-
24th August 2020, 08:41 AM
#111
Senior Member
Devoted Hubber
நன்றி V C G Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th August 2020 08:41 AM
# ADS
Circuit advertisement
-
24th August 2020, 08:44 AM
#112
Senior Member
Devoted Hubber
கும்பகோணம்.....
குடந்தை நகரில் 100 நாட்களைக் கடந்து சாதனை புரிந்த திரைக்காவியங்கள் வரிசையில், அடுத்து.....
3) வசந்த மாளிகை - ஜூபிடர் திரையரங்கம் (1972)
தமிழகத்தில் மட்டுமல்லாது கர்நாடகம், கேரளம், இலங்கை என சுழன்றடித்த வசந்த மாளிகை புயல், கும்பகோணத்தையும் விட்டு வைக்கவில்லை. ஜூபிடர் அரங்கில் திரையிடப்பட்ட வசந்த மாளிகை வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து வீரநடை போட்டது. அது மட்டுமின்றி TT ஏரியாவில் திருச்சி தஞ்சை, குடந்தை, மாயவரம் ஆகிய 4 தியேட்டர்களில் 100 நாட்களை நிறைவுசெய்து சாதனை புரிந்தது. வெற்றி விழாவைக் கொண்டாட தயாரிப்பாளர் ராமாநாயுடு தலைமையில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ, மேஜர் , ஸ்ரீகாந்த் நாகேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து இரண்டு சொகுசு பஸ்களில் பயணித்து, அன்று காலை காட்சி இடைவேளையில் திருச்சி ராஜாவிலும், மேட்னி காட்சி இடைவேளையில் தஞ்சை ஜூபிடரிலும், மாலைக்காட்சி இடைவேளையில் கும்பகோணம் ஜூபிடரிலும், இரவுக் காட்சி இடைவேளையில் மாயவரம் அழகப்பா விலும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு விட்டு, நள்ளிரவு மாயவரத்திலிருந்து ராமேஸ்வாம் எக்ஸ்பிரஸ் மூலம் சென்ளை வந்தடைந்தனர்.
Thanks Mohamad Thameem
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th August 2020, 08:51 AM
#113
Senior Member
Devoted Hubber
கும்பகோணம்........
திரைப்பட மொழியில் C சென்ட்டர் என்றழைக்கப்படும் நகரங்களில் தலையாயது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரம். இங்கு 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி வாகை சூடிய நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வரிசையாக இடம் பெறுகின்றன.... "ஆதாரங்களுடன்".
1) திருவிளையாடல் - டைமண்ட் திரை அரங்கம் (1965)
Thanks Mohamad Thameem
குடந்தையில் திருவிளையாடல் !04 நாட்கள் ஓடி 1, 02; 599 .86 வசூலாகப்பெற்றது,குடந்தையில் 1 லட்சம் பெற்ற முதல் படம் திருவிளையாடலாக இருக்கலாம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th August 2020, 05:43 PM
#114
Senior Member
Devoted Hubber
இந்த லாக்டவுன் நாட்களில் தொலைக்காட்சி சேனல்களில் நவராத்திரி அடைமழையாய் ஒளி பரப்பானது,
சன் டிவி, சன் லைப், வசந்த் டிவி, மெகா டிவி, பாலிமர் டிவி, முரசு டிவி என போட்டிப் போட்டு ஒளி பரப்பு செய்தன,
இன்றைய நாட்களிலும் கூட நவராத்திரி இன் வெற்றி இப்படி இருக்கும்போது தியேட்டர்களில் ரிலீஸான நாட்களில் எப்படி இருந்து இருக்கும்??
வரலாறு இப்படி இருக்கும் போது சமீபத்தில் யூ டியூப் சேனலில் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் அவர்களது பேச்சை உள்ளடக்கிய பதிவை எதேச்சையாக பார்க்க நேரிட்டது, பதிவில் நவராத்திரியும் படகோட்டியும் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸான போது படகோட்டி தான் வெற்றியை பெற்றது எனவும் நவராத்திரியை சில நாட்கள் தள்ளி ரிலீஸ் செய்திருந்தால் அதுவும் வெற்றி பெற்றிருக்கும் என உளரி இருந்தார், உதயகுமார் போல மேலும் சிலரும் கூட யூடியூப் சேனல்களில். நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகளை குறைத்து பேசி வருவது தொடர்கிறது, உதாரணத்திற்கு பயில்வான் ரங்கநாதன், மயில்சாமி, அமிர், பழ.கருப்பையா, என பட்டியல் நீள்கிறது,
சரி உதயகுமார் பேச்சில் எந்தளவு உண்மை இருக்கிறது?? உதயகுமார் தான் புதிய வானம் திரைப்பட இயக்குநர் அது தொடர்பாகவும் நம்மை கிளரி இருக்கிறார்,
நவராத்திரியை அலசுவோம்,
நவராத்திரி நடிகர் திலகத்தின் 100 வது காவியப் படைப்பு என்பது அனைவரும் அறிந்ததே,
நவராத்திரி திரைப்படத்தை பார்த்தவர்கள் இதற்கு மேல் நடிப்பதற்கு என்ன இருக்கிறது என்ற கேள்வியை இன்று வரையிலும் முன் வைக்கின்றனர்,
நவராத்திரி திரைப்படம் நடிப்பில் மட்டுமே கொடியை நாட்டிடவில்லை, ஒரு புகழ்பெற்ற நடிகரின் 100 வது படம் என்ற பெயரோடு சென்னையின் நான்கு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு அந்த நான்கு தியேட்டர்களிலுமே 100 நாட்கள் கடந்து வெற்றி வாகை சூடியது, வேறு எந்த முன்னணி நடிகர்களின் 100 வது படமும் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற முடியவில்லை, அந்த சாதனை திரைப்பட வரலாற்றில் இன்று வரையிலும் தொடர்கிறது, இனியும் நடக்கப் போவதில்லை.
இது போன்ற நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நிகழ்த்திய சாதனைகள் இக்காலத்தில் உள்ள தலைமுறையினர் அறிந்திடாதவாறு அப்போதைய செய்தி ஊடகங்கள் முதல் இன்றைய டிஜிட்டல் தொலைக்காட்சி ஊடகங்கள் வரை தவறாது செய்து வருகின்றன,
அதாவது நடிகர்திலகத்தின் திரைப்படம் நடிப்பு & வசூலில் வெற்றி வாகை சூடியது என்ற உண்மை நிகழவை ஏற்றுக் கொள்ள முடியாமல் பொய்த் தகவல்களை திணிப்பது
நடிகர் திலகம் படங்களின் நடிப்பை மட்டுமே பிரதானப் படுத்திவிட்டு எம்ஜிஆர் நடித்த படங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதற்காக உதயகுமார் போன்றவர்கள் எம்ஜிஆர் படங்கள் மட்டுமே வசூலில் வெற்றி வாகை சூடியது என அள்ளி விடுவது, எம்ஜிஆர் படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்கள் என புளூகு முட்டையை அவிழ்ப்பது எந்த ஒரு புள்ளி விவரங்களையும் அவர்கள் வைத்துக் கொள்வதில்லை,
உதாரணமாக
நடிகர் திலகம் நடிப்பில் "நவராத்திரி "
எம்ஜிஆர் நடிப்பில் வெளி வந்த பெரிய வெற்றிப் படம் என சொல்லப் படும் "படகோட்டி "
இவை இரண்டுமே ஒரே நாளில் 03-11-1964 அன்று திரைக்கு வந்தன
நவராத்திரி சென்னையில் நான்கு திரையரங்குகளில் அதாவது
மிட்லண்ட்
மகாராணி
உமா
ராம்
ஆகியவற்றில் ரிலீஸ் செய்யப்பட்டு அனைத்திலும் 100 நாட்களுக்கும் மேலே ஓடி சாதனை நிகழ்த்தியது, மேலும் தமிழகம் முழுவதுமாக மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் 100 நாட்களைக் கொண்டாடியது,
எம்ஜிஆர் இன் " படகோட்டி " சென்னையில் மூன்று திரையரங்குகளில் அதாவது
பாரத்
பிளாஸா
மகாலட்சுமி
ஆகியவற்றில் ரிலீஸ் செய்தப்பட்டு அந்த மூன்றில் பிளாஸாவில் மட்டுமே 100 நாட்கள் ஓடியது,( இணைப்பில் உள்ள விளம்பரத்தில் சீனிவாசா தியேட்டரில் ரிலீஸே இல்லை, இடையில் திரையிடப்பட்டு அதையும் கணக்கில் சேர்த்து விளம்பரம் வந்திருக்கிறது)
நான்கு தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய நவராத்திரி எங்கே இருக்கிறது, மாறாக ஒரு தியேட்டரில் மட்டுமே 100 நாட்கள் ஓடிய படகோட்டி எங்கே இருக்கிறது,
இங்கு நாம் கணக்கில் கொள்ள முடியாத இன்னொரு நிகழ்வும் இருக்கிறது
இதே நாளில் நடிகர் திலகம் நடித்து 99 வது படமாக " முரடன் முத்து " வேறு களத்தில் நின்றது
முரடன் முத்து சென்னையின் நான்கு திரையரங்குகளில் அதாவது
ஸ்டார்
பிரபாத்
சரஸ்வதி
லிபர்டி
ஆகியவற்றில் வெளியாகி நான்கு தியேட்டரிலும் 50 நாட்களை கடந்தது
எளிய ஒப்பீடு அப்போதைய ஒரு மாநில தலைநகரின் 75% திரையரங்குகளில் நடிகர் திலகம் படங்கள் மட்டுமே ஓடி பல தருணங்களில் சாதனையை நிகழ்த்தி இருக்கிற உண்மை நிகழ்வுகள் இருக்கிற போது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் எம்ஜிஆர் இன் திரைப்படங்கள் வெற்றி பெற்றது, வசூலில் சாதித்தது என்ற பொய் தகவல்களை பொதுத் தளத்தில் மக்கள் முன் சொல்லுவோர் நிறுத்திக் கொள்ள வேண்டும்,
தொடரும் பட்சத்தில் உண்மையான தகவல்களை நாம் தெரிவித்துத் தான் ஆக வேண்டும்,
Thanks Sekar
...........................................
நடந்த கதையே வேறு....
படகோட்டி பிளாஸா, கிரவுன், புவனேஸ்வரியில் தான் ரிலீஸானது. (இந்த காம்பினேஷன் NT ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்). ஸ்ரீநிவாஸாவில் ரிலீஸாகவில்லை. தமிழகத்தில் எங்கும் 100 நாட்களை எட்டிப்பிடிக்க முடியாமல் படகோட்டி அனைத்து தியேட்டர்களிலும் தூக்கப்பட்டு பிளாஸாவில் மட்டும் ஓடிக்கொண்டிருக்க, அதிலும் 90 நாட்களில் படம் தூக்கப்படவிருந்தது. உடனே ஆர்.எம்.வீரப்பனே நேரே பிளாசா தியேட்டருக்கு வந்து மேலும் 11 நாட்கள் ஓட்ட ஒப்பந்தம் போட்டு சென்றார். ஒரு வழியாக பிளாசாவில் மட்டும் படகோட்டி 101 நாட்கள் ஓடியது (அப்போது 4வது வாரமாக ஓடிக் கொண்டிருந்த ஸ்ரீநிவாஸாவையும் விளம்பரத்தில் சேர்த்துக் கொண்டனர்). படம் எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு. அதன் மேனேஜர் ஆர்.எம்.வீ.
Last edited by sivaa; 24th August 2020 at 05:45 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th August 2020, 05:49 PM
#115
Senior Member
Devoted Hubber
Thanks Sivaji Dhasan sivaji dhasan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th August 2020, 05:54 PM
#116
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம்"
என்ற தனித்துவமான சிறப்பு வாய்ந்த பட்டத்தை பற்றிய கட்டுரை சில வருடங்களுக்கு முன் " தி இந்து " சிறப்பு மலர் நூலில் இடம் பெற்று இருந்தது,
அதன் ஒரு பக்க நகல் மட்டும் இணைத்து உள்ளேன்,
மேலோட்டமாக சில வரிகள்
புதிய கதாநாயக நடிகர்களுக்கு "எம்ஜிஆர் பானி" திரைப்படங்கள் போன்று நடிப்பதில் எந்த சிரமமும் கிடையாது, அதற்கென எந்த மெனக்கெடுத்தலும் தேவைப்படவில்லை, இதனால் புதிய கதாநாயக நடிகர்கள் எம்ஜிஆர் பானி படங்களில் அதிக கவனம் செலுத்தினர்.
ஆனால் "நடிகர்திலகம் சிவாஜி" பட பானிக்கு எந்த நடிகரும் நடிக்க முயலவில்லை, எனவே நடிகர்திலகம் தனிக்காட்டு ராஜாவாகவே திகழ்ந்து வருகிறார்,
நடிகர்திலகம் பானி திரைப்படம் என்றால் மிகப்பெரிய வட்டத்தை சுற்ற வேண்டும்,
விரிந்து கிடந்த களத்தில் " ஒரே ஒரு ராஜா" அவர் நடிகர் திலகம் என்று அவர் போற்றப் பட்டதாலும் அத்தகைய நடிப்புக்கு ஏகத்துக்கும் மெனக்கெட வேண்டி இருந்ததாலும் அத்தகைய நடிப்புக்கு மற்றவர்கள் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை,
"நடிகர்திலகம் அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒரு நடிகர்திலகமே"
Thanks Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th August 2020, 06:32 PM
#117
Senior Member
Devoted Hubber
இன்று அன்னை ராஜாமணி அம்மையாரின் நினைவு தினம்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th August 2020, 11:08 PM
#118
Senior Member
Devoted Hubber
Thanks Nilaa
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th August 2020, 11:11 PM
#119
Senior Member
Devoted Hubber
Thanks Gururo Murugesan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th August 2020, 11:12 PM
#120
Senior Member
Devoted Hubber
Thanks Gururo Murugesan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks