Page 326 of 400 FirstFirst ... 226276316324325326327328336376 ... LastLast
Results 3,251 to 3,260 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #3251
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் ரிப்போர்ட்டர் -29/11/2016


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3252
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் -வெள்ளிமலர் -25/11/2016






  4. #3253
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மல்லிகை மகள் மாத இதழ் -நவம்பர் 2016



  5. #3254
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அந்திமழை மாத இதழ் - நவம்பர் 2016






  6. #3255
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்து, வசூலில் சாதித்த படங்கள் .
    --------------------------------------------------------------------------------------------------------
    1954ல் - மலைக்கள்ளன்
    1955ல் -குலேபகாவலி
    1956ல் -மதுரை வீரன் /அலிபாபாவும் 40 திருடர்களும்
    1957ல் -சக்கரவர்த்தி திருமகள்
    1958ல் -நாடோடி மன்னன்
    1961ல் -திருடாதே /தாய் சொல்லை தட்டாதே .
    1962ல்-தாயை காத்த தனயன்
    1963ல்-பெரிய இடத்து பெண்
    1964ல் -பணக்கார குடும்பம்
    1965ல்-எங்க வீட்டு பிள்ளை
    1966ல்-அன்பே வா
    1967ல்- காவல்காரன்
    1968ல்-குடியிருந்த கோயில்
    1969ல் -அடிமைப்பெண்
    1970ல் -மாட்டுக்கார வேலன்
    1971ல் -ரிக்ஷாக் காரன்
    1972ல் -நல்ல நேரம்
    1973ல் -உலகம் சுற்றும் வாலிபன்
    1974ல்-உரிமைக்குரல்
    1975ல்-இதயக்கனி
    1976ல் -நீதிக்கு தலை வணங்கு
    1977ல்-மீனவ நண்பன்

  7. #3256
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    1954


  8. #3257
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ராணி வார இதழ் -27/11/2016

  9. #3258
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய தலைமுறை வார இதழ் -01/12/2016




  10. #3259
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post


    ஒரு அரைவேக்காடு, ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பவர், ரசிகர் மன்றத்திலேயே பொறுப்பில் இருப்பவர் தப்பும் தவறுமாக தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் உளறிக் கொட்டி வருகிறார். ‘‘பிராப்தம் என்ற சாவித்திரி தயாரித்த படத்தால் சாவித்திரி நஷ்டமடையவில்லை. நல்ல லாபம் வந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு கணக்கு காட்டியவர்கள் சாவித்திரியை சுற்றி இருந்தவர்கள் லாபத்தை தாங்கள் சுருட்டிக் கொண்டு சாவித்திரியை ஏமாற்றி விட்டார்கள்’’ என்று நிறுவுவதுதான் அவரது நோக்கம். அதுபற்றி நமக்கு அக்கறை இல்லை.

    சாவித்திரி நொடித்துப் போனார் என்பதைப் பற்றி நாம் பரிதாபம் படலாமே தவிர, ஆராய வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை.

    ஆனால், ‘‘பிராப்தம் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பம் கொண்டு சாவித்திரியின் வீட்டுக்குச் சென்று விருப்பம் தெரிவித்தார். சாவித்திரி அவர் விருப்பத்தை ஏற்கவில்லை’’ என்று தமிழக அரசியல் பத்திரிகையில் அந்த பொய்யர் உளறிக் கொட்டி இருக்கிறார். சாவித்திரியின் வீடு தேடிப் போய் படத்தில் நடிக்க மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டாராம். அதுவும் பிராப்தம் படத்தில் நடிப்பதற்காகவாம். கொடுமை. பொய்க்கு ஒரு அளவு வேண்டாமா?

    ஏற்கனவே அந்தத் தொடரில் மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது என்று எழுதியதற்காக நாஞ்சில் இன்பா என்ற அந்த நபரை எம்.ஜி.ஆர். மன்றத்தினர் பலரும் மதுரை தமிழ்நேசன், திண்டுக்கல் மலரவன் உட்பட பலரும் செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தோம். சரியாக பதில் அளிக்காமல் போனை கட் செய்தார். இப்போது பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்திரி வீட்டுக்குச் சென்று மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டார் என்று கூச்சமே இல்லாமல் பொய் எழுதி இருக்கிறார்.

    ஏற்கனவே இதே தொடரில் அவருக்குப் பிடித்த நடிகரின் மகள் சாந்தியின் திருமணத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மறைந்த அன்பில் பொய்யாமொழி கலந்துகொண்டார் என்று எழுதி தனது ஞான சூனியத்தை அவர் காட்டிக் கொண்டார். உண்மையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்டது அன்பில் தர்மலிங்கம்.

    இன்னும் என்னவெல்லாம் பொய்களை அவிழ்த்துவிடப் போகிறாரோ தெரியவில்லை.
    திரு.மஸ்தான் சார், வாருங்கள், வாருங்கள். நல்வரவு. புரட்சித் தலைவரின் புகழ் பாட வருக. ஆரம்பத்திலேயே அதிரடியாக வந்திருக்கிறீர்கள். தாங்கள் எந்த ஊர்? மதுரை தமிழ் நேசன், திண்டுக்கல் மலரவன் போன்ற நண்பர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். நீங்கள் மதுரை பக்கமா?

    காலையில் விரிவாக பதில் அளிக்க முடியவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள தொடரை தப்பு..தப்பு... தொடர் என்ற பெயரில் அபத்தக் களஞ்சியத்தை தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் எழுதி வரும் நாஞ்சில் இன்பா என்பவர் மனம் போன போக்கில் எழுதி வருகிறார். அந்த பத்திரிகையின் உரிமையாளர் திரிசக்தி பதிப்பகம் நடத்தும் திரிசக்தி சுந்தர்ராமன் என்பவர் ஃ பிராடு. வங்கியில் பண மோசடி செய்தவர். கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததற்காக கைதானவர். இப்போதும் அவர் மீது அந்த வழக்கு உள்ளது. ஜாமீனில் வெளியே இருக்கிறார். அந்த செய்திக்கான லிங்க் கீழே.

    http://www.thinaboomi.com/news/2014/05/25/8167.html

    சரி அதை சட்டம் பார்த்துக் கொள்ளும். நமக்கென்ன? நிரபராதி என்றால் நிரூபித்து வரட்டும். ஆனால் தன் பத்திரிகையை மக்கள் திலகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்த பயன்படுத்தி வருகிறார். அவரும் வேறு ஒரு நடிகரின் ரசிகராம். அது சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொண்டும் இருக்கிறார்.

    புரட்சித் தலைவரை கொச்சைப்படுத்தும் அவரது தவறான நோக்கத்துக்கு இந்த நாஞ்சில் இன்பா என்ற அரைகுறையும் துணை போகிறது. தங்களுக்குப் பிடித்தவரை துதி பாடிக் கொள்ளட்டும். ஆனால், பொறாமையாலும் வெறுப்பாலும் புரட்சித் தலைவர் பற்றி அவதூறாக எழுதி வருகிறார். வேறு யாருக்கோ (மக்கள் திலகத்தை சொல்கிறார்) வசூல் சக்கவர்த்தி பட்டம் வழங்க நாலாந்திர மனிதர்கள் சதி செய்தார்களாம். அதனால், அவரது அபிமான நடிகர் நடித்த படங்களை எடுக்கச் சொன்னார்களாம். தனது அபிமான நடிகர்தான் வசூல் சக்ரவர்த்தி என்று காட்ட இந்த அரைகுறை அநியாயத்துக்கு பச்சையாக புளுகி வருகிறது. மனோகரா படம் ரிலீஸின் போது சென்னையில் மட்டும் ஒரே வாரத்தில் 84 லட்சம் ரூபாய் வசூலித்ததாம். அது உண்மை என்று நிரூபிக்கும் முயற்சியாக 276 ரூபாய் கொசுறு வேற.



    சென்னையில் மட்டும் அந்தக் காலத்திலேயே ஒரு வாரத்தில் 84 லட்சம் என்றால் தமிழகம் முழுக்க ஒரு வாரத்தில் பல கோடிகளை தாண்டியிருக்கும். படம் ஓடி முடிந்த பின் இன்றைய பாகுபலி, கபாலி எல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு அந்த காலத்திலேயே அணா, பைசா டிக்கெட் இருந்த காலத்திலேயே 1,000 கோடி சம்பாதித்திருக்கும். அன்றைய ஆயிரம் கோடி இன்று ஒரு லட்சம் கோடி. தலை சுற்றுகிறது. சரி,சரி... நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன மேலே விழுந்து புடுங்காமல் இருந்தால் சரி.

    ஆனால் மேலே விழுந்து புடுங்கித் தொலைக்கிறது அதுதான் பிரச்சினை. மக்கள் திலகத்தை குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்த அரைகுறை அவரை மோசமாக விமர்சிக்கிறது. அதிலாவது சரியான தகவலாவது இருக்கிறதா? ஆரம்ப காலத்தில் வீரா என்ற படத்தில் மக்கள் திலகம் நடித்தாராம்.???????????????? இந்த அரைகுறை சொல்கிறது.



    எனக்குத் தெரிந்து ரஜினி நடித்துதான் அப்படி படம் வந்தது. வேறு யாராவது நடித்து வீரா என்ற பெயரில் படம் வந்ததா தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அந்தப் பெயரில் உள்ள படத்தில் புரட்சித் தலைவர் நடிக்கவில்லை.

    சரி. மக்கள் திலகத்தை பற்றிய தகவல்கள்தான் சரியாகத் தெரியவில்லை. இந்தத் தொடரை எழுதுபவர் நம் ரசிகர் இல்லை. வேறு நடிகரின் ரசிகர். அதனால் மக்கள் திலகத்தைப் பற்றி தெரியவில்லை என்று எடுத்துக் கொள்வோம். இருந்தாலும் ஒன்றும் தெரியாமல் வாய்க்கு வந்ததை சொல்வது தப்பு. சரி போகட்டும்.

    அவரது நடிகர் நடித்த படங்களைப் பற்றிய விவரங்கள் உடன் நடித்தவர்கள் பற்றியாவது சரியாக தெரிந்து கொண்டாரா என்றே தெரியவில்லை. இதில் பாருங்களேன். இந்த தொடரின் பக்கத்தில் உள்ள இரண்டு புகைப் படங்களில் ஒன்றில் அவருக்குப் பிடித்த நடிகருடன் இருப்பது வாணிஸ்ரீ என்று உள்ளது.


    ஆனால் அது பத்மினி என்று எல்லாருக்கும் தெரியும். தான் எழுதியதை அந்த நபரே படிக்கிறாரா? என்று தெரியவில்லை.

    இதுபோன்ற முட்டாள்கள்தான் சாவித்திரி வீட்டுக்குப் போய் மக்கள் திலகம் பிராப்தம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். சாவித்திரி அதை ஏற்க மறுத்துவிட்டார் என்று பொய்யை பரப்புகிறார்கள். புரட்சித் தலைவர் புகழை ஜீரணிக்க முடியாதவர்கள் இவர்கள். சூரியனை பார்த்து நாய்கள் குரைப்பதால் சூரியனுக்கு என்ன குறை வந்துவிடப்போகிறது?
    Last edited by SUNDARA PANDIYAN; 29th November 2016 at 11:14 AM.

  11. #3260
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    1954

    லோகநாதன் சார், உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை. உங்கள் உழைப்புக்கும் பதிவுகளுக்கும் நன்றி. மல்லிகை மகள் என்ற பத்திரிகையில் நீங்கள் போட்ட பதிவு ஒன்றில் தமிழில் முதலில் நூறு படங்கள் நடித்து சதம் என்ற பதம் தொட்ட சாதனை நாயகன் எம்.ஜி.ஆர். என்று உள்ளது. மக்கள் திலகத்துக்கு முன்பே வேறு ஒரு நடிகர் 100 படத்தில் நடித்து அவரது படம் வெளியாகியது. அந்தப் பத்திரிகையில் தவறாக போட்டிருக்கிறார்கள். உண்மையை சொல்வதில் நமக்கு என்ன தயக்கம்? சத்தியத் தாய் பெற்றெடுத்த சத்தியாவான் வழி நடப்பவர்கள் நாமாயிற்றே.

    மலைக்கள்ளன் படத்தில் புரட்சித் தலைவரின் நடிப்பு அற்புதமாக இருக்கும். பல வேடங்களில் வந்து அருமையாக நடித்திருப்பார். இயற்கையாக படு இயல்பாக நடித்திருப்பார். மக்கள் திலகத்தின் வசீகர முகமும் கண்களும் சிரிப்பும் ஆஹா. உங்களுக்கு நன்றி லோகநாதன் சார்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •