Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    ‎Ramiah Narayanan‎

    தெய்வமகன் !


    சிவாஜிக்கு ஆஸ்கார் விருது பெறுவதற்குக் கூட தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.
    தெய்வமகன் படத்தை பார்த்து பலர் பிரமித்து போனார்கள். அந்த படம் பல விருதுகளை பெற்றுருக்கவேண்டும். எது தடுத்தது ? அவர் ஒன்றும் பிராமணர் இல்லையே. இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் அதிகம் இடம் பெற்றது பிராமணர்கள் தான்.
    தந்தை ராஜசேகர் வேடத்தில் " என்னை போல கொடூரமான முகம் உனக்கு இருந்தால் அல்லவா என் நிலைமை உனக்கு புரியும்" . அந்த குழந்தையை கொன்றுவிடு என்று நடிக்க வேண்டிய கட்டத்தில் அடக்கி வாசிக்க முடியுமா ? அந்த கட்டம் வந்ததுமே ஒரு உறுப்பினர் incorrigible என்று சொல்லிவிட்டு படத்தை முழுவதும் பார்க்காமல் சென்று விட்டாராம். அப்போதே விருது கிடைக்காது என்று தெரிந்து போனதாம். அதே நடிகர் திலகம் கௌரவம் படத்தில் நடித்த போது பாராட்டியதும் இந்த கூட்டம் தான்.
    இரெண்டு வேடம் என்றால் சட்டையை மாற்றினால் போதும் எனும் அளவுக்குத்தான் நடிப்பு திறன் உள்ளது. அல்லது இரெண்டு விரலை மூக்கு பக்கம் கொண்டு போய் சுழற்றினால் இன்னொரு MGR எனும் அறியும் அறிஞர்கள் உள்ள நாடல்லவா நமது நாடு.
    மூன்று பெரும் போட்டி போட்டுக்கொண்டல்லவா நடிப்பார்கள்.
    வயதான வேடம் என்றால் நடிகர் திலகம் சவாலாக எடுத்து நடிப்பார். பார் மகளே பார் முதல் பல படங்களை சொல்லலாம். அதில் கம்பீரமும் இருக்கும். சாகும் வரை வெளி உலகிலும் அவர் கம்பீரத்தை யாரும் குறை சொல்ல முடியாது. கலைஞர் கருணாநிதியை பாராட்டி பேசும் போது நடிகர் திலகம் நடித்த கடைசி படத்தை பார்த்த உணர்வு தான் எனக்குள் ஏற்பட்டது. ஆக ராஜசேகர் நடிப்பு நம்மை ஈர்த்தாலும் பலப்படங்களில் நாம் பார்த்தது.
    அடுத்து அவர் முகசாயலில் நடித்தவர் நடிப்பு நம்மை கொள்ளை கொண்டது உண்மைதான். பிச்சைக்காரனாக உட்க்கார்ந்து அம்மாவை பார்த்து விட்டு ஓடுவது. DR சங்கர் அவரை ஒதுக்கியதற்கான காரணத்தை சொன்னவுடன், ஒரு கோப சிரிப்பை உதிர்த்து நான் கூட தவறான பிறப்போ என்று நினைத்து கொண்டேன் என்பது. தம்பிக்கு பணம் கொடுக்க சொல்லி தந்தைக்கு கண் சாடை காட்டுவது. இறந்ததும் தாயின் மடியில் என்னை மகனே என்று கூப்பிடுவீர்களாம்மா ? எனும் காட்சியில் பலரின் விம்மல் குரல் கேட்டு அழாதவர் யார் ? அந்த காட்சி பல நாட்கள் நம்மை நெகிழவைத்ததே.
    ஆனாலும் நான் பிரமித்து போனது அந்த மூன்றாவது பாத்திரத்தில் தான். டேய் லூசாய்யா நீ என பலர் கேட்கலாம். இந்த விஜய் ரோல்ல ரொம்ப குறும்புத்தனத்துடன், பயந்த சுபாவமுள்ள இண்ணொசண்டாக, ரொமாண்டிக்கா ஜாலியான பணக்கார பையனாக வந்து கலக்குவார். ஜெயலலிதா அவர் அப்பாவை பற்றி பேசிக்கொண்டே இருக்க இவர் கவனிக்காமல் ஏதோ செய்து கொண்டிருக்க ஜெ நான் சொல்லறதை நீங்க கவனிக்கல எங்க சொல்லுங்க பார்ப்போம் என்றதும் உங்கப்பா ஏதோ புல்புல் தாரா வாசிப்பாராம் என சொல்லும் அந்த மழுப்பல், காதல் மலர் கூட்டம் ஓன்று பாடலில் என்ன ஒரு இளமை தோற்றம், என்ன நளின நடை, பெண்களை வசியம் பண்ணும் குறும்பு, பின்னி பெடல் எடுத்திருப்பார். அப்பா முன் அம்மாவை கொஞ்சுவது நீ அழகா ஏதோ செய்வியே உருண்டையா ஆன் அந்த இட்லி ரொம்ப நல்ல இருந்திச்சி என ஐஸ் வைப்பது. தந்தை நேராக நிற்க சொல்லியும் அது முடியாமல் நெளிவது அதை பார்த்து தந்தை ரசிப்பது, பின் இவர் நேராக நிற்கமுடியாமல் அம்மா பின்னாடி போய் ஒளிந்து கொள்வது. உண்மையில் ஒரே நடிகர் இந்த இரு காதாபாத்திரக்களை இவ்வளவு வித்தியாச படுத்தி நடிக்க முடியுமா ? போங்கடா புடலைங்க விருது ? கொண்டு கூவத்துல போடுங்க. அண்ணன் சிவாஜியை கண்டு ‘தீஃப்… தீஃப் என்று கத்தி கொண்டு நாகரீக, செல்ல பையனை நம் கண் முன் நிறுத்துவார். என்ன அழகு அந்த கதாப்பாத்திரத்தில் எங்கள் தெய்வம். பட்டிமன்றம் வைத்தால் தெய்வமகன் இளைய சிவாஜியின் ஆச்சரிய நடிப்புக்கு தான் நான் வாதாடுவேன்.
    ஓர் உலகம், ஓர் பிறப்பு, ஓர் இறப்பு அந்த பிறப்பில் கண்ட ஓர் உச்சம் தொட்ட நடிகன் எங்க சிவாஜியே ! பல நூற்றாண்டுகள் அவர் நடிப்பை பற்றி உலகு பேசும். காசு கொடுத்தது வேசியிடம் செல்வதற்கு நிகர் தானே காசு கொடுத்து விருது வாங்குவது. அவர் விருதுக்கு நடிக்கவில்லை, தன் ரசிகர்களுக்கு நடித்தார். எங்களாலேயே அவர் மிகையாக நடிக்க வேண்டியிருந்தது பின்நாட்களில். யதார்த்த நடிப்பு, மிகையான நடிப்பு, குறைவான நடிப்பு என்பதை கதாபாத்திரம் மூலம் நாம் பிரித்தெடுக்க வேண்டுமே தவிர, பொறாமையில் மிகை நடிப்பு என்று சொல்ல கூடாது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •