-
21st September 2017, 01:09 PM
#1011
Senior Member
Devoted Hubber
திரு சிவா சார் ,
ஒரு திரியில் தனி ஒரு மனிதனாக 100 பக்கங்கள் நிறைவு செய்வது என்பது மிகப்பெரும் சாதனை .அந்த சாதனைக்கு சொந்தக்காரரான உங்களை மனதார வாழ்த்துகிறேன் .
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
21st September 2017 01:09 PM
# ADS
Circuit advertisement
-
22nd September 2017, 06:52 AM
#1012
Senior Member
Devoted Hubber
Originally Posted by
HARISH2619
திரு சிவா சார் ,
ஒரு திரியில் தனி ஒரு மனிதனாக 100 பக்கங்கள் நிறைவு செய்வது என்பது மிகப்பெரும் சாதனை .அந்த சாதனைக்கு சொந்தக்காரரான உங்களை மனதார வாழ்த்துகிறேன் .
நன்றி ஹரிஷ்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd September 2017, 06:53 AM
#1013
Senior Member
Devoted Hubber
Savithri Raghu
"பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்"....சொர்கம் படம்.
நமக்கெல்லாம் சொர்கம் தான். இந்தப் பாடலுக்கு நானும் என் கணவரும் ஒன்று சேர்ந்து ரசித்தது ரசித்து ருசித்த பாடல் காட்சி....
பாடல் தொடங்கும் முன் மிக நீண்ட BGM .... விஜய லலிதா கை மறைவிலிருந்து...நீல உடையில் மன்மதன் போல் அழகாக அமர்ந்து-படுத்து இருப்பார் நம் hero... பல்லவி தொடங்கும் முன் வலப்புறம் இருந்து இடப்புறம் திரும்புவார்... பின் அவரின் back pose ... அப்படியே திரும்புவாரே பார்க்கலாம்.. (முன் pose கொடுத்ததாலே பார்க்க .... சகிக்கல பல நடிகர்களை).. ...
பல்லவி தொடங்கி "பொன் மகள் வந்தாள் .. பொருள் கோடி தந்தாள் .... பூ மேடை வாசல் பொங்கும் தேனாக... என்று பாடிக்கொண்டே side walk பண்ணும் போது .. ஓடி போய் டிவி screen உடைத்தது நடிகர் திலகத்தை பாராட்ட வேண்டும் போல் உந்துதல் வரும். மன் மதனை விஞ்சும் அழகு..
சரணத்தில் ..."பாவை நீ வா" என்ற வரி முடியும் போது இடது கையை சற்று மேலெடுத்து இறங்குவார். எப்படித்தான் பல் வேறு bhavangalaiyum , கை அசைவையும் தர முடியுமோ... இப்படி சாதாரண எந்த ஒரு நடிகனாலும் முடியவே முடியாது..நம் திலகம் கடவுளின் சிறந்த படைப்பு...
ஒவ்வொரு வார்த்தைக்கும் அவரை உடல் அசைவு... ஆஹா.. கண்களை screen விட்டு எடுக்க முடியாது. எடுத்தால் ஏதாவது ஒன்றை miss பண்ணி விடுவோம்.
Highlight of the song ..."வைரமோ உன் வசம். வாழ்விலே பரவசம்........வீதியில் ஊர்வலம் .. விழியெலாம் நவரசம்... இந்த சரணத்தின் போது உடல் அசைவு class .. simply superb .... wow
this is the original vertion of ponmagal
youtube.com
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd September 2017, 06:59 AM
#1014
Senior Member
Devoted Hubber
Ramiah Narayanan
தெய்வமகன் !
சிவாஜிக்கு ஆஸ்கார் விருது பெறுவதற்குக் கூட தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.
தெய்வமகன் படத்தை பார்த்து பலர் பிரமித்து போனார்கள். அந்த படம் பல விருதுகளை பெற்றுருக்கவேண்டும். எது தடுத்தது ? அவர் ஒன்றும் பிராமணர் இல்லையே. இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் அதிகம் இடம் பெற்றது பிராமணர்கள் தான்.
தந்தை ராஜசேகர் வேடத்தில் " என்னை போல கொடூரமான முகம் உனக்கு இருந்தால் அல்லவா என் நிலைமை உனக்கு புரியும்" . அந்த குழந்தையை கொன்றுவிடு என்று நடிக்க வேண்டிய கட்டத்தில் அடக்கி வாசிக்க முடியுமா ? அந்த கட்டம் வந்ததுமே ஒரு உறுப்பினர் incorrigible என்று சொல்லிவிட்டு படத்தை முழுவதும் பார்க்காமல் சென்று விட்டாராம். அப்போதே விருது கிடைக்காது என்று தெரிந்து போனதாம். அதே நடிகர் திலகம் கௌரவம் படத்தில் நடித்த போது பாராட்டியதும் இந்த கூட்டம் தான்.
இரெண்டு வேடம் என்றால் சட்டையை மாற்றினால் போதும் எனும் அளவுக்குத்தான் நடிப்பு திறன் உள்ளது. அல்லது இரெண்டு விரலை மூக்கு பக்கம் கொண்டு போய் சுழற்றினால் இன்னொரு MGR எனும் அறியும் அறிஞர்கள் உள்ள நாடல்லவா நமது நாடு.
மூன்று பெரும் போட்டி போட்டுக்கொண்டல்லவா நடிப்பார்கள்.
வயதான வேடம் என்றால் நடிகர் திலகம் சவாலாக எடுத்து நடிப்பார். பார் மகளே பார் முதல் பல படங்களை சொல்லலாம். அதில் கம்பீரமும் இருக்கும். சாகும் வரை வெளி உலகிலும் அவர் கம்பீரத்தை யாரும் குறை சொல்ல முடியாது. கலைஞர் கருணாநிதியை பாராட்டி பேசும் போது நடிகர் திலகம் நடித்த கடைசி படத்தை பார்த்த உணர்வு தான் எனக்குள் ஏற்பட்டது. ஆக ராஜசேகர் நடிப்பு நம்மை ஈர்த்தாலும் பலப்படங்களில் நாம் பார்த்தது.
அடுத்து அவர் முகசாயலில் நடித்தவர் நடிப்பு நம்மை கொள்ளை கொண்டது உண்மைதான். பிச்சைக்காரனாக உட்க்கார்ந்து அம்மாவை பார்த்து விட்டு ஓடுவது. DR சங்கர் அவரை ஒதுக்கியதற்கான காரணத்தை சொன்னவுடன், ஒரு கோப சிரிப்பை உதிர்த்து நான் கூட தவறான பிறப்போ என்று நினைத்து கொண்டேன் என்பது. தம்பிக்கு பணம் கொடுக்க சொல்லி தந்தைக்கு கண் சாடை காட்டுவது. இறந்ததும் தாயின் மடியில் என்னை மகனே என்று கூப்பிடுவீர்களாம்மா ? எனும் காட்சியில் பலரின் விம்மல் குரல் கேட்டு அழாதவர் யார் ? அந்த காட்சி பல நாட்கள் நம்மை நெகிழவைத்ததே.
ஆனாலும் நான் பிரமித்து போனது அந்த மூன்றாவது பாத்திரத்தில் தான். டேய் லூசாய்யா நீ என பலர் கேட்கலாம். இந்த விஜய் ரோல்ல ரொம்ப குறும்புத்தனத்துடன், பயந்த சுபாவமுள்ள இண்ணொசண்டாக, ரொமாண்டிக்கா ஜாலியான பணக்கார பையனாக வந்து கலக்குவார். ஜெயலலிதா அவர் அப்பாவை பற்றி பேசிக்கொண்டே இருக்க இவர் கவனிக்காமல் ஏதோ செய்து கொண்டிருக்க ஜெ நான் சொல்லறதை நீங்க கவனிக்கல எங்க சொல்லுங்க பார்ப்போம் என்றதும் உங்கப்பா ஏதோ புல்புல் தாரா வாசிப்பாராம் என சொல்லும் அந்த மழுப்பல், காதல் மலர் கூட்டம் ஓன்று பாடலில் என்ன ஒரு இளமை தோற்றம், என்ன நளின நடை, பெண்களை வசியம் பண்ணும் குறும்பு, பின்னி பெடல் எடுத்திருப்பார். அப்பா முன் அம்மாவை கொஞ்சுவது நீ அழகா ஏதோ செய்வியே உருண்டையா ஆன் அந்த இட்லி ரொம்ப நல்ல இருந்திச்சி என ஐஸ் வைப்பது. தந்தை நேராக நிற்க சொல்லியும் அது முடியாமல் நெளிவது அதை பார்த்து தந்தை ரசிப்பது, பின் இவர் நேராக நிற்கமுடியாமல் அம்மா பின்னாடி போய் ஒளிந்து கொள்வது. உண்மையில் ஒரே நடிகர் இந்த இரு காதாபாத்திரக்களை இவ்வளவு வித்தியாச படுத்தி நடிக்க முடியுமா ? போங்கடா புடலைங்க விருது ? கொண்டு கூவத்துல போடுங்க. அண்ணன் சிவாஜியை கண்டு ‘தீஃப்… தீஃப் என்று கத்தி கொண்டு நாகரீக, செல்ல பையனை நம் கண் முன் நிறுத்துவார். என்ன அழகு அந்த கதாப்பாத்திரத்தில் எங்கள் தெய்வம். பட்டிமன்றம் வைத்தால் தெய்வமகன் இளைய சிவாஜியின் ஆச்சரிய நடிப்புக்கு தான் நான் வாதாடுவேன்.
ஓர் உலகம், ஓர் பிறப்பு, ஓர் இறப்பு அந்த பிறப்பில் கண்ட ஓர் உச்சம் தொட்ட நடிகன் எங்க சிவாஜியே ! பல நூற்றாண்டுகள் அவர் நடிப்பை பற்றி உலகு பேசும். காசு கொடுத்தது வேசியிடம் செல்வதற்கு நிகர் தானே காசு கொடுத்து விருது வாங்குவது. அவர் விருதுக்கு நடிக்கவில்லை, தன் ரசிகர்களுக்கு நடித்தார். எங்களாலேயே அவர் மிகையாக நடிக்க வேண்டியிருந்தது பின்நாட்களில். யதார்த்த நடிப்பு, மிகையான நடிப்பு, குறைவான நடிப்பு என்பதை கதாபாத்திரம் மூலம் நாம் பிரித்தெடுக்க வேண்டுமே தவிர, பொறாமையில் மிகை நடிப்பு என்று சொல்ல கூடாது.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2017, 07:01 AM
#1015
Senior Member
Devoted Hubber
(பழைய விளம்பரம்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd September 2017, 09:44 AM
#1016
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd September 2017, 05:50 PM
#1017
Senior Member
Devoted Hubber
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd September 2017, 05:53 PM
#1018
Senior Member
Devoted Hubber
Z இன்று இரவு 7.30 மணிக்கு நடிகர்திலகத்தின் வாழ்கை
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th September 2017, 06:35 AM
#1019
Senior Member
Devoted Hubber
Edwin prabhakaran Eddie
என் டிராமராவ் ..அவர்களின் பேட்டி ..அரசியலுக்குவந்த பிறகு...." சிவாஜி என்ற சமுத்திரத்திற்கு உண்மையாக கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்றுவரைக்கும் கிடைக்கவில்லை ...வருத்தமிது ..நம் அரசியலின் சதுரங்கம் இது.....என் மன வேதனையும் கூட ........................அவரவர், . அவரவர் வேலையில் இருக்கிறார்கள் ...உண்மை தூங்கி கொண்டிருக்கிறது.........நானும் தூங்கி கொண்டுதான் இருக்கிறேன் அந்த விஷயத்தில்........ .மறுக்கமுடியாது .....என்னால் எதுவும் செய்யவும் முடியாத சூழ்நிலை .................எதுவாக இருந்தாலும் ..சிறு எறும்பின் உணர்வை கூட முகத்தில் காட்ட தெரிந்த அந்த கலைஞன் மானிடம் உள்ளவரை வாழ்வான் ...(ஆந்திர ஜோதி 1989 )
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th September 2017, 07:14 AM
#1020
Senior Member
Devoted Hubber
தமிழ் ராக்கர்ஸுக்கு ராஜபார்ட் ரங்கதுரையின் தில் சவால்!
நாற்பது வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான படம் `ராஜபார்ட் ரங்கதுரை'. இது, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மதுரை மீனாட்சி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி நூறு நாள்கள் ஓடியதை, சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட விழாவாகக் கொண்டாடினார்கள்.
இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வேடங்களில் வெளுத்துவாங்கியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உணர்ச்சிப்பிழம்பில் நெகிழவைத்துவிடுவார். சிவாஜி கணேசனின் திரையுலகப் பயணத்தை அலங்கரித்த திரைப்படங்களில் `ராஜபார்ட் ரங்கதுரை'யும் ஒன்று. 100-வது நாள் விழாவில் சிறியவர் பெரியவர் பாகுபடின்றி, கலைத்தாயின் பிள்ளைகளான மதுரை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது பெங்களூரு, சித்தூர், கொச்சின் என, தென்னிந்திய சிவாஜி ரசிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டது விழாவின் மிகப்பெரிய ஹைலைட்!
புதுமுக நடிகர்களாக, துணை நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு முதல் ரசிகர் மன்றம் உருவாக்கும் கலை ரசனையும் தாராள மனமும்கொண்டவர்கள் `மதுரை ரசிகர்கள்'. அதனால்தான் சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது, அதை மதுரையில் தொடங்குவதை சென்டிமென்டாகக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான மதுரை ரசிகர்கள், சமீபகாலமாக எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படத்தையும் ஒரு வாரத்துக்குமேல் பார்ப்பதில்லை. தரமில்லாத படங்களாக வருவது, திருட்டு சிடி, நெட்டில் டவுன்லோடு செய்து பார்ப்பது, டிக்கெட் விலை உயர்வு, அதிகமான திரையரங்குகளில் வெளியாவது போன்றவையே முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நிலையில்தான் சிவாஜியின் சூப்பர் ஹிட் படமான `ராஜபார்ட் ரங்கதுரை', மதுரை மீனாட்சி பாரடைஸில் வெளியானது. வழக்கமாக, இதுபோன்ற பழைய படங்கள் மூன்று நாள்கள் அல்லது ஒருவாரம் வரைதான் ஓடும். ஆனால், `ராஜபார்ட் ரங்கதுரை'யோ கூட்டம் குறைவில்லாமல் ஓடத் தொடங்கியது. இந்தப் பகுதியில் நடுத்தர மக்கள், தினக்கூலி உழைப்பாளி மக்கள் பெருவாரியாக வாழும் நிலையில், இந்தப் படத்தை குடும்பத்துடன் காண வரத்தொடங்கினர். தினமும் மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகளாக ஐம்பது நாள் வரை ஓடியது. ஐம்பதாவது நாளன்று படம் பார்க்க வந்தவர்களுக்கு, பிரியாணி பொட்டலம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.
அதையும் தாண்டி மக்களின் ஆதரவால் இன்று நூறாவது நாளைத் தொட்டது `ராஜபார்ட் ரங்கதுரை'. இதை பெரும் விழாவாகக் கொண்டாட நினைத்தனர் சிவாஜி ரசிகர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் மதுரையில் குவிந்தார்கள். சிவாஜி கட் அவுட்டுக்கு பிரமாண்ட மாலை அணிவித்தார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். தியேட்டர் வளாகத்தில் மேடை அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். வெடிகள் வெடித்து அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.சிவாஜி ரசிகர் அல்லாதவர்களும் அந்தப் படத்தின் கதைக்காக பார்க்க வந்ததாகக் கூறினார்கள். ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், இந்தப் படத்துடனான தங்கள் அனுபவங்களைக் கூறி ரசிகர்களை நெகிழவைத்தார்கள். ``இனி, சிவாஜியின் சிறந்த படங்கள் தங்கள் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்படும்'' என்று மீனாட்சி பாரடைஸின் உரிமையாளர்கள் உறுதி அளித்தார்கள். சமீபகாலமாக மதுரையில் எந்த ஒரு முன்னணி நடிகர் படத்துக்கும் இப்படியோர் உணர்வுபூர்வமான விழாவைப் பார்த்ததில்லை என்று அசந்துபோய் கூறினர் பொதுமக்கள். `சிவாஜி' என்ற மகா நடிகனை அவர் மறைவுக்குப் பிறகும் கொண்டாடிவருகிறார்கள் மதுரை மக்கள். படம் முடிந்து வெளியே வந்த ரசிகரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘இந்தப் படத்தைத்தான் ஏற்கெனவே பலமுறை பார்த்திருப்பீங்களே. திரும்பவும் தியேட்டர்ல வந்து பார்க்க என்ன காரணம்?’. ‘நடிகர் திலகம் படத்தை எத்தனை வாட்டினாலும் தியேட்டர்ல பார்க்கலாம்’ என்றார். ‘பழைய படத்தை எல்லாம் நெட்ல ரிலீஸ் பண்ணா, வீட்டுல இருந்தே பார்ப்பீங்களா’ என நாம் கேள்வியை முடிக்கும் முன்னரே, ‘‘மாட்டவே மாட்டேன். தமிழ் ராக்கர்ஸோ, ஜோக்கர்ஸோ... எத்தனை நெட்டு வந்தாலும், தலைவர் நடிப்பை எல்லாம் தியேட்டர்ல வந்து பார்க்குறதுதான் சுகம்’’ என கிளம்பினார்.
vikatan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks