அவர்கள் அபிமான நடிகரை ஓட்டுக்காக வள்ளல் என்றும் வசூல் சக்கரவர்த்தி என்றும் வார்த்தை ஜாலத்தால் வளர்ந்து மக்களை போலி வாக்குறுதி மூலம் நம்பவைத்து மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்து விளம்பரமே இல்லாமல் உதவி செய்த நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும் வெற்றி படங்களை தோல்வி என்றும் முழங்கினர் அது அன்று சில பத்திரிக்கைகள் துணையுடன் பரப்பப்பட்டு அரசியலில் மட்டும் செல்லுபடியானது சினிமாவில் ஒன்றும் செய்யமுடியவில்லை ஆனால் இன்று அவர்களின் படம் டிஜிட்டலில் எடுத்தாலும் ஒரு படம் கூட சாதா தியேட்டரில் ஒரு வாரம் தாண்டவில்லை ஏ.சி.தியேட்டரில் பேருக்கு ஓட்டுகின்றனர் சினிமாவில் மோகம் குறைந்துவிட்டது அரசியலைப் பொறுத்தவரை அவர் படத்தை கூட போடுவதில்லை ஆனால் நடிகர்திலகத்துக்கோ சினிமாவில் டிஜிட்டலில் சாதா @ ஏ.சி.தியேட்டர்களிலும் ஓடி இன்றைய இளம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் வருடம் வருடம் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவின் போது செய்கின்ற அன்னதானம் பள்ளிமாணவர்களுக்கு நோட்புக் முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் மறைந்த தீவிர வறுமையில் உள்ள ரசிகர்களின் குடும்பங்களுக்கு பண உதவிகள் கூடிக்கொண்டே போகிறது கொராணா லாக்டவுன் காலத்தில் செய்த உதவிகளை பலதரப்பினரும் பாராட்டினர் இதையெல்லாம் செய்வதால் நடிகர்திலகத்துக்கு புகழ் கூடுகிறது என்ற சந்தோஷத்தை தவிர எதுவுமில்லை இந்த வருடம் பிறந்தநாள் உலகில் உள்ள தமிழ் ரசிகர்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதையெல்லாம் பொறுக்கமுடியாமல் சிலர் பொய்யை பரப்புகின்றனர் அது இன்று செல்லுபடியாகாது யாரும் நம்பமாட்டார்கள் நடிகர்திலகம் விளம்பரம் தேடா வள்ளல் அவரின் புகழ் வான் கடல் பூமி நீர் நெருப்பு உள்ளவரை பேசப்படும் நடிகர்திலகம் ரசிகனாக இருப்பதற்கு பெருமைப்படுவோம்

Thanks Durai Pandi