ஒரு முப்பது ஆண்டுகளாக பிதற்றி கொண்டிருக்கிறார்கள்.
அதாவது 1989 ஆம் ஆண்டு பொது தேர்தலில் நடிகர்திலகத்தின் தோல்வியில் இருந்து....
அரசியல் பண்டிதர்கள்,நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களில் பலர்..
அரசியல் தலைவர்களில் சிலர்......
இப்படி பல தரப்பட்டவர்கள்...
அவர்களின் பிதற்றல் இதுதான்...
ஆனான பட்ட சிவாஜிகணேசனே அரசியலில் தோற்று போனார்........

இந்த மதியூகிகள் அனைவருமே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தை இரண்டே ஆண்டுகளில் சுருக்கி முடித்து கொண்டார்கள்.
அதன் அடிப்படையில் தங்கள் முகாரியை ஆலாபனை செய்கிறார்கள்.
ஆனான பட்ட சிவாஜியே அரசியலில் தோற்று போனார்.......

அறியாமையால்..
உள்நோக்கத்தோடு..
சொந்த லாபம் கருதி..
அந்த முகாரியை ஆனந்தமாக அரங்கேற்றி வருகிறார்கள்....

நடிகர் திலகம் தேர்தல் அரசியலுக்கு 1957 ஆம் ஆண்டிலேயே வந்து விட்டார்....
தீவிர பிரச்சாரத்தை 1962 ஆம் ஆண்டு பொது தேர்தலில் செய்தார்.
அவரது வார்த்தையிலே சொல்வதென்றால் அந்த ஒரு தேர்தலிலே சில லட்சங்களை செலவு செய்திருக்கிறார்.
படப்பிடிப்புகளை ஒத்தி வைத்ததால் வருவாய் இழப்பு வேறு....
தீவிர பிரச்சாரத்தால் தொண்டை வலி யேற்பட்டு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்க பட்டிருக்கிறார்.
சில நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார்.
இது 1962 ஆம் ஆண்டு பொது தேர்தல் அனுபவம் மட்டும்.....
அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் திமுக ஐம்பது இடங்களை வென்றது.
அதில் ஒருவர் லட்சிய நடிகர் SSR....
தேர்தலில் 50 mla க்கள் கிடைத்ததால் இரு MLC சீட்கள் கிடைத்தன திமுகவிற்கு..
ஒருவர் mgr,மற்றவர் அன்பழகன்...
ஆக அந்த தேர்தலிலேயே நடிகர்கள் இருவரை சட்ட மன்ற இரு அவைகளுக்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்தார் அண்ணா...
ஆனால் கர்மவீரருக்கும் காங்கிரசுக்கும் அப்படி ஒரு சிந்தனை வரவில்லை.

1967,1971 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் mgr பரங்கிமலையில் திமுக வேட்பாளராக நின்றார்...வென்றார்....
நடிகர் திலகமோ பிரதிபலன் கருதாது உழைத்தார்...
கை பணத்தை செலவிட்டார்...
வருவாய் இழப்புக்கு ஆளானார்...
தனக்கோ தன் ரசிகர் மன்றத்திற்கோ தொகுதி ஒதுக்கீடு கேட்டாரில்லை...
1963 ஆம் ஆண்டில் பக்தவத்சலத்தை முதல்வராக்கி அழகு பார்த்தார் பெருந்தலைவர்...
C.சுப்ரமண்யத்தையும் தமிழக அமைச்சர்,மத்திய அமைச்சர் என்று பதவிகள் வழங்கினார்....

இன்றைய இளைஞர்களே,அந்த பக்தவத்சலம் 1967ஆம் ஆண்டு கட்சி தோற்ற மூன்றே ஆண்டுகளில் கர்மவீரரை கை கழுவி விட்டு கலைஞரிடம் தொகுதி உடன்பாடு பேச வந்து விட்டார் C.சுப்ரமண்யத்துடன்.
அதே 1967 ஆம் ஆண்டிலேயே தேர்தல் தோல்விக்கு பின் கட்சி நடத்த கூட காசில்லாமல் நடிகர் திலகத்தை நாடி வந்து கண்ணீர் விட்டார் கர்மவீரர்..
நடிகர் திலகம் வார்த்தைகள் தான் இது...
என்னுடைய பசப்பு மொழியல்ல..

சில மணிநேரத்திலேயே மூன்று லட்சம் ரூபாயை திரட்டி காமராஜரிடம் கொடுத்தார்,தனக்கென கட்சியிடம்,பெருந்தலைவரிடம் எதுவும் கேட்டு பெறாத நடிகர் திலகம்....
அரசியல் பண்டிதர்களே! ஊடக நெறியாளார்களே!
அந்த 1967 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு மாநிலம் முழுக்க சுற்றி அலைந்து கலைஞர் தேர்தல் நிதியாக திரட்டி அண்ணாவிடம் விருகம்பாக்கம் மாநாட்டில் கொடுத்த தொகை 11 லட்சம் ரூபாய்.
அண்ணா பூரிப்போடு சைதை தொகுதி வேட்பாளராக அதே மாநாட்டில் கலைஞரை வேட்பாளராக அறிவித்தார் இப்படி...
Mr.பதினொரு லட்சம் என்று......

சில மாதங்களில் நடிகர் திலகம் சில மணி நேரத்தில் கட்சி நடத்த நிதி கேட்டு கண்ணீரோடு வந்த கர்மவீரருக்கு ஏறத்தாழ கலைஞர் மாநில முழுதும் சென்று திரட்டிய தொகையில் நான்கில் ஒரு பங்கை,மூன்று லட்சத்தை தனிநபராக,பெருந்தலைவரின் விசுவாசியாக அவரிடம் வழங்கினார்...

எந்த நடிகருக்கு வரும் இந்த தயாள சிந்தை...
தலைவன் மீது விசுவாசம் ...பயன் கருதா அன்பு..

1987 ஆம் ஆண்டு mgr இறக்கும் வரை பொதுத்தேர்தல்கள்,அவ்வப்போது வந்த இடைத்தேர்தல்கள் வரை பிரதி பலன் கருதாமல் உழைத்தார் இயக்கத்திற்காக..
கொண்ட கொள்கைக்காக..
ஏற்று கொண்ட தலைமைக்காக....
எத்தனை எத்தனை வெற்றிகள் அந்த தேர்தல்களில்......
நடிகர்திலகத்திற்கு அந்த வெற்றிகளில் பங்குண்டு என்று MGR அவர்களே அங்கீகரித்தார்...

தேர்தல்களில் வெற்றி கணக்கு போட,சந்தர்ப்ப அரசியல் செய்ய தவறினார் நடிகர் திலகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நம்பியவர்களை கை விட்டார்...
தலைமைக்கு துரோகம் செய்தார்..
துரோக சிந்தனையால் தனி கட்சி துவங்கினார் என்றெல்லாம் நடிகர் திலகத்தை பற்றி விரல் நீட்ட முடியுமா?

பச்சை வயல் மனது அவருக்கு....
களைகள் அந்த மனதில் விளைந்ததில்லை....
பதர்கள் தோன்றியதில்லை அந்த நிலத்தில் விளைந்த நெல் மணிகளில்...
அவர் இந்த மண்ணின் அசல் வித்து.....

ஒரு 33 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் அவருக்கு பங்கிருந்தது...
அந்த அரசியல் வாழ்வில் பெரும் வெற்றிகளும் சில தோல்விகளும் இருந்தன....
துரோகமும் சந்தர்ப்ப வாதமும் அறவே இருந்ததில்லை...
அடிநாளில் இருந்தே தமிழுக்கும் தமிழருக்கும் தன் உடல் பொருள் ஆவியை கொடுத்தார் விளம்பரம் இல்லாமல்...

நடிகர் திலகத்தின் மீது நீங்கா அன்புடன்..
மாறா மதிப்புடன்...
பிரமிப்புடன்...
Vino Mohan.V


Thanks Vino Mohan.V