Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Jahir Hussain


    க்ளைமேக்ஸ்,,,, அதாவது உட்சக்கட்டக் காட்சி,,, ஒரு படத்தின் வெற்றி தோல்வியைக்கூட பல நேரங்களில் இந்த க்ளைமேக்ஸ் காட்சிகள் நிர்ணயம் செய்கிறது,,, நமது நடிகர் திலகத்தின் படங்களை பொருத்தவரை அவர் படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்கு என்று ஒரு உயிர்ப்பு இருக்கும்,,, பராசத்தி படத்தின் கோர்ட் சீன், மனோகரா படத்தின் தர்பார் சீன், பாசமலர் படத்தின் "கை வீசம்மா கை வீசு" என்று சோகம் கொப்பளிக்க மரணிக்கும் க்ளைமேக்ஸ், தேவர் மகன், படையப்பா போன்ற படங்களில் அவர் மரணிக்கும் காட்சிகளே நமக்கு க்ளைமாக்ஸ் காட்சிகள்தான்,,, இப்படி பலநூறு படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகளை அடுக்கி் கொண்டே செல்லலாம்,,, நான் பதிவின் சிக்கனம் கருதி மூன்று படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகளை குறிப்பிடுகிறேன்,,, நண்பர்களும் தங்களை வியக்க வைத்த சிவாஜி சினிமாக்களின் க்ளைமேக்ஸ்களை அவரவர் பின்னூட்டங்களில் குறிப்பிட்டு விளக்கம் கொடுத்து நம்மை சிலிர்க்க வைக்கலாம்,,,

    "ராஜா"... 1972ல் வெளிவந்து எம் ஜி ஆர் ரசிகர்களையும் சுண்டியிழுத்த சிவாஜி சினிமா,,, அதன் க்ளைமேக்ஸ் காட்சி,,, ஒரு அரண்மணை,,, எப்போதும் குணச்சித்திர வேடம் பூண்டு நம்மையேல்லாம் கதிகலங்க விடும் திரு ரெங்காராவ் தான் மெய்ன் வில்லன்,, ஒருபக்கம் சிவாஜி நிற்கிறார்,,, மறுபக்கம் பாலாஜி,,, இருவரது கைகளும் கட்டப்பட்டு இருக்கிறது,, இருவர்களும் சகோதரர்கள்,,, அவர்களது தாயார் பண்டரிபாய்,,, அவரிடமிருந்து உண்மையை வரவழைக்கும் பொறுப்பு ஆர் எஸ் மனோகர் வசம் ,,, இவர்களை சுற்றிலும் பல நடிகர்கள்,,, இதை வைத்துத்தான் அந்த 20 நிமிட சுவாரஸ்ய க்ளைமேக்ஸ் ஆரம்பம்,,, இந்த ஐந்து நடிகர்களை சுற்றி சுற்றி காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும்,,,, கொஞ்சம்கூட குழப்பமே இல்லாமல் ரசிக்கத்தக்க ஒரு ஆக்ஷன் க்ளைமேக்ஸ் அது,,, இன்றும் ரசிக்கத்தக்க ஃபார்முலாவில் எடுக்கப்பட்டு இருக்கும் க்ளைமேக்ஸ் அதில் எழுதப்பட்ட வசனங்கள் (ஏ எல் நாராயணன்) எல்லாமே கச்சிதமாக அமைந்தது,,, நாம் அனைவருமே இந்தப் படத்தை பார்த்து சிவாஜியின் ஸ்டைலில் மெய் மறந்த படம் தான் ஆகவே இதற்கு மேல் இந்த க்ளைமேக்ஸிர்க்கு விளக்கம் தேவையில்லை,,,,


    திரிசூலம் படம்,,, க்ளைமேக்ஸ்,,, மூன்று சிவாஜிகளும் மும்மூர்த்திகளாக கோலோச்சிய க்ளைமேக்ஸ்,,, எம் என் நம்பியார் முதற்கொன்று படத்தில் நடித்த மேக்ஸிமம் அத்தனை வில்லன் நடிகர்களும் இந்த சீனில் ஆஜர்,,, இதுவும் கிட்டத்தட்ட 20 நிமிட க்ளைமேக்ஸ்,, கே ஆர் விஜயா மற்றும் ரீனா வுடன் அப்பா சிவாஜி,,,, மற்ற இரண்டு சிவாஜிகளும் இரண்டு பால்கனிகளில் நின்று கொண்டு வசனம் பேசுவார்கள்,,, கீழே நம்பியார் & கோ,,, மண்டைகாய்ந்த குழப்பத்தில் இருப்பார்கள்,,, இப்படி ஒரு ஆச்சர்யம் அதிர்ச்சி கலந்த சஸ்பென்ஸோடு அந்த க்ளைமேக்ஸ்ஐ குழப்பமில்லாது பதிவு செய்திருப்பார்கள்,,, பலகோடி கண்கள் பார்த்து வியந்த இந்த க்ளைமேக்ஸ்ஐ இதற்கு மேல் விவரிக்கத் தேவையில்லை,,

    வியட்நாம் வீடு படத்தின் படபடக்கும் சோகமான ஷாக்கிங் க்ளைமேக்ஸ்,, எல்லோரும் தவறை உணர்ந்து திருந்தி அப்பாவின் அருமை புரிந்து பத்மநாபரை சுற்றி நிற்பார்கள்,, இரண்டு ஆனந்தமான செய்திகள் வரும்,,, ஒன்று பேரனோ பேத்தியோ பிறக்கப் போகும் தகவல்,,, டாக்டர் செந்தாமரை பாதிரியார் பக்குவமாக கூறுவார்,,, படிப்படியாக புரிந்து கொண்டு குதூகலம் அடைவார் சிவாஜி,, அடுத்த தகவல் பத்மநாபருடைய அலுவலக அப்பாய்மெண்ட்,, ஆனந்த அதிர்ச்சி,,, அதன் பிறகு சுந்தரம் அவர்களின் கூர் தீட்டிய வசனங்கள் அப்படியே வாயில் ரத்தம் வழிய சரிந்து விழும் பத்மநாப ஐயர்,,, படம் பார்க்கிற ஒவ்வொறு மனிதரும் உறைந்து போவார்கள்,,, படம் முடியும் 10 நிமிடங்களுக்கு முன்பே அவசரமாக வெளியேறும் ஆடியன்ஸை படம் முடிந்தும் ஐந்து நிமிடங்களுக்கு நிலைகுலைந்த நிலையில் இருக்கையில் அமர வைத்த க்ளைமேக்ஸ்ஐ மறக்க முடியுமா?

    இந்த உட்சக்கட்ட காட்சிகளை படமாக்கும் மேக்கிங் ஸ்டைலிலேயே அந்தந்த படங்களின் ஃபினிஷிங் டச் களை சராசரி ரசிகன் உணர்ந்து கொள்வான்,,, சில படங்கள் க்ளைமேக்ஸ்ல் இருந்தே படம் துவங்கும் "அந்த நாள்" போன்ற படங்கள் அந்த வகையை சார்ந்தது,,, தமிழ் திரையில் எல்லா சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டு படங்களில் நடத்தவர் நமது நடிகர் திலகம்,, வர்த்தக சினிமா என்ற எல்லையோடு நின்று விடாமல் தன்னால் எவ்வளவு பறந்து விரிந்து படங்கள் செய்ய முடியுமோ அத்தனை வகையான படங்களையும் செய்தவர்,,, அதனால்தானே நெற்றித் திலகம் போல் இன்றும் "பளிச்" என்று நாம் அவர் படங்களை எடுத்துக் காட்டுகளாக வைக்க முடிகிறது,,,,

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •