-
18th March 2025, 08:04 AM
#1201
Senior Member
Devoted Hubber
சேலம் நகரில் நடிகர் திலகத்தின் முப்பெரும் விழா.
சில புகைப்படங்கள்.
siva-921.jpg siva-925.jpg
siva-922.jpg
siva-923.jpg
siva-924.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th March 2025 08:04 AM
# ADS
Circuit advertisement
-
20th March 2025, 07:43 AM
#1202
Senior Member
Devoted Hubber
திருப்பரங்குன்றம் லட்சுமி 18/03/2025 முதல்
தினசரி 3 காட்சிகள்
ராஜா
நன்றி தகவல் வெங்கடேஸ்வரன் .
siva-928.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th March 2025, 07:46 AM
#1203
Senior Member
Devoted Hubber
புதிய பொலிவுடன் கூடலூர் வேல்முருகன்
21/03/2026 முதல்
நடிகர் திலகத்தின் ராஜா.
siva-930.jpg
நன்றி தகவல் வெங்கடேஸ்வரன் .
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th March 2025, 07:52 AM
#1204
Senior Member
Devoted Hubber
திருநெல்வேலி ஶ்ரீரத்னாவில் a/c 2k
தினசரி 2 காட்சிகள்
2 pm & 6 pm
21/03/2025 முதல்
ராஜா
siva-929.jpg
நன்றி தகவல் வெங்கடேஸ்வரன் .
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th March 2025, 10:48 PM
#1205
Senior Member
Devoted Hubber
மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி ஆவணங்களுடன். #வள்ளல் எதிரிகள் வயிதெரிச்சல் DISLIKE மூலம் அம்பலம்.
Thanks NADIGARTHILAGAMTV
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st March 2025, 07:34 AM
#1206
Senior Member
Devoted Hubber
30/03/2025 முதல் திருப்பூர் குமார்நகர்
சரண் அரங்கில்
நடிகர் திலகத்தின் ராஜா.
siva-935.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st November 2025, 09:07 AM
#1207
Senior Member
Devoted Hubber
தமிழகமெங்கும் மீண்டும் பவனி வருகிறார் டிஜிட்டல் முறையில் ராமன் எத்தனை ராமனடி.
siva-978.jpg
siva-979.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Senior Member
Devoted Hubber
சிவாஜி நடித்து வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படம் 1969-இல் வெளிவந்த 'சிவந்தமன்' என்றுதான் நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு முன்பே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1962-இல் உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, திரு. பி.ஆர். பந்துலு இயக்கத்தில், சித்ரா கிருஷ்ணசாமி அவர்களின் சித்ரா ஆர்ட் புரொடக்ஷன் சார்பில் 'அக்கரைச் சீமையிலே' என்ற படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டது. 5,000 அடிகளுக்கு மேல் இப்படம் படம்பிடிக்கப்பட்டது.
படப்பிடிப்பு இடங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்;
'அக்கரைச் சீமையிலே' திரைப்படம் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த பாரிஸ், வட அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நியூயார்க், நயாகரா, சிகாகோ நகரங்கள் மற்றும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் ஆகிய முப்பெரும் கண்டங்களையும் இணைக்கும் தமிழ்ப் படமாக உருவாகி வந்தது. 5,000 அடிகளுக்கு மேல் வளர்ந்துவிட்ட இந்தப் படத்தை சித்ரா கிருஷ்ணசாமி தயாரித்தார்.
மேல்படிப்புக்காகச் செல்லும் இந்திய இளைஞன், அங்கே வெள்ளைக்கார யுவதியைக் காதலிக்கிறான். அப்போது அந்த இளைஞனுக்குக் கடிதம் ஒன்று தாய்நாட்டிலிருந்து வருகின்றது. இளைஞனைப் பற்றித் தான் சிறிதும் எதிர்பாராத விஷயம் ஒன்றை அதன் மூலம் அறிய வரும் அந்த வெள்ளைக்க்காரக் காதலி, அவனை மறந்துவிடத் தீர்மானித்து அமெரிக்காவிலுள்ள தனது சிநேகிதியின் வீட்டிற்குச் சென்று விடுகிறாள். அவளைத் தேடி அவனும் அமெரிக்கா செல்கிறான். அவள் நியூயார்க், நயாகரா, சிகாகோ என்று இடம் மாறிக்கொண்டே இருக்கிறாள். கடைசியில் அவளை எப்படியோ கண்டுபிடித்து விடுகிறான் அந்த இளைஞன். தன்னை புறக்கணித்துவிட்டு ஓடி வந்த காரணத்தைக் கேட்கிறான். அவள் அந்தக் கடிதத்தில் கண்ட விஷயத்தைச் சொல்கிறாள். அவன் அவளைத் தேற்றி தன்னுடன் தாயகம் அழைத்து வருகிறான்.
அவனுக்கு சிங்கப்பூரில் ஒரு தெரிந்தவன் இருக்கிறான். தங்கள் வருகையைப் பற்றி அவனுக்கு முன்கூட்டியே தெரிவிக்கிறான். சிங்கப்பூரில் அவர்கள் இருவரையும் வரவேற்கும் அந்த மாது, மலாயாவின் பாணியில் அவர்களுக்கு உடையணிவித்து மற்றுள்ள தனது நண்பர்களையும் அழைத்து நடனமாடி ஒரு வரவேற்பை அளிக்கிறார். அவன் காதலியுடன் தாயகம் திரும்ப, அங்கேதான் எரிமலை மீண்டும் குமுறுகின்றது...
இது கதை கரு...
இதில் காதலர்களாக நடிகர் வேந்தன் சிவாஜி கணேசனும், இவான் பெர்கர் என்ற பிரெஞ்சு நடிகையும் நடித்து வந்தார்கள். இந்தப் படத்தில் சிவாஜியுடன் நடிப்பதற்காக ஒரு தமிழ் நடிகையையே போட விரும்பினார் சித்ரா கிருஷ்ணசாமி. ஆனால், "உலகப் புகழ்பெற்ற சிவாஜி கணேசனுடன் நடிக்க நான் மிகவும் பிரியப்படுகின்றேன். எனக்கு நீங்கள் பணம் கூடத் தர வேண்டாம்" என்று கூறிவிட்டார் அந்தப் பிரெஞ்சு நடிகை. சிங்கப்பூரில் சிவாஜியின் சினேகிதியாகப் புகழ்பெற்ற மலாய் நடிகை சரிமா நடித்தார். 'ஷா பிரதர்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த நடிகை இவர்.
இந்தப் படம் மட்டும் வெளிவந்திருந்தால் தமிழக மக்களுக்குப் பல வகையிலும் ஒரு புதுமை விருந்தாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 1962-இல் நடிகர் திலகம் சிவாஜி மேற்கொண்ட உலகச் சுற்றுப்பயணத்தின்போது எடுத்து முடிக்கத் திட்டமிட்ட இந்தப் படம், ஏனோ வெளிவராமலேயே முடங்கிவிட்டது.
சிவாஜியின் குறிப்புகள்:
இந்தப் படத்தைப் பற்றி நடிகர் திலகம் தான் எழுதிய "101 உல்லாச நாட்கள்" என்ற கட்டுரையில் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட அந்தத் தகவல்கள் இதோ:
"சென்னையில் இரண்டாவது சர்வதேசப் பட விழாவிற்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு பட விநியோகஸ்தர் வந்திருந்தார். பாரிஸ் நகரத்தில் அவரைச் சந்தித்தோம். அவர் எங்களைச் சில ஸ்டுடியோக்களுக்கு அழைத்துப்போய்க் காட்டினார். ஸ்டுடியோக்கள் எல்லாம் சாதாரணமாகத்தான் இருக்கின்றன. அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை. நம் நாட்டில் உள்ள ஸ்டுடியோக்கள் இதைவிடச் சிறப்பாக இருக்கின்றன. இங்கேயதான் எனது நண்பர் சித்ரா கிருஷ்ணசாமி தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கே என்னுடன் நடிப்பதற்காக ஒரு பிரெஞ்சு நடிகை ஏற்பாடு செய்யப்பட்டார். 'உங்களைப் பார்த்ததும் நடிகராகவே நான் நினைக்கல. படத்தில் பெரிய பாகத்தில் நான் நடித்ததில்லை, சிறிய வேடங்களில்தான் நடித்திருக்கிறேன்' என்று சொன்னார் அந்த நடிகை. அவரது குழந்தை உள்ளத்தைப் புரிந்துகொண்ட நான், பின்னர் அவர் என்னைப் பற்றித் தெரிந்துகொண்டதும், 'பணமில்லாமலேயே நான் அவருடன் நடிக்கத் தயார்' என்று சித்ரா கிருஷ்ணசாமியிடம் சொல்லிவிட்டதையும் கேள்விப்பட்டேன். பாரிஸ் நகரத்தின் சில முக்கிய இடங்களில் நானும் இந்த நடிகையும் தோன்ற சில காட்சிகளை சித்ரா கிருஷ்ணசாமி எடுத்தார். அதுபோக லண்டனில்தான் மீண்டும் படத்தை அவர் எடுத்தார்."
இவ்வாறு நடிகர் திலகம் இந்தப் படத்தைப் பற்றிய குறிப்புகளை அந்தப் பதிவில் எழுதியுள்ளார்.
Thanks செந்தில்வேல்.
614137388_3394069250749317_1614747707989370887_n.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Senior Member
Devoted Hubber
Youtubil ல் TOP! சிவாஜியா? எம்ஜிஆரா?
Thanks SIVAJI MURASU
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks