1972 வருட சாதனைகள் தொடர்ச்சி

இந்த வருடம் வெளியான படங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் சாதனை புரிந்தன.

இதில் ராஜா, பட்டிக்காடா பட்டணமா மற்றும் வசந்த மாளிகை போன்றவை பெங்களூர்,மைசூர் மற்றும் கேரளத்திலும் பெரிய வெற்றி பெற்றது.

வசந்த மாளிகையின் முடிவு கேரளத்தில் சோகமாக அமைக்கப்பட்டது. அதாவது கேரள மக்களின் ரசனைகேற்ப, நாயகன் விஷம் குடித்து இறந்து விடுவது போல் அமைக்கப்பட்டது. அது அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, தமிழ் பட வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு இரண்டு மாநிலங்களுக்கு இரண்டு முடிவுகள் அமைக்கப்பட்டு அவை இரண்டுமே இரு மாநில மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதனையை முதன் முதலாக செய்ததும் நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை தான்.

வெளி நாடு

இலங்கையில் முதன் முதலாக திரையரங்கு வாசலில் ஒரு நடிகரின் சுழலும் கட் அவுட் வைக்கப்பட்டது நடிகர் திலகத்தின் ராஜா படத்திற்கு தான்.

இலங்கையில் வசந்த மாளிகை பெற்ற வெற்றியை அதற்கு முன் எந்த தமிழ் படமும் பெற்றதில்லை.

இலங்கையில் மூன்று அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய இந்த படம் ஓடிய நாட்கள் மற்றும் அரங்குகள்

கொழும்பு - கேபிடல் - 287 நாட்கள்

கொழும்பு - பிளாசா - 176 நாட்கள்

யாழ்பாணம் - வெலிங்டன் - 250 நாட்கள்

யாழ்பாணம் - லிடோ - 100 நாட்கள்

யாழ் - வெலிங்டனில் கட்டுக்கடங்காத கூட்டம். அதற்காக லிடோ அரங்கிலும் திரையிடப்பட்டது.ஒரு அரங்கில் காலை காட்சி 10 மணிக்கு ஆரம்பமானால் மறு அரங்கில் 10.15 மணிக்கு தொடங்கும். இப்படி 15 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு ரீலாக டாக்சி மூலமாக ஒரு அரங்கிலிருந்து மற்றொரு அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இப்படி யாழ் நகரில் 100 நாட்கள் வரை 4 காட்சிகளாக ஓடியது. அன்று வரை இலங்கை காணாத சாதனையாகும்.[ நன்றி யாழ் சுதாகர்].

இது இலங்கையில் எப்படிப்பட்ட வெற்றியை பெற்றது என்றால் இந்த பாடத்தின் பாடல்கள் இலங்கை வானொலியின் தமிழ் சேவையில் ஒலிப்பரப்பட்ட போது படத்தின் பெயரே கூறப்படாமல் பாடல் ஒலிப்பரப்பட்டது. அந்த அளவுக்கு படம் மிக பெரிய வெற்றி.

மறு வெளியீடிற்கு என்றே பிறவி எடுத்த படம் - வசந்த மாளிகை. அனேகமாக எல்லா வருடமும் மதுரையில் மற்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் வெளியான போது மக்கள் மீண்டும் மீண்டும் பெரிய வரவேற்பு நல்கி ஆதரித்தார்கள்.

பெங்களூரில் - 1984 ம் வருடம் மறு வெளியீட்டின் போது அருணா திரையரங்கில் ஓடிய நாட்கள் - 14 [ நன்றி செந்தில்].

(சாதனைகள் தொடரும்)

அன்புடன்