படித்ததில் பிடித்தது.ஒரு சகோதரரின் ஆதங்கம்பாரதியாரும் பாரதிதாசனும் தனி நபரை புகழ்ந்து கவிதை பாட மாட்டார்கள். பாரதிக்கு எட்டையபுரம் மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேலை தந்தார். ஆனால் பாரதி அந்த வேலையை வேண்டாம் என உதறி தள்ளி விட்டு தமிழ், தாய்நாடு பற்றி பாடினார். காந்தியைப் பற்றி பாடுவது வேறு விஷயம். அவர் தியாகி. அதே மாதிரி பாரதிதாசனும். ஆனால் அவரே 1959 ஏப்ரல் 29ந் தேதி குயில் ஏட்டில் சிவாஜியின் கொடை செய்தியை பாராட்டி கவிதை பாடியுள்ளார். 1959லியே காமராஜரின் மதிய உணவு திட்டத்திற்கு ...ஒரு லட்சமும் மதுரை போடி தொழிற்பயிற்சி பள்ளிக்கு ரூ இரண்டரை லட்சமும் வழங்கிய செய்தி அப்பாடலின் மைய கரு. இக்கவிதையை கோவிந்தராஜுலு பாலகிருஷ்ணன் என்ற சிவாஜி ரசிகர் யூடியூப்பில் பதிவிட்டு அதைப்பார்த்து தான் அதை நான் சிவாஜியின் கொடை செய்தியில் குறிப்பிட்டுள்ளேன். நான் இக்கவிதையை எல்லோரது கவனத்திற்கு கொண்டு வந்த அந்த ரசிகரை பாராட்டிய போது அவர் " சார், நீங்கள் சிவாஜி பற்றி நிறைய எழுதுறீங்க. உங்கள் பணி பெரியது. அதோடு ஒப்பிடுகையில் நான் ஒன்றும் செய்யவில்லை " என அடக்கமாக பதில் தந்தார். நானும்" ஐயா, சிவாஜி நிறைய செய்துள்ளார் *. அதை உலகறிய செய்தல் என் கடமை " என பதில் போட்டேன். நீங்களும் அந்த ரசிகர் பெயரை யூடியூப்பில் பார்த்திருக்க கூடும்.
இது நிற்க.
சிவாஜி 1959 லேயே நமக்கு தெரிய ரூபாய் மூன்றரை லட்சம் தந்துள்ளார். அன்று ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய நிலம் இன்று மூன்று கோடிக்கு போகிறதெனில் சிவாஜி தந்த 3.5 லட்சத்தின் பண மதிப்பு இன்றைய காலத்தில் என்ன என்பதை கணக்கிட்டு பார்த்து கொள்ளுங்கள். இது ஒரு துளிதான். ஆனால் அவர் செய்த அத்தனையையும் கணக்கிட்டால் எவ்வளவு வரும்? எதற்காக சொல்கிறேன் எனில் பாரதிதாசன் கவிதை பாடிய ஆதார செய்தியை எவனாவது மறுத்தால் அவனைவிட முட்டாள் உலகில் எவனும் இல்லை . நன்றி கெட்ட நாய்கள். சுதந்திர போராட்ட தியாகி நல்லகண்ணுவை அவர் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் அவரை தோற்கடித்த நன்றி கெட்ட நாய்கள் வாழும் மாநிலம் தமிழகம். தகுதி மிக்க தமிழனை ஏற்காதவன் தமிழன். எண்ணிக்கையில் எட்டப்பர்கள் தமிழகத்தில் அதிகம். ஜனநாயகத்தில் தலைகள் எண்ணப்படுவதால் அது வெற்றியாகிறது. தலைக்குள் மூளை உள்ளதா என எவனும் பார்ப்பதில்லை. இது ஆதங்கத்தின் வெளிப்பாடு. சரிதானே?
நன்றி Vijiya Raj Kumar(முகநூல்)








Reply With Quote
Bookmarks