் மேலும் அழகு.
தலையைச் சுற்றி ஒளிவட்டம் ஆண்டவனுக்குத்தான் இருக்கும் என்பார்கள். கடவுள் படங்களின் ஓவியங்களில் இதைக் காணலாம். மக்கள் திலகமும் ஆண்டவர்தான், புகழ்ச்சிக்காக சொல்லவில்லை சத்தியத்தைக் கூறுகிறேன். ஒருமுறை அல்ல, எந்த தலைவரும் இதுவரை செய்யாத சாதனையாக தமிழ்நாட்டை புரட்சித் தலைவர் தொடர்ச்சியாக மூன்று முறை ஆண்டவர்தான்!
இப்போது சொல்லுங்கள் நம் தலைவர் ஆண்டவர்தானே!
-
26th November 2016 08:30 PM
# ADS
Circuit advertisement
-
26th November 2016, 08:31 PM
#3242
Junior Member
Senior Hubber

கட்டான கட்டழகு கண்ணா...
உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா...
என்ன ஒரு ஆனந்தமான குளியல்.
பாத்ரூமில் அந்தப் பக்கம் குளிக்கும் சரோஜா தேவியை இந்தப் பக்கத்தில் இருந்து தண்ணீரால் தலைவர் அடிக்கும் இளமைக் குறும்பே தனி.
-
26th November 2016, 08:34 PM
#3243
Junior Member
Senior Hubber

ஸ்டைலுக்கே ஸ்டைல் கற்றுத் தந்தவர்.
-
26th November 2016, 08:38 PM
#3244
Junior Member
Senior Hubber

இன்று பிரதோசம். எல்லாரும் சிவபெருமானை தரிசனம் பண்ணிக்கோங்கோ.
நன்னா போட்டு வாங்கிக் குத்துங்கோ..
சம்போ மகாதேவா... ஹரஹர மகாதேவா...
-
27th November 2016, 10:34 AM
#3245
Junior Member
Platinum Hubber
நேற்று (26/11/2016) காலை 11 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க " ஒளிபரப்பாகியது
-
27th November 2016, 10:36 AM
#3246
Junior Member
Platinum Hubber
இன்று (27/11/2016) காலை 11 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "அன்னமிட்டகை " ஒளிபரப்பாகிறது

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்
-
27th November 2016, 12:22 PM
#3247
Junior Member
Devoted Hubber

ஒரு அரைவேக்காடு, ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பவர், ரசிகர் மன்றத்திலேயே பொறுப்பில் இருப்பவர் தப்பும் தவறுமாக தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் உளறிக் கொட்டி வருகிறார். ‘‘பிராப்தம் என்ற சாவித்திரி தயாரித்த படத்தால் சாவித்திரி நஷ்டமடையவில்லை. நல்ல லாபம் வந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு கணக்கு காட்டியவர்கள் சாவித்திரியை சுற்றி இருந்தவர்கள் லாபத்தை தாங்கள் சுருட்டிக் கொண்டு சாவித்திரியை ஏமாற்றி விட்டார்கள்’’ என்று நிறுவுவதுதான் அவரது நோக்கம். அதுபற்றி நமக்கு அக்கறை இல்லை.
சாவித்திரி நொடித்துப் போனார் என்பதைப் பற்றி நாம் பரிதாபம் படலாமே தவிர, ஆராய வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை.
ஆனால், ‘‘பிராப்தம் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பம் கொண்டு சாவித்திரியின் வீட்டுக்குச் சென்று விருப்பம் தெரிவித்தார். சாவித்திரி அவர் விருப்பத்தை ஏற்கவில்லை’’ என்று தமிழக அரசியல் பத்திரிகையில் அந்த பொய்யர் உளறிக் கொட்டி இருக்கிறார். சாவித்திரியின் வீடு தேடிப் போய் படத்தில் நடிக்க மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டாராம். அதுவும் பிராப்தம் படத்தில் நடிப்பதற்காகவாம். கொடுமை. பொய்க்கு ஒரு அளவு வேண்டாமா?
ஏற்கனவே அந்தத் தொடரில் மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது என்று எழுதியதற்காக நாஞ்சில் இன்பா என்ற அந்த நபரை எம்.ஜி.ஆர். மன்றத்தினர் பலரும் மதுரை தமிழ்நேசன், திண்டுக்கல் மலரவன் உட்பட பலரும் செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தோம். சரியாக பதில் அளிக்காமல் போனை கட் செய்தார். இப்போது பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்திரி வீட்டுக்குச் சென்று மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டார் என்று கூச்சமே இல்லாமல் பொய் எழுதி இருக்கிறார்.
ஏற்கனவே இதே தொடரில் அவருக்குப் பிடித்த நடிகரின் மகள் சாந்தியின் திருமணத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மறைந்த அன்பில் பொய்யாமொழி கலந்துகொண்டார் என்று எழுதி தனது ஞான சூனியத்தை அவர் காட்டிக் கொண்டார். உண்மையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்டது அன்பில் தர்மலிங்கம்.
இன்னும் என்னவெல்லாம் பொய்களை அவிழ்த்துவிடப் போகிறாரோ தெரியவில்லை.
-
27th November 2016, 12:49 PM
#3248
Junior Member
Senior Hubber

Originally Posted by
MASTHAAN SAHEB

27th November 2016, 06:14 PM
#3249
Junior Member
Platinum Hubber
-
27th November 2016, 06:29 PM
#3250
Junior Member
Platinum Hubber
Bookmarks