#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி3

1954 ஆம் ஆண்டு வெளிவந்த மனோகரா படத்தின் வெற்றிக்குப்பிறகு #மதுரையில் நூறுநாள் ஓடிய மூன்றாவது படம் 1958 பிப்ரவரியில் வெளிவந்த "உத்தமபுத்திரன்"
இதற்கு இடைப்பட்ட மூன்றாண்டு காலத்தில் நடிகர்திலகம் நடித்து தமிழில் வெளியான படங்கள் 32 ஆகும். அதில், மதுரையில் 50 நாள் முதல் 84 நாள்வரை ஓடியவை 18 படங்களாகும். மேலும், இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்டு இணைந்து 50+ நாட்களுக்கும்மேல் ஓடிய படங்கள் நான்காகும்.
அந்த பதினெட்டு + நான்கு படங்களின் ஓட்டத்தை மட்டும் இங்கே சுருக்கமாகக் குறிப்பிடுவது நண்பர்களின் புரிதலுக்காக...
#1954ல்
01. இல்லறஜோதி / சிந்தாமணி /63 நாள்
02. அந்தநாள் / மீனாட்சி / 52 நாள்
03. தூக்கு தூக்கி / செண்ட்ரல் / 52 நாள்
04. எதிர்பாராதது / தங்கம் / 71 நாள்
05. க.ப.பிரம்மசாரி/ தங்கம் & நியூசினிமா இணைந்து 83 நாள்
#1955ல்
06. காவேரி / செண்ட்ரல் / 66 நாள்
07. மங்கையர்திலகம் / மீனாட்சி / 79நாள்
மற்றும் சந்திரா / 50 நாள் = 129 நாள்
08. கள்வனின் காதலி / ஸ்ரீதேவி / 83 நாள்
#1956ல்
09. நான் பெற்ற செல்வம் / கல்பனா / 55 நாள்
10. பெண்ணின் பெருமை / தங்கம் / 77 நாள்
11. அமரதீபம் / நியூசினிமா / 71 நாள் +
கல்பனா / 56 நாள் = 127 நாள்
12. வாழ்விலே ஒருநாள் / கல்பனா / 50 நாள்
13. ரங்கோன் ராதா / ஸ்ரீதேவி / 71 நாள்
#1957ல்
14. மக்களைப்பெற்ற மகராசி / கல்பனா / 64 நாள்
15. வணங்காமுடி / தங்கம் / 78 நாள்
16. புதையல் / ஸ்ரீதேவி / 84 நாள்
17. தெனாலிராமன் / மீனாட்சி & சந்திரா
இணைந்து 70 நாள்
18. தங்கமலை ரகசியம் / தங்கம் / 55 நாள்
19. அம்பிகாபதி / செண்ட்ரல் / 66 நாள்
20. பாக்கியவதி / செண்ட்ரல் / 56 நாள்
21. மணமகன்தேவை / மீனாட்சி &
தினமணி இணைந்து 63 நாள்
22. ராணி லலிதாங்கி / மீனாட்சி &
லட்சுமி இணைந்து 59 நாள்
#1958ல்
#23உத்தமபுத்திரன்
வெளியான நாள் : 07:02:1958
திரையங்கம் : நியூசினிமா
மொத்த இருக்கைகள் : 1358
ஓடிய நாள் : 105 நாள்
மொத்த வசூல் : ரூ.1,27,290.71
வரி நீக்கி வசூல் : ரூ.0,99,858.13
வி.பங்குத்தொகை : ரூ.0,55,966.66
இதே ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்று நூறு நாள்களைக் கடந்த பிற படங்களின் சாதனைப் பட்டியல் அடுத்தடுத்த பகுதிகளில்...

#பின்குறிப்பு :
இப்பகுதியில் இடம் பெறும் திரையரங்குகளின் இருக்கைகள் தொடர்பான தகவல்கள் 1960 களில் வெளியிடப்பட்டிருந்த பேசும்படம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவை என் யூகங்களல்ல... அதற்கு ஆதாரமாக அந்த புத்தகத்தில் வெளியான திரையங்கு தொடர்பான செய்தியை கீழே பின்னூட்டத்தில் பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் கவனிக்கவும்.

தகவல் உதவி. திரு.சிவனாத்பாபு, மதுரை
பதிவூட்டம் : வான்நிலா விஜயகுமாரன்



Thanks வான்நிலா விஜயகுமாரன்