செய்தி
மயிலை கபாலீஸ்வரர் கோவில் அறுபத்துமூவர் விழாவையொட்டி 09-04-2017, ஞாயிறு நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் "நீர்மோர்ப் பந்தல்" நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாஜி சமூகநலப்பேரவை மாநில துணைத்தலைவர் திரு.சீனிவாசன் தலைமையில் தொடர்ந்து 15வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநிலத் தலைவர் திரு.K.சந்திரசேகரன் தொடங்கிவைத்தார். திரு.அம்பத்தூர் வெங்கடேசன், திரு.சங்குராஜன், திரு.பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் ஆகியவை வழங்கப்பட்டன.
அறுபத்துமூவர் விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள், நடிகர்திலகம் திருநாவுக்கரசராக திரையில் உலாவந்ததை நினைவு கூர்ந்து, அவர் பெயரால் சிவாஜி பேரவை செய்த சேவையையும் போற்றிச் சென்றனர்.
![]()
Bookmarks