-
28th November 2008, 09:34 PM
#111
Moderator
Diamond Hubber
Makkal Kalai Iravu
(Makkal TV, Saturdays, 11 p.m.)
The Thiruvizhas are occasions when folklores from various corners of Tamil Nadu are performed as street plays, villupaattu and kaniyaan kooththu. The stories of Raja Harischandra, Nalla Thangaal and Ponnar Sangar are performed in this manner. For the first time, these performances have been televised and are telecast over a weekend for four hours.
-
28th November 2008 09:34 PM
# ADS
Circuit advertisement
-
30th November 2008, 04:44 AM
#112
Moderator
Diamond Hubber
எட்டுக்கு எட்டு
மக்கள் டிவியில் அன்றாட அரசியலை அலசும் அதிரடி நிகழ்ச்சி "எட்டுக்கு எட்டு.'' திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கருப்பன், சமூக அவலங்களுக்கு எதிராக சாட்டை தூக்கும் காத்தமுத்துக் கவிராயர்... தோல்பாவைக் கூத்து வழியாக பிரச்சினைகளை பேசும் நவீன பாவைக் கூத்து, விகட நிமிடம் என்று ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சுவை. மொத்தத்தில் "எட்டுக்கு எட்டு'' புதுச்சுவை. எட்டாவது எட்டு பரிசுச்சுவை.
-
30th November 2008, 04:44 AM
#113
Moderator
Diamond Hubber
மெகா டி.வி.யில் பெண்கள்.காம் நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு தேவையான தகவல்கள் ஒளிபரப்பப்படுகிறது. குறிப்பாக பெண்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக பல்வேறு தகவல்களை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.
-
30th November 2008, 04:45 AM
#114
Moderator
Diamond Hubber
சந்தை பகுதி
பொருட்களை எங்கு சென்று விற்பது, எப்படி விற்பது என்ற கேள்விகளோடு தினம், தினம் பலர் அல்லாடுகின்றனர். நல்ல பொருட்கள் எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது என்ற கேள்வியோடு சிலர் தவிக்கின்றனர். இந்த வாங்குபவர்களையும், விற்பவர்களையும் வசந்த் டிவி மூலமாக இணைக்கும் நிகழ்ச்சி "வாங்க விற்க.''
வாங்குபவர்கள், விற்பவர்கள் மட்டுமின்றி பொதுவானவர்களும் பங்கு கொள்ளும் இந்த நிகழ்ச்சி, வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 மணிக்கு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.
-
30th November 2008, 04:46 AM
#115
Moderator
Diamond Hubber
பர்ஸ்ட் ப்ரேம்'
ராஜ் டி.வி.யில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `பர்ஸ்ட் ப்ரேம்', இதில் வாரந்தோறும் நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
-
30th November 2008, 04:47 AM
#116
Moderator
Diamond Hubber
வசந்த் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "டூரிங் டாக்கீஸ்.'' புதிய படங்கள் பற்றிய இந்த விமர்சன நிகழ்ச்சியில் தியேட்டருக்கு வெளியே பிளாக் டிக்கெட் விற்பவரும், போலீஸ்காரரும் படத்தின் சகல அம்சங்கள் பற்றியும் விமர்சித்துக் கொள்வதாக நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.
-
30th November 2008, 04:47 AM
#117
Moderator
Diamond Hubber
மெகா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள சிந்தனையை தூண்டும் நகைச்சுவை காட்சிகளை தொகுத்து வழங்குகிறார், நகைச்சுவை நடிகர் அனுமோகன்.
-
30th November 2008, 04:50 AM
#118
Moderator
Diamond Hubber
ராஜா பெங்குவின்
அண்டார்டிக் போன்ற கடும் பனிப்பிரதேசங்களில் வாழும் பெங்குவின் இனங்கள் வசந்த காலத்தை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் பற்றிய நிகழ்ச்சி இது. கூட்டமாக வாழும் பெங்குவின்களில் ராஜா பெங்குவின் ஒன்றும் உள்ளது. ராஜா பெங்குவினை அடையாளம் கண்டு கொள்ளும் வழிகளும் உள்ளது. தலையை நிமிர்த்தி, கம்பீரமாக அந்த பெங்குவின் நடந்து வரும் என்பது போன்ற சுவாரசிய தகவல்களுடன் இந்நிகழ்ச்சி தொகுக்கப்பட்டுள்ளது.
அனிமல் பிளானட் சேனல், பெங்குவின் சபாரி என்ற பெயரில் வரும் திங்கள் இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
-
30th November 2008, 04:51 AM
#119
Moderator
Diamond Hubber
மக்கள் கலை இரவு
மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி "மக்கள் கலை இரவு.''
தமிழகத்தின் நாட்டுப்புற கதையாடல்கள் பல்வேறு கலை வடிவங்களாக இப்பொழுதும் திகழ்கின்றன. ஊர் திருவிழாக்கள் , பண்டிகைகள், சிறு தெய்வ வழிபாட்டு நிகழ்வுகள் என்று வட்டாரம் சார்ந்த விழாக்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய விழாக்களின்போது அந்தந்த வட்டாரம் சார்ந்த நாயகர்களின் வாழ்க்கை வரலாறு விடிய விடிய நடத்தப்படுகின்றன. நல்லதங்காள், அரிச்சந்திரன், முத்துப்பட்டன், பொன்னர் சங்கர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு தெருக்கூத்து, கணியான் கூத்து, வில்லுப்பாட்டு என்று பல்வேறு வடிவங்களாக காட்சிப்படுத்தப்பட்டு, முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
-
30th November 2008, 04:52 AM
#120
Moderator
Diamond Hubber
ஓடிவிளையாடு பாப்பா
மழலைச்செல்வங்கள் தங்கள் தனித்திறமைகளை அழகிய மழலை மொழியில் பேசி, பாடி, நடித்து, மாறுவேடங்களில் நேயர்கள் முன் தோன்றி மகிழ்வித்து வரும் நிகழ்ச்சி, `ஓடிவிளையாடு பாப்பா.' ராஜ் டி.வி.யில் இந்த நிகழ்ச்சி திங்கள் தோறும் மாலை 6.05 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
Bookmarks