Results 1 to 10 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    316
    Post Thanks / Like
    நெஞ்சில் வாழும் அய்யனுக்கு....
    பரந்து விரிந்த பாயும் காவிரி போல்,
    பிரளயத்தின் சண்டவாயு போல்,
    ஓங்கி அடிக்கப்பட்ட பேரிகையின் முழக்கம் போல்,
    மோதி தெரித்த முகில்களில் புறப்பட்ட விண்ணேறு போல்,
    ஜலம் பெருக்கி பீதி காட்டும் வேலம் போல் நீ உச்சரித்த வார்த்தைகளின் கர்ஜனைகளை கேட்டுத்தான் மானிடமே வியக்கிறதே!
    துள்ளும் தமிழே!
    தூய தமிழ் ஓசையே!
    துவளாத தெள்ளு தமிழ் உச்சரிப்பே!
    உன் வெடியோசை குரலால் திரைகளெல்லாம் தீப்பற்றாததுதான் மிச்சமே! எங்களின் விம்மியெலும் நரம்புகள் வெடித்துச் சிதறாதுதான் மீதமே!
    எழிலோவியமாய் உன் வதனம் திரைகளை அலங்கரிப்பது எவ்வாறு உள்ளதென்றால் வெண் பட்டில் வைரங்களையும், முத்துக்களையும், கோமேதங்களையும், மரகதங்களையும் ஒன்றாக குவித்து வைத்து பார்ப்பது போலல்லவா உள்ளது.
    அன்னம்தான் பெண்டிரின் நடையழகு உதாரணம் என்றால் அரிமாவின் நடையழகு வீரர்களுக்கு. ஆனால் உன் நடையழகில் நூறு வகை உண்டே! இதைச் சொல்லி எவற்றை உவமைப்படுத்த முடியும்? சிறுத்தாலும் கடுகு கொண்ட காரமே அதன் வலிமை.நீ மலையல்லவோ!
    அதை என் சொல்வது?
    ஆயிரம் பாவம் காட்டும் விழிகளை கொண்டவனே! வேல் அம்பு வீசி சைதன்யங்களை சாய்ப்பது தான் படை வீரனின் வீரம்.அவருக்கெல்லாம் வேலும் அம்புமே துணை.உனக்கோ உன் விழிகளோ அல்லவா.உன் விழி பார்த்து
    எவன் நிற்பான் எதிரில்.
    விழிகளில் காட்டும் வீரத்தை சொல்வதா?வீரத்துடன் காட்டும் காதலை சொல்வதா? காதலுடன் காட்டும் கனிவைச் சொல்வதா?
    கனிவுடன் பார்க்கும் ரசத்தை சொல்வதா?
    நவரசத்தையும் பிழியும் பாவங்களை சொல்வதா?
    பாவங்களில் ஆயிரம் காட்டும் விந்தையைச் சொல்வதா?
    அதே விழிகளில் ஒரு துளி நீர் இறக்கி நிற்க வைக்கும் அதியசந்தான் என்ன?
    வேந்தனுக்கு ஒரு விழி
    வீரனுக்கு ஒரு விழி
    ஏமாளிக்கு ஒரு விழி
    கோமாளிக்கு ஒரு விழி
    பைத்தியத்திற்கு ஒரு விழி
    பாமரனுக்கு ஒரு விழி
    வித்தகனுக்கு ஒரு விழி
    உத்தமனுக்கு ஒரு விழி
    உங்களுக்குத்தான் இது சாத்தியம்
    சத்தியமாய் மானிடருக்கெல்லாம்
    விழிகள் ஒன்றல்லவா?
    உன் விழிகளை பாட,
    கம்பனே நொந்து கொள்வானே
    வார்த்தைகள் கிடைக்காமலே!
    வளரும் வளர் பிறையும், தேயும் தேய்பிறையும் இயற்கைதானே. அதனால்
    அதில் ஏதும் விந்தையில்லை .உன் புருவ ஏற்றலும், சுருக்கலும் எங்களது நெஞ்சத்து தசைநார்களை அசைக்கிறதே! தசைநார்களில் குருதியின் ஓட்டம் கூடுகின்றதே! இதை எந்த விந்தையில் சேர்ப்பது?
    எதுவென்றே எண்ண முடியாத வான்வெளியில் இருட்டும் சேர்ந்தது போல்
    இருக்கும் நிலையில், தூரத்தில் பிரகாசிக்குமே விண்மீன், அந்த விண்மீனின் ஜோதி வடிவத்தில் பிரபஞ்சத்தின் நம்பகத்தன்மைக்கு விடிவு பிறப்பதுபோல் வந்த கலைஜோதியே!
    உங்கள் விரல்கள் பிடிக்கும் அபிநயத்தில் பரதம் கூட தாழ் பணியுமே!
    இக்கூற்றை பாமரனின் சொல்லாய் கொண்டாலும் கூட புறந்தள்ளுதலில் நெறி உண்டு.
    ஆனால், பெரும் ஞானவான்கள்கூட
    நின்
    நடை பார்த்து,
    நடையின் அழகு பார்த்து,
    நாவின் சரஸ்வதி கடாட்சம் பார்த்து,
    உள்ளம் பார்த்து,
    உள்ளத்தின் சாத்வீகம் பார்த்து,
    உயர்ந்தவரே என்று புகழப்பட்டவரே!
    கற்றோரை கற்றோரே காமுறுவர்.
    இகத்தில்,
    வெற்றிமுரசு கொட்டிய வேந்தர்களைத்தான் பார்ப்பதெங்கே.?
    புராணம் எடுத்தியம்பிய புண்ணியவான்களின் திருக்கோலம் காண்பதெங்கே?
    காவிய நாயகர்களின் திருக்கோலங்களைத்தான் காண்பதெங்கே?
    சிவனைத்தான், அவன் அடியார்களைத்தான், தேவர்களைத்தான்,
    தெய்வ சிந்தனையாளர்களைத்தான், அவதாரங்களைத்தான் கண் கொண்டு பார்ப்பதெங்கே?
    அனைத்திற்கும் ஆறுதலாய் நின் கோலமே சாட்சியல்லவோ?
    அதிசயமே!
    ஆனந்தமே!
    இடி குரல் வேந்தனே
    ஈர நெஞ்சு கொண்டோனே!
    உதவும் கரத்தோனே!
    ஊர் புகழும் கலையே!
    எழிலின் இலக்கணமே!
    ஏடு படிக்கா மேதையே
    ஐயனே!
    ஒருவனில் ஒருவனே!
    ஓங்கார நாதனே!
    ஔவியம் அற்றவனே!
    வாழிய நின் புகழ்



    நன்றி Senthilvel Sivaraj (Sivaji Group)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •