-
10th June 2017, 09:17 PM
#11
Senior Member
Devoted Hubber
Sekar Parasuram
· 5 hrs ·
நினைத்து உருகும் நடிகர் திலகம் திரைப்பட காதலக் காட்சிகள்!!
எத்தனையோ திரைப்படங்களில் காதலை சொல்லுகிற காட்சிகள் உண்டு, அதில் நடிக்கும் நடிகர்களும் உண்டு,
ஆனால் நடிகர் திலகம் நடிப்பினில் தான் அந்தக் காட்சிகள் உயிர் பெற்று மனதில் நிலைக்கும் காட்சியாக அமையும்,
நடிகர் திலகம் நடிப்பினிலே வந்த வண்ணக் காவியங்கள் " வசந்த மாளிகை, அவன் தான் மனிதன், தீபம்.
இதில் வசந்த மாளிகை முழுக் காதல் காவியம், காதல் வெற்றிப் பெற்றதாக பயணிக்கும் கதை, மற்ற இரண்டும் காதல் மலராமல் போகும் காட்சிகளைக் கொண்டது,
வசந்த மாளிகையின் சின்ன ஜமீன் ஆனந்த் துள்ளல் மணம் கொண்டவர், வானிலேயே பறந்து சகட்டு மேனிக்கு வாழ்க்கையை ரசித்தவருக்கு அழகான லதாவைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார், அந்தக் காதலை சொல்லுகிற விதம, அதற்கான காட்சியமைப்பு அதற்கும மேல் நம் மனங்களை கொள்ளும் கொள்ளும் நடிப்பு, " ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்து இருந்தால் ஆகாயத்திலே மின்னிக் கொண்டிருக்கும் அத்தனை நட்சத்திரங்களையும் பறித்து வந்து இங்கே தோரணங்களாய் கட்டி தொங்க விட்டிருப்பேன் என்ன செய்வேன் எனக்கு அந்த சக்தி இல்லையே! சக்தி இல்லையே". என்ற நடிகர் திலகம் வருந்துகிற போது நானெல்லாம் அந்த சக்தியை கொடுக்காத ஆண்டவனை திட்டோ திட்டென்று திட்டித் தீர்த்தேன்.
அதன்பின் லதாவை இருக்க கட்டியனைத்து " மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன " பாடல் வரை திட்டு இருக்கும்
"அவன் தான் மனிதன் " கோடீஸ்வரர் ரவிக்குமார் ஆனந்த பவனில் ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய படி ஆனந்தமாக இருப்பவருக்கு ஏற்கனவே வாழ்க்கையில் நடந்த அன்பான மனைவி குழந்தைப் பிரிவு போன்ற சொல்லில் அடங்கா துயரங்கள் இதயத்தின் அடிப் பகுதியில் இருந்தாலும் கூட தன்னிடம் பணியாற்றும் தன்னை பாஸ் என்று அழைத்து வரும் லலிதா மீது சூழ்நிலையினால் உருவாகும் காதல் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் கடிதம் மூலமாக தெரியபடுத்த வேண்டி படும் அவஸ்தை அந்த அவஸ்தை லலிதாவின் மனதில் சந்துரு நுழையும் வரை தொடர்வது கொடுமையிலும் கொடுமை, ஒரு வழியாக காதலை சொல்லத் துனியும் போது லலிதா குறுக்கிட்டு " சந்துருவைத் தானே சொல்லுரீங்க பாஸ்" என்றவுடன் ஏற்படும் ஏமாற்றத்தை கண்களிலும் கண்களின் புருவங்களில் காட்டும் நடிப்பு,
காதலில் அவசரப் படக் கூடாது என உணர்த்தினாரோ என்னவோ புரியவில்லை, நானெல்லாம் கூட விரும்பிய காதலை வெளிபடுத்த முடியாமல் காலம் தாழ்த்தி ஏமாந்த நினைவுகளை அசை போட அவன் தான் மனிதன் உதவுகிறது,
அடுத்த தீபம் முதலாளி ராஜாவிற்கு தனது தங்கையின் தோழியும் தனது ப்யூன் ராமையா மகளுமான ராதா மீது வரும் காதல், உண்மையான ராஜாவின் காதலைப் புரிந்து கொள்ள விரும்பாத ராதா வெறுமனே " இந்த முதலாளிகள் என்றாலே எனக்கு பிடிக்காது" எனக் கூறும் போது நம்மையெல்லாம் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுவார் இந்த ராதா ( அந்தக் காட்சியில் எதற்கு புன்னகை அரசியை போடாமல் இந்த கமுக்கமான மூஞ்சியைப் போட்டார்கள் என்ற ஆடியன்ஸ் முணுமுணுப்பு கேட்கும்)
எதேச்சையாக தனது தங்கையுடன் தனது பங்காளாவிற்கே தனது ராதா வருவதை கண்ட ராஜா பரவசமடையும் போது ராதாவுடன் தனியாக பேசிக்கொள்ளும் சூழ்நிலையும் அமையும் , என்னதான் செல்வந்தர் என்றாலும் கூட மனதில் குடி கொண்ட பெண்ணிடம் பேசும் போது சொதப்பலான பேச்சுக்கள் பீரிடும்,
ராஜா: அப்பா எங்க வீட்லதானே?
ராதா: ம்ம்
ராஜா: முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமை என்றாலே வெளியில் போயிடுவேன், ஆனா இப்பயெல்லாம் ஆபிஸ் முடிஞ்சா வீடு, வீடு விட்டா ஆபிஸ்,
ராஜா: நீ பத்திரிகை படிக்கிறது உண்டா?
புயல்.. ஏதோ கரையைக் கடக்கிறதா, புயல், புயல் i mean what a call cyclone
இப்படி பேசிக்கொண்டே இருக்கையில் ராதா புறப்பட்டு விட ( இந்தக் காட்சியைத் தான் சமீபத்தில் வந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கௌதம் மேனன் கொஞ்சம் மாற்றி அமைத்து கை தட்டல் அள்ளிக் கொண்டார்) ராஜா
ஒரு வழியாக தனது ப்யூன் ராமையாவிடமே ராதாவை திருமணம் செய்ய விருப்பம் எனத் தெரிவிக்க பூரித்துப் போன ராமையாவும் தனது மகளின் சம்மதத்தை பெற முடியாமல் திரும்பி வந்து சொல்லும் போது
நடிகர் திலகம் தன் கண்களை மூடி சோகத்தை வெளிப்படுத்தும் நடிப்பை பாருங்கள் இணைப்பில் உள்ள படத்தை கவனிக்கவும்,
மூன்று திரைப்பபடங்களிலும் மூன்று விதமான காட்சிகள், ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டும் எண்ணிக்கையால் பெற முடியவில்லை..


நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th June 2017 09:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks