Results 1 to 10 of 48

Thread: சித்தா- சித்தனின் மருத்துவம்

Hybrid View

  1. #1
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள் :-
    .........................................
    .........................................

    அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள். இந்த புண்கள் உணவைத் தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து, இரைப்பையின் சுவற்றில் புண்கள் உண்டாகி, அதன் மூலம் கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும்.
    வயிற்று அல்சர் அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தாலும் வரும். இந்த அல்சர் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்

    அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

    #தேங்காய் பால் :-
    அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.

    #பிரட் மற்றும் வெண்ணெய் :-
    காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் உட்கொண்டு வர, அல்சர் மூலம் ஏற்படும் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    #ஆப்பிள் ஜூஸ்:-
    தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கலாம்.

    #வேப்பிலை :-
    கொளுந்து வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

    #முட்டைக்கோஸ் :-
    அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரை குணமாக்கலாம்.

    #அகத்திக்கீரை :-
    அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர் சீக்கிரம் நீங்கும்.

    #வெங்காயம் :-
    அல்சரால் கடுமையான வயிற்று வலியை சந்தித்தால், பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு உட்கொள்ளுங்கள். இதன் மூலம் அல்சரால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    #பீட்ரூட் ஜூஸ் :-
    பீட்ரூட் கூட அல்சருக்கு நல்ல நிவாரணம் தரும். அதற்கு பீட்ரூட்டை ஜூஸ் செய்து தேன் சேர்த்து கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

    #பாகற்காய் :-
    பாகற்காயை அல்சர் இருப்பவர்கள் தினமும் உணவில் சேர்த்து வர, விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம். அதிலும் பாகற்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடி செய்து, தினமும் 1 டீஸ்பூன் பாகற்காய் பொடியை சுடுநீரில் கலந்து குடித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்

    #நெல்லிக்காய் :-
    வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்

    #மணத்தக்காளி கீரை :-
    மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •