-
18th November 2019, 02:22 AM
#831
Senior Member
Devoted Hubber
மதிப்பிற்குரிய திரைப்பட எடிட்டர் திரு B.லெனின் அவர்கள்,
16-11-19 சென்ன மைலாப்பூர் RR சபா
தனது 73 வயதிலும் கூட சுமார் 3 மணி நேர அளவிற்கு மேடையில் திரையின் அருகே தொடர்ந்து நின்ற படியே பாவமன்னிப்பு, பாச மலர், ஆகிய வெள்ளி விழா காவியங்கள் மற்றும் பாலும் பழமும் காவியத்தில் நடிகர் திலகத்தின் அர்ப்பணிப்பு நடிப்புக் காட்சிகளை விவரித்து அரங்கு நிறைந்த ரசிகர்களை மகிழ்வித்தார்,

நன்றி Sekar Parasuram
Last edited by sivaa; 18th November 2019 at 06:29 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th November 2019 02:22 AM
# ADS
Circuit advertisement
-
18th November 2019, 06:39 PM
#832
Senior Member
Devoted Hubber
செய்ததை மறந்த தமிழகம்.
நன்றி செந்தில்வேல்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th November 2019, 06:44 PM
#833
Senior Member
Devoted Hubber

நன்றி ராமசாமி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th November 2019, 06:58 PM
#834
Senior Member
Devoted Hubber
82- வது வீரவணக்கம்.
பச்சைதமிழன் வ.உ.சி தியாகியின் நினைவு நாளான இன்று அவர் தியாகத்தை போற்றி... போற்றி... போற்றி...
வணங்குகிறோம்.....
இந்தியாவின் சுதந்திரம் வேண்டி தனது கோடிக்கணக்கான சொத்துக்களையும் வாழ்நாளில் இளமைக் காலத்தின் பெரும்பகுதியை சிறைச்சாலையின் உள்ளே கொடுமைகளை அனுபவித்த
கப்பலோட்டிய தமிழன்
வ.உ.சிதம்பரனார் அவர்களது நினைவு நாள் இன்று,
18-11-1936

நன்றி C J Joe
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th November 2019, 07:05 PM
#835
-
18th November 2019, 07:11 PM
#836
Senior Member
Devoted Hubber
உலகம் இருக்கும் வரை நடிகர்திலகத்தின் புகழ் இருக்கும் என்பதற்கு ஒரு சான்று...
இன்றைய அன்னதான விழாவின் பொழுது #பார்கவ் என்ற சிறுவன் தானே முன்வந்து நடிகர்திலகத்தின் புகழ் காத்தார்...

நன்றி Remix Gold
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th November 2019, 07:48 PM
#837
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் தனிக்கட்சியை ஏன் துவக்கினார்?
எம்ஜிஆர் இடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, எம்ஜிஆர் இன் ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசாங்கம் களைத்து விடக் கூடாது என்பதற்காக தான் வளர்த்த காங்கிரஸ் கட்சியையே எதிர்த்து வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கியது? எம்ஜிஆர் கட்சியை நம்பி அவரது மனைவியை ஆதரிப்பவர்கள் என அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஜானகி ராமச்சந்திரன் முதல் மந்திரி வேட்பாளர் என பிரச்சாரம் செய்தது,
திமுக தனது கூட்டணிக்கு விரும்பி அழைத்தும் அதை நிராகரித்தது, என
மேற்கண்ட கேள்வி...
களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் முன் சொல்லப்பட்டிருக்க வேண்டும்,
அவ்வாறு மக்கள் முன் சொல்லப்பட்டிருந்தால் இப்போது தகுதியில்லாதவனெல்லாம் மைக் மு
ன் சிவாஜியை நினைத்து கருத்து சொல்ல பயந்து இருப்பான்,
இந்தச் செய்திகளை அறிந்திடாத அன்றைய சிவாஜி ரசிகர்களாவது சாந்தம் பெற்றிருப்பார்கள்,

நன்றி Sekar Parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th November 2019, 11:30 PM
#838
Senior Member
Devoted Hubber
எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதுாக்குகிறதோ... அப்போதெல்லாம் கடவுள் அவதரிப்பார் என்பார்கள்.
அதுபோல, எப்பொழுதெல்லாம், தேர்தல் வருகிறதோ அல்லது ஒரு நடிகர் கட்சி ...ஆரம்பித்தாலோ, அரசியல்வாதிகள் நடிகர்திலகத்தை விமர்சிப்பது பழக்கமாகி விட்டது.
ஒவ்வொரு முறையும், சமூகநலபேரவை சந்திரசேகரன் அவர்கள், கண்டனம் தெரிவிப்பார், தொலைக்காட்சிகளில் விவாதமேடைகளில் கலந்து கொண்டு, நடிகர்திலத்தின் பெருமைகளை பதிவு செய்வார்..
அப்போதெல்லாம், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள், மற்றும் நமது இதயங்கள் முதற்கொண்டு,
நடிகர்திலகத்தின் வீட்டில் இருந்து எந்தவிதமான கண்டணமும் வரவில்லையே.. அதிலும், இளையதிலகம் அவர்கள் தனது வருத்தத்தை தெரிவித்தால் நன்றாக இருக்குமே என எண்ணியதுண்டு...
இந்தமுறை இளையதிலகம் அவர்கள், தனது வருத்தத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்,
சிவாஜி அவர்கள் தோற்றதற்கு காரணம், எம்.ஜி.ஆருக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்கு... கட்டுப்பட்டு அன்று #ஜானகி அம்மாளுடன் கூட்டணி சேர்ந்தது தான், அன்றே, சிவாஜி அவர்கள் வேறுவிதமாக முடிவு எடுத்திருந்தால், நிலைமையே மாறியிருக்கும்..
நடிகர்திலகம் மறைந்துவிட்டார். இனியும் இதுபோல், விமர்சனம் செய்யாதீர்கள், எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல.. கோடானு கோடி சிவாஜி ரசிகர்களுக்கும் வருத்தமளிக்கிறது.என சற்று கோபமாகவே பேசினார்.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின், நெஞ்சங்களில் பாலை வார்த்த,
#இளையதிலத்திற்கு
உலகெங்கும் வாழும் கோடானு கோடி,
சிவாஜி ரசிகர்களின் சார்பில் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

Thanks .. Sundar Rajan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th November 2019, 11:41 PM
#839
Senior Member
Devoted Hubber
வரலாற்று நிகழ்வுகளை மறந்து போன தமிழகம்,
1988 ல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் போது அதிமுக இரண்டு அணிகளாக ஜானகி அதிமுக, ஜெயலலிதா அதிமுக என பிளவுபட்ட போது ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக அரசுக்கு நடிகர் திலகம் சிவாஜி ஆதரவு கொடுத்தார், ஆதரவு கொடுக்க மறுத்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணியைத் துவக்கினார், காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நடிகர் திலகம் பின்னால் நின்றார்கள், ஜானகி அணியின் முக்கிய தலைவராக இருந்த ஆர்.எம்.வீ...ரப்பன் அவர்கள் அன்னை இல்லத்திலேயே முகாமிட்டுக் கிடந்தார், நடிகர் திலகத்தை யாரும் சந்தித்து ஆதரவு கேட்டுவிடக் கூடாது என்பதற்காக,
ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து நடைபெற மேலும் இதர கட்சிகளின் ஆதரவும் தேவைப்பட்டது, அதுவும் இல்லாமல் அதிமுகவின் இன்னொரு பிரிவான ஜெயலலிதா அணியை எப்படியாகினும் அரசியலில் இருந்து ஒதுக்க எடுக்கப்பட்ட முடிவுகளில் பிரதானமானதாக அப்போது பேசப்பட்ட செய்தி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஆதரவு கேட்பதென,
அவ்வாறு கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்து ஆதரவு கேட்டபோது ஜானகி அதிமுக அரசுக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டார்,
அந்த ஆதரவை மட்டும் ஒருவேளை கலைஞர் கருணாநிதி கொடுத்திருக்கும் பட்சத்தில் ஜானகி ராமச்சந்திரன் ஆட்சி தொடர்ந்திருக்கும்
ஆனால் அரசியலில் தேர்ந்த கணக்கீட்டளாரான கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவை ஓரங்கட்ட வேண்டி உங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தால் நாங்கள் எப்போது தான் ஆட்சியைப் பிடிப்பது என மறுத்துவிட்டாராம்,
அவரது அரசியல் கணக்குப்படியே பின்னர் ஆட்சியையும் பிடித்தார்,
அதே தருணத்தில் அவருக்கு வலுவான அரசியல் எதிரியான செல்வி ஜெயலலிதா அவர்கள் வளர்வதற்கு காரணமாகவும் அமைந்தார்,
அந்த அரசியல் சதுரங்கத்தில் அப்போது நடிகர் திலகத்தை சுற்றியே பல தலைவர்கள் சதி வேளைகளில் ஈடுபட்டனர்,
தலைவர்களின் சதி திட்டத்திற்கான காரணங்கள் என்ன என்பதையும் பார்ப்போம்,
நன்றி Sekar Parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th November 2019, 11:51 PM
#840
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks