Page 45 of 117 FirstFirst ... 3543444546475595 ... LastLast
Results 441 to 450 of 1167

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #441
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு பற்றி உதயன் பத்திரிகை செய்தி

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #442
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு பற்றி தினக்குரல் பத்திரிகை செய்தி

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #443
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like


    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #444
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    அவர்கள் அபிமான நடிகரை ஓட்டுக்காக வள்ளல் என்றும் வசூல் சக்கரவர்த்தி என்றும் வார்த்தை ஜாலத்தால் வளர்ந்து மக்களை போலி வாக்குறுதி மூலம் நம்பவைத்து மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்து விளம்பரமே இல்லாமல் உதவி செய்த நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும் வெற்றி படங்களை தோல்வி என்றும் முழங்கினர் அது அன்று சில பத்திரிக்கைகள் துணையுடன் பரப்பப்பட்டு அரசியலில் மட்டும் செல்லுபடியானது சினிமாவில் ஒன்றும் செய்யமுடியவில்லை ஆனால் இன்று அவர்களின் படம் டிஜிட்டலில் எடுத்தாலும் ஒரு படம் கூட சாதா தியேட்டரில் ஒரு வாரம் தாண்டவில்லை ஏ.சி.தியேட்டரில் பேருக்கு ஓட்டுகின்றனர் சினிமாவில் மோகம் குறைந்துவிட்டது அரசியலைப் பொறுத்தவரை அவர் படத்தை கூட போடுவதில்லை ஆனால் நடிகர்திலகத்துக்கோ சினிமாவில் டிஜிட்டலில் சாதா @ ஏ.சி.தியேட்டர்களிலும் ஓடி இன்றைய இளம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் வருடம் வருடம் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவின் போது செய்கின்ற அன்னதானம் பள்ளிமாணவர்களுக்கு நோட்புக் முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் மறைந்த தீவிர வறுமையில் உள்ள ரசிகர்களின் குடும்பங்களுக்கு பண உதவிகள் கூடிக்கொண்டே போகிறது கொராணா லாக்டவுன் காலத்தில் செய்த உதவிகளை பலதரப்பினரும் பாராட்டினர் இதையெல்லாம் செய்வதால் நடிகர்திலகத்துக்கு புகழ் கூடுகிறது என்ற சந்தோஷத்தை தவிர எதுவுமில்லை இந்த வருடம் பிறந்தநாள் உலகில் உள்ள தமிழ் ரசிகர்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதையெல்லாம் பொறுக்கமுடியாமல் சிலர் பொய்யை பரப்புகின்றனர் அது இன்று செல்லுபடியாகாது யாரும் நம்பமாட்டார்கள் நடிகர்திலகம் விளம்பரம் தேடா வள்ளல் அவரின் புகழ் வான் கடல் பூமி நீர் நெருப்பு உள்ளவரை பேசப்படும் நடிகர்திலகம் ரசிகனாக இருப்பதற்கு பெருமைப்படுவோம்

    Thanks Durai Pandi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #445
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    எனது பால்ய நண்பரும் எம்ஜிஆர் ரசிகருமான "ஸ்நேக் பாஸு' மீண்டும் மொபைல் போன் வழியாக அழைத்தார்,
    என்ன விவாதத்திற்கு அழைக்கிறாரோ என்ற தயக்கத்துடன் நலமா என்றேன்,

    ஹூம் ஹூம் நலம் தான் " என்ன உங்கள் தலைவருக்கு இன்னமும் பாரத ரத்னா கோரிக்கையை வெச்சுக்கிட்டே இருக்கீங்க" என்றார்,

    "அது எங்களது கோரிக்கை இந்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் கோரிக்கையை வைத்து வருகிறோம்" என்றேன்,

    "பார்த்தாயா நண்பரே எங்கள் தலைவர் மறைந்த அடுத்த வருஷமே பாரத ரத்னா கொடுத்தாங்க,
    ஆனா உங்க தலைவர் மறைந்து 19 வருஷமா கண்டுக்காம இருக்காங்க"
    என நம்மை கடுப்பாக்கும் கேள்வியை எழுப்பினார்,

    சரி சரி உங்க எம்ஜிஆரும் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியும் அரசியலில் கூட்டணி வைத்திருந்த காரணத்தால் உடனடியாக கொடுத்திருக்கலாம் இதெல்லாம் ஒரு கேள்வியா என்றேன்,

    இல்லை இல்லை எங்க தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் என புகழ்பெற்றவர் என்று தெனாவட்டு காட்டினார் பாஸு,

    (அவனையெல்லாம் நண்பர் என்று சொல்லாதீர்கள் என்ற மைண்ட்வாய்ஸ் கேட்கிறது)

    அடிக்கடி நண்பனுக்கு குழப்பம் வருவதுண்டு அதை நான் நீக்குவது தொடர்கதையான ஒன்று,

    நான்:- பாஸு எம்ஜிஆர் எப்படி முதல்வர் ஆனார்?

    பாஸு:- ஏழை எளிய மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்ததால் முதல்வராக ஜெயித்தார்,

    நான்:- எந்த ஏழை எளிய மக்கள்??

    பாஸு:- தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக எம்ஜிஆர்க்குத் தான் வாக்களித்து ஜெயிக்க வைத்தனர்,

    நான்:- கரெக்ட் சரியாக சொன்னாய் பாஸு,
    தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, அரசியல் உரிமை பெற்றிட என சட்டம் இயற்றியவர் யார்?போராடிய தலைவர் யார்??

    பாஸு:- இதெலென்ன சந்தேகம் " சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் " தான்

    நான்:- அப்படியென்றால் பாரத ரத்னா விருது யாருக்கு முதலில் வழங்கி இருக்க வேண்டும்?
    டாக்டர் அம்பேத்கருக்கா? எம்ஜிஆர் க்கா?

    பாஸு:- இதிலென்ன சந்தேகம் டாக்டர் அம்பேத்கருக்குத் தானே வழங்கி இருக்க வேண்டும்,

    நான்:- இல்லையே பாஸு எம்ஜிஆர் 1987 ல் மறைந்தார், அவருக்கு அடுத்த ஆண்டே 1988 ல் பாரத ரத்னா வழங்கி கௌரவித்தது மத்திய அரசு,
    ஆனால் 1956 ல் மறைந்த டாக்டர் அம்பேத்கருக்கு 34 ஆண்டுகள் கடந்து வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த 1990 ஆம் ஆண்டின் போது தான் வழங்கி கௌரவித்தது மத்திய அரசு,
    எனவே எங்கள் தலைவர் நடிகர் திலகத்தின் பெருமையையும் தேசபக்தியையும் உணர்ந்து கொள்ளும் பிரதமர் எதிர்காலத்தில் வருவார் நிச்சயமாக பாரத ரத்னா அலங்கரிக்கும் அதற்கான கௌரவத்தை பெறும்,

    பாஸு:- புரிந்து கொண்டேன், மீண்டும் அடுத்த சந்தேகம் வராது என நம்புகிறேன்,

    குட் பை,



    Thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #446
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    பொதுவாக சிவாஜி சினிமாக்களை ஏழு வகையாக வகைப்படுத்தலாம்.. 1.புராண இதிகாசப்படங்கள்.. அதாவது திருவிளையாடல் - வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்கள்.. 2. நகைச்சுவை சித்திரங்கள்.. உதாரணமாக சபாஷ் மீனா - ஊட்டி வரை உறவு போன்ற படங்கள்.. 3. அடுக்குமொழி வசனங்கள் தெறிக்க விடும் படங்கள்.. பராசக்தி - மனோகரா போன்ற படங்கள்.. 4. மென்மையான பாசம் இழையோடும் குடும்பக் காவியங்கள் பாசமலர் - படிக்காத மேதை போன்ற படங்கள்.. 5. வித்தியாசமான முயற்சிகள் .. அந்த நாள் - புதிய பறவை படங்களைப்போல.. 6. சென்ட்டிமென்ட் கலந்த ஆக்ஷன் மூவிகள்.. சிவந்த மண் - ராஜா போன்ற படங்கள்.. 7. இந்த Category யில் எதிலும் இணையாத தில்லானா மோகனாம்பாள் - பாவை விளக்கு போன்ற புதினங்கள் மூலம் மலர்ந்த படங்கள்... 1952 முதல் 1978 வரையான படங்களை மட்டுமே வகைப்படுத்தி இருக்கிறேன்.. அதற்கு காரணம் உண்டு.. 1978ஆம் ஆண்டு முதல் இவருடைய சக போட்டியாளர் திரைத்துறையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.. இந்த ஏழு பிரிவுகளில் அந்த போட்டியாளர் சிவாஜியுடன் போட்டியிட்டது ஆறாவது Category யில் மட்டுமே.. அப்படி அந்த ஒரு பிரிவில் மட்டுமே போட்டியிட்ட நமது போட்டியாளரை எப்படி சக போட்டியாளர் என்று சொல்ல முடியும்? இருந்தாலும் நாம் சொல்லிக் கொள்வோம்.. அந்த ஆறாவது பிரிவில்தான் அவர் சில படங்களில் சாதித்து இருக்கிறார்.. அங்கேதான் பிரச்னையே.. அந்த பிரிவில் அவரது படங்களைப்போலவே நம்மவருடைய படங்களும் நல்ல வசூலுடன் ஓடும்போது அவர்களது கண்களை உறுத்துகிறது.. அப்போது அவர்கள் இரண்டு காரியங்களை செய்கிறார்கள்.. நமது படங்களை மட்டம் தட்டி பதிவது.. அவரது படங்களின் தவறான புள்ளி விபரங்களை அள்ளி வழங்குவது.. அவர்கள் படங்களில் ஏழெட்டு படங்களில்தான் சரியான விபரங்கள் இருக்கிறது.. நமக்கு அப்படியில்லை.. எல்லாம் வெட்ட வெளிச்சமாக உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.. இந்த ஒரே ஒரு Category யில் மட்டுமே நாம் "டஃப் ஃபைட்" கொடுக்கும் போது.. பாவம் என்ன செய்வார்கள்.. நம்மை கடித்துக் குதறத்தான் செய்வார்கள்.. ஆகவே நாம் அவர்களை புறந்தள்ளி விட்டு அனைத்து பிரிவுகளிலும் வென்ற ஒரு மனிதரை "எல்லோரும் கொண்டாடுவோம்"


    Thanks Jahir Hussain
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #447
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    "ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணல்" என்று தமிழிலே ஒரு பழமொழி உண்டு.
    அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நடிகர்திலகத்தின் எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் பொருந்தும்.
    நடிகர்திலகத்தின் நடிப்புத் திறனுடன் இம்மியளவேனும் ஒத்துப்போகும் அளவுக்குக்கூட சுயதிறமை இல்லாதவர்கள் இவரின் திறமையான நடிப்பை மிகை நடிப்பு என்றும், இவரின் இடக்கரம் அறியாமல் ஈந்த வள்ளல் தன்மையை அந்நாளைய ஏடுகள் வெளிச்சம்போட்டுக் காட்டியதை சகிக்க முடியாததால், பின்னாளில் தங்கள் துதிபாடும் பத்திரிகைகள் மூலம் நடிகர்திலகத்தை கருமியென்றும், சிக்கனக்காரரென்றும் பழித்தும், இழித்தும் தினம் ஒரு தகவலாய் பதிவிட்டும் அவரின் புகழை ஒழித்திட முனைந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
    அதைப்போல அவரின் திரைப்பட சாதனைகளைக் கண்டு பொறுக்க இயலாமல் வெற்றிபெற்ற இவரின் திரைப்படங்களையெல்லாம் தோல்வியென்றும், அவருக்கு நஷ்டம் இவருக்கு நஷ்டம் என்றும் இவர்கள் அங்கலாய்த்துக் கொண்டனர்.
    தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா என்ன?!
    எனக்குத் தெரிந்தவரை பராசக்தி, மனோகராவைத் தவிர ஏனைய படங்கள் அனைத்தையும் தோல்வியென்று பெரும்பாலும் கட்டுரை வடித்துவிட்டனர்.
    அதற்கும் ஒரு படி மேலே போய் சென்னை சாந்தியில் ஓடிய வெற்றிப் படங்களையெல்லாம் அவர்களின் அரங்கில் ஓட்டிக் கொண்டார்கள் என்றும் புரளி பேச ஆரம்பித்தனர்.
    உண்மையில் சாந்தி திரையரங்கம் நடிகர்திலகத்துக்குச் சொந்தமான அரங்கமாக இருந்தாலும் வெற்றிபெறும் படங்கள் மட்டுமே அங்கு ஓடியிருக்கும். தோல்விப் படங்கள் மூன்று நான்கு வாரங்களில் கழற்றப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக, பல படங்கள் அரங்கு நிறைந்த ஓட்டத்துடனே எடுக்கப்பட்டதை நினைத்து வருத்தப்பட்ட நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்கள் ஏராளம்... ஏராளம்... உதாரணம், திரிசூலம். அத்திரைப்படம் ஓடிய 175 நாள்களில் 400 காட்சிகள்வரை அரங்கு நிறைந்து ஓடியும் அந்தப் படத்தை 200 நாள்கூட ஓடவிடாமல் அனாயசமாக எடுத்துவிட்டதை நினைத்து அன்றைக்கு வருந்தாத ரசிகர்களே இல்லை.
    அது மட்டுமா... பட்டிக்காடா பட்டணமா, தங்க சுரங்கம், உத்தமன், தியாகம், தீபம் போன்றவை நல்ல கூட்டத்தோடு அனாயசமாக கழற்றிவிடப்பட்ட படங்கள்தான். இவற்றையெல்லாம் அதன்போக்கில் அப்படியே ஓடவிட்டிருந்தால் வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடியிருக்கும். இந்தப் பட்டியலில் கடைசி உதாரணம் முதல்மரியாதை... 200 நாட்களைக் கடந்திருக்க வேண்டிய படம்.
    இந்நிலையெல்லாம் சிறிதும் உணராமல் எதிரிகள் பேசிய வசனங்கள் இரண்டே இரண்டுதான். 1.சொந்தத் தியேட்டரில் ஓட்டினார்கள் என்று ஓடிய படங்களையும், 2.அவர்கள் தியேட்டரிலேயே ஓட்டவில்லை... அப்படியானால் தோல்விப் படம்தானே! என்றும் இருவேறு கருத்துக்களை உமிழ்ந்துவிட்டு எளிதாக கடந்து போயினர்.
    இதற்குத்தான் சொன்னேன். இக்கட்டுரையின் முதல் வாக்கியப் பழமொழியினை... " ஆடத் தெரியாதவள் கூடம் கோணல் என்று சொன்னாளாம்" என்று!
    அலங்கார் மற்றும் சத்தியம் தியேட்டர்கள் சென்னையில் உருவாகும்வரை சென்னையில் அதிக இருக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய அரங்கம் சாந்தி மட்டுமே. மொத்தம் 1224 + இருக்கைகள். அதிலும் பால்கனியில் மட்டும் 433 இருக்கைகள். 2005 வரை, அதாவது சாந்தி திரையரங்கம் இரண்டாக மாற்றப்படும் வரை சென்னையில் சாந்திதான் பால்கனியில் அதிக இருக்கைகள் கொண்ட அரங்காகும்.
    1961க்குப் பிறகு நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் அதனைப் பெரும்பாலும் சாந்தியில் திரையிடவே விரும்பினார்கள். காரணம், தினசரி வசூல் அதிகம் என்பதால் தங்களின் முதலீட்டை குறைந்த நாட்களிலேயே இத்திரையரங்கின் மூலம் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான். அதனால்தான் பெரும்பாலான படங்கள் அங்கு திரையிடப்பட்டன. ஓடின... வசூல் ஈட்டின... ரசிகர்களும் இந்த அரங்கில் படம் பார்ப்பதை ஒரு கௌரவமாகக் கருதினர்.
    மேலும், இங்கு திரையிடப்பட்ட படங்களில் ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலான படங்கள் பிற விநியோகஸ்தர்கள் திரையிட்டவைதான். நடிகர்திலகம் சார்பில் எந்த விநியோகஸ்தரை மிரட்டியும் தமது அரங்கில் படங்களைத் திரையிடச் சொன்னதுமில்லை. மற்றவர்களைப்போல என் படத்தை இத்தனை நாட்கள் இங்கு ஓட்டியே ஆகவேண்டும் என்று கட்டளை இட்டதுமில்லை. திரையிடுவதும் ஓட்டுவதும் விநியோகஸ்தர்கள் விருப்பமே. இலாபமும் நஷ்டமும் அவர்களின் பொறுப்பே.
    சென்னையில் எல்லா நடிர்களுக்குமென்று சில ஆஸ்தான அரங்குகள் எப்போதும் உண்டு. அவற்றில்கூட எவருக்கும் 20, 25 படங்கள்கூட அவர்களின் ஆயுளில் நூறுநாள் ஓடியதில்லை. சென்னை மாநகரில் ஒரு தனியரங்கில் 41 படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனைபுரிந்தது என்பது நடிகர்திலத்துக்கு மட்டும்தான். அது ரசிகர்களின் ஆஸ்தான அரங்மான சாந்தி அரங்குதான்.
    இதையெல்லாம் மறைத்து விட்டுத்தான் சாதனை சாதனை என்று எல்லோரும் தங்களைத் தாங்களே போற்றிக் கொண்டும், உண்மையான சாதனையாளரை ஓட்டினர்... தேய்த்தனர் என்றும் புலம்பிக் கொண்டு திரிகிறார்கள்! என்னதான் பொய்களால் தோரணம்கட்டி புலம்பினாலும் உண்மையை மறைக்க இயலாதே!
    ஆம்., சூரியனை மூடி வைக்க மேகங்களால் ஆகாதே..!



    Thanks Nilaa

    ......................................
    பின்னூட்டம்

    தயாரிப்பாளர் காசில் ஊருக்கு செய்து பேர் வாங்கிய நபரின் ஊதுகுழல்கள் என்ன செய்யும்.T R

    ................................................
    முதன் முதலாக தான் தயாரித்த சொந்தப் படமான புதிய பறவையையே தன் சொந்த தியேட்டரில் வெளியிடாமல் பாரகன் தியேட்டரில் வெளியிட்டவர் நடிகர் திலகம். M T

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #448
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    பெங்களூரில் நடிகர் திலகம் பிறந்த நாள் விழா!!
    பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கும் காட்சி,




    Thanks Sekar.P
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #449
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    09-10-2020
    தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!


    மிருதங்க சக்கரவர்த்தி-...................... 1:30 pm ராஜ் டிவி,
    விடிவெள்ளி-.......................................... 1:30 pm வசந்த் தொலைக்காட்சி,
    பணம் -.................................................. .. 3:30. pm முரசு தொலைக்காட்சி,
    பந்தம் -.................................................. .. 7:30 pm வசந்த் தொலைக்காட்சி,
    பாலும் பழமும் -.................................... 10 pm - ஜெயா மூவியில்,


    Thanks Sekar.P

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #450
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நடிகர் திலகம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!!
    புதுவை
    கிழக்கு கடற்கரை சாலை,




    Thanks Sekar.P
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 45 of 117 FirstFirst ... 3543444546475595 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •