-
21st July 2021, 08:32 AM
#921
Senior Member
Devoted Hubber
கர்ணவள்ளல் திரு சிவாஜி கணேசன்
20 வதுநினைவு தினம் யூலை 21.
இடது கைக்கு தெரியாமல் கொடைகொடுத்த வள்ளல் சிவாஜி கணேசன் ,1953 ஆம் ஆண்டு திரை உலகில் நுழைந்த மறுவருடமே இலங்கைக்கு சென்று யாழ் மூளை வைத்தியசாலை கட்டிட நிதிக்காக உதவியவர். முதன் முதலாக எந்த ஒரு கட்சியிலும் சேராத தனிநபர் ஒருவர் இலங்கை தமிழ் மக்களுக்கெனஉதவியவர் என எடுத்துக்கொண்டால் அது சிவாஜி கணேசன் அவர்களாகத்தான் இருப்பார். தமிக பாடசாலைகளுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கு 1959 ல் 1 லட்சம் கொடுத்தவர் (இன்றைய மதிப்பு பல கோடிகள்) சிவாஜி கணேசன். மதிய உணவுத் திட்டத்திற்கு சிவாஜி கணேசனின் பெயரை சூட்டுவதற்கு அன்றைய முதல்வர் காமராஜர் விரும்பிய பொழுது தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டவர் பெருமைக்குரி வள்ளல் சிவாஜி அவர்கள்.இவை சிறு துளி மட்டுமே, பாடசாலை மதிய உணவுத்திட்டத்திற்கு மேலும் மேலும் கொடுத்தார்.பேரிடர் காலங்களில் கணக்கின்றி கொடுத்தார். அப்படிப்பட்ட வள்ளலின் இருபதாவது நினைவு தினம் யூலை 21 ல் அவரின் நினைவுகளை போற்றுவோம்.siva-704.jpgb2bce72f5abdc7b4681b9fba4b6949d6.jpgsiva-703.jpgsiva-156.jpgsiva-702.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2021 08:32 AM
# ADS
Circuit advertisement
-
21st July 2021, 05:12 PM
#922
Senior Member
Seasoned Hubber
காலம் பல கடந்தாலும் தலைவர் பணி செய்து கிடப்போம். உன்னை அனுதினமும் நினைக்கும் எங்களுக்கு நினைவு நாள் என்று தனியாக இல்லை. மறந்தால் தானே நினைப்பதற்கு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st July 2021, 05:12 PM
#923
Senior Member
Seasoned Hubber
நீண்ட நாள் கழித்து இவ்விணைப்பு நண்பர் வாசு மூலம் கிடைத்து நுழைய முடிந்திருக்கிறது. மிக்க நன்றி வாசு சார்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2021, 07:25 AM
#924
Senior Member
Devoted Hubber
Originally Posted by
RAGHAVENDRA
நீண்ட நாள் கழித்து இவ்விணைப்பு நண்பர் வாசு மூலம் கிடைத்து நுழைய முடிந்திருக்கிறது. மிக்க நன்றி வாசு சார்
வணக்கம் ராகவேந்திரா சார்!
வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்.
உங்கள் பங்களிப்பு தொடரட்டும்...
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd July 2021, 07:58 AM
#925
Senior Member
Devoted Hubber
நன்றி :
பத்திரிக்கையாளர், சினிமா தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் என்று பன்முகத்தன்மை உடைய திரு.சித்ரா லட்சுமணன் அவர்களின் காணொளியிலிருந்து....
--------------------------------------------
சிவாஜிக்கும் அவரோட ரசிகர்களுக்கும் இருக்கற பந்தம் இருக்கே, அது அலாதியான ஒரு பந்தம்.
சிவாஜி தன்னுடைய ரசிகர்களை என்றைக்குமே ரசிகர்களாகப் பார்த்ததே இல்லை.
தன்னுடைய குடும்பத்திலே ஒரு அங்கத்தினராகத்தான் தன்னுடைய ஒவ்வொரு ரசிகனையும் சிவாஜி பார்ப்பது வழக்கம். அதே மாதிரித்தான் சிவாஜி ரசிகர்களும்.
சிவாஜி ரசிகர்களுக்கு, சிவாஜி ஒரு நடிகர் மட்டும் அல்ல..சிவாஜி ஒரு கடவுள்.
இன்னைக்குக் காலைல, சிவாஜியோட சகோதரியின் மகனான குமாருடன் பேசிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்போ, ரசிகர்களுக்கும் சிவாஜிக்கும் உள்ள உறவைப் பற்றி, ஒரு மறக்க முடியாத சம்பவத்தைச் சொன்னார் குமார்.
'முதல் மரியாதை' படத்தை நீங்க பார்த்திருப்பீங்க.. அந்தப் படத்தின் உச்ச பட்சக் காட்சியில, சிவாஜி உடல் நலமில்லாமல் படுத்துக் கொண்டிருப்பார்.
எந்த நேரம் இறந்திடுவாரோ என்ற பரிதவிப்புடன், வெளியில் நிறையப் பேர் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்ப, ராதா ஒரு படகுல அந்த ஊருக்கு வந்து இறங்குவார். படகுல இருந்த எறங்கி, ராதா அந்த மண்ணுல காலடி எடுத்து வைப்பார்.. அப்போ சிவாஜியோட கை இருக்கே.. அப்படியே துடிக்க ஆரம்பிக்கும்..
அந்தக் காட்சியைப் பார்த்த பல ரசிகர்கள், அப்போது வியப்பில ஆழ்ந்து போனார்கள் என்றாலும், இன்னொரு பக்கம் அந்தக் காட்சியைப் பற்றி ஒரு சாரார் விமர்சனமும் செய்தார்கள், "இது கொஞ்சம் ஓவரான கற்பனையாக இல்லையா" என்று ..
ஆனால், சிவாஜியோட வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நெஜமாவே நடந்திருக்கு என்று கேட்டபோது, நான் அதிர்ந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தக் காட்சியை முதல் மரியாதை படத்தில படமாக்கும் போது, பாரதிராஜாவுக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், எப்படியோ தன்னுடைய கற்பனையில் அப்படி ஒரு அற்புதமான காட்சியை வைத்தார்.
இப்போ, குமார் சொன்ன சம்பவத்துக்கு வருவோம்.
ஒரு நாள் சிவாஜி குமாரைக் கூப்பிட்டு, "நாளைக்குக் காலைல கொஞ்சம் வேலூர் போகனும், தயாரா இரு" என்று சொன்னார்.
"சரிப்பா.." என்று சொல்லியிருக்கிறார் குமார்.
மறுநாள் காலைல ஆறு மணிக்கு ரெடியாகிப் புறப்பட்டுட்டார் சிவாஜி.. எங்கே ? வேலூருக்கு.
போகும் போதுதான் தான் எதற்காக வேலூர் போறோம்ங்கறதைக் குமார் கிட்டச் சொல்லியிருக்கிறார் சிவாஜி.
அப்போது வேலூர்ல ரசிகர் மன்றத் தலைவரா இருந்தது, 'பாலாஜி'ங்கற ஒரு இளைஞன். கல்யாணமாகி, ஏழெட்டு வருசம் இருக்கும். அந்த இளைஞன் கொஞ்ச காலமா உடல் நிலை சரியில்லாம இருந்தான். அவனைப் பார்க்கறதுக்காகத்தான் சிவாஜி வேலூர் போறார்.
தன்னுடைய ரசிகர் மன்றத்துப் பையன் ஒருத்தன், அவனுக்கு உடம்புக்கு சரியில்லைங்கற காரணத்துனால அவனைப் பார்க்கறதுக்கு, இந்த மாபெரும் நடிகர் அதிகாலைல ஆறு மணிக்குப் புறப்பட்டு வேலூர் போறார். ஆறு மணிக்குப் புறப்படனும்னா, சிவாஜி காலைல எத்தனை மணிக்கு எழுந்திருக்கனும் ? அதிகாலைல எந்திருச்சுக் குளிச்சுத் தயாராகி வேலூர் கிளம்பறார்.
போற வழியில் சிவாஜி ரசிகர் மன்றத்துப் பிள்ளைகள் சிலர் சிவாஜி கிட்டச் சொல்றாங்க.." பேச்சு மூச்சே இல்லைங்க அந்தப் பையனுக்கு... சாப்பிட்டே ரெண்டு மாசம் ஆச்சு.." ன்னு.
வேலூர்ல சந்து பொந்தெல்லாம் சுத்திப் போயி, அந்தக் கார் பையனுடைய வீட்டு வாசல்ல நிக்குது.
சிவாஜி அந்தப் பையனைப் பார்க்க வரப் போறார்ங்கற விசயம் அந்த ஊர்ல உள்ள சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவங்களுக்கும் அந்த ஊர்ல இருந்தவங்களுக்கும் தெரியும்கறதால, அந்தப் பையன் வீட்டு வாசல்ல ஒரு பெரிய கூட்டம்.
சிவாஜி காரை விட்டு இறங்கி.. சின்ன வீடு... குறுகலான அந்த வீட்ல.. குனிஞ்சு காலடி எடுத்து வைக்கும் போது, சிவாஜி சாதாரணமா கனைப்பார் இல்ல, அது மாதிரி, ஙெஹே ன்னு கனைச்சிட்டு, "பாலாஜி" அப்படீன்றார்..
அந்தப் பையன் உள்ளே படுத்திருக்கானே, அவனோட கை லேசா ஆட ஆரம்பிச்சது...இதைப் பார்த்த அவனோட உறவினர்கள் எல்லாம் ஆச்சர்யத்தில உறைஞ்சு போயிட்டாங்க..
உள்ளே போன சிவாஜி அந்தப் பையன் பக்கத்துல உட்கார்ந்து, "டே பாலாஜி.. அண்ணன் வந்திருக்கன்டா...பாலாஜி.. அண்ணன் வந்திருக்கேன்"ன்னு சொன்ன உடனே, அந்தக் கை தானாவே ஆடத் தொடங்கிடுச்சு.
அதுக்கப்புறம் ஒரு அஞ்சு நிமிசம் அங்கே இருந்துட்டு, " உடம்பைப் பார்த்துக்க... புரியுதா ? அண்ணன் திரும்பியும் இங்கே வரும்போது, நீ எழுந்து நின்னு அண்ணன் கிட்டப் பேசனும்.."ன்னு அந்தப் பையனைப் பாத்துச் சொல்லிட்டு அந்த ஊர்ல இருந்து கிளம்பிட்டார்.
இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, திருத்தணியில, சிவாஜி மன்றத் தலைவரான பூமிநாதன், ஒரு கேஸ் நிறுவனத்தைத் தொடங்க, அதன் திறப்பு விழாவுக்கு சிவாஜியை அழைக்கிறார். சிவாஜி அந்த விழாவுக்குப் போனார்.
அப்போ , அந்த ஊருக்குப் பக்கத்துல, நகரியில, சிவாஜி ரசிகர் மன்றத்தினர், "ஒரு கோயில் திருவிழா.. இங்கே திருத்தணி வரைக்கும் வர்றீங்க.. நகரி வரைக்கும் வந்துட்டுப் போங்க" ன்னு சிவாஜி கிட்ட சொல்றாங்க.
அதனால், நகரிக்கு, அந்தக் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச் சிவாஜி போகிறார்.
சிவாஜி போற இடத்துல, எந்தப் பையனைப் பார்க்கறதுக்காக சிவாஜி வேலூர் போனாரோ, எந்தப் பையன் மூச்சுப் பேச்சு இல்லாமப் படுத்துட்டு இருந்தானோ, அவன், சிவாஜியைப் பார்க்கறதுக்கு அந்த நகரியில துள்ளித் துள்ளிக் குதிக்கறான்.
அவனைத் தூரத்தில இருந்து பாத்துடறார் சிவாஜி.
"பாலாஜி... உனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதானே உடம்புக்கு சரியில்லாம இருந்தது ? ஏன் நீ இங்கே வந்தே ? நீ இங்கெல்லாம் சுத்தக் கூடாது.. வீட்டுக்குப் போ " அப்படின்னு சொல்லி, அந்தப் பையனைப் பாசத்துடன் கண்டிக்கிறார்.
இந்தச் சம்பவத்தைக் குமார் சொன்னபோது, அப்படியே திகைச்சுப் போயிட்டேன் நான்.
என்ன ஒரு பந்தம் பாருங்க ?
அந்த முதல் மரியாதை சம்பவம், இப்ப நூத்துக்கு நூறு சரின்னுதானே ஆகுது ?
சிவாஜிக்கும், ரசிகர்களுக்கும் உள்ள இன்னொரு தொடர்பையும் குமார் என்கிட்டச் சொன்னார்.
சிவாஜி மாதிரி, அவரோட ரசிகர் மன்றத்துல இருக்கற பசங்க இருக்காங்களே, அவங்களோட திருமணத்துல கலந்துகிட்ட நடிகர் வேறு யாருமே இருக்க மாட்டாங்க.
ஆயிரக்கணக்கான ரசிகர்களின் திருமணங்களுக்குச் சிவாஜி சென்றிருக்கிறார்.
இன்னிக்கும் சிவாஜி ரசிகர்களோட மனங்கள்ல சிவாஜி குடியிருக்கார்னா, அதுக்கு முக்கியமான காரணம் அதுதான்.
"அந்தப் பையன் சின்னப் பையனா இருக்கும்போது கல்யாணம் பண்ணியிருப்பான்.. அந்தக் கல்யாணத்துக்கு சிவாஜி வந்து போனார்ங்கற நினைவு, இன்னைய வரைக்கும் அந்தப் பையன் மனசுல இருக்கத்தானே இருக்கும் ? அப்படி இருக்கும் போது, அவனால எப்படி சிவாஜியை மறக்க முடியும்?"ங்கறார் குமார்.
சிவாஜியின் நினைவைப் போற்றுகின்ற இந்த நாளில், இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
கோடானு கோடி சிவாஜி ரசிகர்கள் இருக்காங்களே, அதில நானும் ஒருத்தன்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்.
-------------------------------------------------
காணொளியை எழுத்து வடிவமாக உருவாக்கியது....
நாகராஜன் வெள்ளியங்கிரி.
நன்றி
நாகராஜன் வெள்ளியங்கிரி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th July 2021, 02:48 AM
#926
Senior Member
Devoted Hubber
தமிழகத்தில் முதலமைச்சர் பதவிகள் வகித்தவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடும் ஆதரவாளர்கள் இருப்பதில் ஒரு உள் அர்த்தம் இருக்கலாம்
ஏனெனில் அவர்கள் பதவி வகித்த காலங்களில் அரசு சலுகைகள் என லட்சக்கணக்கானவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள், நேரடியாக அரசு பணிகளில் அமர்த்தப்பட்டார்கள் அவர்கள் அந்தந்த தலைவர்களை கொண்டாடுவதில் என்ன பெரிய ஆச்சர்யம் அதிசயம் இருக்கிறது?
ஆனால் நடிகர் திலகத்தின் வரலாற்றைப் பாருங்கள் அது போன்ற பெரியதொரு பதவிகளில் அமர்ந்து அதிகார துஷ்பிரயோகம் ஏதும் செய்து விடாமலே தனக்கு இரும்புக் கோட்டை போன்ற ஆதரவாளர்களை பெற்றவராக இருக்கிறார்,
மறைந்து 20 ஆண்டுகள் கடந்தும் கூட புகழ் போற்றும் தொண்டர்கள், பக்தர்கள்,ரசிகர்கள் என எத்தனை எத்தனை!
இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நடிகர் திலகம் சிவாஜியின் புகழ் மட்டும் நிலைத்து நிற்கும் என்பதே உண்மை,
siva-711.jpg
Thanks Sekar Parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st July 2021, 08:52 AM
#927
Senior Member
Devoted Hubber
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கதைக்கு உதவாத வெறும் பேச்சு"
தமிழகத்தை 1954 ஆம் ஆண்டின் போது கடுமையான புயல் தாக்கியது, தாக்குதலில் டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகியது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உதவிகள் செய்திட வேண்டும் என தீர்மானித்த திமுக தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் அன்றைய முன்னணி கட்சிப் பிரமுகர்களுக்கு நிதி வசூலித்து தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார், அவ்வாறு அதிக நிதி வசூலித்து தரும் பிரபலத்திற்கு பாராட்டு விழா மேடையில் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்றும் சேர்த்தே அறிவிப்பை வெளியிட்டார், அப்போதைய திமுகவின் மக்கள் கூட்டம் சேரும் பிரபலங்கள் என்று எடுத்துக் கொண்டால் பராசக்தி புகழ் நடிகர் திலகம் சிவாஜி, பராசக்தி கதை வசனகர்த்தா கலைஞர் கருணாநிதி என்று மட்டுமே இருந்தது,
இந்தக் கால கட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் நாடகமாகட்டும் தெரு முனை பிரச்சாரமாகட்டும் மக்கள் சங்கமித்து விடுவார்கள், மிகவும் பரப்பரப்பாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி சில நாட்கள் படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டு பராசக்தியின் வசனங்களை முக்கிய நகரங்கள் தோறும் தெருமுனை பிரச்சாரத்தில் நேரடியாகவே பேசினார் நடிகர் திலகம் சிவாஜி,
நிதி ஏராளமான குவிந்தது, மற்ற பிரபலமான திமுக முன்னோடிகளைக் காட்டிலும் நடிகர் திலகம் சிவாஜிக்கு பத்து மடங்கு அளவிற்கு கூடுதலாக நிதி குவிந்தது, குவிந்த நிதியை அறிஞர் அண்ணா அவர்களிடம் சேர்த்துவிட்டு சேலத்தில் இருந்த ஸ்டுயோவிற்கு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள செனவிட்டார் நடிகர் திலகம் சிவாஜி,
பாராட்டு விழா அழைப்பு வரும் உடனடியாக தகவல் தெரிவியுங்கள் என்று தனது இல்லத்தில் சொல்லி இருந்தார்,
ஆனால் பாராட்டு அழைப்பு வரவில்லை, மாறாக பாராட்டு விழா நடைபெற்றது அதில் அதிக வசூல் குவித்தவர் என்று எம்ஜிஆர்க்கு மோதிரம் அளிக்கப்பட்டது என்ற அதிர்ச்சியான தகவல் மட்டுமே வந்தது, உண்மை என்னவென்றால் எம்ஜிஆர் அவர்கள் நிதி வசூல் செயலில் ஈடுபடவே இல்லை, அவரை முறைப்படி திமுகவில் இணைத்து விடவே நடிகர் திலகம் சிவாஜிக்கு தொழில் முறை போட்டியாளர்கள், வளர்ச்சியை பிடிக்காதவர்கள் என்று ஒன்று சேர்ந்து அறிஞர் அண்ணா அவர்களிடம் உண்மைக்கு மாறாக தகவல்களை அளித்து எம்ஜிஆர் அவர்களை திமுகவில் இணைந்து மோதிரத்தையும் அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டார்கள்,
இத்தனையும் அரிந்து கொண்ட நடிகர் திலகம் சிவாஜி சென்னை திரும்பி அறிஞர் அண்ணா அவர்களை சந்திக்க முடிவெடுத்தார், ஆனாலும் இயக்குநர் பீம்சிங் அவர்கள் " எந்த உண்மையையும் அறிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே உங்களை புறக்கணித்து இருக்கிறார்கள் நாம் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என யோசனையை சொல்லவே முடிவை மாற்றிக் கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி,
மிகவும் மனக் குழப்பத்தில் இருந்த நடிகர் திலகம் சிவாஜியை இயக்குநர் பீம்சிங் அவர்கள் திருப்பதி சென்று வரலாம் என அழைத்துச் சென்றார்,
சிருப்பதி சென்று திரும்பும் போது தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடிகர் திலகம் சிவாஜியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள் எதிர்ப்பாளர்கள்,
எந்த நடிகர்களுக்காகவும் அவர்களை புகழ்ந்து எழுதவோ வரியை சேர்க்காத படுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் தனது பாடல் வரிகளில் இதையெல்லாம் தான் பாடல் வரி
Thanks Sekar Parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd August 2021, 09:36 PM
#928
Senior Member
Devoted Hubber
டிஜிட்டலிலும் வசந்த மாளிகை சாதனை!!
சென்ற 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 அன்று வசந்த மாளிகை டிஜிட்டலில் ரிலீஸானது, தமிழகம் முழுவதுமாக ஏறக்குறைய 85 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,
Opening collection Record என்ற புதிய படங்களுக்கு இனையான சாதனையை நிகழ்த்தி எக்காலத்திலும் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே வசூல் சாதனை நிகழ்த்தக் கூடியவை என நிரூபணம் செய்தது,
இந்த சாதனையை ஜீரணிக்க முடியாத ஒரு கும்பல் ஒரு பல்லவியை முகநூல் குழுக்களில் பாடிப் பார்த்தது, அதாவது புதிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததால் வசந்த மாளிகை வசூலை குவித்தது என்று,
அனைவருக்கும் புரிய வைக்கும் கடமை நமக்கு இருக்கிறது,
வசந்த மாளிகை ரிலீஸான நாளிலிருந்தும் அந்த வாரத்தில் ஓடிக்கொண்டிருந்த தமிழ் திரைப்படங்களையும் கணக்கில் கொண்டால் அதாவது வசந்த மாளிகை 6 வது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நாள் வரை 23 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தது,
ஜூன் 21 அன்றும் ரிலீஸானவையும் முன்னரே ஓடிக்கொண்டிருந்தவையும்,
1) தும்பா 2) பக்கிரி 3) மோசடி
4) சுட்டுப் பிடிக்க உத்தரவு 5) கேம் ஓவர் 6) நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
இரண்டாவது வாரம் ஜூன் 27/2019,
7) சிந்துபாத் ஜூவி 9) தர்ம பிரபு 10) ஹவுஸ் ஓனர்
மூன்றாவது வாரம் ஜூலை 05/07/19 ,
11) ராட்சஸி 12) களவாளி 2 13) காதல் முன்னேற்ற கழகம்
நான்காவது வாரம் 12 ஜூலை/19
14) போதை ஏறி புத்தி மாறி 15) வெண்ணிலா கபடி குழு 16) கூர்கா 17) கொரில்லா 18) ஆடை
ஐந்தாவது வாரம் ஜூலை 19/2019,
19) கடாரம் கொண்டான்
ஆறாவது வாரம் 26 ஜூலை 2019,
20) A1 21) சென்னை பழனி மார்ஸ் 22) டியர் காமரேட் 23) கொளஞ்சி .
மொத்தத்தில் இன்று வரை 23 புதிய படங்கள் வந்து போனபடி இருக்கிறது
வசந்த மாளிகை இன்று 42 வது நாளில் இருக்கிறது, வேறு எந்தப் புதிய படமும் 15 நாட்கள் கூட ஓடவில்லை,
வசந்த மாளிகை மேலும் 52 நாட்கள் வரை ஓடி விழாக் கண்டது, எட்டு வாரங்கள் வரை ஏறக்குறைய 30 புதிய திரைப்படஙள் வசந்த மாளிகை ஓடிக்கொண்டிருக்கும் போதே அடுத்த திரைக்கு வந்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் மதுரை கல்லனை திரையரங்கிலும் வெற்றிகரமாக 50 வது நாளைக் கொண்டாடியது, தொடர்ந்து சிப்டிங் முறையில் 100 வது நாட்களையும் அமர்க்களமாக கொண்டாடியது,
வசந்த மாளிகை சாதனையை இதற்கு மேலாக எடுத்துச் சொல்லத் தேவையில்லை,
siva-723.jpg
Thanks Sekar Parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th August 2021, 04:46 AM
#929
Senior Member
Devoted Hubber
நான்கு மாத காலமாக, நம்ம நாட்டிலும் எப்போது மூடிய திரையரங்குகள், திறப்பார்கள், என ஏங்கி கொண்டிருந்த நமக்கு,புதுவை மாநிலத்தில் திரையங்குகள் திறக்க அனுமதி அளித்தநிலையில், முதன்முதலில் நமது நடிகர் திலகத்தின் "கர்ணன் " காவியத்தை பாண்டி சண்முகா A/c dts complex ல் ஆகஸ்ட் 13 முதல் குதூகல ஆரம்பம். நம்ம தமிழ் நாட்டிலும் விரைவில்.......
siva-747.jpg
Thanks Divyafilms Chokkalingam
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th August 2021, 09:21 AM
#930
Senior Member
Devoted Hubber
நடிப்பின் இமயம் நடிகர்திலகம் சிவாஜிகணேசனும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து தமிழ்த் திரைக்கு வழங்கிய மாபெரும் வெற்றிக் காவியம் முதல்மரியாதை! இசைஞானி இளையராஜா,கவியரசு வைரமுத்து இருவரும் இணைந்து வழங்கிய இனிய பாடல்களும், உள்ளத்தை நெகிழ வைக்கும் காட்சி அமைப்புகளும் நிறைந்த இத்திரைப்படம் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் போற்றிக் கொண்டாடும் படங்களில் ஒன்று. இத்திரைப்படத்தைப் பற்றிய வெற்றிச் செய்திகளில் பத்துத் தகவல்களை இங்கு காணொளியாக்கி அன்பர்களுக்கு தரப்பட்டிருக்கிறது. பார்த்து மகிழ்வீர்களாக!
Thanks nilaas thiraikkoodam
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks