-
31st March 2022, 07:51 AM
#1001
Senior Member
Devoted Hubber
ஒரு முறை தர்மர்.
கண்ணனிடம் சென்று கண்ணா.
நானும் இல்லையென்று வந்தவர்கெல்லாம் அள்ளி அள்ளி
கொடுத்திருக்கிறேன்.
ஆனால் கர்ணனையே!
கொடை வள்ளல் என புகழ்கிறார்கள்....
அப்படி என்னையும் புகழாமல்
கர்ணனை புகழ காரணம் என்ன
என கேட்டுள்ளார். தர்மர்.
அதற்கு கண்ணன் பரிசித்து
பார்த்துவிடலாம் என கூறி
தர்மரிடம் ஒரு தங்க மலையும்
கர்ணனிடம் ஒரு தங்கமலையும்
கொடுத்து மாலைக்குள் யார்?
கொடைவள்ளல் .
என தீர்மானிப்போம்.
என்றாராம்....
தர்மரோ?மலையை வெட்டி வெட்டி
தர்மம் செய்தபோது பாதி மலைதான்
மாலை வரை தர்மம் செய்தாராம்.
கண்ணன்பார்த்தபோது!
சரி கர்ணன் என்ன செய்துள்ளான்.
என பார்ப்போம் என்று சென்றால்
கர்ணன் ஒரு அரியணையில் அமர்ந்து
மலையை பார்த்து கொண்டிருந்தாராம்..
கண்ணனுக்கு ஆச்சரியம் கொடுத்தமலை அப்படியே உள்ளது
மாலை ஆகிவிட்டது ...
தீர்ப்பை கேட்டு கொடுத்துவிடலாம்
என கர்ணன் அருகே சென்று
வினாவினார்....
கர்ணன் பதில்கூறாமல் மலையை
பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது தர்மரும் வந்து பார்த்து விட்டு
இனி கொடைவள்ளல் நானே!
என தற்பெருமை கொண்டிருந்த வேலையில் ஒருவந்து என்வேலை
முடிந்தது எங்கள் மலையை
எடுத்து கொள்கிறோம்.
என்றாராம்.
கர்ணன் புறப்படும் வேலையில்
கண்ணன் என்ன நடக்கிறது என்று?
அதற்கு ஒருவர் கூறினாராம் நீங்கள்
தங்கமலையை கொடுத்த மறு நிமிடமே!
என்னை அழைத்து இந்தமலையை
உன்னிடம் கொடுக்கிறேன்.
நமது நாட்டு மக்களுக்கு பிரித்து
கொடுத்து விடு!
என்று காலையிலே கொடுத்து விட்டார்.
அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
மாலை வந்து எடுத்து கொள்கிறேன்
கொடுத்ததை பார்த்து கொள்ளுங்கள்.
என்றேன்.
அவரும் பார்த்து கொண்டு நான் வந்ததும்
ஒப்படைத்து செல்கிறார்.
என்றாராம்.
அதற்கு கண்ணன் பார்த்தீரா?
தர்மரே?
நீர் கொடுக்க போவதை ஊரெங்கும்
சொல்லி கொடுத்தும்
பாதி புண்ணியம் தான் சேர்த்தீர்.
ஆனால் சொல்லாமல் கொடுத்து
முழு புண்ணியம் மட்டுமல்ல?
வள்ளல் தன்மை பெருக்கி கொண்ட
கர்ணன் பெயர் என்றும்நிலைத்திருக்கும்....
சொல்லி கொடுத்த தர்மம் அள்ளி
தின்றவுடன் மறைந்து விடும்....
என்றாராம்.
கண்ணன்.
அப்படி சொல்லாமல் செய்த நடிகர்திலகம் புகழ் இன்றும் முதலாவதாக நிற்கிறது...
சொல்லி கொடுத்த தர்மம்.
புதிதாக வந்தவர் கடைசியில்
காலுக்கு கீழே!
siva-1125.jpg
Thanks Sivaji Palanikumar (Nadigar thilagam Sivaji Visirikal)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st March 2022 07:51 AM
# ADS
Circuit advertisement
-
5th May 2022, 06:15 AM
#1002
Senior Member
Devoted Hubber
மதுரையில் மட்டும் சுமார் பத்து லட்சம் மக்கள் தொகை இருந்த காலத்தில் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மட்டுமே 6.50 லட்சம் பேர் இந்த படத்தை கண்டு களித்து இருக்கின்றனர். அதன் பின்னும் 183 நாட்கள் பல திரை அரங்கு களில் ஓடி இருக்கின்றது. சுமார் ஒரு வருடம் வரை தொடர்ந்து ஓடி இருக்கின்றது.
சென்ட்ரல் திரையரங்கில் மட்டும் பார்த்த 6.5 லட்சம் மக்கள் இன்றைய கட்டணமான ரூபாய் 100 - 150 என்று கணக்கிட்டு பார்த்தால் ரூபாய் 6.50 கோடி முதல் 9.75 கோடி வரை வருகிறது.அதன் பின்பு 183 நாட்கள் ஓடி இருக்கின்றது. கிட்டத்தட்ட மதுரை நகரில் மட்டுமே இன்றைய கட்டணத்தில் கணக்கிட்டால் சுமார் 12 to 13 கோடிகள் வரை வர வாய்ப்பு உள்ளது.
கோடிக்கணக்கான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களின் வசூலை காட்டிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை 1970 களில் பெற்று இருந்தது என்று நாம் அறியலாம்
siva-019.jpg
Thanks Chandrasekaran Veerachinnu
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th May 2022, 06:20 AM
#1003
Senior Member
Devoted Hubber
இன்றோடு தனது 50 வது ஆண்டை நிறைவு செய்யும் பட்டிக்காடா பட்டணமா படத்தை பற்றி சில வரிகள்....
1972ம் ஆண்டு மே மாதம் 6ந் தேதி வெளியாகி தமிழகமெங்கும் மற்றும் கடல் கடந்த இலங்கையிலும் சக்கைப்போடு போட்ட ஒரு மாபெரும் ப்ளாக் பஸ்டர் படம்....
அது வரை வெளிவந்த கறுப்பு வெள்ளை படங்களை வசூலில் முறியடித்த படம்.....
அதன் பிறகு எத்தனையோ கருப்பு வெள்ளை படங்கள் வெளி வந்தும் இதன் சாதனை முறியடிக்கபடாமலே கருப்பு வெள்ளை படங்களின் சகாப்தம் முடிந்து விட்டது.....
திரையிட்ட இடங்களிலெல்லாம் நூறு நாட்கள் ஓடிய படம். முக்கிய நகரங்களில் வெள்ளி விழா கொண்டாடிய படம்....அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம்.......
தயாரிப்பாளருக்கும் வினியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பணத்தை வாரி வாரி வழங்கிய படம்.......
இசைத் தட்டு , வசனத் தட்டு விற்பனையில் சாதனை படைத்த படம்
மதுரை சோழவந்தானிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் 15 நாட்கள் தொடர் படப்பிடிப்பில் வெளிப்புற படப்பிடிப்பு நிறைவடைந்தது...........
படத்தின் நாயகி மதுரையில் ஸ்டார் ஓட்டலில் தங்கிக் கொண்டு தினசரி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் படத்தின் நாயகன் நடிகர் திலகம் சோழவந்தானில் பழம் பெரும் நடிகர் டி ஆர் மகாலிங்கம் அவர்களின் பங்களாவிலேயே தங்கிக் கொண்டார்...
இயக்கம் பி மாதவன் அவர்கள்
கதை வசனம் பாலமுருகன் அவர்கள்
இசை மெல்லிசை மன்னர் அவர்கள்
பாடல்கள் கவியரசர் அவர்கள்
ஒளிப்பதிவு பி என் சுந்தரம் அவர்கள்
தயாரிப்பு பி மாதவன்..........
நடிகர்கள் நடிகர் திலகம் விகே ராமசாமி எம்ஆர்ஆர் வாசு சதன் மற்றும் பக்கோடா காதர் ....நடிகைகள் கலைச்செல்வி ஜெயலலிதா மனோரமா சுகுமாரி புதுமுகம் சுபா மற்றும் எஸ்என் பார்வதி.......
கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு சிறந்த நடிகை விருதையும், சிறந்த படம் விருதையும் பிலிம்பேர் வழங்கியது....தேசிய அளவில் தமிழில் சிறந்த விருதை பெற்ற படம்
இந்த படத்தை பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே...
siva-020.jpg
Thanks Lakshmanan Lakshmanan (Nadigarthilagakm Fans)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th May 2022, 05:04 PM
#1004
Junior Member
Newbie Hubber
பொதுவா யார் நடிகர்திலகத்தை பத்தி தப்பா பேசுனாலும் அதுக்கு நாம பதில் சொல்ல வேண்டியது அவசியமில்லே.ஏன்னா எதுக்குறது யாருங்கறது முக்கியம்.நடிகர்திலகம் அப்பிடின்னா அது ஒரு மலை.இமயமலைக்கு மேலே.ஏன்னா இமயமலை வளருதோ இல்லையோ சிவாஜி புகழ் நாளுக்கு நாள் வளந்துகிட்டேதான் இருக்கு.அதை அசைக்க முடியாது.
போனவாரம் பயில்வான் ரங்கநாதன் நடிகர்திலகத்தை பத்திஒரு வீடியோ போட்டிருந்தாரு.இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லே.சாதாரணமா இந்த மாதிரி நபர்களுக்கெல்லாம் பதில் சொல்லித்தா சிவாஜி புகழ் வளருப் போகுதுன்னும் அர்த்தமில்லே! நடிகர்திலகத்தோட பாணி என்னன்னா இதையெல்லாம் சட்டை செய்யாம போறதுதா அவரோட வழக்கம் .அதே கருத்துதா நம்மதும்.ரங்கநாதன் இதே வேலையா வெச்சிருக்காருன்னோ இல்லையா? ஏன்? சிவாஜியப் பத்தி பேசுன்னத்தா எல்லோரும் பாக்கறாங்க அப்பிடிங்கறதாலே!
அவரோட அந்த பப்ளிசிட்டிக்கு கூட நடிகர்திலகந்தா தேவைப்படுகிறார்.
நாம பதிலுக்கு பதில் அவர பத்தி பேசி நம்ம தகுதிய குறைச்சுக்க விரும்பல.
அவரு என்ன வீடியோவில சொல்லியிருந்தாரோ அவரு சொன்ன வரிகளுக்கு தான் இந்த பதில் வீடியோ.
அவர் சொன்ன பாயிண்டுகளை பாப்போம் வரிசையா...
முதல்ல ....
சிவாஜிக்கும் இந்திரா அம்மையாருக்கும் பிடிக்காம போயிருச்சுன்னு சொல்லியிருக்காரு .
இதுல என்ன விஷயம்னா ,சிவாஜிய பிடிக்காம போனதுக்குத்தா இந்திரா அம்மா கௌரவ m.p.பதவி கொடுத்தாங்களா ?
அடுத்ததா பயில்வான் சொல்றாரு.
எம்.ஜி.ஆரே கட்சி ஆரம்பிச்சுட்டார்.சிவாஜி ஆரம்பிச்சுதுலே என்ன தப்பு? அப்பிடீன்னு சொல்லியிருக்காரு .
இதுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லே.அதுலேயே அந்த வரியிலேயே இருக்கே !
அப்ப அவர விட இவருக்குத்தா தகுதி இருக்குதுன்னு அர்த்தம் ஆயிடறதா இல்லையா ?
மன்ற தலைவர் ராஜசேகர் mla ஆனார் என்று சொல்கிறார் அடுத்ததாக.ஆக மன்ற தலைவரையே mla ஆக்கிய பெருமை சிவாஜிக்கு இருக்கிறதல்லவா ?
சிவாஜிக்கு அரசியல் ஆசையே கிடையாது.கூட இருந்தவங்க தான் ஆரம்பிக்க வெச்சாங்க அப்பிடின்னு அடுத்த பாயிண்டை சொல்லறார் பயில்வான்.அப்ப அரசியல் ஆசையே இல்லாத மனிதர்தான் சிவாஜி அப்பிடிங்கற
அர்த்தம் தானே !.கட்சின்னு ஆரம்பிச்சா அது அரசியல் ஆசை தானே! அது சிவாஜிகிட்டே இல்லேன்னு இவர் சொல்றப்போ அத விட நல்ல தகுதி என்ன வேணும் ?
ரங்கநாதன் அடுத்ததா சொல்றப்போ ,சிவாஜி மக்களோட நல்லா கலந்து பழக மாட்டாருன்னு சொல்றாரு.நம்ம அரசியல் இங்க எப்படி இருக்குன்னு முதல்ல நாம பாக்கனும்.ஒரு வார்டு கவுன்சிலரா நிக்கறவங்க கூட பாக்கற மக்களை கையெடுத்து கும்பிடறதும் ,கை அசைக்கறதையும் சளைக்காம செய்யறான்.ஆனா அவன் கை அசைக்கறதுக்கு பின்னாடி, அவன் யாரு ?அவன்குணம் என்னானும் யாராச்சும் யோசிக்கறாங்களா ?
வெறுமனே கை அசைச்சா போதும் ?அவன் பெரிய தலைவன் ஆயிடறான் இங்கே ?
தமிழ்நாட்டுல கல்யாணம் காதுகுத்து கலா நிகழ்ச்சிகள் மத்த விசேஷங்கன்னு நெறய நிகழ்ச்சிகளில் மனைவியோடு வந்து கலந்துகிட்ட எந்த நடிகனாவது சிவாஜிக்கு இணையா இருக்காங்களா ?
காங்கிரஸ் கட்சி வளந்ததுக்கு காரணமே சிவாஜிதான் .மக்களோட கலந்துக்காம இத செஞ்சிருக்க முடியுமா ?ஆனா மத்த தலைவருங்க செஞ்சமாதிரி சுயநலமாவோ தன் புகழ் வளத்துக்கனும் அப்பிடிங்கறதுக்காகவோ செய்யாமயும் ,
தான் தலைவனாக நினைக்காமயும் ஒரு நல்ல தலைவனுக்காக செஞ்சார்.இதை மறுக்கறதுக்கு யாராச்சும் இருக்காங்களா? இல்லையே!
அப்புறம் சாப்பாட்டு விஷயம்.
சிவாஜி தனியாத்தான் சாப்பிடுவாராம்.
சாப்பாட்டு விஷயம்கறதாலே ஒரு சாப்பாட்டு பழமொழிதான் நினைவுக்கு வருது.
முழுப் பூசணிக்காயை சோத்துல மறச்ச மாதிரின்னுட்டு.இதுக்கு பதிலே சொல்ல வேண்டியதில்லே!
சாப்பாட்டு விஷயத்துலே உலகத்திலேயே ரொம்ப பெரிய ஃபேமஸான விஷயம் அன்னை இல்ல சாப்பாட்டு விஷயம் தான் .
இப்பவும் இளையதிலகம் பிரபு ,விக்ரம் பிரபு நடிக்கற படங்களில் நடிக்கற நடிகர்கள் ரொம்ப பெருமையா பேசற விஷயம் அன்னை இல்லத்து சாப்பாட்டு விஷயம் தான்.இது யார் சொல்லிக் கொடுத்த வழி?
உலகத்துல எந்த நடிகன் வீட்டுல இது மாதிரி விஷயம் இத்தன காலமா நடக்குது?
இந்த வீடியோல சில கேள்விய இவரே கேட்டுக்கறார் அதுக்குஅவரே பதிலும் சொல்லிக்கிறாரு.
அந்த நடிகர்படம் தோத்தா ஏன்னு டூர் அடிப்பாராம் .சிவாஜி தானுன்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாராம்.
டூர் அடிச்சா நல்ல நடிகன்னு பேர் வந்துருமா? வித்தை தெரியாதவன் தான் ஆயிரம் தில்லுமுள்ளு செய்வான்.
இவர் சொன்ன இன்னொரு தவறான தகவல் என்னான்னா, கட்சி ஆரம்பிச்சா அந்த தலைவன்தான் செலவு பண்ணனும் சொல்லிட்டு சிவாஜியை குறிப்பிடுகிறார்.தமிழ்நாட்டுல சிவாஜிய தவிர எந்த தலைவனும் சொந்த காசுல கட்சிய நடத்துலே.சுவத்துல சின்னம் வரைஞ்சத கூட அழிக்கச் சொன்ன தலைவனும் சிவாஜி ஒருத்தர்தான்.இது தினமலர் நாளிதழே போன எலெக்ஷன்லே ஒரு செய்தியாவே போட்டிருக்கு.
ரங்கநாதன் சொல்ற விஷயங்களிலேயே சில குழப்பமா தகவல்களை மாறிமாறி சொல்றாரு.அத நாம எப்படி புரிஞ்சு பதில் சொல்றதுன்னே தெரியலே.அந்த வீடியோலேயே ஒரு கமெண்ட் இருக்கு.நீங்க என்ன சொல்றீங்க! ஒரே குழப்பமா இருக்குன்னு.
இந்த வீடியோல பயில்வான் சொன்ன உண்மை விஷயங்களையும் பாக்கலாம்.
சிவாஜி தானுன்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாராம்.வீணாக எந்த விஷயத்திலேயும் தலையிட மாட்டாராம்.இதச் சொன்ன பயில்வான்,
அடுத்ததா சொன்ன ஒரு விஷயம்,
சிவாஜி தான் மட்டும் நடிச்சா போதாதுன்னு நினைக்கிற மனிதர்.தன் கூட நடிக்கிறவங்களும் நல்லா நடிக்கனும்னு நினைக்கறவர்னும் சொல்லியிருக்கார்.
இதெல்லாம் தான் உலகத்துக்கு தெரிஞ்ச விஷயமாச்சே.
அப்புறமா இன்னொரு விஷயத்தையும் சொல்றாரு.
சிவாஜி எந்த நடிகையையும் அடிமையா நினைக்கல, வாழ்ந்ததில்லேன்னும் சொல்லியிருக்கார்.
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் மனசுக்குள்ள இருக்கு.ஆனா பரபரப்புக்காக பய்ளிசிட்டிக்காகவும்தான் அவர் இப்படி செய்கிறார்னு பேசறதிலிருந்து தெரியுது.
ரங்கநாதன் குழப்பமாத்தான் பேசறாரு.ரொம்ப முரண் இருக்கு.
தெளிவா திடமா பேசற ஆளுகளுக்குத்தா பதில் சொல்லனும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th May 2022, 06:25 PM
#1005
Senior Member
Devoted Hubber
திருடனுக்கு சிவாஜி கொடுத்த பரிசு |Sivaji Life History |Writer M.G.S.Inba | Part-54
Thanks Thirai chirpi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2022, 06:57 AM
#1006
Senior Member
Devoted Hubber
“சிவாஜிக்கு நிஜமாகவே ரத்தத் திலகமிட்ட பெண்”
- கவிஞர் வாலி
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த பிரம்மாண்டமான அரங்கில், என் இடப்புறம் சிவாஜி அவர்களும், வலப்புறம் திரு.துளசி வாண்டையார் அவர்களும் அமர்ந்திருக்க நான் கவியரங்கத்தைத் தொடங்கினேன்.
என் தலைமைக் கவிதை இதுதான்.
‘ஓ !
அர்த்தமுள்ள நடிகனே!
அவதார புருஷனே!
நீ
அஜந்தா எல்லோரா போல்-
அபூர்வமானவன்.
நீ-
பெரியாருக்குப்
பிரியமானவன்;
இருப்பினும்-
பெருமாள்தான்
உன்னைப்-
பெரும் ஆள் ஆக்கினார்.
நாங்களெல்லாம்-
பிறந்ததால் நடிக்கிறோம்;
நீ-
நடிக்கவே பிறந்தவன்.
உன்-
நிஜத்தில் நடிப்பில்லை;
உன்-
நடிப்பில் நிஜமிருக்கிறது.
நீ-
அழுதாலும், சிரித்தாலும்
மெய்யென எண்ணுகிறோம்;
காரணம்-
அதில் உயிர் இருக்கிறது;
ஆயினும்-
நீ
அக்கான்னா போல்
தனித்து நிற்கும்
அற்புதக் கலைஞன்!
பால்ய வயதில்
கல்வி கற்க
வாய்ப்பில்லாத நீ-
பிறகு ஒரு
கல்லூரியாகவே
மாறியிருக்கிறாய்!
அன்று நீ-
நாடகத்திலிருந்து
வந்திருக்கலாம்;
இன்று-
உன்னிடமிருந்துதான்
நாடகங்கள்
உற்பத்தியாகின்றன.
உன்
விழிகளைக் காட்டிலும்
அதிக
மொழிகள் தெரிந்தவன்
மாநிலத்தில் இல்லை!’
‘பதவி பழம் வேண்டி
பாரெல்லாம் சுற்றிய
பழனியாண்டி அல்ல நீ;
அன்னையை மட்டுமே
வலம் வந்து
அருட்கனி வாங்கிய
கணேசன்!’
– இப்படி நான் பாடியவுடன் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. உடனே, கூட்டத்திலிருந்து ஒரு நடுவயதுப் பெண்மணி மேடைக்கு ஓடி வந்தார்.
முற்றிலும் யாரும் எதிர்பாராத வண்ணம், அந்தப் பெண்மணி ஒரு சிறிய பேனாக் கத்தியால் தன் இடது கையைக் கீறி, அதில் வெளிப்போந்த உதிரத்தை வழித்தெடுத்து சிவாஜியின் நெற்றியில் திலகமிட்டார்.
‘ரத்தத் திலக’த்தில் நடித்த நடிகனின் நெற்றியில் ரத்தத்திலகம் இடப்பெற்று, உதிரம் சிவாஜியின் நீண்ட நாசி வழியே வழிந்தது.
– வாலியின் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ நூலிலிருந்து…
Ithayakkani Cinema Special
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd October 2022, 03:05 PM
#1007
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று மக்களால் அழைக்கப்படும்
விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி எனும் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து வணங்கி
மகிழ்கின்றது நம் குழு
சிவாஜி கணேசன் அவர்கள்,
சின்னையா மன்றாயருக்கும்,
ராஜாமணி அம்மாளுக்கும் 4 வது மகனாக விழுப்புரத்தில் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார்.
சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் விழுப்புரம். அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான்
சிவாஜி பிறந்தார்.
மேடை நாடக வாழ்க்கை :
சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றபோது தானும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், சிவாஜி கணேசன் மனதில் ஆழமாகப் பதிந்தது. நடிப்பின் மீது எற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தனது ஏழு வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டு இருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். அந்த நாடகக் குழுவில் இருந்த சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.
ஏழு வயது சிறுவனாக சிவாஜி கணேசன் நடித்த முதல் மேடை நாடகம் ராமாயணம் அதில் அவர் போட்ட வேடம் சீதை. ஆரம்பத்தில் பெண் வேடங்களில் நடித்த இவருக்கு பிறகு பரதன், சூர்ப்பனகை, இந்திரஜித்
என பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்ற்றிருந்தார்.
திராவிட கழக மாநாட்டில் (1946), பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
செய்த உதவிகள் :
கல்வி கூடங்கள் கட்டுவதற்கும், இயற்கை சீற்றங்களின் போதும்,போர் கால சமயங்களிலும் பல நிதி உதவிகளை சிவாஜி கணேசன் செய்துள்ளார். 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார். 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் கொடுத்துள்ளார்.
1965ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் தனக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 சவரன் போர் நிதியாக கொடுத்தார். கயத்தாரில் கட்டபொம்மன்
தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி, அதில் தனது செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார் அது இப்போதும் நினைவு சின்னமாக திகழ்கின்றது.
1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் திருவள்ளுவருக்கு தானே முன்மாதிரியாக நின்று சிலை அமைத்து கொடுத்தார். மேலும் உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் நிதியாக அளித்தார். தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கினார்.
திரைப்பட வாழ்க்கை :
சிவாஜி கணேசன் 1952 இல்
பி. ஏ. பெருமாள் முதலியார்
என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இது கிருஷ்ணன்-பஞ்சு என்ற இரட்டையரால் இயக்கப்பட்டது. இந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது, பல திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது, மேலும் அது வெளியிடப்பட்ட 62 மையங்களிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
சக்தி நாடகசபா நடத்திய நூர்ஜஹான் என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக நடித்த சிவாஜியின் நடிப்பு நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. எனவே பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்காக திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட கணேசனைப் புகைப்படமெடுத்து வசனம் பேசச் செய்தனர். அவர் திரைப்படத்தில் வரும் "சக்ஸஸ்" என்ற வசனத்தைப் முதல் முதலாக பேசி நடித்தார்.
இதற்குப் பல வித எதிர்ப்புகள் கிளம்பின. படத்துக்குப் பண உதவி செய்த ஏ.வி.எம். செட்டியாரும், புதுமுகத்தை வைத்துப் படமெடுப்பதை விரும்பவில்லை. ஆனால் பி.ஏ. பெருமாள் மட்டும் கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் பராசக்தி படத்தில் சிவாஜி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக கணேசனுக்கு மாத சம்பளமாக ₹250 வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பிற்கால முதல்வர் மு. கருணாநிதி இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.
நீளமான மற்றும் ஆழமான வசனங்களும் சிவாஜி கணேசனின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் அந்தஸ்து கொடுத்தது. 'சிவாஜி' கணேசன் 275 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் இரண்டு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
சரித்திர மற்றும் புராண படங்கள் :
இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.
விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடங்கள்
அதே போல் சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்டபொம்மன், வ. உ. சி போன்ற தேச தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடிக்க செய்தார். 1959 ஆம் ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததிற்காக ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வ. உ. சிதம்பரம் பிள்ளையாகவும் , ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் பகத்சிங், திருப்பூர் குமரன் போன்றோரின் வேடங்களிலும் , சினிமா பைத்தியம் படத்தில் வாஞ்சிநாதனாகவும் நடித்து திரைப்படங்களின் மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மக்களுக்கு உணர்த்தினார்.
புராண படங்கள் :
மேலும் சிவாஜி கணேசன் பல புராண கதாபாத்திரங்கள் மற்றும் கடவுளின் கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமானாக நடித்தபோது சிவபெருமானுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால்
புகழ பெற்றவர்.
சரஸ்வதி சபதம் திரைப்படத்தில்
நாரதராகவும் ,
திருவருட்செல்வர் திரைப்படத்தில்
சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் போன்ற நாயன்மார்களின் வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றார். மேலும் கந்தன் கருணை திரைப்படத்தில்
வீரபாகுவாகவும் , திருமால் பெருமை திரைப்படத்தில் பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களின் கதாபாத்திரங்களில் தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதனாக நடித்தார். அத்திரைப்படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 'நான் பரதனைக் கண்டேன்' என்று பாராட்டினார்.
குடும்ப மற்றும் சமூக திரைப்படங்கள்
’பா’ வரிசைப் படங்கள் :
’பா’ வரிசைப் படங்கள் எடுப்பவர் என்று பேரெடுத்தவர் இயக்குநர் ஏ. பீம்சிங். சிவாஜியை வைத்து இவர் இயக்கிய பல படங்களின் முதல் எழுத்து ‘பா’ என்றே ஆரம்பிக்கும். இவர்கள் கூட்டணியில் வந்த முதல் திரைப்படம் ராஜா ராணி. பின்னர் பதிபக்தி, பெற்ற மனம், படிக்காத மேதை போன்ற பல படங்களை ஏ. பீம்சிங் இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகப்பிரிவினை திரைப்படம் 1960 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.
1961ம் ஆண்டு வெளியான பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும் என மூன்று படங்களும் ‘பா’ வரிசைப் படங்களாக, சிவாஜி - பீம்சிங் கூட்டணியில் அமைந்தன. மூன்று படங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வெவ்வேறு கதைக்களத்துடன் வந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. அண்ணன் தங்கை பாசத்திற்கு உதாரணமாக இன்றும் பாசமலர் திரைப்படம் திகழ்கின்றது.
பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இஸ்லாமிய இளைஞராகவும், பாலும் பழமும் திரைப்படத்தில் மருத்துவராகவும் தனது சிறந்த நடிப்பு திறனை சிவாஜி கணேசன் வெளிப்படுத்தி இருப்பார். மேலும் சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.
வித்யாசமான கதாபாத்திரங்கள் :
ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கதாபாத்திரம் வித்யாசமாக இருக்க வேண்டும் என்பதில் சிவாஜி கணேசன் தனி கவனம் செலுத்தினார். அதற்கேற்றவாறு உடல்மொழி, ஒப்பனை, நடை, நடிப்பு போன்றவற்றை மாற்றியமைத்து கொள்வது இவரின் தனிச்சிறப்பாகும். பலே பாண்டியா, ஆலயமணி, குலமகள் ராதை, இருவர் உள்ளம், புதிய பறவை, ஆண்டவன் கட்டளை, சாந்தி, பழநி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, செல்வம், நெஞ்சிருக்கும் வரை, தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், தங்கச் சுரங்கம், தெய்வமகன், சிவந்த மண், எங்க மாமா,
வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், சவாலே சமாளி, ஞான ஒளி , பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, பாரத விலாஸ், கௌரவம் , ராஜபார்ட் ரங்கதுரை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
நகைச்சுவை திரைப்படங்கள்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள், சுமதி என் சுந்தரி, எமனுக்கு எமன் போன்ற திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்புக்காக போற்றப்பட்டவை.
பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள் :
கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர்", "பாவ மன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்..
புகழ் :
எகிப்து அதிபர் கமால் அப்தெல்நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்கும் ஆவேசமான கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசனை நேரில் காண வேண்டும் என்பதற்காக அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து சென்ற முதல் நடிகர் என்ற பெருமைக்கு உரியவர் சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
பெற்ற விருதுகளும், சிறப்புகளும் :
சர்வதேச விருதுகள் :
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
செவாலியர் விருது, 1995
இந்திய விருதுகள் :
பத்ம ஸ்ரீ விருது, 1966
பத்ம பூஷன் விருது, 1984
தாதாசாகெப் பால்கே விருது, 1996
தமிழக விருதுகள் :
கலைமாமணி விருது, 1962
சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது 1969. (தெய்வமகன்)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1972. (ஞான ஒளி)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1973. (கௌரவம்)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1985. (முதல் மரியாதை)
மற்ற விருதுகள் :
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின கௌரவ டாக்டர் பட்டம் 1986
என். டி. ஆர் தேசிய விருது (1998)
சிறப்புகள் :
1962 இல் அமெரிக்கா நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
தியாகராய நகரில் சிவாஜி கணேசனின் வீடான ‘அன்னை இல்லம்’ இருக்கும் சாலைக்கு 1995 ஆம் ஆண்டு தமிழக அரசு செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயரிட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத்துறைக்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 2018 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது.
சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான அக்டோபர் 1 2021 இல் கூகுள் தனது தேடுபொறியின் முகப்பு பக்கத்தின் அவரின் டூடுலை (Doodle) வெளியிட்டு சிறப்பு செய்தது..
வாழ்த்த வயதில்லை
வணங்குகின்றோம் ஐயா
நன்றி Prabu llaya ( Dr சிவாஐி கணேசன் சுயசரிதை.)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd October 2022, 02:04 AM
#1008
Senior Member
Devoted Hubber
ஒரு வசனத்தாலோ,
ஒரு காட்சி அமைப்பாலோ கதாநாயகனின் பிம்பம் விழுந்துவிடும்னு எழுத்தாளன் நினைக்கக் கூடாது.
அப்படி வசனத்தை மாத்தச் சொல்றவன் நடிகனாக இருக்க முடியாது.
"அம்மா தாயே பிச்சை போடு" ன்னு வசனம் எழுதினாக் கூட, கதாபாத்திரத்துக்கா அதை உணர்ச்யோடு சொல்லி பெயரை வாங்கிட்டுப் போறவன்தான் உண்மையான நடிகன்." ஒரு நேர்காணலில் சிவாஜி கணேசன் சொன்னது.
இந்தக் கருத்தும், எண்ணவோட்டமும் தான்
V.C. சி. கணேசன் என்ற சாமானியரை
நடிகர் திலகமாக உயர்த்தி வைத்தது.
நானெல்லாம் சிறுவயதில் தீவிரமான MGR ரசிகன்.
சும்மா டிக்கெட் குடுத்தா கூட சிவாஜி படத்தைப் பார்க்கமாட்டேன், காரணம் சண்டைக்காட்சி இருக்காது ஒரே அழுகாச்சியாஇருக்குங்குறது தான்.
அப்படி இருந்த நான் சிவாஜி கணேசன் படங்களைத் தேடித் தேடிப் பார்க்கக் காரணம் "கர்ணன்"
நான் முதன்முதலில் ரசித்துப் பார்த்த கணேசன் படம்
1982ல். நான் +1படித்த காலகட்டத்தில் பார்த்தது.
அதில் ஒரு காட்சியில்
இந்திரன்,தன் மகன்அர்ஜுனனுக்காக கர்ணனின் கவச, குண்டலங்களை யாசகம் கேட்க மாறுவேடத்தில் வருவார்.
சூரியனுக்கு கர்ணன் பூஜை செய்துகொண்டிருப்பார்.
பூஜை முடிந்துகர்ணன் புறப்பட யத்தனிக்கையில் சூரியன் அசரீரியாக வந்து எச்சரிக்கை செய்வார், யாசகனாக வந்திருப்பது இந்திரன் என்று.
வெளியே வரும் கர்ணணனைப் பார்த்து
"என்ன கொடுப்பான்எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான்
பொருளும் கொடுப்பான்
போதாது போதாதென்றால் தன்னைக் குடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே"
என்றுபோற்றிப் புகழ்ந்து பாடும் இந்திரனைப் பார்த்து,
"இவ்வளவு தானா நீ" அப்படிங்கிற மாதிரி முகத்தில் ஒரு பா(b)வம் காட்டியபடி நடந்து வருவார் பாருங்கள்,அப்படி இருக்கும் அந்தக்காட்சிக்காகவே அந்தப்படத்தை ஒட்டன்சத்திரம் சண்முகாத் தியேட்டரிலிருந்து
(இப்போது இந்தியன்) எடுக்கும் வரை தினமும் பார்த்தேன்.
அவரது கதாபாத்திரங்கள் கதாநாயகனைப் புனிதனாகக் காட்டாமல் பெரும்பாலும் சாமான்யனின் பலவீனங்களுடன்தான் கட்டமைக்கப்பட்டிருக்கும்,
(தில்லானா மோகானாம்பாள் சிக்கல் சண்முக சுந்தரத்தின் கதாபாத்திரம் சிறந்த உதாரணம்)
அப்படியே MGR ன் கதாபாத்திரங்களுக்கு நேரெதிர். இருந்தாலும் அவரை ரசித்துக் கொண்டாடினோம்.
கருப்பு வெள்ளை சகாப்தம் முடிந்து முழுவதும் கலர்ப் படங்களாக மாறிய காலகட்டங்களில் வெளியான முதல் மரியாதை தேவர் மகன், தாவனிக் கனவுகள் போன்ற சில படங்களைத் தவிர
அவரது வயதுக்கும் உடலமைப்பிற்கும் பொருந்தாமல் நடித்த அவரின் படங்கள்மீது எனக்குப் பெரிய ஈர்ப்பு இல்லை.
சிவாஜி கணேசன் தமிழ்ப்படங்களில் நடித்தது தமிழுக்கு அதிர்ஷ்டமாகவும், அவருக்கு துரதிருஷ்டமாகவும் போனது.
அவருக்கு சரியான மரியாதையை, அங்கீகாரத்தை நம் அரசாங்கங்கள் தரவில்லை.
அவரின்நடிப்புத் திறமையை சரியான முறையில் பயன்படுத்தவே இல்லை என்பது எனது கருத்து, - அழுக வெச்சே சோலிய முடிச்சிட்டானுக.
கமல்ஹாசனின் வார்த்தையில் கூற வேண்டுமென்றால், "சிவாஜி கணேசன் என்ற சிங்கத்திற்கு நாம் தயிர்சாதம் போட்டு வைத்திருந்தோம்".
#அன்புக்குமரன்
இன்று சிவாஜி கணேசன் பிறந்தநாள்
Thanks A.Anbukumaran
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th October 2022, 09:40 PM
#1009
Senior Member
Devoted Hubber
சிவாஜி படம் ஓடிய தியேட்டரில் பாம்பை விட்டார்கள்!
Thanks Inpa (Thirai chirpi)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th October 2022, 09:23 PM
#1010
Senior Member
Devoted Hubber
தற்போதைய பேச்சு ராஜ ராஜ சோழன் பற்றியது தான்
1973 ல் ராஜ ராஜ சோழன் வெளியான போது அப்போதைய அரசியல் காரணமாக எதிர் தரப்பினரின் பொய் பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மிகச்சிறந்த வெற்றியை அடைந்தது,
ராஜ ராஜ சோழன் முதல் இரண்டு வாரங்களில் மட்டுமே மின்சார தடை இருந்தும் கூட ரூ 25 லட்சம் வசூலைக் குவித்திருக்கிறது அது அதுவரை வேறு எந்தத் தமிழ் திரைப்படமும்.வசூலிக்காத வசூலாகும்,
இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால்
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம். வசூல் சாதனையை செய்து வருகிறது என்ற செய்தியை பார்க்க முடிகிறது
பொன்னியின் செல்வன் தமிழகம் முழுவதும் சுமார் 700 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, ஆனால் அப்போது ராஜ ராஜ சோழன் 35 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது,
35 திரையரங்குகளில் வெளியான ராஜ ராஜ சோழன் முதல் இரண்டு வாரத்தில் 25 லட்சம் ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது, அதாவது ஏறக்குறைய ஒரு திரையரங்கு 75 ஆயிரம் ரூபாயை வசூலித்தது எனக் கணக்கில் கொண்டு பார்த்தால் அந்த சாதனையை பொன்னியின் செல்வன் சாதனை பெற வேண்டும் எனில் 700 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் இன்றைய ரூபாய் மதிப்பின்படி ஒரு திரையரங்கில் 75 லட்ச ரூபாய் வசூலித்து ஒட்டுமொத்தமாக ப்சுமார் 500 கோடி ரூபாயாவது வசூலித்தால் மட்டுமே ராஜ ராஜ சோழன் வசூலை நெருங்க முடியும் ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை, 4000 க்கும் அதிகமான திரையரங்குகளில் உலகம் முழுவதுமாக வெளியான போதிலும் வசூல் ராஜ ராஜ சோழனை நெருங்கவில்லை,
ராஜ ராஜ சோழன் நடிப்பில் மட்டுமே உயர்ந்து நிற்கவில்லை
வசூலிலும் மிகப்பெரிய உயரத்தில் தான் நிற்கிறது,
அது காலம் கடந்து தெரிய வருகிறது,
siva-80.jpg
Thanks Sekar parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks