-
7th December 2016, 10:52 AM
#3401
Junior Member
Regular Hubber
அரசியல் விமர்சகர், நகைச்சுவை நடிகர் சோ அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுகின்றேன்.
-
7th December 2016 10:52 AM
# ADS
Circuit advertisement
-
7th December 2016, 11:06 AM
#3402
Junior Member
Regular Hubber

M.g.r. வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில், தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகரும் பத்திரிகையாளருமான சோ ராமசாமியும் ஒருவர்.
எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட சோ ஒரு அதிமுக ஆதரவாளர் என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல் பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன் என்று சோ கூறினார்.
அடிமைப் பெண், ஒளிவிளக்கு, என் அண்ணன் உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை மும்பைக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதை யும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட் தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர் என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.
விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார் என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார் என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?
எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடை யாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப் பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும் தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான் என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும்? எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
அடிமைப் பெண் படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.
சோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை சந்தித் தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, இவர் என்னுடைய நண்பர் என்று கூறினார்.
இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன் என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.
இரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும்? இன்றுதானே அவர் சென்னை வந்தார் என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா? போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்? என்று எம்.ஜி.ஆர். கேட்டதும் சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு அபார மான நினைவாற்றல் எம்.ஜி.ஆருக்கு.
அடிமைப் பெண் படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன் மனோ கரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, வேங்கையனிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...
தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. அவன் தலைவன்!
நன்றி - தி இந்து
-
7th December 2016, 11:15 AM
#3403
Junior Member
Regular Hubber

எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்?
, ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்... என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்டுக்காரர், 'அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும். அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும்ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்காது. செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் ஏனோ கலங்குது' என்றார்.
அவரைப் போலவே, ‛ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்... என பலரும் கலங்கினர். ‛பள்ளியைமுடித்து வெளியே வந்ததும்தான் கண்டிப்பான ஆசிரியர்கள் மீதான மரியாதை துளிர்விடத் துவங்குகிறது என நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால், ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே ரொம்பவும் ஆதங்கப்படுகின்றனர். உண்மை அது. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்கள்தான் இன்று கலங்கி நிற்பது விநோத முரண்.
ராஜாஜி - பெரியார் இருவரும் கொள்கை ரீதியாக கடைசி வரை முட்டிக் கொண்டவர்கள். ஆனால் ராஜாஜி இறந்தபோது பெரியார் கலங்கி அழுதார். இன்று ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் கருணாநிதிக்கே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். குறைந்தபட்சம், தனக்கு நிகரான ஒரே எதிரியும் இனி இல்லை என்றாவது நினைத்திருப்பார். எதிரியை பட்டவர்த்தனமாக வெற்றியாளன் என அறிவிக்க, மரணம் தேவைப்படுகிறது.
ஜெயகாந்தனை ஒருவன் ஆழ்ந்து படித்திருக்கவே மாட்டான். ஏன் அவரைப் பிடிக்கும் என கேட்டால் ‛அவர் சிங்கம் மாதிரி, அந்த ஆளுமை, அந்த திமிர், மீசையை முறுக்கி விடுறது என அடுக்குவான். அதேபோலத்தான் இன்று. ஜெயலலிதா இறந்ததும் எல்லோரும் இப்போது அந்த ஆக்ருதியைத்தான் பேசுகிறோம். நேற்று வரை திமிர் என்று சொன்னவன் இன்று மிடுக்கு என்கிறான். அகம்பாவம் என்றவன் இன்று போர்க்குணம் என்கிறான். அவரது ஆணவம் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது. ‛இரும்பு மனுஷி என பெருமையாக சொல்கிறார்கள். இத்தனை நாள் இவ்வளவு திமிரா என கோவப்பட்டவர்கள் எல்லாம், இனிமேல் இப்படியொரு பெண்ணை பார்க்க முடியுமா என ஏங்குகிறார்கள்.
சில சமயங்களில் நிசப்தம் பயங்கரமானது. ஓயாது அடம் பிடிக்கும் குழந்தை, கொஞ்ச நேரம் அமைதியாக தூங்கினால், எதாவது சேட்டை பண்ண மாட்டானா என மனம் ஏங்கும் இல்லையா? ஜெயலலிதாவை இத்தனை நாள் எதிர்த்தவர்கள் இன்று அந்த மனநிலையில்தான் இருக்கின்றனர். ‛ஜெயலலிதா முதல்வரா இருந்ததால் எனக்கு எந்த பலனுமே இல்லை. ஆனா, அவங்க இல்லைன்னதும் தமிழ்நாடு அநாதை மாதிரி ஆயிடுச்சேன்ற நினைப்பு வந்திருச்சு. தார்மீக பலம் இல்லாத பயம் வந்திருச்சு என்பதே அரசியல் வாடையே இல்லாதவரின் கருத்து. கிட்டத்தட்ட, 75 நாட்கள் மனதை தயார்படுத்தியே, இப்படியொரு சூழல் எனில், பட்டென செப்டம்பர் 23-ம் தேதியே இறந்து விட்டதாக அறிவித்திருந்தால், என்ன ஆயிருக்கும்?
‛ஆணவக்காரி என திட்டிய பெண்கள் கூட, இன்று இமயம் சரிந்து விட்டதாகவே உணர்கின்றனர். , ‛அவங்க என்னுடைய ரோல் மாடல்டா. அவங்க. உங்களை எல்லாம் காலில் போட்டிருந்தாடா என உள்ளூர பெருமை கொண்டிருந்த பெண்கள், இந்த மரணத்தை பெண்மையின் மரணமாகப் பார்க்கின்றனர்.
பிரிவினால்தானே பிரியத்தின் மொழியைப் பேச முடியும். இவ்வளவு பேருக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும் என்பதே ஆச்சரியம்தான். ரத்த சொந்தம் யாரும் இல்லாததும், இந்த பரிதாப காட்சிகளும் காரணமாக இருக்கலாம். சொந்தமே இல்லாமல் இப்போது தனியாக இருப்பதைப் பார்த்தால் அவ்வளவு திமிர் இல்லாவிடில், பொதுவாழ்க்கையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது.
‛ஜெயலலிதாவைச் சுற்றி நிற்கும் யார் முகத்திலும் துக்கம் இல்லை. கோரம்தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் இந்த அம்மா எப்படி சாந்தமாக இருந்திருக்க முடியும்? அப்ப இந்த அம்மா இத்தனை நாள் இந்த வலி எல்லாம் பொறுத்திட்டுதான் இருந்திருக்கு என்பது ஒரு ர.ர.வின் கேள்வி.
எது எப்படியோ, அவர் மரணம் புனிதத்தன்மையை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டது. தன் மீதான விமர்சனத்துக்கு முற்றப்புள்ளி வைக்க ஜெயலலிதாவுக்கு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. என்ன செய்தால் என்னை விமர்சிப்பதை நிறுத்துவீர்கள் என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கும் அல்லவா? மரணம்தான் அதன் பதில். அது அவருக்கு கடைசி வரைக்கும் தெரியவே இல்லை.
சமூக வலைதளத்தில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார். எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.!
Amirtham Mg Ganeshkumar அவர்கள் முகநூல்
-
7th December 2016, 11:17 AM
#3404
Junior Member
Regular Hubber

ராஜாஜி ஹாலில் 1987 ல் டிசம்பரில் ஆரம்பித்த ஒரு யுத்தம் மறுபடியும் அதே ராஜாஜி ஹாலிலேயே 2016 ல் டிசம்பரிலேயே வந்து முடிந்திருக்கிறது.
அன்றைக்கு பீரங்கி வண்டியில் ஏற்ற மறுத்தவர்கள், இன்றைக்கு அவருக்கென்றே தனியாக ஒரு பீரங்கி வண்டியை ஏற்பாடு செய்திருக்கின்றனர்..
அதுதான் "ஜெ" என்ற ஒற்றை பெண்மணியின் மகத்தான சாதனை...
கனகராஜா ஆண்டியா பிள்ளை அவர்கள் முகநூல்
Last edited by MAHALINGAM MOOPANAAR; 8th December 2016 at 12:15 PM.
-
7th December 2016, 02:03 PM
#3405
Junior Member
Diamond Hubber
மூத்த பத்திரிக்கையாளர் சோ காலமானார்
மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமான சோ.ராமசாமி. 82 வயதான இவர் உடல் நலம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. பன்முக திறமை கொண்டவர்.
மக்கள் திலகத்துடன் பல படங்களில் நடித்துள்ள இவர் மக்கள் திலகம் காலமானபோது தமது துக்ளக் இதழில் மிகச்சிறப்பாக தலையங்கம் எழுதினார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.
- எஸ் ரவிச்சந்திரன்
Last edited by ravichandrran; 7th December 2016 at 02:08 PM.
-
7th December 2016, 07:08 PM
#3406
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள நேரத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அகால மறைவு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது .ஒரு வேளை அவர் குணமடைந்து மீண்டும் புது வேகத்துடன் ஆட்சியை தொடர்ந்து இருந்தால் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட அறிவிப்புகள் செய்திருப்பார் . ஏமாற்றம்தான் .
தற்போதைய முதல்வர் திரு பன்னீர் செல்வம் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
-
7th December 2016, 07:29 PM
#3407
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி சேர்ந்த ஆயிரத்தில் ஒருவன் - வெற்றி படம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது .
எம்ஜிஆரின் இளமைத்தோற்றம் - ஜெயலலிதாவின் இளமை இரண்டுமே மிகவும் பொருத்தமாக அமைந்து விட்டது .குறிப்பாக ''நாணமோ இன்னும் நாணமோ'' - பாடல் காட்சியில் இருவரின் நடிப்பு காட்சிகள் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது .
ஆயிரத்தில் ஒருவனை தொடர்ந்து எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த கன்னித்தாய் படம் விருந்தாக ரசிகர்களுக்கு கிடைத்து .'' என்றும் பதினாறு வயது பதினாறு ''.. அட்டகாசமான காதல் பாடல் . கன்னித்தாயை தொடர்ந்து முகராசி . இந்த படத்தில் இடம் பெற்ற'' எனக்கும் உனக்குத்தான் பொருத்தம்'' - பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது
பின்னர் வந்த சந்திரோதயம் , தனிப்பிறவி , தாய்க்கு தலை மகன் , அரசகட்டளை , காவல்காரன் படங்களில் இடம் பெற்ற ஜோடி பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் .
1968லிருந்து எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த வண்ணப்படங்களில் இடம் பெற்றகாதல் ஜோடி பாடல்கள் எல்லாமே மிகவும் அருமை . எம்ஜிஆர் -ஜெயலலிதா இருவரின் எழிலான தோற்றத்தில் , எம்ஜிஆரின் துள்ளல் காட்சிகளுடன் ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது .
ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில்- ஒளிவிளக்கு - அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்கார வேலன் - என் அண்ணன் - தேடிவந்த மாப்பிள்ளை - எங்கள் தங்கம் - குமரிக்கோட்டம் - நீரும் நெருப்பும் - ராமன் தேடிய சீதை-பட்டிக்காட்டு பொன்னையா மற்றும் கருப்பு வெள்ளை படங்களான தேர்த்திருவிழா - கண்ணன் என் காதலன் - புதிய பூமி - கணவன் - காதல் வாகனம் - ஒருதாய் மக்கள் - அன்னமிட்டகை படங்களில் இடம் பெற்ற பெரும்பாலான ஜோடி பாடல்கள் இன்று பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது .
courtesy - net
Last edited by esvee; 7th December 2016 at 07:31 PM.
-
7th December 2016, 07:36 PM
#3408
Junior Member
Platinum Hubber
-
8th December 2016, 12:18 AM
#3409
Junior Member
Platinum Hubber
பிரபல நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர் , இயக்குனர், எழுத்தாளர், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் என பன்முக தன்மை கொண்ட திரு.சோ ராமசாமி அவர்கள்
காலமானார் என்கிற செய்தி அறிந்து , மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக .
என் சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் பல படங்களில் நடித்தவர்.
அ. தி.மு.க. ஆட்சி பற்றி கடுமையாக விமர்சித்தவர் .1980ல் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என வாதிட்டவர் . பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் பண்புகள், விளம்பரம் இன்றி செய்த உதவிகள், கொடை தன்மை,நினைவாற்றல், மனிதநேயம் ஆகியவற்றை பகிரங்கமாக போற்றியவர் .
-
8th December 2016, 12:20 AM
#3410
Junior Member
Platinum Hubber
நடிகர் சோ மறைவை, நினைவை போற்றும் வகையில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுடன் நடித்த "என் அண்ணன் " திரைப்படம், மதுரை அலங்கார் திரையரங்கில் வரும் வெள்ளி முதல் (09/12/2016) திரைக்கு வருகிறது .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
Bookmarks