-
17th August 2008, 12:34 AM
#11
Moderator
Diamond Hubber
நினைவலைகள்
இசைக்கென்று பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டிவியின் புதிய படைப்பு `நினைவலைகள்'. ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிரபல பின்னணி பாடகர்கள், இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இந்த வித்தியாசமான பேட்டி கலந்த பாடல் நிகழ்ச்சியை ஸ்ரீராம் தொகுத்து வழங்குகிறார்.
நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பிரபல வீணை வித்வான் ராஜேஷ்வைத்யா பங்கேற்கிறார்.
-
17th August 2008 12:34 AM
# ADS
Circuit advertisement
-
17th August 2008, 12:35 AM
#12
Moderator
Diamond Hubber
கல்விக்காக ஒரு சேனல்
டி.வி.சேனல்கள் கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான நேரமே மாணவர்களுக்கு பயனளிக்கும் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஆனால் புதிய சேனலான `டாப்பர் டி.வி.' 24 மணி நேரமும் கல்வி நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பும் விதத்தில் உருவாகியுள்ளது. மாணவர்கள் சந்தா மூலம் உறுப்பினராகலாம். பேராசிரியர்கள், சாதனையாளர்கள் மூலம் கல்வி சார்ந்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.
உயர்நிலை கல்வி மற்றும் மேல்நிலை கல்வி பயின்று பொதுத் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் இடம்பெறுவது சிறப்பு. 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள், மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் சார்ந்த பாடங்களும் நடத்தப்படுகின்றன.
டி.வி. மட்டுமின்றி, செல்போன் மற்றும் இன்டர்நெட் மூலமும் இந்த டி.வி. நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதி உள்ளது. இந்த டி.வி. குறித்த முழு விவரங்களையும் இந்த சேனல் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
-
17th August 2008, 12:38 AM
#13
Moderator
Diamond Hubber
கொல்லும் எறும்புகள்
மனிதன் உள்பட உலகின் அனைத்து உயிரினங்களையும் எடை போட்டால் மொத்த எடையில் 10 சதவீதம் எறும்புகளே இருக்கும். எண்ணில் அடங்காத அளவுக்கு 8 ஆயிரம் வகையான எறும்புகள் சுற்றித் திரிகின்றன. அப்பிராணி உயிரினமாக இருந்தாலும் சில வகை எறும்புகள் ஆளையே காலி செய்துவிடும் என்ற பேச்சும் உள்ளது.
உதாரணமாக ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள பிரமாண்ட எறும்பினங்கள் யானையையே உணவாக்கிவிடும் என்றும், ஆஸ்திரேலியாவில் உள்ள குதிக்கும் எறும்புகள் மனிதனுக்கு எமனாகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இதில் உண்மை உள்ளதா? என்பதை, பலவகையான எறும்புகளை ஆராய்ந்து விளக்குகிறார்கள். மேலும் எறும்புகள் வாழ்க்கை பின்னணியில் புதையுண்டுள்ள ரகசியங்களையும் கூறுகிறார்கள்.
`கில்லர் ஆன்ட்ஸ்' என்ற பெயரில் அனிமல் பிளானட் சேனல் ஒளிபரப்பும் இந்த நிகழ்ச்சியை நாளை இரவு 9 மணிக்கு காணலாம்.
-
17th August 2008, 12:47 AM
#14
Moderator
Diamond Hubber
மீண்டும் எஸ்.வி.சேகர்
12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போது சன் டிவியில் நிகழ்ச்சி வழங்குகிறார், நடிகர் எஸ்.வி.சேகர். சன் டிவியில் `மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியை வழங்கிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இப்போது கலைஞர் டிவியில் நிகழ்ச்சி வழங்குவதால், அந்த இடத்தில் இப்போது `மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியை வழங்க வந்திருக்கிறார், எஸ்.வி.சேகர்.
இதுபற்றி அவர் கூறும்போது "எனக்குஇப்போது சூரிய திசை நடக்கிறது. இந்த திசை அடிப்படையில் 12 வருடம் கழித்து சன்(சூரியன்) வாய்ப்பு அமைந்திருக்கலாம்'' என்கிறார்.
-
17th August 2008, 12:50 AM
#15
Moderator
Diamond Hubber
சின்னத்திரை வில்லி இப்போது...
சின்னத்திரையில் வில்லி நடிப்பில் முத்திரை பதித்துக் கொண்டிருந்த நடிகை புவனேஸ்வரியை சமீப காலமாய் தமிழ் சீரியல்களில் பார்க்க முடியவில்லை. அதே நேரம் தெலுங்கில் இப்போது பிஸியான தயாரிப்பாளர். ஈடிவியில் ஒளிபரப்பாகி வரும் `நு லேனு காவ்யா' என்ற சீரியல் இவரது சொந்தத் தயாரிப்பு தான்.
சீரியலோடு நின்றுவிடாமல் தெலுங்கில் படமும் தயாரிக்கிறார். சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளிவந்த குர்க்குரே தெலுங்குப் படம் சுமார் ரிசல்ட் தர, இப்போது அடுத்த படத் தயாரிப்பில் பிஸியாகி விட்டார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். ஜோடியாக நடிகை வேதிகா, சார்மி இருவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் முன்னணி இயக்குனர்கள் சீனிவாசன், கிரிபிரசாத் இருவரில் ஒருவர் படத்தை இயக்குகிறார்கள்.
"தமிழ்ப்படஉலகை மறந்து விட்டீர்களா? கேட்டால், "அதெப்படி மறக்கமுடியும்? எனக்கு நடிகை அங்கீகாரம் கொடுத்ததே தமிழ்த்திரை தானே. நேரம் பொருந்தி வந்தால் தமிழிலும் என் நடிப்பு தொடரவே செய்யும்''என்கிறார்.
-
17th August 2008, 12:51 AM
#16
Moderator
Diamond Hubber
இயக்குனர் சேத்தன்
சின்னத்திரை நடிகர் சேத்தன் இயக்குனர் ஆகிறார். தமிழில் வெற்றிபெற்ற ஆனந்தம் தொடரை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இப்போது கன்னடத்திலும் அந்த தொடரை தயாரிக்கிறார்கள். கன்னடத்தில் தொடரை இயக்குபவர் நடிகர் சேத்தன். இந்த தொடர் அங்குள்ள உதயா டிவியில் ஒளிபரப்பாகும்.
-
19th August 2008, 08:20 PM
#17
Moderator
Diamond Hubber
கலைஞர் டிவியில் அழகிய தமிழ் மகள்
கலைஞர் டிவியில் ஞாயிறு தோறும் காலை எட்டு மணிக்கு, பெண்களுக்காக ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சி அழகிய தமிழ் மகள். பாதிக்கப்படும் பெண்கள், தங்களின் குறைகளை தாங்களே மேடையேறி சொல்லும் வித்தியாசமான நிகழ்ச்சி இது.
ஜெர்மனியில் செஸ் சேம்பியன்ஷிப் போட்டிக்கு பங்கேற்க எந்த அமைப்பும் உதவாததை நிகழ்ச்சியில் சொன்ன பெண்ணுக்கு, அரங்கிலேயே 45 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து உதவிக்கரம் நீட்டியிருக்கின்றனர் பார்வையாளர்கள். இதுபோன்ற குறைகளை சொல்லும் பெண்களுக்கு உதவும் மேடை இது. நடிகை ரோகிணி , நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
-
19th August 2008, 08:22 PM
#18
Moderator
Diamond Hubber
அதிசய ராகத்தில் மாதங்கி
மெகா "டிவி'யில் ஒளிபரப்பாகும் அதிசய ராகம் நிகழ்ச்சி 42 வாரங்களை தாண்டி விட்டது. விஜய் "டிவி'யில் பாடகர்களை பேட்டி கண்டுவந்த மாதங்கி,
இப்போது மெகா சேனலில் அதிசய ராகத்தில் தொகுக்கிறார். வரும் வாரங்களில் கிருஷ்ண ராஜ், உன்னி மேனன் உட்பட, பிரபலங்கள் பங்கேற்கின்றனர். சனி இரவு 8 மணி, ஞாயிறு காலை 10 மணிக்கு பாருங்கள்.
-
15th September 2008, 01:30 PM
#19
Senior Member
Seasoned Hubber
* நடிக்க வரும் பிரபல நட்சத்திரங்கள் தங்களுடன்ஒரு உதவியாளரையும் அழைத்து வருவதுண்டு. நடிகை நித்யா ரவீந்தர் இதில் மாறுபட்டிருக்கிறார் உதவியாளர்கள் யாருமின்றி செட்டுக்கு வருகிறார். "உதவியாளர்களை அழைத்து வந்தாலும் தேடும்போது அவர்கள் கிடைப்பதில்லை அதனால் புரொடக்ஷன் ஆட்களையே பயன்படுத்திக் கொள்கிறேன்'' என்கிறார்.
* நடிகர் டெல்லி கணேஷ் திருப்பாவை தொடரில் அய்யங்கார் கேரக்டரில் நடிக்கிறார். "இதுவரை நடித்ததில் என் நடிப்புக்கு சவாலான கேரக்டர் இது'' என்கிறார்.
* ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் சொக்குதே மனம் இசைநிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
* நாகவல்லி தொடரில் நடிக்க பயன்படுத்திய பாம்புகள் பயிற்சி கொடுக்கப்பட்ட பாம்புகள்அல்ல. இப்போது படங்களில் பாம்புகளை பயன்படுத்த தடை இருப்பதால், மதுராந்தகம் அருகில் கிடைத்த ஒரு பாம்புபிடரான் வைத்திருந்த பாம்புகளை சீரியலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். பயிற்சி கொடுக்கப்படாத பாம்புகள் என்பதால் நடித்தவர்கள் திக்திக் மனத்துடனே நடித்திருக்கிறார்கள்.
* சென்னை நகரில் இப்போது பகல் நேரத்தில் ரோட்டோர படப்பிடிப்புகளுக்கு தடை விதித்து விட்டதால் ரோடு சம்பந்தப்பட்ட காட்சிகளை படம் பிடிக்க புதுச்சேரி போய் விடுகிறார்கள்.
* சின்னத் திரையில் நடிக்க வந்து மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமான போஸ் வெங்கட், இப்போது சின்னத்திரை தொடர்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பெரிய திரையில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
* உயிரோசை என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட கண்ணன் அந்தப் படம் வராததால் இப்போது சின்னத்திரை தொடருக்கு வந்து விட்டார். ஜே.கே. இயக்கி தயாரிக்கும் திருப்பாவை தொடரின் நாயகன் இவர்தான்.
* ஞாயிறுதோறும் சன் டிவியில் பயில்வான் ரங்கநாதன், வாசகி என நகைச்சுவைப் பட்டாளங்கள் நடிக்கும் மீண்டும் மீண்டும் சிரிப்பு தொடரில் இப்போது நடிகர் தாமுவும் இணைந்திருக்கிறார்.
* சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளரும் இன்றைய நடிகருமான சந்திரபோஸ், டாக்டர்கள் 10 நாட்கள் ஒய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியும் மூன்றாவது நாளே அவர் நடித்து வரும் சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
-
30th September 2008, 10:29 PM
#20
Moderator
Diamond Hubber
விஜய் டி.வி.யில் "அமெரிக்காஸ் ஃபன்னியஸ்ட் விடியோஸ்' என்ற தலைப்பில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சி, முதல்முறையாகத் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.
Bookmarks