Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    7
    Post Thanks / Like
    பொதுவா யார் நடிகர்திலகத்தை பத்தி தப்பா பேசுனாலும் அதுக்கு நாம பதில் சொல்ல வேண்டியது அவசியமில்லே.ஏன்னா எதுக்குறது யாருங்கறது முக்கியம்.நடிகர்திலகம் அப்பிடின்னா அது ஒரு மலை.இமயமலைக்கு மேலே.ஏன்னா இமயமலை வளருதோ இல்லையோ சிவாஜி புகழ் நாளுக்கு நாள் வளந்துகிட்டேதான் இருக்கு.அதை அசைக்க முடியாது.
    போனவாரம் பயில்வான் ரங்கநாதன் நடிகர்திலகத்தை பத்திஒரு வீடியோ போட்டிருந்தாரு.இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லே.சாதாரணமா இந்த மாதிரி நபர்களுக்கெல்லாம் பதில் சொல்லித்தா சிவாஜி புகழ் வளருப் போகுதுன்னும் அர்த்தமில்லே! நடிகர்திலகத்தோட பாணி என்னன்னா இதையெல்லாம் சட்டை செய்யாம போறதுதா அவரோட வழக்கம் .அதே கருத்துதா நம்மதும்.ரங்கநாதன் இதே வேலையா வெச்சிருக்காருன்னோ இல்லையா? ஏன்? சிவாஜியப் பத்தி பேசுன்னத்தா எல்லோரும் பாக்கறாங்க அப்பிடிங்கறதாலே!
    அவரோட அந்த பப்ளிசிட்டிக்கு கூட நடிகர்திலகந்தா தேவைப்படுகிறார்.
    நாம பதிலுக்கு பதில் அவர பத்தி பேசி நம்ம தகுதிய குறைச்சுக்க விரும்பல.

    அவரு என்ன வீடியோவில சொல்லியிருந்தாரோ அவரு சொன்ன வரிகளுக்கு தான் இந்த பதில் வீடியோ.
    அவர் சொன்ன பாயிண்டுகளை பாப்போம் வரிசையா...
    முதல்ல ....

    சிவாஜிக்கும் இந்திரா அம்மையாருக்கும் பிடிக்காம போயிருச்சுன்னு சொல்லியிருக்காரு .
    இதுல என்ன விஷயம்னா ,சிவாஜிய பிடிக்காம போனதுக்குத்தா இந்திரா அம்மா கௌரவ m.p.பதவி கொடுத்தாங்களா ?

    அடுத்ததா பயில்வான் சொல்றாரு.
    எம்.ஜி.ஆரே கட்சி ஆரம்பிச்சுட்டார்.சிவாஜி ஆரம்பிச்சுதுலே என்ன தப்பு? அப்பிடீன்னு சொல்லியிருக்காரு .
    இதுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லே.அதுலேயே அந்த வரியிலேயே இருக்கே !
    அப்ப அவர விட இவருக்குத்தா தகுதி இருக்குதுன்னு அர்த்தம் ஆயிடறதா இல்லையா ?

    மன்ற தலைவர் ராஜசேகர் mla ஆனார் என்று சொல்கிறார் அடுத்ததாக.ஆக மன்ற தலைவரையே mla ஆக்கிய பெருமை சிவாஜிக்கு இருக்கிறதல்லவா ?

    சிவாஜிக்கு அரசியல் ஆசையே கிடையாது.கூட இருந்தவங்க தான் ஆரம்பிக்க வெச்சாங்க அப்பிடின்னு அடுத்த பாயிண்டை சொல்லறார் பயில்வான்.அப்ப அரசியல் ஆசையே இல்லாத மனிதர்தான் சிவாஜி அப்பிடிங்கற
    அர்த்தம் தானே !.கட்சின்னு ஆரம்பிச்சா அது அரசியல் ஆசை தானே! அது சிவாஜிகிட்டே இல்லேன்னு இவர் சொல்றப்போ அத விட நல்ல தகுதி என்ன வேணும் ?

    ரங்கநாதன் அடுத்ததா சொல்றப்போ ,சிவாஜி மக்களோட நல்லா கலந்து பழக மாட்டாருன்னு சொல்றாரு.நம்ம அரசியல் இங்க எப்படி இருக்குன்னு முதல்ல நாம பாக்கனும்.ஒரு வார்டு கவுன்சிலரா நிக்கறவங்க கூட பாக்கற மக்களை கையெடுத்து கும்பிடறதும் ,கை அசைக்கறதையும் சளைக்காம செய்யறான்.ஆனா அவன் கை அசைக்கறதுக்கு பின்னாடி, அவன் யாரு ?அவன்குணம் என்னானும் யாராச்சும் யோசிக்கறாங்களா ?
    வெறுமனே கை அசைச்சா போதும் ?அவன் பெரிய தலைவன் ஆயிடறான் இங்கே ?
    தமிழ்நாட்டுல கல்யாணம் காதுகுத்து கலா நிகழ்ச்சிகள் மத்த விசேஷங்கன்னு நெறய நிகழ்ச்சிகளில் மனைவியோடு வந்து கலந்துகிட்ட எந்த நடிகனாவது சிவாஜிக்கு இணையா இருக்காங்களா ?
    காங்கிரஸ் கட்சி வளந்ததுக்கு காரணமே சிவாஜிதான் .மக்களோட கலந்துக்காம இத செஞ்சிருக்க முடியுமா ?ஆனா மத்த தலைவருங்க செஞ்சமாதிரி சுயநலமாவோ தன் புகழ் வளத்துக்கனும் அப்பிடிங்கறதுக்காகவோ செய்யாமயும் ,
    தான் தலைவனாக நினைக்காமயும் ஒரு நல்ல தலைவனுக்காக செஞ்சார்.இதை மறுக்கறதுக்கு யாராச்சும் இருக்காங்களா? இல்லையே!

    அப்புறம் சாப்பாட்டு விஷயம்.
    சிவாஜி தனியாத்தான் சாப்பிடுவாராம்.
    சாப்பாட்டு விஷயம்கறதாலே ஒரு சாப்பாட்டு பழமொழிதான் நினைவுக்கு வருது.
    முழுப் பூசணிக்காயை சோத்துல மறச்ச மாதிரின்னுட்டு.இதுக்கு பதிலே சொல்ல வேண்டியதில்லே!
    சாப்பாட்டு விஷயத்துலே உலகத்திலேயே ரொம்ப பெரிய ஃபேமஸான விஷயம் அன்னை இல்ல சாப்பாட்டு விஷயம் தான் .
    இப்பவும் இளையதிலகம் பிரபு ,விக்ரம் பிரபு நடிக்கற படங்களில் நடிக்கற நடிகர்கள் ரொம்ப பெருமையா பேசற விஷயம் அன்னை இல்லத்து சாப்பாட்டு விஷயம் தான்.இது யார் சொல்லிக் கொடுத்த வழி?
    உலகத்துல எந்த நடிகன் வீட்டுல இது மாதிரி விஷயம் இத்தன காலமா நடக்குது?


    இந்த வீடியோல சில கேள்விய இவரே கேட்டுக்கறார் அதுக்குஅவரே பதிலும் சொல்லிக்கிறாரு.
    அந்த நடிகர்படம் தோத்தா ஏன்னு டூர் அடிப்பாராம் .சிவாஜி தானுன்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாராம்.
    டூர் அடிச்சா நல்ல நடிகன்னு பேர் வந்துருமா? வித்தை தெரியாதவன் தான் ஆயிரம் தில்லுமுள்ளு செய்வான்.

    இவர் சொன்ன இன்னொரு தவறான தகவல் என்னான்னா, கட்சி ஆரம்பிச்சா அந்த தலைவன்தான் செலவு பண்ணனும் சொல்லிட்டு சிவாஜியை குறிப்பிடுகிறார்.தமிழ்நாட்டுல சிவாஜிய தவிர எந்த தலைவனும் சொந்த காசுல கட்சிய நடத்துலே.சுவத்துல சின்னம் வரைஞ்சத கூட அழிக்கச் சொன்ன தலைவனும் சிவாஜி ஒருத்தர்தான்.இது தினமலர் நாளிதழே போன எலெக்ஷன்லே ஒரு செய்தியாவே போட்டிருக்கு.

    ரங்கநாதன் சொல்ற விஷயங்களிலேயே சில குழப்பமா தகவல்களை மாறிமாறி சொல்றாரு.அத நாம எப்படி புரிஞ்சு பதில் சொல்றதுன்னே தெரியலே.அந்த வீடியோலேயே ஒரு கமெண்ட் இருக்கு.நீங்க என்ன சொல்றீங்க! ஒரே குழப்பமா இருக்குன்னு.

    இந்த வீடியோல பயில்வான் சொன்ன உண்மை விஷயங்களையும் பாக்கலாம்.
    சிவாஜி தானுன்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாராம்.வீணாக எந்த விஷயத்திலேயும் தலையிட மாட்டாராம்.இதச் சொன்ன பயில்வான்,
    அடுத்ததா சொன்ன ஒரு விஷயம்,
    சிவாஜி தான் மட்டும் நடிச்சா போதாதுன்னு நினைக்கிற மனிதர்.தன் கூட நடிக்கிறவங்களும் நல்லா நடிக்கனும்னு நினைக்கறவர்னும் சொல்லியிருக்கார்.
    இதெல்லாம் தான் உலகத்துக்கு தெரிஞ்ச விஷயமாச்சே.
    அப்புறமா இன்னொரு விஷயத்தையும் சொல்றாரு.
    சிவாஜி எந்த நடிகையையும் அடிமையா நினைக்கல, வாழ்ந்ததில்லேன்னும் சொல்லியிருக்கார்.
    இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் மனசுக்குள்ள இருக்கு.ஆனா பரபரப்புக்காக பய்ளிசிட்டிக்காகவும்தான் அவர் இப்படி செய்கிறார்னு பேசறதிலிருந்து தெரியுது.
    ரங்கநாதன் குழப்பமாத்தான் பேசறாரு.ரொம்ப முரண் இருக்கு.
    தெளிவா திடமா பேசற ஆளுகளுக்குத்தா பதில் சொல்லனும்.

  2. Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •