Results 1 to 10 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post

    ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?


    பல இடங்களில் தொடர்ந்து வெளியிப்பட்டு ஊர் தியேட்டர் விபரங்கள் வெளியிடப்பட்டன.


    103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.

    தவறவிடப்பட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது

    அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

    அந்த தியேட்டர்களில் ஓடவில்லை என்பதை சென்று பார்த்தீர்களா?


    எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை.
    அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


    பணமா பாசமா? படத்தை நெல்லையில் வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தார்கள் 174 நாளுடன் நிறுத்தப்பட்டது .சின்னத்தம்பி படத்தையும் நெல்லை மற்றும் சில ஊர்களில் வெள்ளிவழா ஓடவிடாமல் தடுக்கப்பார்த்தார்கள் உரியவர்கள் மேலிடத்தில் தொடர்பு கொண்டதனால் ஆட்டம் பலிக்கவில்லை. ராஜா மறுவெளியீடு கண்டபொழுது ஆட்டம் போட்டு சிவாஜி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்கள் . சிவந்த மண் படத்தை வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தது இப்படி பல உண்டு. இப்படி அடாவடித்தனம் செய்து மற்றவர்களின் படங்களை ஓடவிடாமல் தடுத்துத்தான் உங்கள் படங்கள் முன்நிலை என்று காட்டநினைப்பது பிட் அடிச்சு பாஸ் பண்ணுவதற்கு சமன்.




    உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?

    மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.

    புத்தகத்தில் வந்தது பற்றி புத்தகத்தை எழுதியவரிடம்தான் கேட்கவேண்டும். அது ஒரு விளம்பரத்தில் வந்தது அதில் உள்ள கமா, புள்ளி என்பனவற்றை தவறான இடத்தில் போட்டுவிட்டாரா என்பதை அவர்தான் சொல்லமுடியும்.


    மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.

    கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?

    மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.


    கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?


    ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.

    அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.

    அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.

    நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.

    சிவாஜி கணேசன் அவர்கள் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் கௌரவ நடிகராக வில்லத்தனம்கொண்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார் வயதானபின் வயதான வேடத்தில் தந்தை பாதத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவாஜி அவர்கள் நடிப்பென்று வந்துவிட்டால் பாத்திரங்களைப்பற்றி கவலைப்படாதவர் . ஸ்டண்ட் நடிகர்தான் (personality disease ) ஆளுமை வியாதி பிடித்த மனநோயாளி

    உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.

    அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?

    காமராஜர் அரசியலில் நடிக்கத்தெரியாததனால்தானே தோற்கடிக்கப்பட்டார்.

    காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.

    நீங்கள் எல்லோரும் சேர்ந்துதானே சிறந்த அரசியல் ஞானியை தோற்கடித்து அவமானப்படுத்திவிட்டீர்கள்



    சிவா அய்யா,

    103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

    அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.

    நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
    தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.

    சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.

    அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.

    எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.

    உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.

    கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.

    அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.

    எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •