-
9th January 2017, 07:20 AM
#2971
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th January 2017 07:20 AM
# ADS
Circuit advertisement
-
9th January 2017, 07:42 AM
#2972
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th January 2017, 07:17 AM
#2973
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th January 2017, 11:52 AM
#2974
Junior Member
Diamond Hubber
Whatup குரூப்பில் வெளியிடப்பட்ட புகைப்படம்.
நன்றி. பிரபு கௌதமன்.
அரிய
அரிய
அருமையான புகைப்படம்.

இந்தப்பாடல் உங்களின் நினைவுக்கு வந்தால் அதற்கு நடிகர்திலகம் பொறுப்பல்ல.
Mannaparai Madu Katti - Makkalai Petra Maharasi:
-
10th January 2017, 11:59 AM
#2975
Junior Member
Diamond Hubber
-
10th January 2017, 01:46 PM
#2976
Senior Member
Devoted Hubber
FROM THE FACEBOOK PAGE OF S V RAMANI
சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் சிவாஜியின் அன்பு ஆசிகள்;
புதிய பறவை உச்சக் கட்டக் காட்சி.
சித்ராவின் அண்ணன் ராஜு வந்தவுடன் அவரிடம் சிவாஜி அவாது தங்கையைப் போலவே ஒருத்தி வந்து தனது அமைதியை குலைக்கிறா என்று புலம்ப, ராஜூ எப்படி இருக்க முடியும், என் தங்கைதான் இறந்து விட்டாளே என்று கூறி , எங்கே அந்த இன்னொரு பெண்ணைக் கூப்பிடு என்று சொன்னவுடன், ஒவ்வொரு அறையாக தேடுவார். சௌகார் ஜானகி வெளியே வந்து அவரைத் தொட்டவுடன் அருவருப்பில் அவர் பின் நோக்கி ஓடி ராஜுவின் பின் நின்று கொண்டு இவள்தான் அந்த பேய் என்பார். ராஜு அவளை தங்கச்சி என்று அழைத்த்தவுடன் அவர் முகத்தில் தோன்றும் திகைப்பு, பின் பல வாதங்களுக்கு பின் சித்ராவின் முதுகில் ஒரு தழும்பு இருக்கும், உண்மையான சித்ராவாக இருந்தால் இவள் முதுகிலும் இருக்கும் என்று அவரது மேல் சட்டையை கிழித்து முதுகைப் பார்க்க அங்கே ஒரு தழும்பு இருக்கக் கண்டு அவர் அதிர்ச்சியுடன் பின் நோக்கி சென்று அமைதியாக தரையில் அமர்ந்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும்போது, இன்ஸ்பெக்டர் வந்து உண்மையான சித்ராவின் கைரேகை கிடைத்து விட்டது என்று கூறியவுடன் நம்பிக்கை வரப் பெற்றவராக இன்ஸ்பெக்டரிடம் அனைவரிடமும் உண்மையைக் கூறுமாறு சொல்கிறார். அப்போது இரண்டு கைரேகைகளும் ஒன்றாக இருக்கின்றன என்று இன்ஸ்பெக்டர் கூறியவுடன், ஒரு விரக்தி கலந்த சிரிப்புடன்,
"வெளையாடறியா, வெளையாடறியா".
இப்போது குரலை உயர்த்தி கோபத்துடன்
"எப்படி இருக்க முடியும் , என்று கத்திக் கொண்டே சரோஜா தேவியிடம் செல்ல, அவர் இனியும் நான் உங்களை நம்பத தயாராயில்லை என்று கூறியவுடன் "நம்பிக்கை இல்லையா", என்று கூறிக்கொண்டே, தன்னை சுற்றி ஒரு வலை பின்னப் படுவதை அறியாமல், அது உண்மையான சித்ரா இல்லை என்று சரோஜா தேவியை நம்ப வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மெதுவாக நடந்து சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டு
"லதா, சித்ராவை நான்தான் கொலை செய்தேன், இந்தக் கைதான் அவளை அடிச்சது, இந்த கண்தான் அவளோட பிரதேதத்தைப் பார்த்தது"
என்று கூறும் போது அவரது கண்களை மட்டும் காட்டுவார்கள், ஒரு திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் அப்போது, தொடர்ந்து
" அதிர்ச்சியா இருக்கா? ஆச்சரியமா இருக்கா. திகைப்பை கொடுக்குதா, இல்லை திடுக்கிட வைக்குதா? லதா , ரயில்வே கேட்ல நான் உன் கிட்ட சொன்ன கடந்த கால கதையை நான் அரைகொறையாதான் முடிச்சேன்"
என்று கூறி ரயில்வே கேட் சம்பவத்தின் தொடர்ச்சியைக் கூறுகிறார்.
"வீட்ட விட்டுப் போன சித்ராவை நான் வழி மறிச்சி தடுத்து நிறுத்தி கூப்பிட, அவ மறுத்து என்னை கேவலமா பேச (இந்த இடத்தில் கண்ணீருடன் விசும்பிக்கொண்டே) ஆத்திரம் தாங்காம அடிக்க அதுக்கப்பறம் அவ கீழே விழுந்தான்னு நான் சொன்னேன் இல்லயா, அதன் பின் நான் திரும்பிவிட்டேன், அப்போதுதான் அவளது இதய பலவீனம் என் நினைவுக்கு வந்தது, உடனே நான் திரும்பி வந்து பார்த்தபோது சித்ரா இறந்து கிடந்தாள் , கொலைப் பழிக்கு அஞ்சி நான்தான் அவளை ரயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே வைத்து வந்து விட்டேன், ரயிலின் சக்கரங்கள் சித்ராவின் பிரேதத்தை சிதைத்த அந்த கோரக் காட்சியை என் கண்களால் பார்த்தேன்" என்று கூறிக் கதறிக்கொண்டே அழுவார், நடிப்பின் உச்சம். "ஒண்ணு மட்டும் உறுதி, திட்டம் போட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ, அவளை கொலை செய்யனும்ங்கற நோக்கத்தோடயோ நான் கொல்லல" , ஒரு அழுகை - "ஆத்திரம் தாங்க முடியாம அடிச்சேன், அதுவும் ஒரே அடி, அந்த அடினால அவ நிச்சயமா செத்துருக்கவே முடியாது, கீழே விழுந்த அதிர்ச்சியால அவ இருதயம் மேலும் பலவீனப் பட்டு, அதனலாதன் அவ செத்துருக்க முடியும் இதுதான் நடந்தது, நான் சொன்னது அத்தனையும் உண்மை, என் தாயின் மேல ஆணையா அத்தனையும் உண்மை, ராஜு, டேய் ராஜு , இப்ப சொல்றா, அவ உன் தங்கச்சியா, என்று கேட்க ராஜு இல்லை என்று கூறுகிறார். பிறகு ஒவ்வொரிடமும் அது சித்ராவா என்று கேட்க அனைவரும் இல்லை என்று கூற சரோஜா தேவியிடம் சென்று அவரை அணைத்து கொண்டு, "லதா, என் கண்ணே, இப்ப புரிஞ்சுதா, இப்பவாவது என் மேல உனக்கு நம்பிக்கை வந்துச்சா? "குமார், என் நிக்கறே, இந்த துரோகிகளை அரெஸ்ட் பண்ணு, கமான் அர்ரெஸ்ட் பண்ணு"
என்றவுடன் சரோஜா தேவி,
"இன்ஸ்பெக்டர், கோபாலின் வாக்கு மூலத்தை பதிவு செஞ்சுட்டீங்க இல்லை, அவரை அரெஸ்ட் பண்ணுங்க' என்று சொன்னவுடன் திகைப்புடன் அவரது முகத்தை தன இரு கைகளாலும் ஏந்தி "லதா, நீயா இப்படி சொல்றே?" என்று கேட்டவுடன், சரோஜாவி தேவி தாங்கள் அனைவருமே துப்பறியும் இலாகாவை சேர்ந்தவர்கள், சிவாஜியின் மைத்துனர் கொடுத்த புகாரின் பேரில் அவரைப் பின் தொடர்ந்து வந்ததாகவும்\ , அவரது வாக்குமூலத்தை தவிர வேறு ஆதாரம் எதுவும் கிடையாது என்பதால் இவ்வாறு நாடகமாடியதாகவும் கூறியவுடன் " லதா, என்னை ஏமாற்ற உனக்கு வேறு வேடமே கிடைக்கவில்லையா, காதல்ங்கிற அந்த புனித வேடத்தை வைத்தா என்னை வீழ்த்திட்டே"? என்று கேட்டவுடன், சரோஜாதேவி அவர் காலில் விழுந்து தான் முதலில் அவரை உளவறியத்தான் வந்ததாகவும் பின் அவரது அன்பில் கட்டுண்டு அவரை காதலித்தாகவும் கூறி, எப்போது வந்தாலும் அவருக்காக காத்திருப்பதாக சொல்லுவார். அப்போது சிவாஜி மிக அமைதியாக "பெண்மையே வாழ்க, உண்மையே, உள்ளமே, உனக்கு நன்றி, போய் வருகிறேன்" என்று கூறி மெதுவாக நடந்து சென்று பியானோவில் "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்ற ஒரு வரியை வாசித்து முடிப்பதுடன் படம் நிறைவுறும். இயல்பான நடிப்பு வேண்டும் என்போர் இந்த காட்சியை பார்க்கவும். உச்சக் கட்டக் காட்சியில் ஒரு ஆர்ப்பாட்டமோ, கத்தலோ, கதறலோ இல்லாமல் நடித்திருப்பார் சிவாஜி கணேசன், முழுக் காட்சியையும் காண அதன் இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
with Soundharya Padmavathi Soundharya Padmavathia Subadhra Shankar , Iyyannan Gopalan Sreekanth Ragunathan Selva Kumar Vasumathi Ravindran, Poongothai K Sabapathy, Poppy Aadhavan, Uma Sridhar, Rajeswari Vijayakumar , Vijiya Raj Kumar Girija Sarathy, Thiagharajan Rajaratnam, N Swami Durai Velu, Navamani Sundaramoorthy, Karunakaran Ananth, KB Siva Kumar Sridhar Sri Kanchipuram Thyagarajan, Sekar Parasuram , Aathavan Ravii, Senguttuvan David, Sekar Ramakrishna , Vee Yaar, Rama Nathan Shankar Muthuswamy , Anbalagan Anbalagan மற்றும் பலர்
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
10th January 2017, 07:53 PM
#2977
Junior Member
Devoted Hubber
காந்தி சிலைக்கு அருகே சிவாஜி சிலை!'' வலுக்கும் கோரிக்கை

சென்னைக் கடற்கரைச் சாலை பல தலைவர்களின் சிலைகளையும், எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளையும் கொண்டுள்ளது. அங்கேதான் கடந்த 10 ஆண்டுகளாக ‘சிம்மக் குரலோன்’ என்று அழைக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வெண்கல உருவச் சிலையும் நிறுவப்பட்டிருந்தது. இந்தச் சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தகொண்டிருந்தபோதே, ‘மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகில் நிறுவப்பட்டிருக்கும் சிவாஜி கணேசன் சிலை, காந்தி சிலையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், அமைக்கப்பட்டு இருக்கிறது’ என சர்ச்சை கிளம்பியது. ஆனால், அது நிறுவப்பட்ட காலம் முதல் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பிவந்த நிலையில், தற்போது அதற்கு விடைகொடுத்து முடித்துவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடைய மறைவுக்குப் பிறகு... அவரை நினைவுபடுத்தும் வகையில், கடந்த 2006-ம் ஆண்டு சென்னை கடற்கரைச் சாலையில் அவரது உருவச் சிலை நிறுவப்பட்டது. ‘‘இந்தச் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையே, ‘சிவாஜி சிலையை அகற்றக் கூடாது’ எனக் கோரி, சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், ‘சிவாஜி சிலையால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுகிறது’ என காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், ‘சிவாஜி சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும்’ என மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ‘சிவாஜி சிலையை அகற்றுவது’ பற்றி முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ‘விரைவில் சிவாஜி சிலை அகற்றப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது.
உயர்நீதிமன்றம்
இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சிவாஜி கணேசன் ரசிகர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘‘சிவாஜி கணேசனைச் சிறப்பிக்கும் வகையில் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே அமையும். எனவே, சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்’’ என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அப்போது அறிக்கை விட்டிருந்தார். இதனால், சிலை அகற்றும் முடிவைக் கொஞ்ச நாட்களுக்கு ஆறப்போட்டது தமிழக அரசு. இதனிடையே நாகராஜன், இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இதற்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.
கே.சந்திரசேகரன்இந்த நிலையில், தமிழக அரசு, நடிகர் சங்கம் மூலம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்தது. நடிகர் சங்கம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டாத நிலையில், அ.தி.மு.க மீண்டும் 2016-ல் ஆட்சிக்கு வந்தவுடன், ‘சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்று அறிவித்தது. சிவாஜி சிலை அகற்றம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்காததால், நாகராஜன் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். ஜெ-வின் மறைவுக்குப் பிறகு, விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகள் நிறைவடைந்த பிறகு, சிலை வேறு இடத்தில் நிறுவப்படும். சிவாஜி சிலை மே 18-ம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்’ என்று தமிழக அரசு தனது மனுவில் உறுதியளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம்... அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இதுதொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரனிடம் பேசினோம். ‘‘கடந்த 10 ஆண்டுகளாக இந்தச் சிலையினால் விபத்தோ அல்லது தடங்கலோ ஏற்பட்டதில்லை. ஆனாலும், இந்தச் சிலை அகற்றப்பட வேண்டும் என்கிற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்குத் துரதிர்ஷ்டவசமானது. உத்தரவுப்படி அந்தச் சிலையை அகற்றும்போது... அதே வரிசையில் இருக்கும் அதாவது, காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் இடையில் வைப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதே சிவாஜி ரசிகர்களின் விருப்பம்’’ என்றார்.
சிலை அகற்றப்படுவதைவிட, நிறுவப்படுவதுதான் சிறப்பு வாய்ந்தது.
-
11th January 2017, 01:10 PM
#2978
Junior Member
Diamond Hubber
-
11th January 2017, 01:11 PM
#2979
Junior Member
Diamond Hubber
-
11th January 2017, 01:12 PM
#2980
Junior Member
Diamond Hubber
Bookmarks