-
21st April 2017, 01:49 PM
#3681
Senior Member
Devoted Hubber
FROM THE FACEBOOK PAGE OF MR.GANESAN SAMIAYYA
ஒரு வரலாற்றின் உண்மை, பண்டித நேரு பிரதமராக இருந்த போது முதல் சிவாஜிக்கும் நேரு குடும்பத்துக்கும் நட்பு ரீதியான உறவு இருந்தது,
நேருவிற்கு பின் அன்னை இந்திரா நம் தலைவன் சிங்கத்தமிழன் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருந்தார், அன்னை இந்திராவை முன் அனுமதி இல்லாமல் சந்திக்கும் அளவுக்கு சிவாஜி செல்வாக்கு பெற்றிருந்தார்,
ஒன்றும் தெரியாத சிலர் சொல்வது போல காமராஜர் மறைவுக்குப்பின் மூப்பனார் பின்னால் நடிகர்திலகம் செல்லவில்லை,
மூப்பனார் யார் என்றே டெல்லி தலைமைக்கு தெரியாது, ஆருயிர் அண்ணன் சிவாஜி தான் மூப்பனாரை அன்னை இந்திராவிடம் அறிமுகப் படுத்தினார், இது தான் உண்மை, அப்போது ரோஜாவின் ராஜா படபிடிப்பின் போது சண்டைகாட்சியில் அண்ணன் சிவாஜிக்கு கால் பாதத்தில் அடிபட்டதால் எற்பட்ட எலும்பு முறிவுக்கு காலில் கட்டுடன் வலியையும் பொருட்படுத்தாமல் மகாதேவன்பிள்ளை யுடன் டெல்லி சென்று அன்னை இந்திராவை சந்தித்து இரண்டு காங்கிரஸ் கட்சிகளையும் இணைத்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார், சிவாஜியால் காங்கிரஸ் கட்சி 1970-80 களில் திராவிட கட்சிகளுக்கு இணையான மாபெரும் கட்சியாக திகழ்ந்தது, இது தான் உண்மை, உண்மைக்கு மாறான சரித்திர நிகழ்வுகளையும் தன்னிகரற்ற தலைவன் சிவாஜியின் புகழையும் முகநூலில் நண்பர்கள் தவறாக பதிவிட வேண்டாம்,
REPLY FROM MR MUTHAYYA
பெருந்தலைவர் மறைவுக்கு பின் இண்டிகேட், சிண்டிகேட் என இருந்த இரு அணிகளையும் இணைக்க தலைவர்கள் முயற்சி செய்தனர்.நடிகர் திலகம் அதற்கு உடனே ஒப்புதல் வழங்க வில்லை. அன்னை இந்திராகாந்தி சிவாஜியுடன் இணைய வேண்டும் என கூறினார்.தலைவர்களும், அப்போது அகில இந்திய சிவாஜி மன்ற தலைவராக இருந்த சின்ன அண்ணாமலை அவர்களும் நடிகர் திலகத்தோடு சென்று இந்திராகாந்தியிடம் இணைய ஒப்புதல் கொடுத்தார்கள்.தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த மூப்பனார் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கவும் இந்திராகாந்தியிடம் ஒப்புதல் பெற்று சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இணைப்பு விழாவில் அறிவிக்க செய்தார்கள்.இதற்கு நடிகர் திலகத்தின் அழுத்தம் முக்கியமாகும். பின்னால் இந்திராகாந்தியிடம் கருத்து மாறுபட்ட மூப்பனார் TNCC தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராஜினமா ஏற்று கொள்ளப்பட்டது. இதை எதிர் பார்க்காத மூப்பனாரும் மற்ற தலைவர்களும் மறுபரிசீலனை செய்ய இந்திராகாந்தி அவர்களிடம் கேட்டு அவர் அதற்கு ஒத்து கொள்ளாத தோடு Tncc தலைவராக ஆர்.வி.சாமிநாதன் அவர்களை நியமித்து விட்டார்கள். இதை மறுபரிசீலனை செய்யவும் மீண்டும் மூப்பனாரை Tncc தலைவராக நியமிக்கவும் அன்னை இந்திராகாந்தியிடம் வலியுறுத்த மூத்த தலைவர்களும் மூப்பனாரும் நடிகர்திலகத்திடம் சொன்னார்கள்.அதற்காகத்தான் மதுரையில் திரிசூலம் பட விழா நடத்தப்பட்டது.இரண்டு நாள் விழா.முதல் நாள் பட விழா.இரண்டாம் நாள் அரசியல் விழா.Tncc தலைவரை அழைக்காமல் விழா நடத்தியதால் விழாவை தடை செய்ய சில தலைவர்கள் இந்திராகாந்தியிடம் சொன்னார்கள். சொந்த பணம் செலவு செய்து மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டி விழா நடைப்பதை அறிந்த இந்திராகாந்தி வாழ்த்து மடலோடு தனது பிரதிநிதியாக அகில இந்திய இளைஞர் காங் தலைவராக இருந்த ராமசந்திர ராத் என்பவரை அனுப்பினார். அந்த விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் தலைவர் காமராஜருக்கு பின்பு தமிழ்நாட்டில் நாங்கள் ஏற்றுகொண்ட தலைவர் மூப்பனார்.அவர் ராஜினமா சம்மந்தமாக அன்னை இந்திராகாந்தி மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று பேசினார்.அதன் தொடர்ச்சியாக அன்னை இந்திராகாந்தி மூப்பனார் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமித்தார்.இதுதான் கடந்த காலத்தில் நடந்தவை.
REPLY FROM GANESAN SAMIAYYA
Sir 1979 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற திரிசூலம் படவிழாவில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் சிவாஜி ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மூப்பனாரை சிவாஜி மன்றம் தோளில் சுமந்து அரசியலில் முன்னிலை படுத்தியது, இதை யாரும் மறுக்க முடியாது,
அன்னை இந்திரா சிவாஜி மீது பெற்ற தாயினும் மேலான பாசம் வைத்திருந்தார், சிவாஜியிடம் எந்த கண்டிசனும் போடவில்லை, தங்களின் பதிவு தவறு,
பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குப்பின் ஸ்தாபன காங்கிரஸ் - இந்திரா காங்கிரஸ் இணைப்பிற்குப் பின் அண்ணன் சிவாஜியை TNCC தலைவராக்கவே அன்னை இந்திரா விரும்பினார், இணைப்பு விழா நடந்த சென்னையில் கடைசியில் புதிய தலைவரை அறிவிக்க அன்னை இந்திரா மைக் அருகே வந்த போது மூப்பனாரின் பெயரை இந்திராவின் காதில் அருகே கையை மறைத்து கொண்டு நடிகர் திலகம் கூறியதை வரலாற்றில் இருந்து மறைத்து விட முடியாது,
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
21st April 2017 01:49 PM
# ADS
Circuit advertisement
-
22nd April 2017, 02:39 PM
#3682
Senior Member
Seasoned Hubber
மய்யம் இணைய தளம் நடுவில் சில நாட்கள் நேரடியாக பார்வையிட முடிந்து பிறகு மீண்டும் பழையபடி ஆகி விட்டது. சில நாட்களாக வர முடியாமல் இருந்து இன்று மீண்டும் வந்து பார்த்ததில் ஒரு சோகமான செய்தி எம்.ஜி.ஆர். அவர்களின் திரியில் படித்து மனம் கஷ்டமானது.கண்கவர் நிழற்படங்கள் மூலம் நடிகர் திலகத்தின் தோற்றத்தை அழகுற பகிர்ந்து கொண்ட திரு முத்தையன் அம்மு அவர்கள் மறைந்தார் என அறிந்து மனம் வருத்தமுற்றது. அவருடைய மறைவின் மூலம் இம்மய்யம் இணையதளத்தின் ஆர்வமான பங்களிப்பாளர்களில் ஒருவரை இழந்து விட்டோம். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தாருக்கு நமது ஆழந்த இரங்கல்களையும் இத்துயரைத் தாங்கும் வலிமையை அவர்கள் பெறவும் இறைவனை வேண்டுகிறோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd April 2017, 10:41 AM
#3683
Senior Member
Devoted Hubber
வணக்கம் மய்யம் திரி நண்பர்களே ,
கடந்த ஒரு மாதகாலமாக இலங்கை சென்றிருந்ததால்
மய்யம் திரியை பார்வையிடவோ பதிவிடவோ
முடியாமல் போய்விட்டது.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd April 2017, 10:51 AM
#3684
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மய்யம் இணைய தளம் நடுவில் சில நாட்கள் நேரடியாக பார்வையிட முடிந்து பிறகு மீண்டும் பழையபடி ஆகி விட்டது. சில நாட்களாக வர முடியாமல் இருந்து இன்று மீண்டும் வந்து பார்த்ததில் ஒரு சோகமான செய்தி எம்.ஜி.ஆர். அவர்களின் திரியில் படித்து மனம் கஷ்டமானது.கண்கவர் நிழற்படங்கள் மூலம் நடிகர் திலகத்தின் தோற்றத்தை அழகுற பகிர்ந்து கொண்ட திரு முத்தையன் அம்மு அவர்கள் மறைந்தார் என அறிந்து மனம் வருத்தமுற்றது. அவருடைய மறைவின் மூலம் இம்மய்யம் இணையதளத்தின் ஆர்வமான பங்களிப்பாளர்களில் ஒருவரை இழந்து விட்டோம். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தாருக்கு நமது ஆழந்த இரங்கல்களையும் இத்துயரைத் தாங்கும் வலிமையை அவர்கள் பெறவும் இறைவனை வேண்டுகிறோம்.
திரு முத்தையன் அவர்கள் நேர்மையாளர் தங்கள் பக்கத்தில் தவறான பதிவுகள் வந்தபொழுதெல்லாம்
அதனை சுட்டிக்காட்டியவர் அப்படியான நேர்மையாளர் மறைந்தவிட்டார் என்பதனை அறிந்து
மனம் மிகவும் வேதனை அடைகின்றது; அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறேன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd April 2017, 10:55 AM
#3685
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd April 2017, 10:57 AM
#3686
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd April 2017, 10:58 AM
#3687
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd April 2017, 10:59 AM
#3688
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd April 2017, 11:05 AM
#3689
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd April 2017, 11:09 AM
#3690
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks