-
30th November 2008, 04:52 AM
#121
Moderator
Diamond Hubber
என்றும் எம்.எஸ்.வி
திரை இசைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து மெல்லிசை மன்னர் எனப் பெயர் பெற்றவர், எம்.எஸ்.விஸ்வநாதன்.
நடிப்பிலும் பாட்டிலும் இசையிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அந்த காலத்தில் தாம் இசையமைத்த திரைப்படங்கள் உருவான விதம், பாடல்கள் உருவான விதம், அதற்கான கால சூழ்நிலைகள், சம்பவங்கள் குறித்து தமது இசை அனுபவங்களை மெகா தொலைக்காட்சி நேயர்களிடையே மெல்லிசையுடன் `என்றும் எம்.எஸ்.வி' என்ற தலைப்பில் பகிர்ந்து கொள்கிறார்.
மெகா டி.வி.யில் ஞாயிறு காலை 10 மணிக்கும், வெள்ளி இரவு 8 மணிக்கும் இந்த நிகழ்ச்சியை காணலாம்.
-
30th November 2008 04:52 AM
# ADS
Circuit advertisement
-
30th November 2008, 04:53 AM
#122
Moderator
Diamond Hubber
தமிழில் ஆலிவுட் படம்
ராஜ் டிவியில் இன்று மாலை 4 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாகும் ஹாலிவுட் படம் "மிஸ்டர் போன்ஸ்.''
`காட் மஸ்ட் பி கிரேசி' என்ற வசூல் சாதனைப் படத்தின் தயாரிப்பாளர்தான் இந்தப் படத்தையும் தயாரித்தவர். இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் சாகசம் நிறைந்தது. படத்தை தணிக்கை செய்த அதிகாரிகள் "இது குழந்தைகள் படம்'' என்று சென்சாரிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவில் உருவான இந்தப் படம் நகரம்-கிராமம் இரண்டு பின்னணியிலும் படமாக்கப்பட்டது. முழுக்க காமெடியை மையமாக வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் சிரிப்பில் குலுங்கப் போகிறார்கள்.
-
30th November 2008, 04:54 AM
#123
Moderator
Diamond Hubber
நீயா-நானா?
பல புதிய தலைப்புகளில் வாரா வாரம் விவாதிக்கும் நிகழ்ச்சிதான் விஜய் டி.வி.யின் நீயா-நானா?.
அன்றாட வாழ்வில் சந்திக்கும் அனுபவங்கள், சம்பவங்கள் இந்த நிகழ்ச்சியின் தலைப்பாகி விவாதப் பொருளாகிறது. இந்த வாரம் கணவன்- மனைவி என்ன பேசுவார்கள் என்ற தலைப்பில் விவாதிக்கிறார்கள்.
கணவன்மார்கள் ஒருபுறமும், அவர்களின் மனைவியர்கள் மற்றொருபுறமும் விவாதத்தில் பங்கெடுக்கிறார்கள். இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது நாளை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்தால் தெரியும்.
கோபிநாத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
-
30th November 2008, 04:55 AM
#124
Moderator
Diamond Hubber
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சி பல சுற்றுகளை கடந்துள்ளது. நடந்து முடிந்த தனிநபர் மற்றும் குழு சுற்று போட்டிகளில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை நிரூபித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்கள்.
இனி ஆண்களுக்கான குழு சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் 13 நடனக் கலைஞர்களும் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து விதவிதமான நடன வகைகளை ஆடி கலக்க உள்ளனர்.
ஹிப்-ஹாப், பரத நாட்டியம், கிராமிய நடனம், மேற்கத்திய நடனம் என பல்வேறு நடன வகைகள் இதில் அடக்கம். அதிலும் பாடி ஜாம், பாப்பிங், ஜாஸ் போன்ற மேற்கத்திய நடன வகைகள் இந்த நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக இடம் பெறுகிறது.
நடிகை சமிக்ஷாவுடன் அஷோக் ராஜா, ஜானி மாஸ்டர், நோபில் ஆகியோரும் நடுவர்களாக பங்கெடுக்கின்றனர்.
விஜய் டி.வி.யில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
-
6th December 2008, 07:54 PM
#125
Moderator
Diamond Hubber
ஜெயா டிவியில் இல்லத்தரசிகள் பங்கேற்கும் `மிஸஸ் ஹோம் மேக்கர்'
ஜெயா டிவியில் இல்லத்தரசிகள் பங்கேற்கும் `மிஸஸ் ஹோம் மேக்கர்' நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி வெள்ளி தோறும் 5 வாரம் ஒளிபரப்பாகும்.
இல்லத்தரசிகள் பங்கேற்கும் சமையல் பகுதி இதில் இடம் பெறுகிறது. கியாஸ் அடுப்பையோ, நவீன சமையல் பாத்திரங்களையோ இதில் யாரும் பயன்படுத்தப்போவதில்லை. மாறாக நம்நாட்டு பாரம்பரிய உடையணிந்து அறுசுவை உணவுகளை இல்லத்தரசிகள் படைக்கவுள்ளது பார்வையாளருக்கு விருந்தாக இருக்கும். கிராமிய சூழலில் விறகு அடுப்பு மூட்டப்பட்டு வகைவகையான பதார்த்தங்களை அவர்கள் சமைக்க உள்ளனர்.
அது மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த போட்டிகளும், படைப்பாற்றலை பரிசோதனை செய்யும் போட்டிகளும் இடம் பெற உள்ளன. இளமைக்கால நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் சுற்றுலா அனுபவங்கள், ஆட்டம் பாட்டம் அனைத்தும் உண்டு. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்கப்பட்டு வெள்ளிதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
.
-
6th December 2008, 07:57 PM
#126
Moderator
Diamond Hubber
ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில காமெடி கலாட்டா.
ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி காமெடி கலாட்டா.
கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு நடிப்பில் வெளிவந்த காமெடிக் காட்சிகள் இதில் இடம் பெறு கின்றன.
.
-
6th December 2008, 07:59 PM
#127
Moderator
Diamond Hubber
விஜய் டி.வி.யில - கோலிவுட் இஸ்கூல்'
விஜய் டி.வி.யில் இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி `கோலிவுட் இஸ்கூல்'.
மலையாளி, சேட்டு, சர்தார்ஜி என்று பல்வேறு வேடங்களில் வரும் கோலிவுட் கதாபாத்திரங்கள் எப்படி தமிழ் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து தருகிறார்கள். இவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் கறார் ஆசிரியர்தான் `லொள்ளு சபா' சுவாமிநாதன்.
தமிழ் உச்சரிப்பில் நடக்கும் குளறுபடிகள், பிழைகள், அடிக்கும் லூட்டிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
.
-
6th December 2008, 08:00 PM
#128
Moderator
Diamond Hubber
மக்கள் தொலைக்காட்சியில்-ஏலேலங்கடி ஏலேலோ
தமிழ் இசை உலகில் செவ்வியல் சார்ந்த பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், திரை இசைப் பாடல்கள் என்று ஏராளமான வடிவங்கள் உள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட இசை வடிவத்துடன் வருவது தான் இந்த நிகழ்ச்சி. சித்தர்களின் பாடல்கள் தொடங்கி இசை வடிவம் காணாத பாமரர்கள் எழுதிய பாடல்களுக்கு புதிய பாணியிலான இசை வடிவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
இசை அமைப்பாளர் ஆதித்யன் இசையில் வண்ணமயமான அரங்கில் நவீன இசைக்கருவிகளின் துணையோடு தேர்ச்சி பெற்ற பாடகர்களால் பாடல்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.
.
-
6th December 2008, 08:02 PM
#129
Moderator
Diamond Hubber
மெகா டி.வி.யில- `வெள்ளித்திரை.'
சின்னத்திரையில் ஓர் வெள்ளித்திரை
வெள்ளித்திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை நேயர்களே விமர்சிக்கும் புதிய நிகழ்ச்சி `வெள்ளித்திரை.'
செவ்வாய்தோறும் இரவு 7.30 மணிக்கு மெகா டி.வி.யில் ஒளிபரப்பாகும் இந்த புதிய நிகழ்ச்சியில் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ள திரைப்படங்களை பற்றி நேயர்கள் நேரடியாக தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தொலைபேசி வழியாக பரிமாறிக்கொள்கின்றனர்.
நேயர்கள் புதிய திரைப்படங்களை பார்த்த பின்பு அந்த படத்தின் கதை அமைப்பு மற்றும் முடிவு காட்சிகள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமது கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை `மிமிக்ரி' ஹரிகரன் தொகுத்து வழங்குகிறார்.
.
-
6th December 2008, 08:08 PM
#130
Moderator
Diamond Hubber
விஜய் டி.வி.யின -நம்ம வீட்டு கல்யாணம்
பிரபல நட்சத்திரங்களின் திருமணத்தின் போது நடைபெறும் மறக்க முடியாத சம்பவங்கள், நிகழ்வுகளை வழங்குகிறது விஜய் டி.வி.யின் `நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சி.
திருமணம் குறித்து மணமகன், மணமகள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். திருமண வாழ்வில் கிடைக்கும் மனநிறைவு, முரண்பாடுகளையும் விவரிக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு நண்பர்கள், உறவினர்களுடனான தொடர்பு துளிர்த்ததா- துண்டிக்கப்பட்டதா? என்பதையும் நினைவு கூர்கிறார்கள்.
திருமண ஏற்பாடுகளில் நடக்கும் குளறுபடிகள், நகைச்சுவை அனுபவங்கள், மறக்க முடியாத நிகழ்வுகள், மாப்பிள்ளை அசடு வழிதல், திருட்டுத்தனமாக மணப்பெண்ணை சந்திக்க மாப்பிள்ளை எடுக்கும் முயற்சிகள் என்று தங்களின் திருமணத்தைப் பற்றி சகல விஷயத்தையும் பிரபலங்கள் பேச வருகிறார்கள்.
பூர்ணிமா-பாக்கியராஜ் முதல் பா.விஜய், நடிகர் நரேன், அருண்விஜய், மனோஜ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் தங்கள் காதல் திருமணங்கள், பெற்றோர் நிச்சயித்து நடத்திய திருமணங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.
இரவு 7.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
.
Bookmarks