-
17th April 2018, 11:02 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
16/4/18 மாலை மலர்

நாடோடி மன்னன் படம் பல சாதனைகள் செய்த படம். 1958- வருசத்தில் அதிக தியேட்டர்களில் 100 நாள் ஓடி அதிக வசூல் செஞ்ச படம்.
சேலத்திலே நியூ சினிமா தியேட்டரிலே 160 நாள் ஓடியது. அப்புறம் சித்தேச்வரா தியேட்டரிலே 200 நாள் தாண்டி ஓடியது. ஷிப்டிங்கில் ஓடினதால் நாங்கள் அந்தப் படத்தை வெள்ளி விழா லிஸ்டிலே சேர்த்துக் கொள்வது இல்ைல. இதே மாதிரி பல படங்கள் ரிக்சாக்காரன் உள்பட பல படங்கள் ஷிப்டிங்கில் 200 நாள் தாண்டி ஓடியதால் நாங்கள் அந்த படங்கள வெள்ளி விழா லிஸ்டிங்கில் சேர்க்கவில்லை.
நாடோடி மன்னன் படம் மறுவெளியீட்டில் திருவண்ணாமலையில் ஸ் ரீ கிருஷ்ணா தியேட்டரில் தினமும் 3 காட்சியாக 100 நாள் ஓடி சாதன படைத்தது. அதுக்காக புரட்ச்சித் தலைவர் வந்து விழா நடந்து தியேட்டருக்கு கேடயம் கொடுத்தார். இந்த உண்மைகள் எல்லாம் ஏற்கனேவே மக்கள் திலகம் திரியில் பதிவு போட்டுள்ளது.
இப்பவும் நாடோடி மன்னன் படம் பல ஊர்களில் மறுவெளியீட்டில் நன்றாக வசூல் செய்கிறது. சென்னயில் ஆல்பட் தியேட்டரில் 25 நாளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது. சில ஊர்களில் 1 லச்ச ரூபாயை தாண்டி வசூல் ஆகி உள்ளது.
ஆல்பட் தியேட்டரில் போன சனி ஞாயிறு கிழமை கூட தியட்டர் நிறைஞ்சது என்று நண்பர் லோகநாதன் பதிவு போட்டுள்ளார்.
இந்த சாதனை எல்லாம் யாரும் இல்லை என்று சாெல்ல முடியாது.
ஆனால், மேல உள்ள பேப்பரில் வந்திருக்கும் செய்தியில் நாடோடி மன்னன் படம் தயாரிப்பு செலவு 1 கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் அப்பவே 11 கோடி வசூல் செய்தது என்றும் உள்ளது.
இது தப்பான தகவல். நாடோடி மன்னன் படம் தயாரிப்பு செலவு அந்தக் காலத்திலே 1கோடி ரூபாய் இருக்காது. அதோடு நிச்சியம் படம் 11 கோடி ரூபாய் அதுலயும் அந்தக் காலத்திலே வசூலிக்கவில்லை. வசூலிக்கவும் முடியாது.
11 கோடி வசூல் செய்தது என்று மேலே உள்ள பேப்பரில் வந்திருப்பது தப்பான செய்தி. பேப்பர்காரன் தப்பாக போட்டிருக்கிறான். புரட்சித்தலைவர் படத்திலேேயே அதிகமாக வசூல் செஞ்ச படம் உலகம் சுற்றும் வாலிபன் படம்தான். 6 மாதத்தில் அரசுக்கு வரியாக 60 லட்சம் சம்பாதித்துக் கொடுத்தது என்று அந்தக் காலத்திலேயே பேப்பரில் விநியோகஸ்தர் சார்பில் விளம்பரம் வந்தது. அதயும் மக்கள் திலகம் திரியில் போட்டிருக்கோம்.
மறுபடியும் தயிரியமாக சொல்கிறோம். உண்மய சொல்வதில் எங்களுக்கு தயக்கம் கிடையாது.
நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் செய்யவில்லை. மேல பேப்பரில் வந்த செய்தி தப்பு.
நேர்மை, ஞாயம் எல்லாம் நாங்கள் தம்பட்டம் அடிக்கிறது மட்டும் இல்லை. அதேப் போல நேர்மை ஞாயப்படி நடப்போம். தப்பு தகவல் வந்தால் நாங்களே திருத்திப்போம். எங்களுக்கு யாரும் பாடம் கத்து தர வேண்டாம்.
ஆனால், எங்களை கேள்வி கேட்பவர்கள் ஞாயமா நடக்கிறார்களா.. கேட்டால் ஆதாரபூர்வமாய் விளக்கம் அளிக்கப்படும்.
ஞாயத்தை உண்மையை எடுத்துச் சொன்னால் கண்டுக்காத மாதிரி ஒளியமாட்டோம்.
சத்தியவான் புரட்சித் தலைவர் வாழ்க.
சத்தியவான் தொண்டர்கள் புரட்ச்சித் தலைவர் பக்தர்கள் வாழ்க.
-
17th April 2018 11:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks