-
13th October 2017, 01:19 AM
#1311
Senior Member
Devoted Hubber
Abdul Razack
நடிகர் திலகத்தின் அதிக படங்கள் மறு வெளியிட்டில் வர வேண்டும் இன்றைய தலைமுறை தவறான வழியில் போகாமல் இருக்க அவரது படங்கள்தான் நேர்வழி காட்டும் முதல் வெளியிட்டில் பார்த்தவர்கள் இயற்கையிலே சிவாஜி ரசிகர்கள் அவர் திரையுலகில் கோலோச்சிய காலத்திலே ரசிகர்களாக இருந்தவர்கள் இன்று எப்படியும் 60 வயதை நெருங்குபவர்கள் ஆனால் மறு வெளியிட்டில் பார்ப்பவர்கள் ரஜினி கமல் வந்த பிறகும் சிவாஜியை ரசித்தவர்கள் அது தான் ஆச்சரியம் வயதும் 40ல் இருப்பவர்கள் இன்றைய தலைமுறை குழந்தைகள் தாத்தா பாட்டி சொல்வதை கேட்பதற்கே வாய்ப்பு இல்லாமல் வளர்ந்து வருகிறார்கள் காரணம் கூட்டு குடும்பம் இன்று இல்லை இந்த சூழ்நிலையில் அடுத்த தலைமுறைக்கும் அவரது படங்கள்தான் கூட்டு குடும்பம் என்றால் என்னவென்று காட்டும் அவர்களிடம் சிவாஜியை கொண்டு சேர்ப்பவர்கள் 40 வயதில் இருப்பவர்கள் தான் அதனால் மறு வெளியிட்டில் பார்க்கும் ரசிகர்கள்தான் சிறந்த பாக்யவான்கள் என்று சொல்கிறேன்....
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th October 2017 01:19 AM
# ADS
Circuit advertisement
-
13th October 2017, 03:34 AM
#1312
-
13th October 2017, 04:11 AM
#1313
Senior Member
Devoted Hubber
Vaannila Vijayakumaran
கீழே இடம் பெற்றிருக்கும் பட விளம்பரத்திற்கும் நீங்கள் படிக்கப்போகும் செய்திக்கும் துளியும் தொடர்பில்லை... ஆனால், படத்ததலைப்பிற்கும் ஐயனுக்கும் தொடர்பிருக்கிறது...
நடிகர்திலகத்தின் இளமைப்பருவம் முதல் இனிய நண்பராய் விளங்கியவர் திரு.சாமிநாதன் அவர்கள். நடிகர்திலகம் சென்னைக்கு வந்து, சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும், அந்த நண்பரை உடையலங்காரம் செய்பவராக மாற்றி தன் அருகிலேயே வைத்துக் கொண்டார். எப்போதும் ' சாமிநாதா! சாமிநாதா!' என்று அழைத்துக் கொண்டேயிருப்பார். அவரும் கூப்பிட்ட குரல...
ுக்கு ஓடி வருவார்.
எதிர்பாராமல் அந்த நண்பருக்கு வாதநோய் வந்து படுத்த படுக்கையானார். எத்தனை லட்சங்கள் செலவழித்தாலும் என் நண்பனை நான் காப்பாற்றியே தீருவேன் என்று பல உதவிகள் செய்தார். அவரும்அதை நன்றியுணர்வோடு ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு கல்யாணப் பருவத்தில் ஒருமகள் இருந்தாள்.அந்த மகளின் திருமணத்தை கண்குளிரப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது அவர் லட்சியம்.அந்த ஆசையை நிறைவேற்ற மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் நண்பர் சாமிநாதன் எதிர்பாராமல் காலமாகிப் போனார்.
அவரின் உடலைப் பார்த்து நடிகர்திலகம், ' இனி சாமிநாதா என்று யாரை அழைப்பேன் ' அழுது புலம்பினார். அதைக் கண்டு சாமிநாதன் துணைவியாரும் பிள்ளைளும் கதறி அழுதனர். அந்தக் காட்சி அன்றைக்கு அப்பகுதியில் வாழ்ந்த அத்ததனை மக்களின் கண்களையும் குளமாக்கி விட்டது.
திருமணம் ஆக வேண்டிய இஇளம் பெண்ணும் கதறி அழுததைக்கண்டு யாருக்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாத நிலையில் நடிகர்திலகம் தன்னைத் தேற்றிக் கொண்டு ஆறுதல் சொன்னார்.
தனது நண்பரின் மகளுக்கு குறித்த முகூர்த்தத்தில்தானே தந்தையைப் போல் முன்நின்று, சகல செலவுகளையும் தானே செய்து திருமணம் நடத்தி வைத்தார்.
தன்னொடு இருந்த நண்பர்களுக்கு ' உடுக்கை இழந்தவன் கைபோல' நட்பின் இலக்ககணமாய், வழிகாட்டியாய் விளங்கியவர் நடிகர்திலகம்.
ஆம். ஐயனுக்கு பூப்போல மனசு.
கதைவசனகர்த்தா திரு. பாலமுருகன் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து...( படித்ததில் பிடித்தது)
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
Sriranga Raju KJ ஆனால் அதை விளம்பர படுத்தி அரசியல் ஆதாயம் கொண்டதில்லையே..
............
Venkatesh MP Kamath அதுதான் சிவாஜி
.................·
am Manian வாழ்க அண்ணன் புகழ்
.........
Vasudevan Srinivasan எனக்கு தெரிந்து நடிகர் திலகம் நடிப்பதாக விளம்பரம் செய்து கைவிடப்பட்ட இன்னும் இரு படங்கள் ஊர்ப்பெரியவர், அருட்பெருஞ்ஜோதி
...........
ajantha Rathinam இடக் கைக், கொடுப்பது, வலக்கைக்கு, தெரியாது
..........
Radhakrishnan K Karnanaga nadithathodu vari vazhanguvathilum pirarukku thuyar thudaippadhilum karnanaga vazhndhavar namadhu nadigar thilagam sivaji avarkal
...........
Jeyasankararaj Rajapandian இபபடிபட்ட சிங்கத்தின் ரசிகனாஇருப்பதில் பெருமை கொள்கிறேன்
............
Sundar Rajan தெய்வ மகன்
.................
Radhakrishnan Surulivelu நடிகா்திலகம் தான் செய்த உதவிகளை மற்றவா்களைப் போல் விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை .
...............
Sowri Rajan உத்தமன்
..............
·
Chandrasekaran Muniyandiapillai மனிதரில் மாணிக்கம் நம் ஐயன்
.......
Rajendiran Rajendiran விளம்பரம் தேடா உத்தமன்....
Last edited by sivaa; 13th October 2017 at 05:05 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th October 2017, 09:02 AM
#1314
Senior Member
Devoted Hubber
Vasu Devan
நாளை 13.10.2017 வெள்ளி முதல் சேலம் மக்களை மகிழ்விக்க வருகிறார் ராஜா.
தகவலுக்கு நன்றி சுந்தரராஜன் சார்.
அச்சோ! மறுபடியும் 'ராஜ' சொர்க்கம். 'ராஜா'! இந்த இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுடன் சேர்த்து உள்ளமும் உவகையுருமே! செய்தியைப் பார்த்ததும் இருக்கையில் உடல் அமர வில்லையே! கைகளைக் கொட்டாமல் இருக்க முடிய வில்லையே!
இப்போதுதான் ஜனவரி 26 1972 பிறந்தது மாதிரி இருக்கிறது. இன்றுதான் ரிலீஸ் ஆன மாதிரி. அன்று கடலூர் நியூசினிமாவில் 'ராஜா' ரசிகர்களுடன் ஆப்பிள் மாலைகளுடன் அனுபவித்த அதே ஆனந்தக் குதூகலம். ஒரே வித்தியாசம் அன்று வயது 11. இன்று 56. ஆனால் 'ராஜா' மார்கண்டேய மகராஜன். அவனுக்கு வயது என்பதே இல்லை. மூப்பு என்பதே இல்லை. அவன் உலகம் உள்ளவரை 25 வயது வாளிப்பு வாலிபன். (ராஜாவாக யாரோ சிவாஜியாம். அவருக்கு அப்போது வயது 44 ஆம். இதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.)
ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த 'ராஜா' மட்டுமே. அவன் எடையே 45 கிலோவுக்குள் தான் இருக்கும். 18 வயது பருவ மங்கையை அவன் அருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் அந்த நங்கை கிழவியாகத்தான் தெரிவாள் அவனுடைய தேஜஸில். இப்போது உணர முடிகிறதா ராஜாவின் இளமை பற்றி? அவனுடைய அந்த ஹேர் ஸ்டைல் இருக்கிறதே! நெற்றியின் முன் மொத்தக் கற்றையாய் புரளும் கண் கொள்ளா அழகு. அந்த வசீகர வதன முகம். மன்மதன் இவன் அழகைக் கண்டு எங்கோ வெட்கி ஓடி விட்டானாம். அவன் கண்கள் 'துறுதுறு'வென ஏன் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன? கண்களை அங்குமிங்கும் உருட்டி நிறைய பொய்களைச் சொல்லும் போது கூட நம்மை அவன் சொல்லும் பாணியால் நிர்மூலமாக்கி விடுகிறானே?
லீலா வினோதங்கள் புரிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு இவன்தான் குருவா? இவன் செய்யும் குறும்புகள் கிருஷ்ணனிடம் இல்லையே? வைரங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு வைராக்கியம் பிடித்தவளையும் தன் வலையில் விழ வைக்கும் சாமார்த்தியக்காரன். 'கடைப்பக்கம் போகும் கல்யாணப் பெண்ணை' கோட் போட்ட கிருஷ்ணனாக தொடர்ந்து சென்று ஒரு வினாடி கூட நிற்காமல் இவன் செய்யும் அலம்பல்களுக்கு அளவே இல்லையா?
இவனுக்கு எதிரியிடம் மோதும் போது எதிரியை கேலி செய்வது ஒரு பழக்கம். சண்டையிடும் போதே 'டபக்'கென்று கண்ணடித்து கலாட்டா செய்து வெறுப்பேற்றுவான். எதிரியை சரியாக ஆழம் பார்ப்பான். ரப்பர் பந்து தரையில் பட்டு முதல் தடவை எகிறுவதைப் போல சண்டையிடும் போது துள்ளி எழுந்திருப்பான். இவனுக்கு எதையுமே ஸ்டைலாக செய்ய வேண்டும். அப்படித்தான் பிறந்தான். அப்படித்தான் வளர்ந்தான். சண்டையைக் கூட ஸடைலாகத்தான் அவனுக்கு செய்யத் தெரியும். 'யேய்! என் பெயர் ராஜா' என்று கூறி முடிவாக எதிரிகளை உதைத்து அனுப்புவான்.
இவன் சிகரெட்டை வாயில் வைத்தால் வாயு பகவான் அலறுவான். ஏனென்றால் இவன் 'ராஜா'வின் வாய்க்குள். இவன் சொன்னபடிதான் அவன் கேட்க வேண்டும். ஐந்து பூதங்களுமே இவனுடைய ஐந்து அடிக்கும் அடக்கமாகி இவனுக்கு அடிமைகள். ஷூவின் முன்னால் கீழ் உள்ள கேப்பில் ஹாக்ஸா பிளேடை அழகாகச் செருகுவது இவனுக்குக் கைவந்த கலை. கிருஷ்ணன் ஜெயில்தானே பிறந்தான்?! 'ராஜா' அறிமுகமாவதே ஜெயிலில்தான்.
வீம்பு செய்யும் பெண்ணைத் தன் காலடியில் கிடத்துவது இவனுக்கு இலகுவான வேலை. கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நம் நெஞ்சைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் இவனேயன்றி நாகலிங்கம் இல்லை. நாகலிங்கம் 9 கோடி மட்டுமே சம்பாதித்த கேடி. ராஜாவோ பல கோடி உள்ளங்களைக் கொள்ளையடித்த அன்றைய மோடி. ராஜ சிம்மாசனம் அவன் ஒருவனுக்கு மட்டுமே. அதைத் தொட்டுப் பார்க்கக் கூட எவருக்கும் தகுதி இல்லாமல்தான் போகும். அவன் அப்படித்தான்.
இவனை வீட்டை எல்லாம் விட்டு காதலி துரத்த முடியாது. புகை மாதிரி சந்து பொந்து என்று எப்படியோ நுழைந்து காதலி மடியை மெத்தையாக நினைத்து சாய்ந்து விடுவான். இவனை ஒன்றும் செய்ய முடியாது.
தீராத விளையாட்டுப் பிள்ளை. இவனுக்கு 'இரண்டில் ஒன்று' எப்போதும் தெரிய வேண்டும்.
கோட், பேண்ட் எல்லாம் இவனிடம் தஞ்சம் புகத்தான் விரும்புமாம். மற்றவர்கள் அணிந்தால் அணிந்தவர்களை இவை அசிங்கப்பட வைத்துவிடுமாம். தானும் அசிங்கப்பட்டுப் போகுமாம்.
இவன் சிகரெட் லைட்டரை வைத்து எதிரிகளைப் படம் பிடிப்பானே சிகரெட்டை வாயில் பிடித்தபடி! எவனும் இவனின் அந்த ஸ்டைலில் மயங்கி அதைக் கண்டு பிடிக்கவே முடியாது. அப்படியே யாருக்காவது சின்ன சந்தேகம் வந்தால் செல்லமாக அவர்கள் பின் பக்கம் சிரித்தபடி தட்டி நடந்தபடியே காரியத்தைக் கந்தலாக்கிவிடுவான். கை தேர்ந்த போலீஸ் கேடி இவன்.
தந்திர நரி! சாகசப் புலி! பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று காதலி தூபம் போட்டு பரீட்சித்தால் முதலாளிக்கு யோக்கியன் போல நேர்மை காண்பிப்பான். விதவிதமான பெயர்கள் வைத்திருப்பான். குமரேச ஓதுவார் என்பான். 'ராஜா' என்பான் அப்புறம் 'இல்லை' என்பான். 'சேகர்' என்பான். கவர்ச்சிக் கள்ளன்.
திடீரென கொள்ளையர் கோவிலில் இருக்கும் போது காவல் அதிகாரியாய் அங்கு வந்து நடித்து அனைவரையும் காப்பற்றி நம்ப வைப்பான். அதே சமயத்தில் உண்மையாக காவல் அதிகாரியாயும் இருப்பான். கொள்ளைக்கார கும்பலை மடக்கும் போது, தன் ஜோடியிடம் கூட தான் யாரென்று வாயால் சொல்லாமல் 'நான் ஒரு போலீஸ்தான்' என்று ஒரு சிறு தலையசைவில் துப்பாக்கி கொண்டு ஜாடையில் காட்டுவான். தகிடுதத்தக்காரன். ஆனால் நல்லவைகள் நடக்க மட்டுமே. சூதுவாதுகளை அவை கொண்டே வெல்வான்.
சகோதரன் என்று தெரியாமல் அவனுடன் துள்ளித் துள்ளி கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ஸ்கார்ப் அழகாக காற்றில் பறக்க, இவன் மோதும் போது கடல் அலைகளைவிட ஆர்ப்பாட்ட சப்தம் அரங்கங்களில் எழும். 'ராஜா.... ராஜா இல்ல' என்று அங்கேயும் மாறி மாறி உதைபட்டு பின் உடன்பிறந்தவனை உதைப்பான். உணர்ந்ததும் உற்சாகம் கொள்வான்.
வில்லனிடம் இவனும், இவன் கூட்டணியும் அரைமணி நேரத்திற்கு செய்யும் அட்டகாச கிளைமாக்ஸ் போர் 'குருஷேத்திரப் போர்' போன்று மகா தந்திரங்கள் நிறைந்தது. மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொண்டு பார்த்தால்தான் இவனுடைய தந்திர வளையங்கள், பின்னல்கள் புரியும். கண்களை நீங்கள் இமைக்கக் கூடாது. இமைத்தால் அவன் செய்யும் ஜாலங்களைக் காணக் கொடுத்து வைக்காத பாவியாகி விடுவீர்கள்.
தன் தாயைக் கொடுமைப்படுத்தும் போது தானும், தன் சகாக்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் பாவனை காட்டி உள்ளுக்குள் அழுவான். அந்த சிரிப்பழுகையில் எல்லோர் மனதிலும் அவனைப் பற்றிய வெறி விதை விதைப்பான். தாயைத் துன்புறுத்தியவனை அதே முறையில் துன்புறுத்தி இன்புறுவான்.
அவன் கிருதா இருக்கிறதே! சும்மா நாயக்கர் மஹால் தூண் மாதிரி! அப்படியே இமயமலையை கயிறு கொண்டு ஏறுவது போல் பிடித்து ஏறலாம். மலை கோணல். இவன் கிருதா இவனைப் போலவே நேரான நேர்மை. பிரம்மன் இவன் உடலை உளி கொண்டு செதுக்கி செதுக்கி பார்த்து பார்த்து படைத்து இவன் ஒருவனைத்தான் நாம் உருப்படியாகப் படைத்திருக்கிறோம் என்று இறுமாருவானாம். அவனின் இந்த அற்புதப் படைப்பை அவனே வியந்து வியந்து பார்த்து மீண்டும் வியப்பானாம்.
இவன் மனங்களை மட்டுமா கொள்ளையடித்தான்? பணங்களையும் கொள்ளையடித்தான். ஆம்! வசூலிலும் இவன் எவருமே நெருங்க முடியாத 'ராஜா'தான். பாரடைஸ் இன்னும் சொர்க்கபுரியானது. இவன் அழகு உருவத்தைப் பார்ப்பதற்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது.
இவனை எதிர்த்த கூட்டம் கூட இவன் ஸ்டைலில், அழகில் மயங்கி இவனை ஒளிந்து ஒளிந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தது.
இவனுக்கு அழிவு என்பதே இல்லை. எதிரிகளை கண்ணாடி பார்த்து அழ வைப்பதே இவனுக்கு தொழில். இவன் அடியொற்றித்தான் எவனுமே பயணிக்க வேண்டும். இவன் செய்யாதது என்று உலகில் ஒன்றுமே இல்லை. உலக அசைவுகள் அத்தனையையும் நிறுத்தியவன் சிவன். அவனையே அசையாது நிறுத்தும் சக்தி படைத்தவன் இவன்.
அவன்தான் எங்கள்
எவர்க்ரீன் 'ராஜா'.
எங்கள் இதய 'ராஜா' மீண்டும் சேலத்தில். சந்தோஷம் 'கல்யாணப் பொண்ணு' போல கரை புரண்டு ஓடுகிறது மனதில். சேலம் செய்த புண்ணியத்தை நாளை முழுமையாக அனுபவிக்கப் போகிறது.
தன்னுடைய குணங்களால் மனதைக் கொள்ளை கொண்ட நம் ஸ்டைல் ராஜாவின் ஆட்சி நாளை சேலத்தில். சேலம் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
('ராஜ' சேவை தொடரும்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th October 2017, 12:54 AM
#1315
Senior Member
Devoted Hubber
Jayasankar Jai\
குலமா குணமா!
இத்திரைப்படம் திரு கே எஸ் கோபால
கிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில்
வெளி வந்த வெற்றி திரைப்படம்.
சிவாஜியின் இனையாக பத்மினி...
சிவாஜியின் தம்பியாக ஜெய் சங்கரும்
அவரின் மனைவியாக வாணிஸ்ரீயும்
வானிஸ்ரீயின் தந்தையாக நம்பியாரும்
நடித்த படம். வில்லன் நம்பியார் சிவாஜி
குடும்பத்தின் மொத்த சொத்தும் தன்
மகள் மற்றும் மருமகனுக்கே கிடைக்க
வேண்டும் என மகளுக்கே தெரியாமல்
சில தில்லுமுல்லுகள் செய்து பாகப்பிரிவினைக்கு ஏற்பாடு செய்து
விடுவார்.
சிவாஜி வீட்டில் இருக்கும் ஆபரணங்கள்
பாத்திரங்கள் நகை நட்டுக்கள் சொத்து
பத்திரங்கள் என அனைத்தும் வீட்டின்
பெரிய ஹாலில் கொண்டு வந்து
வைக்கப்படும்.கிராம முக்கியஸ்தர்கள்
மற்றும் உறவினர்கள் கூடியிருக்க
எல்லாத்தையும் இரண்டாக பிரிக்கலாங்களா
என அவர்கள் கேட்க சிவாஜி எல்லாரும்
வந்தாச்சா என கேட்பார்.அவர்களும் ஆமாம்
என்பார்கள்.சொத்தை பிரிச்சாச்சு இரண்டுல
இது வேணுமோ எடுத்துக்க சொல்லுங்க
என்று சொல்லிவிட்டு ஒரு நாற்காலியில்
கம்பீரமாக அமர்ந்துவிடுவார் இறுக்கமான
முகத்துடன்.
யாருக்கும் ஒன்றும் புரியாது.ஏன் படம்
பார்க்கும் நமக்கும் ஒன்றும் புரியாது.
கிராம மக்கள் இன்னும் எதையும்
பிரிக்கிலிங்களே அப்புறம் எப்படி
இரண்டுல ஒன்னு எடுத்துக்க சொல்றீங்க
என்று கேட்பார்கள். அதுக்கு சிவாஜி
எல்லாம் பிரிச்சாச்சி புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என
கூறுவார்.பத்மினி ஜெய்சங்கர் ஊர்மக்கள்
அனைவரும் ஏதும் புரியாமல் முடித்து
கொண்டிருப்பார்கள்.நமது அண்ணலோ
இறுக்கமான முகத்துடன் கண்களை உருட்டி
தன் தம்பி எதை எடுக்கப்போகிறான்
என்று தவிப்புடன் இருப்பார் அவனுக்கு
புரிந்ததோ இல்லையோ என்று.
இந்த நேரத்தில் வாணிஸ்ரீ ஜெய்சங்கரை
அழைத்து உங்க உங்களுக்கு நிஜமாகவே
புரியலயா என கேட்ப்பார்.அவர் புரிய வில்லை என்று சொல்ல அதற்க்கு
வாணிஸ்ரீ நல்லா கவனிங்க ஒருபக்கம்
உங்க குடும்பத்தோடு எல்லா சொத்தும்
இருக்கு.
இன்னொரு பக்கம் உங்க அண்ணன்
உக்காந்திருக்காரு
அதனால உங்களுக்க் சொத்து வேணுமா
இல்ல அண்ணன் வேணுமான்னு
கேக்கிறாரு புரியுதா.
போங்க எமக்கு அண்ணன் தான்
வேணுமுன்னு அவர் கால்ல போய்
விழுங்க என்று சொல்வார்.
அதுக்கப்புறம் கேக்கனுமா
உணர்ச்சி மயமான காட்சிக்கு
வசனம் அதிகம் பேசாமலே உம்மென்று
அமர்ந்திருந்தே அப்ளாஸ் வாங்கி விடுவார்
நமது நடிகர் திலகம்.இந்த படத்திலே
எமக்கு மிகவும் பிடித்த காட்சி இது.
என் வயது ரசிக நண்பர்கள் கண்டிப்பாக
பார்த்திருப்பார்கள் இந்த படத்தை.
See more
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th October 2017, 12:55 AM
#1316
Senior Member
Devoted Hubber
Aathavan Ravi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th October 2017, 01:12 AM
#1317
Senior Member
Devoted Hubber
Sekar Parasuram
Vaannila Vijayakumaran
கர்ணன் - THE ORIGINAL
அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் ந...டத்தப்பட்டது.
வீட்டுக்குப் பின்புறம் ஒரரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது.விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழைப் பிடித்துக்கொண்டது.
அக்கம் பக்ககத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்பும் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
*****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....
....................
கொடை கொடுத்தும் கஞ்சன் என பெயர் வாங்கியவர்
சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2017, 03:46 AM
#1318
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2017, 03:48 AM
#1319
Senior Member
Devoted Hubber
Lakshmankumar Rajunaidu
1965ல் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் முத்திரை பதித்த திருவிளையாடல் படம் வெளிவந்த போது கல்கி பத்திரிகை விமர்சனம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th October 2017, 03:53 AM
#1320
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks