-
22nd April 2018, 11:26 PM
#2231
Senior Member
Devoted Hubber
நினைவுகள்
சிறுவயதில் நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை பார்த்து வளர்க்கப்பட்டதல்ல எங்கள் குடும்பம்.நான் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன்.மின்சாரஒளி விளக்குகளை கொண்டிராத பெரும்பாலான வீடுகள் அடங்கியது நான் வசித்த கிராமம்.1970 கால கட்டம் அது.நானும் நிலாச்சோறு ஊட்டி வளர்க்கப்பட்டவன் தான்.நிலாவில் கூட நடிகர்திலகம் தெரிவாரா என்று நான் யோசித்த நினைவுகள் இன்றும் வந்துபோவதுண்டு. நடிகர்திலகத்தின் படங்கள் அடிக்கடி டூரிங் தியேட்டர்களில்
ஓடிக்கொண்டிருக்கும்.அன்று காலையில் தெருக்களில் நடிகர்திலகத்தின் பட போஸ்டர் பார்த்தால் மாலை அந்த திரைப்படம் பார்ப்பதுதான் தான்
எங்களது தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.அதில் எந்த மாற்றமும்
ஏமாற்றமும் நான் அனுபவித்ததில்லைஇந்த சூழ்நிலைகளில் வளர்ந்து வந்தவன் நான்.
கால சுழற்சி.
1986 ஆம் வருடம்.10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
எப்பொழுதும் போல் 4மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன்.நடிகர்திலகம் நம் ஊருக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் காதினில் வந்து விழுந்தது.நம்ப மறுத்தது மனம்.அவர் எதற்கு இந்த ஊருக்கு வருகிறார்.வீடு வந்து சேர்ந்தேன்.
காலடி எடுத்து வைப்பதற்குள் அம்மாவிடம் இருந்து பதில்.
"சிவாஜி வந்திருக்கிறார்.சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது."
எங்கே? என்று கேட்டேன்.
அடுத்த நிமிடம் புயலென விரைந்தேன்.ஷூட்டிங் நடந்த இடம் நோக்கி.ஸ்கூல் யூனிபார்மிலேயே ஓடிக் கொண்டிருந்தேன்.மனம் எண்ணியது.
வந்திருப்பது...
கர்ணனா
கட்டபொம்மனா
கப்பலோட்டிய தமிழனா
spசௌத்ரீயா
பாரிஸ்டர் ரஜினிகாந்தா
பிரெஸ்டீஜ் பத்மநாபனா
ஒவ்வொரு வேடமும் மனத்திரையில் காட்சிகளாய் ஓடின.
சூட்டிங் இடம் வந்தது.கும்பலாய் ஜனங்கள்.எட்டி எட்டி பார்த்தேன்.எதுவும் தெரியவில்லை. ஏதேதோ சத்தங்கள்.ஜனக்கூட்டத்திற்குள் நுழைந்து காமிரா வைத்த இடத்திற்கு அருகில் சென்று விட்டேன். ஐந்து அல்லது ஆறு அடிகள் இருக்கும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!என் கண்களில் தெரியும் உருவம் நிஜம்தானா.?அவர்தானா? ஆகா அவரேதான்.அந்த உண்மையை உணரவே பல நிமிடங்கள் ஆயிற்று.உடமபில் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கும் அந்த தெய்வமகன் என் எதிரில்.சதா சர்வ காலமும் யாரை நினைத்து உருகிக் கொண்டிருந்தோமோ அவர் என் எதிரில்.
வெள்ளை வேட்டி.பிரௌன் கலர் கோடு போட்ட சட்டை.செக்கச் செவேலென்ற முகம்.சுருட்டை முடி.அடர்த்தியான நுனி முறுக்கிய மீசை.மேல் பட்டன்கள் அணியாமல் அணிந்த சட்டை.அதனால் தெரிந்த மார்பு.எவரும் எதிர்த்து பேச அஞ்சும் விழிகள்.
நடிகர்திலகம்
கலையுலகச்சக்கரவர்த்தி
தெய்வப்பிறவி
எங்கள்
சிவாஜிகணேசன்.
அவர் முகம் தவிர்த்து எதையும் பார்காமல் நான்.
ஷுட்டிங் தொடங்குகிறது.
வீகே ஆர் சில துணை நடிகர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சியின் படப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.காட்சி அமைப்பின்படி நடிகர்திலகம் வீகேஆருடன் பேசிக்கொண்டிருக்க, அப்போது இடையில் வந்து வேலையாள் வேடத்தை தாங்கிய நடிகர் ஒருவர் ஒரு செய்தியை நடிகர்திலகத்திடம் சொல்வதாக அமைக்கப்பெற்ற காட்சி.டைரக்டர் ஸ்டார்ட் சொல்ல காமிரா பதிவு தொடங்குகிறது.அதுவரை சாதாரணமாக மௌனமாக நின்று கொண்டிருந்த நடிகர்திலகம் ஸ்டார்ட் என்று சொன்னவுடன் மாறிய விதம் பார்த்து ஊரே அசந்துவிட்டனர்.நெஞ்சை நிமிர்த்தி பார்வையை கூர்மையாக்கி குரல் ஒலித்த கம்பீரத்தில் மொத்த கூட்டமும் நிசப்தமாகிப்போனது.
வேலையாளாக நடித்த நடிகர் செய்தியைசொல்லிவிட்டு சட்டென்று சென்று விட்டார். ஷாட் முடிந்தபின்பு நடிகர்திலகம் அவரையழைத்து"சொல்லிட்டு நீ பாட்டுக்குநகர்ந்து போயிர்றதா.அதுல என்ன எதார்த்தம் இருக்கு. காட்சியில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாலும் நீ வந்துசெல்லும் காட்சி ஒரு நெருடலாய் இருக்காதா.அடுத்த ஷாட்ல இப்படிச் செய்யாதே" என்றுசொல்லி அந்த ஷாட் அந்த மேற்சொன்ன தவறு வராமல் மீண்டும் சரியாக எடுக்கப்பட்டது.
சிவாஜின்னா சிவாஜிதான்.
தொழில்பக்தின்றது இதுதான்.
சிவாஜி படசீன்ஸ் எல்லாம் பின்னுதுன்னா இதுதான் காரணம்.
இவை ஜனக்கூட்டத்தில் இருந்து வந்து விழுந்த கருத்துக்கள்.
வாழ்நாளின் சிறப்பு மிக்க நாளாக அந்த நாள் அமைந்து விட்டது.
தொடர்ச்சியாக பல காட்சிகள் எங்களூரில் படமாக்கப்பட்டது.ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்று.
படம்:வீரபாண்டியன்.
மேலும் சில....
அதற்கு முன்னர்1980 கால வாக்கில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரத்திற்காக பேசியதை கேட்டிருக்கிறேன்.அந்த நாளுக்கு முன்பாக சூளூரில் நடைபெற்ற பொதுக்கூடட் த்தில் பேசியபோது எவனோ ஒருவன் இரும்பு போல்ட் ஒன்றை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.தலைக்கு கட்டு போட்டு பிங்க் கலர் பைஜாமா வேட்டியில் அவர் பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது."நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் "என்று கம்பீரமாக பேசியதை தான் மறக்க முடியுமா?
பின் 1988 ஆம் வருடம் தமிழக முன்னேற்ற முண்ணனி யின் பிரச்சாரத்திற்காக வந்த தலைவர் வேனை நிறுத்தி நாங்கள் எங்கள் ஊர் ஜமீன் ஊத்துக்குளியில் வைத்த கொடி கம்பத்தில் கொடியெற்ற வைத்து மாலைகளும் சால்வைகளும் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம்.அந்த போட்டோவை ஏற்கெனவே நான் பதிவிட்டுள்ளேன்.ஒரு சிறிய கிராமமான ஜமீன் ஊத்துக்குளியில் நாங்கள் வைத்த 60 அடி கொடிகம்பம்தான் பொள்ளாச்சி நகரில் வைக்கப்பட்ட மிகப்பெரிய கொடி கம்பம் அப்போது.அந்த முயற்சி என் அண்ணன் சிவாஜி வெற்றிவேல் அவர்களின் தனிப்பட்ட முயற்சி.
பின் தேவர்மகன்,பசும்பொன் ஷுட்டிங்கில் அவருடன் கலந்து உரையாடியது பசுமையிலும் பசுமையான நினைவுகள்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக தஞ்சையில் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்த போது சூரக்கோட்டை பண்ணை வீட்டில் ஐந்து அடி தூரத்தில் வைத்து அவரை மட்டும் தனியாக ஒரு பிலிம்ரோல் முழுவதும் பிளாஷ் அடித்து 36 போட்டோக்கள் எடுத்தேன்.அவர் ஏதாவது சொல்வார் என்று பார்த்தேன்.என் ஆர்வம் அவரின் பார்வையில் தெரிந்தது..
சந்தோசமாக எல்லோரையும் அனுப்பி வைத்தார்.
courtesy senthilvel f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd April 2018 11:26 PM
# ADS
Circuit advertisement
-
22nd April 2018, 11:28 PM
#2232
Senior Member
Devoted Hubber
Athavan ravi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th April 2018, 07:36 AM
#2233
Senior Member
Seasoned Hubber
Last edited by RAGHAVENDRA; 24th April 2018 at 07:54 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th April 2018, 06:35 AM
#2234
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th April 2018, 06:37 AM
#2235
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
sivaa thanked for this post
-
25th April 2018, 07:57 AM
#2236
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th April 2018, 08:16 AM
#2237
Senior Member
Devoted Hubber
ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர் பாசம்
ஆன்மீக அரசியலா? ஏமாற்று அரசியலா?
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நடிகர்கள் விதிவிலக்கல்ல.
ஆனால், இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்களை பார்த்து சிவாஜியே ஜெயிக்கமுடியவில்லை என்று கூறுவதுதான் பேஷன் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி நடிகர்திலகத்தோடு, பாக்யராஜையும், ராஜேந்தரையும் கூட ஒப்பிடுகிறார்கள். சிவாஜி திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி சுயம்புவாக வளர்ந்தவர்.
அரசியலைப் பொறுத்தவரை பெரியாரோடு, அண்ணாவோடு பழகி அரசியல் செய்தவர். மாற்றுக்கட்சிக்கு சென்றபோது அண்ணாவால் தம்பி எங்கிருந்தாலும் வாழ்க என்று பாராட்டப்பட்ட நடிகர்திலகம், பெருந்தலைவர் காமராஜரைப் பின்தொடர்ந்து, எதிர்பார்ப்பில்லாமல், இறுதிவரை காமராஜர் புகழ் பாடி மறைந்தார்.
நடிகர்திலகம் தனிக்கட்சி கண்டது, தான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்தான். 1989 தேர்தலில் தோற்றதும் கூட எம்.ஜி.ஆரின் மனைவி ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காகத்தான். அந்தத் தேர்தலில் தோற்றது சிவாஜி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் மனைவியும்தான். அதன்பிறகு தமிழக ஜனதா தளத்தின் தலைவராகவும் மதிப்புடனேயே திகழ்ந்தார் நடிகர்திலகம்.
திரையில் நடித்த தமக்கு அரசியல் மேடையில் நடிக்கமுடியாது என்பதற்காக, தானாகத்தான் விலகினாரே ஒழிய மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை.
தூய்மையான, நேர்மையான அரசியலைத் தரவேண்டும், மக்கள் மத்தியில் நடிக்கக்கூடாது என்று, நடிப்புத் துறையில் சம்பாதித்த பணத்தை வெள்ளம், புயல் என்று மக்கள் துயருக்கும், சீனா, பாகிஸ்தான் என்று போர் வந்தபோதெல்லாம் இந்திய நாட்டிற்கும் விளம்பரமில்லாமல் வாரி வழங்கிய நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும், ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொண்டவர்களை வள்ளல் என்றும் கூறிய இந்த பித்தலாட்ட அரசியல் பிடிக்காமல்தான் நடிகர்திலகம் சிவாஜி அரசியலைவிட்டே ஒதுங்கினார்.
ஆனால், எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால், அவர் பெயரைச் சொன்னால்தான் அரசியலில் உயரமுடியும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
இறுதிக் காலத்தில்கூட சாவும், நோவும்தான் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் காப்பாற்றியது என்பது பலருக்குத் தெரிந்திருந்தும் சொல்லுவதில்லை. இல்லையென்றால், எம்.ஜி.ஆரும் இறுதியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருப்பார்.
அ.தி.மு.க கட்சியைக் கைப்பற்றுவதற்காக எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்த ஜெயலலிதாகூட அதன் பின்னர், தன்னுடைய ஆட்சி, அம்மா ஆட்சி என்றுதான் சொன்னாரே தவிர எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்லவில்லை.
எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி தொடங்கிய லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் காணாமல் போனார். எம்.ஜி.ஆராலேயே தன் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜ். எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி ஆரம்பித்து காணாமல் போனார். கடைசியில் வந்த கருப்பு எம்.ஜி.ஆரின் கதிதான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுமாதிரி எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் வளர்ந்ததாக வரலாறு இல்லை.
அந்த வரிசையில் இன்று ரஜினிகாந்தும் சேர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை வராத எம்.ஜி.ஆர் பாசம் கட்சி ஆரம்பிக்கப் போகும்போது வந்திருக்கிறது. தான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்ட ரஜினி, சாமர்த்தியமாக அரசியலில் தனக்கு எம்.ஜி.ஆர் வழிகாட்டி என்று கூறிக்கொள்கிறார். இதே எம்.ஜி.ஆரால் ஒரு கட்டத்தில் விரட்டி விரட்டி பழிவாங்கப்பட்டபோது நடிகர்திலகம்தான் பலநேரங்களில் காப்பாற்றினார் என்பது ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும். இதனையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து அரசியல் மேடையிலும் பேசி நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
31 ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பதுபற்றி சொல்வதாக சொன்னாராம், ஆனால் 28 ஆம் தேதியே ஒன்றும் தெரியாத சின்ன பையனான ஒரு நிருபர் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டபோது, என்ன இப்படி எல்லாம் ஒன்றும் தெரியாமல் இருக்கிறானே என்று தனக்கு தலை சுற்றியதாம். அதற்கு ஒரு கதை வேறு. அதாவது, 31 ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பதாக கூறுபவர்கள் கட்சி ஆரம்பித்த பிறகுதான் என்ன கொள்கை என்பதை பற்றி யோசிப்பார்கள் போலிருக்கிறது. எல்லாவற்றிற்கும் கொந்தளிக்கும் பத்திரிகையாளர்கள், கேள்விகேட்ட நிருபரை கேவலமாக ரஜினிகாந்த் பேசியதற்கு மெளனமாக இருப்பது ஏனோ?
சரி, அப்படி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் என்று கூறும் அளவுக்கு எம்.ஜி.ஆர் தூய்மையான ஆட்சியைத் தந்தாரா என்றால் அதுவும் கேள்விக்குறியே? சாராயக் கடையைத் திறக்கமாட்டேன் என்று தாய்க்குலத்தின் மீது சத்தியம் செய்து வாக்குகளைப் பெற்ற எம்.ஜி.ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் தன்னுடன் இருப்பவர்களுக்கு சாராய ஆலை உரிமையை அளித்து தெருவெங்கும் சாராயக் கடைகளைத் திறந்தார். சாராய ஆலை அதிபர்களை, கல்வி வள்ளல்களாக ஆக்கி அழகுபார்த்தார். இறுதியில் அவருடைய அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.எஸ்ஸே, எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் அளித்தார்.
ஆனால், இதையெல்லாம் தெரிந்த நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் வெளியில் சொல்லுவதில்லை.
இப்போது சொல்லுங்கள், ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர். பாசம், ஆன்மீக அரசியலா? ஏமாற்று அரசியலா?
---------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------
.
courtesy sivaji peravai f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th April 2018, 08:35 AM
#2238
Senior Member
Devoted Hubber
கூண்டுக்கிளி கூண்டுக்கிளி ....இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கும் போது ஒரு ஈகோ வரும் .. வில்லன் வேடம் யார் ஏற்று நடிப்பது என்று .. துளியும் இமேஜ் பார்க்காமல் நம் தலைவர் வில்லன் வேடம் ஏற்று நடித்தார் ..
courtesy ganesh vengatraman f book
.................................................
பின்நூட்டம்
உண்மையிலேயே இந்த படத்தில் நம்மவர் கதாபாத்திரம் எமஜிஆருக்கும் எம்ஜிஆரின் கதா பாத்திரம் நம்மவருக்குத் தான். படம் சுமார் ஏழாயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் எம்ஜிஆர் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நான் நடித்தால் என் இமேஜ் போய் விடும் எனவே தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்று சொல்ல தலையில் இடி விழுந்தது போலானார் டிஆர் ராமண்ணா. படம் தொடரவில்லை என்றால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமடைய நேரிடும் என்பதை உணர்ந்த ராமண்ணா நம்மவரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு சரணடைந்தார். நம்மவர் எதற்கும் தயாரானவர் தானே. கதாபாத்திரங்களை மாற்றி நடிக்க ஒப்புக் கொண்டார் நம்மவர். வில்லன் கதாநாயகனாகவும் கதாநாயகன் வில்லனாகவும் மாறிய உண்மை கதை இது. நன்றி
.................................................. .................
நம்மவர் எதற்கும் துணிந்தவர்.உதவி செய்ய முடியாத சூழ்நிலையிலும் செய்ய முடியாதவர்க்கும் செய்தவர்.விளம்பரம் செய்யாதவர்.உண்மையான பாசம் அன்பு நேர்மைக்கு கட்டுப்பட்டவர்.எதிரியாக யாரையும் எண்ணாதவர்.பழிவாங்கதெரியாதவர்.பழி போடத்தெரியாதவர்.சூழ்ச்சி பண்ண தெரியாதவர்.உழைப்பை திறமையை வைத்து முன்னேறியவர்.அந்தநாள் ரங்கோன் ராதா மங்கையர்திலகம் போன்ற பலபடங்களில் வில்லன் வேடத்தை ஏற்றுஇமேஜ் பற்றி கவலைப்படாமல் நடித்தவர் இன்னும்சிலபடங்கள்.பிற்காலத்தில் திருடன் நீதி ராஜா எங்கிருந்தோ வந்தாள்.பிறகு இளம் கதாநாயகர்களை வளரவைக்க ஜெனரல் சக்ரவர்த்தி இமயம் தீபம் அந்தக்காலத்தில் நெஞ்சிருக்கும் வரை மூன்று தெய்வங்கள்.முத்துராமனுடன் நடித்த பலபடங்கள் இவரது கதாபாத்திரம் குறைவான பலத்துடன் இருந்தாலும் இவரது நடிப்பால் அது முன்னால் நிற்கும்.நாகேஷ் ரங்காராவ் நம்பியார் எம்.ஆர்.ராதா டி.எஸ்.பாலையா கே.டி.சந்தானம் தங்கவேலு சந்திரபாபு பத்மினி சாவித்திரி சரோஜாதேவி தேவிகா சௌகார் கே.ஆர்.விஜயா வாணிஸ்ரீ என பலருடன் பல படங்களில் கதைப்படி அவர்கள் கதாபாத்திரம் நல்ல பெயரை பெற வாய்ப்பு இருந்தாலும் தன் கதாபாத்திரத்தை தனது திறமையால் நிலைநாட்டிக் கொண்டு பலமாக ஆழமாக மக்கள் மனதில் இடம்பிடித்துவிடும் கலை அவரிடம் அமைந்திருந்தது.அவர் இடத்தை தக்க வைத்துக் கொள்வார் யார் இருந்தாலும் அவருக்கு தனி மதிப்பு வந்துவிடும் மக்கள் மனதில்.அதில் அவர் மன்னன்
.....................
திரும்பிபார் படத்தை விட்டு விட்டீர்களே. இத்தோடு கணேசனின் திரையுலக வாழ்வு முடிந்தது என்று மற்றவர்களை சொல்ல வைத்த கதை. அதையும் நடிப்பு என்னும் திறமையால் வென்று காட்டியவர் நம்மவர்.
............................
அவருக்கா நடிக்கிறதைப்பற்றி பயமா?அது அவரிடம் இருந்ததே இல்லை.அவர் பூரணம்.பூர்ண சந்திரன்.அஞ்சா கலைவேந்தன்.எவனுக்கும் எதற்கும் நடிப்பு விஷயத்தில் துளிபயமில்லாத பூரணன்.
...........................
It is not villain role. Nadigarthilagam role Jeeva is a protogonist who turns negative due to circumstances. The other character Thangaraj is just a side role like SSR ,Muthuraman,Vijaykumar,jaiganesh did with our thalaivar in later stages.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th April 2018, 02:08 PM
#2239
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th April 2018, 06:48 AM
#2240
Senior Member
Devoted Hubber
சிம்மக்குரல்...
________________
எவ்வித ஜொலிப்புகளும் இல்லாமல் பொட்டல்வெளியாய் வெட்டவெளி தமிழ் திரைவானம் காட்சி தந்து கொண்டிருந்த காலம் அது.
1952
ஒலித்ததே ஓர் குரல்.
"தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாயிருக்கிறதே"
இக்குரலுக்கு இதுதான்
முதல்குரல்.
அக்குரல் ஒலித்தது
அதுமுதல்
திரைகள் நடுங்கின
அன்றுமுதல்.
மொத்த தமிழினத்தையும் நெற்றியை மேல் தூக்கி வியக்கவைத்தது இக்குரலன்றோ!
ஏற்றிய நெற்றியை
கடைசி வரை
ஏற்றிக்கொண்டே
இருக்க வைத்ததும்
இக்குரலன்றோ!
***
"மக்களுக்கா பஞ்சம் இந்நாட்டில்.நாற்பது கோடி இருக்கிறார்களே....
"நூற்றுக்கணக்கான பிரபுக்களை கொன்று பாரீஸ் நகரம் முழுவதும் ரத்த ஆறு ஓட விட்டு ஐரோப்பா முழுவதும் புயலையும் பீதியையும் கிளப்பிய பிரெஞ்சுப் புரட்சி தான் ஜனநாயக தத்துவத்தை உலகெங்கும் பரப்பியது.அதன் வயிற்றிலிருந்து ஜனித்த புதிய அரசியல் ஐரோப்பிய கருத்துக்கள் இன்றுவரை நிலைத்து விட்டது..."
மரணத்தின் மடியிலே ஐனனத்தை காண்பதுதான் சரித்திரம் எடுத்துக் காட்டும் உண்மை.யார் கண்டார்கள்! ஜப்பானின் உதவியோடு நாடு சுதந்திரம் கண்டு உலகிற்கே புதியவழியைக் காட்டலாம்...
குரலுக்கும் நடிப்புண்டு
அந்நடிப்புக்கும் இலக்கணமுண்டு
அதை
இதற்கு முன் காட்டியவர் எவருண்டு
என்பதை புத்தியில் வைத்த குரல்.
****
"பரசுராமன் அவதாரம்.
மனோகரன் மனிதன்.
"என் வாள் களத்திலேதான் விளையாடும்
கனிகளை காயப்படுத்தாது."
பக்கம் பக்கமாய்ச் பேசினாலும் சரி
பத்து எழுத்துக்களை பேசினாலும் சரி.
இந்தக் குரல் பேசினால் தான் தமிழ்.
மற்றதெல்லாம் உமிழ்.
திரும்பிப் பார்க்காதவர்களையும்
திரும்பிப் பார்க்க வைத்த குரல்.
ஏளனம் செய்தோரை
ஏளனத்திற்கு ஆளாக்கிய குரல்.
***
"பாடுவது என் தொழிலும் அல்ல
சங்கீதத்தை நான் முறையாக பயின்றவனும் அல்ல...
இங்கே என் நண்பனுக்கு விழுந்த அடியின் எதிரொலியைத்தான் நீங்கள் இசையாகக் கேட்டீர்கள்."
பேரிரைச்சல் பெரும் அலைகளுக்கு மட்டும்தானா?
பெரும் சீற்றம் பெருத்த சூறாவளிக்கு மட்டும்தானா?
அது குரலுக்கும் உண்டு.
அப்பெருமை இவரைத் தவிர
வேறு எவருக்குண்டு?,
***
"அண்ணனை காட்டிற்கு அனுப்பிய பழிகாரி.தந்தை தசரதனின் இறப்புக்கு ஆளான பாதகி...
உன்னை அங்க அங்கமாக வெட்டி அணுஅணுவாக சிதைத்து கண்டதுண்டமாக வெட்டி கழுகுகளுக்கு இரையாக போட்டாலும்என் ஆவி வேகாது.ஆனால் அன்னையைக் கொன்ற அக்கிரமக்காரா என் முகத்தில் விழிக்காதே என்று என்னைஅண்ணன் ராமன் சொல்வானே என்று பார்க்கிறேன்"...
"நன்மை செய்து விட்டேன் என்று நஞ்சைக் கலந்து விட்டாயே பாதகி..."
இது-
மூதறிஞரை பேச வைத்த குரல்.
ஏசியவர்களை தூசியாக்கிய குரல்.
கண்டேன் சீதையை-
இது காவியச் சொல்
பரதனைக் கண்டேன்-
இது அழியாச் சொல்
***
"ஹ"
இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்து என்ன மாயம் செய்ய முடியும்?
செய்ததே!
இந்த விந்தையான வேந்தன் குரல்.
இந்த ஒற்றை எழுத்திலும் மின்சாரம் பாய்ச்சியதே .
மொழிகளைத் தாண்டி
சுண்டி இழுத்ததே
"நீ என்னைப் போலவே இருப்பதுதான் குற்றம்."
"இது உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம்."
இரண்டும் ஒரு குரலாயினும்,
ஒன்று காந்தம்
ஒன்று சாந்தம்.
அண்டை தேசத்தவர்களையும்
ஆட்டிப் படைத்த குரல்.
மண்டையை வியக்க வைத்த
ஜாலக் குரல்.
இதையா பிரதியெடுப்பது என்று
ஓட வைத்த குரல்.
***
"ஓலை தாங்கியே என்ன இரும்பு இதயமடா உனக்கு.கட்டபொம்மன் அரசவையிலே அவன் கண் முன்னே அவன் மந்திரியை கைது செய்ய எவனுக்குடா துணிவு இருந்தது இதுவரை.மாற்றோருக்கு எம்மோரை காட்டிக் கொடுப்பதை விட போரில் மாண்டு விடுவதே சிறப்பு"
தமிழ் எல்லை தாண்டி,
பாரத பூமி தாண்டி,
அயல் தேசத்தையும் மிரட்டிய குரல்.
தட்டினார்களே கைகளை
கொட்டினார்களே விருதுகளை
"போரடித்து நெற் குவிக்கும் பொன்னாட்டு உழவர் கூட்டம் பரங்கியர்களின் தலைகளையும் நெற்கதிர்களாய் குவித்து விடுவார்கள்.ஜாக்கிரதை"
பொழியும் வானத்தையும்,
விளையும் பூமியையும்
சாட்சிக்கு அழைத்த குரல் .
தன்மானத்தை பறைசாற்றிய குரல்
தமிழனை உலகிற்கு அடையாளம் காட்டிய குரல்.
ஒலித்ததோ ஓர் குரல்
உள் வாங்கி ஒலித்த குரல்களோ
கோடி கோடி
தமிழ்ப்பூமியின் புல் பூண்டுகளை கூட கேட்க வைத்த குரல் அல்லவோ இது
இக்குரல் ஒலிக்காத இடமுண்டோ இத் தமிழ் மண்ணில் ?
***
"ஆனந்தா!
உன்னிடமிருக்கும் ஆட்களை எல்லாம் வைத்துக்கொண்டு இந்த தொழிற்சாலையில் உள்ள எல்லா மின்சார விளக்குககளை எல்லாம் அணைத்து விட்டாலும் எனக்கு கவலையில்லை.ஆனால் இந்த இடத்தில் ஒரு சிறு அகல்விளக்கு சுடர் விட்டு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அதன் சொற்ப வெளிச்சத்திலே அற்பர்களின் துணையின்றி ஒர் உருவம் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருக்கும்.அதுதான் நீ குறிப்பிட்ட அந்த தொழிலாளி ராஜு.இதை மனதில் வைத்துக் கொண்டு உன் போராட்டத்தை துவக்கு!முழங்கு!முரசு கொட்டு!கெட்அவுட்.
இது-
ஊரையே ஆட்டுவிக்கும் குரல்
யாருக்கும் மசியாத குரல்
ஏரெடுத்து போர் தொடுக்கும் குரல்
பாருக்குள்ளே ஒப்புமையில்லா குரல்.
***
"துரியோதனா!
என் மானம் காத்த தெய்வமே.
என் உயிர் இருக்கும் வரை உன் உயிர் போகாது.என் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் தான் உன் உயிர் போகும்.இது சத்தியம்."
அறுபதையும் சிலிர்க்க வைத்த குரல்.
ஆறையும் பேசவைத்த குரல்.
யாரையும் வியக்க வைக்கும் குரல்.
ஆண்டுகள் ஐம்பது கழிந்தாலும் எல்லோரையும் மிரட்டிய குரல்.
***
அங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால்பரப்பி
சங்கதனை கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ
என்பாட்டை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
யாரால் அறிய முடியும் சொக்கனை
சொக்கனேவியப்பானேஇக்குரலினை
மனிதருக்கு மரியாதை "ஜி"
சிவனுக்கு மரியாதை சிவா"ஜி"
***
"எவனோ வந்தவன் சொன்ன வாய்பறை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல.என்னை விட்டொருவன் தரணியாளும் தகுதி அடைந்து விட்டானா?...
கரையான் புற்றென்ன கருநாகங்களுக்குச் சொந்தமா?அழியட்டும் கோட்டைகள்.இடியட்டும் மதிற்சுவர்கள்.ஜெய் அன்னை பவானி."
இது
வீரசிவாஜியாய்
விழுப்புரத்து கணேசன் பேசியது.
இந்தக்குரல்தானே
வெண்தாடியை வியக்க வைத்தது
மறுகணமே
பட்டம் கொடுத்து கிரீடம் சூட்ட வைத்தது.
அதுதானே
"சிவாஜி"
***
நிற்க!
கண்ணதாசன் சொன்னது போல், அவரைப்பற்றி
எதை எழுதுவது?
எதை விடுவது?
சுருங்கக் கூறின்,
"சிங்கத்திற்கு ஒரு குரல்
சிவாஜிக்கு நூறு குரல்"
வணக்கம்
courtesy sivajigroup
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks