Page 127 of 400 FirstFirst ... 2777117125126127128129137177227 ... LastLast
Results 1,261 to 1,270 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1261
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1262
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1263
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    ஒவ்வொரு சமூகத்திலும் மகத்தான கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒன்று; மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இரண்டு; ஆட்சியாளர்களால் ஓயாத அலைகளைப் போலான மனக்குமுறலுடல்களுடனான வாழ்க்கை மெய்யான கலைஞனது. அத்தகைய
    மாபெரும் கலைஞனான சிவாஜிக்குள்ளும் குமுறல்கள் இருந்துள்ளன. அவரின் மறைவின்
    போதாவது அவரது மனக்குமுறல்களை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் இன்னொரு கலைஞனுக்கு இந்த அவலம் நேரவிடாமல் தவிர்க்கவே இந்த நேர்காணல் மறு பிரசுரம் செய்யப்படுகிறது...ஒரு கலைஞனுக்கு உண்மையான அங்கிகாரம் என்று எதை நினைக்கிறீர்கள்?
    விருது மட்டும் திறமைக்கான முழு அங்கிகாரம் இல்லையென்றாலும், உரிய காலத்தில் அத்தகைய விருதுகள் கிடைக்காதது நல்ல கலைஞனை மனமுடையச் செய்யும் தானே...
    உங்கள் விஷயத்தில் எப்படி?
    ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக்கொள்ளும் போதுதான் முழுமை அடைகிறான். அதுதான் அங்கிகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும் போதுதான் முழுமையாக ஒரு நடிகன் வெளிபடமுடியும். அதுதான் அவனுக்கு அங்கிகாரத்தை பெற்றுத்தரும்.
    எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள்...
    எல்லோரையுமா மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?

    அங்கிகாரம் கிடைப்பதற்கும் விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் இஷ்டப்பட்டு கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக்
    கொடுத்திருக்கிறார்கள் எல்லாருமா அதற்கு தகுதியானவர்கள்?
    'லாபி' செய்து விருதை வாங்குகிறார்கள். இன்னும் எப்படியெல்லாமோ நடக்கிறது.

    ஒரு கலைஞனுக்கு விருது என்பது,
    அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுத்தான் அதை அவன் அதை கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு
    விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன். ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உரிய காலத்தில்
    கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் என் மனதின் ஓரத்தில் விண் விண் என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் ஒரு மனுஷன்தானே... இதை
    மறைத்தால் என்னைவிட அயோக்கியன் யாரும் இருக்க முடியாது.

    பால்கே விருது எப்போதோ உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் இவ்வளவு காலம் தாமதமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    பாராபட்சம் இருக்கலாம், அரசியல் தலையீடு இருக்குமென்று நினைக்கவில்லை. நானும் அரசியலில் இருந்தவன் அப்படி சொல்வது அசிங்கமாக இருக்கும். மேலும் அரசியல் தலையீடு இருக்கிறது என்று சொன்னால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமென்று தெரியவில்லை. பால்கே விருது பெரிய விருது.
    அது ஏன் இத்தனை நாள் எனக்கு கிடைக்கவில்லை? என்று யோசித்து பார்த்தபோது... எனக்கு கிடைத்த தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.

    இந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஓர் குழு இருக்கிறது. அந்த குழு பரிந்துரைக்கும் பட்டியல் சம்மந்தபட்ட அமைச்சருக்குச் செல்கிறது. அவர் ஆசா பாசம் இல்லாதவராக இருந்தால் தகுதியானவர்களுக்குக் கிடைக்கும்.
    இல்லையென்றால் அவர் விரும்பும் நபருக்குத் தான் விருது செல்கிறது. இதுவரை இப்படித்தான் நடந்தது என்று எனக்கு தெரியாது. தில்லியிலே இருக்கிற சர்க்கார் உத்தியோகஸ்தர்களே என்னிடம் சொன்னார்கள்.

    உங்களுக்கு செவாலியே விருது அளிப்பதென்று பிரெஞ்சு அரசு முடிவு செய்த பின்னரும் அது தாமதமானதற்கு புதுவை அரசு ஆர்வம் காட்டாததுதான் காரணம் என்று கூறப்படுகிறதே உண்மையா?



    ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுதான் செவாலியே விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. கிட்டத்ததட்ட எனது படங்கள்
    எல்லாவற்றையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.



    எனக்கு செவாலியே விருது கிடைத்த பிறகுதான்
    ஹாலிவுட் நடிகர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்தது.

    அதாவது அவர்கள் முதலில் என்னைத்தான் Recognise செய்திருக்கிறார்கள். தேர்வுக் குழு எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தவுடன் பிரெஞ்சு அரசாங்கம் புதுவை அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் புதுவையிலிருந்து பதில் போகவில்லை.

    புதுவையை ஒரு காலத்திலே பிரெஞ்சு அரசுதானே ஆட்சி செய்தது. பிரெஞ்ச்காரன் நம்மை ஆட்டிப்படைச்சானே என்ற கோபத்தில் அந்தக் கடுதாசியைத் தூக்கிப் போட்டுட்டாங்க போலிருக்கு!


    பிறகு அங்குள்ள இந்திய மக்களிடம்
    விசாரித்து ஒருவழியாக முடிவு செய்து பிரெஞ்ச்
    நாட்டுத் தூதர் மூலமாக அந்த விருது என்னிடம் வந்து சேர்ந்தது.



    எனக்கு அந்த விருதைக் கொடுக்க மூன்று வருடங்களாக பிரெஞ்ச் அரசாங்கம் முயற்சி செய்திருக்கிறது. அதை கழிச்சி கட்டிட்டாங்க. அது
    யாருன்னு, எனக்கு தெரியாது. ஆனால் புதுவையில்தான் அப்படி நடந்தது என்று தெரிந்துவிட்டது.


    செவாலியே விருது யாருக்கும் எளிதில் கிடைத்து விடாது. அதிலேயே 1,2,3 என வகையான விருதுகள் உண்டு. எனக்கு கிடைத்தது முதல்தர விருது. உண்மையைச் சொன்னால் அந்த விருது
    எவ்வளவு மதிப்பு மிக்கது என்று எனக்கு முதலில் தெரியாது. இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை
    .


    தெய்வாதீனமாக ஒரு காரியம் நடந்தது. சகோதரி ராதிகாவின் கணவர் ஒரு வெள்ளைக்காரர். அவர்தான் எனக்கு விருது கிடைத்த விஷயம் தெரிந்தவுடன் ராதிகாவிடம் செவாலியே விருது மிகப் பெரிய விருதாயிற்றே... அது வந்த பிறகும் சிவாஜியை நீங்கள் கண்டு கொள்ளவில்லையே...
    என்று கேட்டிருக்கிறார்.

    ராதிகா அதுபற்றி கமல், ரஜினி போன்றவர்களுடன் பேச அதற்கு பிறகுதான் அந்த விருதின் மதிப்பு எல்லோருக்கும்
    தெரிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ஏ.வி.எம்.சரவணன் மற்றும் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய விழா நடத்தி அந்த விருதை எனக்குத் தந்தார்கள். தில்லியில் உள்ள பிரெஞ்ச் தூதர் சென்னை வந்து அந்த விருதை வழங்கினார்.


    இதுவரை நீங்கள் நடித்த பாத்திரங்கள் உங்களுக்கே சவாலாக இருந்த பாத்திரம் எது?
    உங்களுக்கு முழுத் திருப்தியளித்த படம் எது?
    கப்பலோட்டிய தமிழன்தான் எனக்குச் சவாலாக இருந்த பாத்திரம் அந்த படத்தைப் பார்த்துவிட்டு
    வ.உ.சி-யின் புதல்வர் என்னைக் கட்டிபிடித்துக்கொண்டு "ஐயாவை நேரில் பார்த்தேன்" என்று சொன்னார். நீங்கள் கேட்டீர்களே... அங்கிகாரம் எது என்று? இதைவிட ஒரு நடிகனுக்கு பெரிய அங்கிகாரம் எதுவாக இருக்க முடியும்? எனக்கு முழு திருப்தியளித்த படம் தெய்வமகன், மூன்று வேடம். சிரமப்பட்டுத்தான் நடித்தேன்.
    கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்திருக்கிறீர்கள்.
    குறுகிய இடைவெளிக்குள் ஒரு பாத்திரமாக மாற்றிக்கொள்வது Typical mental exercise இருந்திருக்குமே... அதை நீங்கள் சமாளித்தது
    எப்படி?
    அது ஒன்றும் பெரிய காரியமில்லை. பழக்கத்தில்
    வருவதுதான். அன்றாடம் நமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கும் பாத்திரம் பற்றி சிந்திக்கவேண்டும். நமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கும் பாத்திரம் பற்றி சிந்திக்கவேண்டும். நமக்கு எங்கே ஓய்வு கிடைக்கும்? கழிவறை அல்லது குளியலறை தான். அங்கேதான் கதவைத் தட்டி தொந்தரவு செய்யமாட்டார்கள். அந்த சமயத்தில் இன்றைக்கு என்ன நடிக்கப் போகிறோம் என்று யோசனை செய்வேன். பிறகு மேக்-அப் போட்டுக் கொண்டிருக்கும்போது... மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு சற்றே தலைசாய்ந்து இருக்கும் போது... இதுமாதிரி இடையிடையே கிடைக்கும் சந்தர்பங்களிலெல்லாம் பாத்திரங்களுக்கு மெருகேற்றுவது எப்படி என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பவன்தான் நடிகன். இதைவிட்டுவிட்டு எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாரு என்கிற பாணியில் வந்தோம் நடிப்பது போல ஏதோ செய்தோம் என்று
    இருக்கலாமா? நாம் என்ன செய்யப் போகிறோம்
    என்று யோசித்தாலே போதும் கிடைக்கிற அரை மணி நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை முழுமையாகச் செய்யவில்லையென்றால் நீங்க ஏன் நடிகன்னு சொல்றீங்க? அதைவிட வெட்டின்னு சொல்லுங்க...
    என்னைப் பொருத்தவரையில், ஆஸ்தீக வார்த்தையில் சொல்வதானால் அது ஒரு வரப்பிரசாதம். சாதாரண வார்த்தையில் நன்றியறிதலோடு சொன்னால் எனக்கு கிடைத்தது - நல்ல குரு. அவர் தந்த பயிற்சி.
    உங்கள் குரு யார்?
    நடிப்பில் எனக்கு ஒரே ஒரு குரு தான் உண்டு. அவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. நான் சிறுவயதில்
    யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில்தான் முதலில் சேர்ந்தேன். அங்கேதான் எனது குரு சின்ன பொன்னுசாமி
    படையாச்சியும் வேலை செய்தார். இருவர் பெயரும் ஒரே மாதிரி இருந்ததால் முதலாளி பெரிய பொன்னுசாமி என்றும் எங்கள் குரு சின்ன
    பொன்னுசாமி என்றும் அழைக்கப்பட்டனர். ஏழு வயதிலிருந்து ஐந்தாறு வருடங்கள் எனக்கு பயிற்சி தந்தவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. மறந்துவிட்டீர்களா? நான் ஒரு பெண்
    வேஷக்காரன் என்பதை. தலைமை பெண் வேஷக்காரன் நான். எங்கள் குருவும் ஒரு பெண் வேஷக்காரர்தான். பெண் வேஷம் போடும் நடிகன் தான் ஆல் ரவுண்டராக வரமுடியும். முழுமையான நடிகனாக பரிமளிக்கமுடியும்.


    , எனக்கு அரசியல் இரண்டாம்பட்சம்தான். நான் குடிகாரனாக, பெண் பித்தனாக, கொலைகாரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில்
    நடித்தேன். அதனால்தான் 300 படங்களில் நடிக்க
    முடிந்தது. அரசியலில் இன்று வந்துவிட்டு நாளை போய் விடுவிவார்கள். எத்தனை பேருக்கு பேர் இருக்கு? செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு
    என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

    எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சிலபேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லையென்றால் அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள்.
    இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல் இருக்கிறதே?
    கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க... நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள். அதுவும் இப்படித்தான் நடக்கிறது நடக்க போகிறது !
    ஒரு காலத்தில் Over Acting செய்வதாக உங்கள் மீது விமர்சனம் எழுப்பப்பட்டதே... இப்போது அதைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    இதயம் பேசுகிறது மணியன்தான் அப்படி எழுதினார். சிவாஜி சகாப்தம் முடிந்துவிட்டது
    என்று எழுதியதும் அவர்தான். திராவிட பாராம்பரியம் பற்றி தப்பு தப்பாக எழுதியவர்களில் முகியமானவர் மணியன்.
    அவருக்கு கலைஞர் தலைமையில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அதற்கு மணியனே நேரில் வந்து அழைத்ததால் நானும் சென்றிருந்தேன். எனக்கும்
    அரசியலுக்கும் சம்மந்தமே இல்லை என்று மணியன் அங்கு பேசினார். நான் பேசும்போது திராவிடப் பாராம்பரியம் பற்றி விமர்சித்து எழுதியவர் இவர்தான். இப்போது அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் இவருக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதிலிருந்து
    அரசியல் தந்திரம் நிறைந்தவர் என்று புரியும் என்று பேசினேன். ஐயய்யோ, நான் அப்படி இல்லை என்று மணியன் புலம்பினார். அது போகட்டும்.

    Bad Actor ஒருவன் இருப்பான். அவனைச் சுற்றி நான்கைந்து எழுத்தாளர்கள் இருப்பார்கள். தன்னுடைய ஆளை பெரிய நடிகன் என்று காட்டுவதற்காக, நன்றாக நடிப்பவனை Over Acting என்று சொல்வார்கள், பொதுவாக நம்ம ஊரில் தான் நல்லவன்னு சொல்லமாட்டானே...
    அடுத்தவனை மட்டம் தட்டினால்தான் தான் நல்லவனாக முடியும் அதுபோலத்தான் இந்த விமர்சனமும் வந்தது.


    உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் உங்களுக்கு இணையாக நடிப்புத் திறமையை வெளிபடுத்தியவர் யார்?
    நிச்சயமாக பப்பிதான் (பத்மினி), பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல, சிறந்த அழகியும்கூட.
    சிறந்த குணச்சித்திரம், காமெடி, நடனம் What not?
    எல்லா பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை She is an all rounder. சின்ன வயதிலிருந்தே நானும் பத்மினியும் பழகிவருகிறோம். We are all intellectual friends. எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு. உலகிலேயே அதிக படங்கள் நடித்த ஜோடி என்றால், அது நானும் பத்மினியுமாகத்தான் இருக்கவேண்டும்.
    காமெடி, குணச்சித்திரம், வில்லன் இவற்றில் ஒரு நடிகனுக்கு கடினமான பாத்திரம் எது?
    காமெடிதான், காமெடி நடிகனைப் போல ஒரு Creator யாரும் கிடையாது. இப்போதுள்ள இலக்கணப்படி புருவத்தைத் தூக்கி ஹா ஹா என்று சிரித்துவிட்டால் வில்லன் என்று சொல்லுகிறார்கள். கொஞ்சம் அழகாக இருந்து.
    காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு டான்ஸ் ஆடி,
    இரண்டு குத்துகுத்திட்டா ஹீரோன்னு சொல்லுகிறார்கள். காமெடி அப்படியில்லை. அந்த வேஷம் கஷ்டமானது. எனக்கு காமெடி நல்லா வரும். ஆனால் கொடுக்கமாட்டாங்க... வசனம் பேசுவது 'எமோஷன்' எல்லாம் என்னாவது? இதற்கெல்லாம் நான்தானே சார் கிடைத்தேன்...
    (சிரிக்கிறார்)
    - தமிழ்மகன்
    (1998)

    .......................................

    அட செவெலியர் விருதைகூட சிவாஜி கணேசனுக்கு கிடைக்கவிடாமல்
    தடுப்பதற்கும் முயற்சி செய்திருக்கிறார்களே இந்தப்பாவிகள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1264
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Bad Actor ஒருவன் இருப்பான். அவனைச் சுற்றி நான்கைந்து எழுத்தாளர்கள் இருப்பார்கள். தன்னுடைய ஆளை பெரிய நடிகன் என்று காட்டுவதற்காக, நன்றாக நடிப்பவனை Over Acting என்று சொல்வார்கள், பொதுவாக நம்ம ஊரில் தான் நல்லவன்னு சொல்லமாட்டானே...
    அடுத்தவனை மட்டம் தட்டினால்தான் தான் நல்லவனாக முடியும் அதுபோலத்தான் இந்த விமர்சனமும் வந்தது.
    தான் மேலான நிலையில் இருப்பதாக காட்ட இப்படியான எழுத்தாளர்களைதான் எம் ஜீ ஆர் பயன்படத்திக்கொண்டார் அதை விபரம் தெரியாமல் அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டு திரிகிறார்கள் எழுதுகிறார்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. Likes Harrietlgy liked this post
  7. #1265
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    அவர்களது மக்கள் திலகம் பெருமை, புகழ் அள்ள, அள்ள குறையாத அட்சய பாத்திரமாக எத்தனை பொய்கள் எத்தனை புரட்டுகளை ஆவண படுத்த வேண்டிய வேளையில் இவன் ஒருத்தன்
    வெட்டவெளிச்சமாக்கிக்கொண்ருக்கறான் அ ஆ ஆ
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1266
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    இதிலிருந்து என்ன புரிகிறது!சிவாஜி கணேசனுக்கு போகவேண்டிய சிறந்தநடிகர் பரிசான பாரத் பட்டத்தை
    எம் ஜீ ஆர் ஆட்கள் முலம் எடுத்துக்கொண்டார் என அவரது ரசிகர்கள் புரிந்துகொண்டார்கள் அப்பாடா
    இப்பொழுதாவது புரிந்துகொண்டார்களே.நன்றி கடவுளே.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1267
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Meenakshi Sundaram‎

    அன்பார்ந்த #நடிகர்திலகவிசுவாசிகளே.

    திரு.சேகர் பரசுராம்சார் நேற்று ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். இன்றைய இளைஞிகள் சிவாஜி மணிமண்டபத்தில் அன்னாரது திருவுரச்சிலை முன் செல்பி எடுத்ததை.பார்க்கவே கண்கொள்ளாக்காட்சி.அதையொத்த ஒரு நிகழ்வினை இங்கே உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது. நான் மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குப்பின் உள்ள ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறேன்.தினமும் மகாலை சுற்றிப்பார்க்க வெளியூர் வாசிகள் வருவார்கள்.போன சனியன்று சில கல்லூரி மாணவிகள் அவ்வ...ழியே செல்லும்போது என்னிடத்தில் வந்து (மகாலை ஒடிய டீ கடையில் தினமும் டீ குடிப்பது வழக்கம்) மதுரையில் சிவாஜி மணிமண்டபம் இல்லையா என்று கேட்டனர் நான் இல்லை சென்னையில் இப்போதுதான் கட்டியுள்ளார்கள் என்றேன்.பின்னர் அவர்களிடம் சிவாஜிசாரைப்பற்றித்தெரியுமா எனக்கேட்டேன, இல்லை அவ்வளவாக தெரியாது முன்னாள் நடிகர் என்று தெரியும் என்றார்கள்.அவரைப்பற்றிச் சொல்லுங்களேன் என்றனர். நானும் இதுதான் சந்தர்ப்பம் என்று நம் திலகத்தின் வரலாற்றை எனக்குத் தெரிந்தவரை சொன்னேன் அ வர்களுக்கு ஒரே ஆச்சரியம் இவ்வளவு சிறந்த நடிகரா என்று கூறிவிட்டு கட்டாயம் சென்னை செல்லும் போது மணிமண்டபத்தை பார்க்கிறோம் என்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.அதிலும் அவர்கள் என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.அதை அவர்களிடம் கேட்டு வாங்கக்கூட மறந்துவிட்டேன்.அவ்வளவு ஆனந்தம் எனக்கு. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் நம் அய்யன் இன்றைய தலைமுறையிரையும் கவர்ந்து விட்டார் என்பதுதான். எனவே ஊடகங்களோ அல்லது யாராலும் நம் திலகத்தின் புகழை அழிக்கவோ களங்கப்படுத்தவோ தகுதியில்லாவர்கள்.இன்னும் வருங்காலத்திலும் அன்னாரின் புகழ் ஓங்கும் என்பது திண்ணம்.நன்றி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1268
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    ‎Edwin Prabhakaran Eddie‎

    தமிழக சினிமாக்கள், இன்னும் எத்தனை யுகங்கள் வந்து, எத்தனை கோடி கணக்கான நடிகர்கள் வந்தாலும் .....நம் நடிகர் திலகம் சொன்ன இந்த ஒரே ஒரு வார்த்தை தமிழ் சினிமா உள்ளவரைக்கும் பொருந்தும்......"விதை நான் போட்டது " என்ற வார்த்தை தான் அது......இதை விட . நம் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு வேறு பாக்கியமே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்....இறுதி மூச்சு உள்ளவரைக்கும்....இந்த காட்சியில் வருவது போல் நடிகர் திலகம் நிமிர்ந்தே நிற்பார்...பின்னாடி வரும் நடிகர்கள் தனது சிம்மக்குரலுக்கு முன்னால்,கை விரலின் நகத்தின் நடிப்புக்கு முன்னால் தலை குனிந்தே நிற்பார்கள் நம் திலகத்திடம்






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1269
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    SivajiSivakumar


    சிங்கத்தமிழன் சிவாஜியின் தீவிர தொண்டர் அன்னை இல்லத்தின் அன்பு விசுவாசமாக அய்யனின் மார்பளவு சிலை மதுரை நகரில் .முயற்சி பேட்டை மோகன் அவர்கள்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. Likes Harrietlgy liked this post
  13. #1270
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •