-
1st May 2017, 03:33 AM
#11
Senior Member
Devoted Hubber
[QUOTE]வழக்கம்போல் விஸ்வநாதன் இசையில் பாட்டுக்கள் அத்தனையும் அருமை. படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவீஸிற்காக பி.மாதவன் தயாரித்து இயக்கியிருந்தார். வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு முழு தீனி போடவில்லை என்பதுதான் உண்மை. 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.
`தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான்.[/QUOTE]
மன்னவன் வந்தானடி தோல்வி படமாம் அதுவும் மிகப்பெரிய தோல்விபடமாம்
இப்படித்தான் சிவாஜி கணேசனின் படங்கள் தோல்விப்படங்களாக சித்தரிக்ப்படுகிறது
இந்த எழுத்தாளன் யாரது கைக்கூலியோ ?

9. மதுரையில் முதன் முதலாக ஒரே காம்ப்ளெக்ஸ்- ல் இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் படம் - மன்னவன் வந்தானடி.
அரங்குகள் - சினிப்ரியா, மினிப்ரியா
நாள் - 02..08.1975
10. மன்னவன் வந்தானடி மதுரையில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 125
11. மன்னவன் வந்தானடி மதுரையில் ஓடிய நாட்கள் - 110.
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் சுதாங்கன்
என்பவர் பல தவறான தகவல்களை எழுதிவருகிறார்
நண்பர் பரணியும் அதனை கவனிக்காமல் இங்கே கொண்டுவந்து பதிவிட்டுவிடுகிறார்
சுதாங்கன் தெரியாமல் எழுதுகிறாரா? அல்லது தெரிந்தே எழுதுகிநாரா என்பது தெரியவில்லை
எனவே நண்பர் பரணி செலுலாய்ட் சோழன் தொடரை இங்கு பதிவிடுவதை நிறுத்திவிடுங்கள்
அத்துடன் முன்னைய பதிவுகளையும் பார்த்து நீக்கிவிடுவது நல்லது. இதனை கவனத்தில் எடுங்கள்.
Last edited by sivaa; 1st May 2017 at 03:37 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st May 2017 03:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks