-
23rd April 2017, 10:51 AM
#11
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மய்யம் இணைய தளம் நடுவில் சில நாட்கள் நேரடியாக பார்வையிட முடிந்து பிறகு மீண்டும் பழையபடி ஆகி விட்டது. சில நாட்களாக வர முடியாமல் இருந்து இன்று மீண்டும் வந்து பார்த்ததில் ஒரு சோகமான செய்தி எம்.ஜி.ஆர். அவர்களின் திரியில் படித்து மனம் கஷ்டமானது.கண்கவர் நிழற்படங்கள் மூலம் நடிகர் திலகத்தின் தோற்றத்தை அழகுற பகிர்ந்து கொண்ட திரு முத்தையன் அம்மு அவர்கள் மறைந்தார் என அறிந்து மனம் வருத்தமுற்றது. அவருடைய மறைவின் மூலம் இம்மய்யம் இணையதளத்தின் ஆர்வமான பங்களிப்பாளர்களில் ஒருவரை இழந்து விட்டோம். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தாருக்கு நமது ஆழந்த இரங்கல்களையும் இத்துயரைத் தாங்கும் வலிமையை அவர்கள் பெறவும் இறைவனை வேண்டுகிறோம்.
திரு முத்தையன் அவர்கள் நேர்மையாளர் தங்கள் பக்கத்தில் தவறான பதிவுகள் வந்தபொழுதெல்லாம்
அதனை சுட்டிக்காட்டியவர் அப்படியான நேர்மையாளர் மறைந்தவிட்டார் என்பதனை அறிந்து
மனம் மிகவும் வேதனை அடைகின்றது; அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறேன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd April 2017 10:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks