Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர் பாசம்
    ஆன்மீக அரசியலா? ஏமாற்று அரசியலா?
    அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நடிகர்கள் விதிவிலக்கல்ல.
    ஆனால், இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்களை பார்த்து சிவாஜியே ஜெயிக்கமுடியவில்லை என்று கூறுவதுதான் பேஷன் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி நடிகர்திலகத்தோடு, பாக்யராஜையும், ராஜேந்தரையும் கூட ஒப்பிடுகிறார்கள். சிவாஜி திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி சுயம்புவாக வளர்ந்தவர்.
    அரசியலைப் பொறுத்தவரை பெரியாரோடு, அண்ணாவோடு பழகி அரசியல் செய்தவர். மாற்றுக்கட்சிக்கு சென்றபோது அண்ணாவால் தம்பி எங்கிருந்தாலும் வாழ்க என்று பாராட்டப்பட்ட நடிகர்திலகம், பெருந்தலைவர் காமராஜரைப் பின்தொடர்ந்து, எதிர்பார்ப்பில்லாமல், இறுதிவரை காமராஜர் புகழ் பாடி மறைந்தார்.
    நடிகர்திலகம் தனிக்கட்சி கண்டது, தான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்தான். 1989 தேர்தலில் தோற்றதும் கூட எம்.ஜி.ஆரின் மனைவி ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காகத்தான். அந்தத் தேர்தலில் தோற்றது சிவாஜி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் மனைவியும்தான். அதன்பிறகு தமிழக ஜனதா தளத்தின் தலைவராகவும் மதிப்புடனேயே திகழ்ந்தார் நடிகர்திலகம்.
    திரையில் நடித்த தமக்கு அரசியல் மேடையில் நடிக்கமுடியாது என்பதற்காக, தானாகத்தான் விலகினாரே ஒழிய மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை.
    தூய்மையான, நேர்மையான அரசியலைத் தரவேண்டும், மக்கள் மத்தியில் நடிக்கக்கூடாது என்று, நடிப்புத் துறையில் சம்பாதித்த பணத்தை வெள்ளம், புயல் என்று மக்கள் துயருக்கும், சீனா, பாகிஸ்தான் என்று போர் வந்தபோதெல்லாம் இந்திய நாட்டிற்கும் விளம்பரமில்லாமல் வாரி வழங்கிய நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும், ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொண்டவர்களை வள்ளல் என்றும் கூறிய இந்த பித்தலாட்ட அரசியல் பிடிக்காமல்தான் நடிகர்திலகம் சிவாஜி அரசியலைவிட்டே ஒதுங்கினார்.
    ஆனால், எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால், அவர் பெயரைச் சொன்னால்தான் அரசியலில் உயரமுடியும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
    இறுதிக் காலத்தில்கூட சாவும், நோவும்தான் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் காப்பாற்றியது என்பது பலருக்குத் தெரிந்திருந்தும் சொல்லுவதில்லை. இல்லையென்றால், எம்.ஜி.ஆரும் இறுதியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருப்பார்.
    அ.தி.மு.க கட்சியைக் கைப்பற்றுவதற்காக எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்த ஜெயலலிதாகூட அதன் பின்னர், தன்னுடைய ஆட்சி, அம்மா ஆட்சி என்றுதான் சொன்னாரே தவிர எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்லவில்லை.
    எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி தொடங்கிய லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் காணாமல் போனார். எம்.ஜி.ஆராலேயே தன் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜ். எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி ஆரம்பித்து காணாமல் போனார். கடைசியில் வந்த கருப்பு எம்.ஜி.ஆரின் கதிதான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுமாதிரி எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் வளர்ந்ததாக வரலாறு இல்லை.
    அந்த வரிசையில் இன்று ரஜினிகாந்தும் சேர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை வராத எம்.ஜி.ஆர் பாசம் கட்சி ஆரம்பிக்கப் போகும்போது வந்திருக்கிறது. தான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்ட ரஜினி, சாமர்த்தியமாக அரசியலில் தனக்கு எம்.ஜி.ஆர் வழிகாட்டி என்று கூறிக்கொள்கிறார். இதே எம்.ஜி.ஆரால் ஒரு கட்டத்தில் விரட்டி விரட்டி பழிவாங்கப்பட்டபோது நடிகர்திலகம்தான் பலநேரங்களில் காப்பாற்றினார் என்பது ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும். இதனையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து அரசியல் மேடையிலும் பேசி நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
    31 ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பதுபற்றி சொல்வதாக சொன்னாராம், ஆனால் 28 ஆம் தேதியே ஒன்றும் தெரியாத சின்ன பையனான ஒரு நிருபர் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டபோது, என்ன இப்படி எல்லாம் ஒன்றும் தெரியாமல் இருக்கிறானே என்று தனக்கு தலை சுற்றியதாம். அதற்கு ஒரு கதை வேறு. அதாவது, 31 ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பதாக கூறுபவர்கள் கட்சி ஆரம்பித்த பிறகுதான் என்ன கொள்கை என்பதை பற்றி யோசிப்பார்கள் போலிருக்கிறது. எல்லாவற்றிற்கும் கொந்தளிக்கும் பத்திரிகையாளர்கள், கேள்விகேட்ட நிருபரை கேவலமாக ரஜினிகாந்த் பேசியதற்கு மெளனமாக இருப்பது ஏனோ?
    சரி, அப்படி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் என்று கூறும் அளவுக்கு எம்.ஜி.ஆர் தூய்மையான ஆட்சியைத் தந்தாரா என்றால் அதுவும் கேள்விக்குறியே? சாராயக் கடையைத் திறக்கமாட்டேன் என்று தாய்க்குலத்தின் மீது சத்தியம் செய்து வாக்குகளைப் பெற்ற எம்.ஜி.ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் தன்னுடன் இருப்பவர்களுக்கு சாராய ஆலை உரிமையை அளித்து தெருவெங்கும் சாராயக் கடைகளைத் திறந்தார். சாராய ஆலை அதிபர்களை, கல்வி வள்ளல்களாக ஆக்கி அழகுபார்த்தார். இறுதியில் அவருடைய அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.எஸ்ஸே, எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் அளித்தார்.
    ஆனால், இதையெல்லாம் தெரிந்த நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் வெளியில் சொல்லுவதில்லை.
    இப்போது சொல்லுங்கள், ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர். பாசம், ஆன்மீக அரசியலா? ஏமாற்று அரசியலா?
    ---------------------------------------------------------------------------------------------------------------

    ---------------------------------------------------------------------------------------------------------------
    .











    courtesy sivaji peravai f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •