Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    எப்படி எல்லாம் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்பவர்களுக்கு.
    எங்களுக்கு சிவாஜி பிடித்திருக்கிறார். நல்ல விஷயங்களை எப்படி சொல்கிறார். அம்மாவை பூஜிக்கிறார். அண்ணனிடம் எப்படி பழக வேண்டும் தம்பியிடம் எப்படி பாசம் காட்ட வேண்டும் என்று சொல்லித் தருகிறார் ,படக் காட்சிகளில். அந்த நல்ல விஷயங்கள் மனதில் ஆழமாக இறங்குகின்றன. அடடே !
    இது நன்றாக இருக்கிறதே என்று வியப்பதோடு நின்று விடுவதில்லை மனம்.அவர் சொன்னதை நாமும் நம் குடும்பத்தாரிடம் செய்து காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அம்மாவை வணங்க தோன்றுகிறது .அண்ணனை நேசிக்க தோன்றுகிறது. குடும்பத்தை அரவணைத்து செல்ல தூண்டுகிறது.
    அட இது நல்ல விஷயங்கள் தானே! அவருடைய நடிப்பும் படக் காட்சிகளும் இதைத்தானே சொல்கின்றன. அதை தானே நம்மை செய்ய தூண்டுகின்றன. நல்ல விஷயம் தானே!இந்த நல்ல விஷயங்களை சொல்லும்போது தான் இதை மனதில் வைக்காமல் எடக்காக ஒரு கேள்வி வருகின்றது.
    ஏன் சிவாஜி குடிப்பது போல் நடிக்கிறாரே ,அப்படி செய்கிறாரே இப்படி செய்கிறார் என்று ..
    குடிப்பதாக நடித்தாலும் சரி, வேறு பல நடிப்பாக இருந்தாலும் அப்படி செய்வதால் ஏற்படும் வினைகளையும் அவர் சொல்லத்தானே செய்கிறார்.
    சமூகம் தன்னிலை பிறழாமல் இருக்கத்தான் கலைகள் உருவாகின .அந்தக் கலைகளின் மூலம் நல்ல விஷயங்களை சொல்லி சமூகத்தை செழுமையாக்குகின்றான் ஒரு கலைஞன். இதற்காக
    பிறந்தது தான் கலைகள் .
    உருவாக்கப்பட்டது தான் கலைகள் .
    அதைத்தான் செய்தார் சிவாஜி .அதனால் தான் எங்களுக்கு சிவாஜி பிடித்திருக்கிறது. மனதில் நல்ல விதைகளை விதைத்த மாமனிதர் சிவாஜி. அதை நாமும் பிறருக்கு சொல்லலாமே என்று சொல்லும்போது தான் இடக்கான கேள்விகள் வந்து விழுகின்றன .நல்லதைக் கற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக இருப்பவர்களிடம் இருந்துதான் இந்த மாதிரி கேள்விகள் பிறக்கின்றன ..
    இவர்கள் எப்படி எல்லாம் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள் தெரியுமா?
    எனது youtube சேனலில் சிவாஜி பற்றிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளேன். அந்த வீடியோவில் வரும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்று நடிகர் திலகம் ஜெமினி கணேசனுக்கு பின்னால் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படம்.அது பொதுவெளியில் பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படம்.
    முன் சேரில் ஜெமினி கணேசன் அமர்ந்திருக்கிறார் .ஜெமினிக்கு பின்னால் நடிகர் திலகம் அமர்ந்திருக்கிறார்.
    நடிகர் திலகத்தின் கால்கள் இரண்டும் நிலத்தை நோக்குவது போல் அந்த இணைப்பில் கால் வைத்தபடி இருக்கும் .அந்த வீடியோவில் இருக்கும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்று இது.இதைப் பார்த்து தான் கமெண்டில் ஒருவர் கேள்வி கேட்கிறார்? ஜெமினிகணேசனை பாருங்கள் எவ்வளவு அடக்கமாக அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார் பின்னால் உட்கார்ந்து இருக்கும் நடிகர் சிவாஜிக்கு மரியாதை தெரியவில்லையே ?
    என்று கேள்வி கேட்டுவிட்டு அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்து இருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பாக திரையரங்கில் ஒரு ஸ்லைடு போடுவார்கள் .முன்சீட்டில் கால் வைக்காதீர்கள் என்று? அதை குறிப்பிட்டு,
    சிவாஜி பாருங்கள் மரியாதை இல்லாமல் முன்னால் உட்கார்ந்து இருக்கும் ஜெமினி கணேசன் நாற்காலியின் கீழே காலை வைத்திருக்கிறார் என்று கேள்வி கேட்டிருக்கிறார்? அட எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் ? கேள்வி கேட்கிறார்கள்?
    சிவாஜி எது செய்தாலும் குற்றமாக தான் இவர்களுக்கு தெரிகிறது ...அந்த புகைப்படங்களை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களில் யாருக்கும் தோன்றாத கேள்வி இது ?
    சரி இவரை விடுங்கள் ஒரு பெரிய பிரபலமே கேள்வி கேட்ட விஷயத்துக்கு வருகிறேன்.
    நடிகர் திலகத்தின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. பாதி நாடகம் நடந்த முடிந்த நிலையில் நடிகர் திலகத்தின் உணர்ச்சிமயமான நடிப்பை பார்த்து மெய் மறந்த வாலி அவர்கள் பக்கத்தில் பக்கத்தில் இருந்த பிரபலத்திடம் ஆகா! நடிகர் திலகத்தை பாருங்கள் எப்படி அற்புதமாக நடிக்கிறார்,அவர் ஒரு சிறந்த அற்புதமான நடிகர் என்று கூறி இருக்கிறார் ..
    அதற்கு அந்த பிரபலம் எவ்வாறு பதிலளித்திருக்க வேண்டும்? கவிஞர் வாலி சொன்னதற்கு பதிலாக அந்த நடிப்பு சாதாரணம்தான் ,தன்னைக் கவரவில்லை என்று சொல்லி இருக்கலாம், ஏன் அந்த நடிப்பு பிடிக்கவில்லை என்று கூட சொல்லி இருக்கலாம். அது அவருடைய கருத்து. ஆனால் அந்த பிரபலம் அப்படி சொல்லாமல் ஏன் முத்துராமன் கூட சிறந்த நடிகர் தானே என்று பதில் சொல்லியிருக்கிறார். எந்தக் கருத்துக்கு எந்த பதில்? இதை என்னவென்று சொல்ல?
    முத்துராமன் சிறந்த நடிகர் தான். ஆனால் அதை எங்கே எப்படி சொல்ல வேண்டும் என்று நியதி இருக்கிறதல்லவா ?
    இந்த இடத்தில் ஒரு பத்திரிக்கை கேள்வி பதிலை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
    வாசகர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார் சிவாஜிக்கு இணையான நடிகர் என்று யாரைச் சொல்வீர்கள்?
    இந்தக் கேள்விக்கு பத்திரிகை அளித்த பதில் என்னவென்று தெரியுமா?
    சிவாஜிக்கு இணையாக மட்டுமல்ல அடுத்த இடத்தில் வைத்து பார்க்க கூட எந்த நடிகரும் இல்லை?
    சினிமாவை அதிகம் நேசிக்காதவர்கள் கூட ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் தான் ..
    இப்படிப்பட்ட கருத்து தான் உலகம் பூராவும் பரவி கிடக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அந்தப் பிரபலம் சொன்ன பதில் வேடிக்கையாக இருக்கிறதல்லவா ?சிவாஜியை எப்படி தாக்கலாம்? சிவாஜி எப்படி குறை சொல்லலாம் ..என்று ஒரு கூட்டம் ஆராய்ச்சி செய்து கொண்டே தான் இருக்கிறது ..
    நடிகர் திலகம் சிவாஜியே தான் நடித்த பல படங்களில் ஏற்கும் வேடங்களை பற்றி அவரே கூறுவார் ..
    படத்தில் கதாநாயகனாக நான் இந்த வேடத்தை ஏற்றாலும் இந்த கதாநாயக வேடத்தை விட இந்த துணை பாத்திரம் தான் இவ்வளவு சிறப்பு பெறும் ,நன்றாக இருக்கிறது என்று படத்தின் கதையை கேட்கும் போதே கூறி இருக்கிறார் .
    உதாரணம் உயர்ந்த மனிதன் நான் வாழவைப்பேன் போன்ற படங்கள். தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால் அந்த பாத்திரத்தை தான் ஏற்று மிகச் சிறப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்து இருப்பார் நடிகர் திலகம்.
    யாராவது சிவாஜி நடிப்பை இதைப் போற்றி புகழ்ந்தால்
    இடைச்செருகலாக அங்கே கேள்விகள் வரும் .ஏன் படத்தில் சிவாஜியை விட அவர் சிறப்பாக செய்திருக்கிறாரே என்று?
    இங்கே உண்மையைச் சொல்லவும் ஒருவர் தேவை இருக்கிறது. படத்தில் நடிக்க தெரியாத அவருக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததே சிவாஜி தான் என்ற உண்மையை அவர் சொல்லுவார் .
    அதைப் படித்து இருந்தாலும் தெரிந்து கொண்டாலும் இன்னமும் எதிர்மறை கேள்விகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன!
    அப்புறம் இந்த நன்கொடை விஷயங்கள் ..பண விஷயங்கள்.
    இவர்களுக்கு வள்ளல்கள் என்பவர்கள் யார்?
    வள்ளல் முடிவெடுப்பார். பணம் கொடுக்க ...
    பத்திரிக்கையாளர்களை அழைப்பார்.
    சம்பந்தப்பட்டவர்களை அழைப்பார் கொடுப்பார். மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகும்.
    சலாம் போடுகிறானா!
    இந்தா! பணம் பிடித்துக்கொள்!!
    என்று முதுகில் தட்டி கொடுத்து கொஞ்சம் பணம் கொடுத்து விட்டால் போதும் ..வள்ளலோ வள்ளல் என்று இங்கே பெயர் எடுத்து விடலாம் ..
    கண்டிப்பாக இது சிவாஜி அவர்களுக்கு தெரியாது ஐயா ..
    கொடையை கொடையாக செய்ய வேண்டுமே அன்றி ,அதை குடையாகப் பிடிக்கக் கூடாது.
    இதுதான் வள்ளல் குணம் .அதுதான் சிவாஜிக்கு தெரிந்தது.
    கொடுக்கும்போதே சொல்லிவிடுவார் யாருக்கும் தெரியக்கூடாது என்று.
    பணம் கொடுத்ததை பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய பத்திரிக்கை காரனுக்கும் பணம் கொடுக்க வேண்டும்.
    இது ஒரு தவறான வழிமுறை .அதை சிவாஜி செய்ய மாட்டார். பசியோடு இருப்பவனுக்கு மீனை கொடு என்பது ஒரு நாட்டு பழமொழி. அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடு என்பது இன்னொரு நாட்டு பழமொழி. சிவாஜியின் பாணி இரண்டாவது ...
    ஒரு நாட்டுக்கு எது முக்கியமான தேவைகளோ சேவைகளோ அதை சிவாஜி செய்தார் ..அவர் அளவுக்கு எவர் செய்ததும் கிடையாது என்பது தான் உண்மை.
    சிவாஜி செய்யாத நன்கொடைகளே இல்லை. தேச சேவைகளே இல்லை என்ற அளவுக்கு இப்பொழுதெல்லாம் அவரைப் பற்றிய ஏராளமான நன்கொடை செய்திகள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன ..
    நடிகர் திலகம் மறைந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன ..
    நல்ல விஷயங்களை நாளானாலும் காலமே சொல்லும் ...
    இன்னும் வரும்..
    செந்தில்வேல் சிவராஜ்...


    Thanks Sivajimurasu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •