-
6th December 2008, 07:50 PM
#371
Moderator
Diamond Hubber
-
6th December 2008 07:50 PM
# ADS
Circuit advertisement
-
9th December 2008, 09:18 AM
#372
lost interest watching this serial long time ago..
-
14th December 2008, 09:40 PM
#373
Senior Member
Devoted Hubber

Originally Posted by
singgakutty
lost interest watching this serial long time ago..
I can understand why, Selvi and Aras doesn't have the interest Annamalai and Chitthi had.
-
20th December 2008, 04:38 AM
#374
Moderator
Diamond Hubber
செல்வி எடுக்கும் முடிவு
சமூக விரோத கும்பலுக்கு பெரும் சவாலாக இருப்பவள் போலீஸ் அதிகாரி அரசி. அந்த அரசியையே கடத்தி விடுகிறது பயங்கரவாதக் கும்பல். அரசி என்ன ஆனாள்? இனி நீதியை நிலை நாட்டப் போவது யார்? அரசி இல்லாத நிலையில் செல்வியின் போராட்டம் என்ன?
இதுவரை அரசியைப் புயலாகவும், செல்வியைத் தென்றலாகவும் பார்த்து வந்த பார்வையாளர்களுக்கு இனி வருகின்ற எபிசோட்கள் வியப்பை ஏற்படுத்தும். பொது எதிரிகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது செல்விக்கும் ஏற்பட்டுவிட்ட நிலையில், செல்வி மேற்கொள்ளும் முடிவு எதிர்பார்க்க வைக்கும்.
தொடரில் செந்தமிழரசியாகவும், செல்வியாகவும் ராதிகா சரத்குமார் இருவேடங்களில் நடிக்கிறார். அஜய் ரத்னம், சுப்ரமணியம், வேணு அரவிந்த், லியாகத் அலிகான், வாசுவிக்ரம், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, மாளவிகா, காவேரி நடிக்கின்றனர்.
ராஜ்பிரபுவின் திரைக்கதைக்கு வசனம் எழுதுகிறார் லியாகத் அலிகான். கிரண் பின்னணி இசையமைக்கிறார். ராடன் தயாரிப்பில் தொடரை இயக்குபவர் பாலாஜி யாதவ். சன் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
-
5th January 2009, 01:00 PM
#375
Senior Member
Seasoned Hubber
நடிகை ராதிகாவின் ரேடன் டிவியில் கிரியேட்டிவ் ஹெட் ஆக இருந்த சுபா வெங்கட், அப்புறமாய் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு கிரியேட்டிவ் ஹெட் ஆனார். இப்போது மீண்டும் ராதிகாவின் ரேடன் நிறுவனத்துக்கே வந்து விட்டார்.
-
9th January 2009, 09:23 AM
#376
Senior Member
Seasoned Hubber
அரசி கடத்தபட்டு எங்கிருக்காருன்னே யாருக்கும் தெரியலை. செல்வி அரசியாகவும் செல்வியாகவும் மாறி மாறி நடிக்கிறார். சிறந்த கணவன் மனைவிக்கான விருது உங்கள் மகள் செல்வியையும் ஜிஜேயையும் தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.சிங்க பெருமாள் அரசியிடம் விழா ஒன்றில் நீங்கள் ஜட்ஜாக இருந்து விருது கொடுக்க வேண்டும் என்று சம்மதிக்க வைத்து விடுகிறார். அடுத்து அந்த வில்லியின் ஆலோசனைபடி பத்திரிகை அடித்து சிறந்த கணவன் மனைவி என்று உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று செல்வி திகைக்க அவள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறார் மிஸ்டர் சிங்கம்.
அடுத்து சரோஜினி கைரேகை என்று தெரிந்ததும் அவருக்கே தன் டாக்டரைவிட்டு வைரஸ் இன் ஜெக்சனை போட சொல்கிறார் விஸ்வநாதன். மேலும் அரசிக்கு ஒரு மெயில் அனுப்பி கம்ப்யூட்டர் ப்ராப்ளத்தால் அது போகவில்லை என்று ஒருவர் சொல்ல, அந்த மெயிலையும் படித்து கோபம் கொல்கிறார்.
-
10th January 2009, 08:29 AM
#377
Moderator
Diamond Hubber

Originally Posted by
R.Latha
பிருத்வியை மேனகா விரட்டுவது ஆதியை மேலும் உற்சாகமாக்குகிறது.
சிங்கத்தின் உணமைப் பெயர் என்ன?

Originally Posted by
R.Latha
அந்த மெயிலையும் படித்து கோபம் கொல்கிறார்.
-
10th January 2009, 05:19 PM
#378
Senior Member
Veteran Hubber

Originally Posted by
aanaa
சிங்கத்தின் உணமைப் பெயர் என்ன?
சிங்கத்தின் பெயர் லியாகத் அலிகான்.
ஆனால் அவரது செயல்களைப்பார்க்கும்போது 'நரிபெருமாள்' என்று வைத்திருக்கலாம்.
-
10th January 2009, 05:40 PM
#379
Senior Member
Veteran Hubber
இம்முறை திலகவதி, சிங்கபெருமாள் இவர்களை போலீஸ் முட்டாளாக்கி விடுகிறது.
பட்டுப்புடவை சகிதம் ஜி.ஜே.யுடன் செல்வியாகப்புறப்பட்டு காரில் போகும் செல்வியை ஒரு கூட்டம் துப்பாக்கி முனையில் கடத்திப்போய்விடுகிறது. ஜி.ஜே.வுக்கு அது நல்லதம்பியின் ஆட்கள் என்ற சந்தேகம். (இருக்காதா பின்னே?. கொஞ்சநாளைக்கு முன்தானே வீட்டுக்கே வந்து சுட்டான்).
ஆனால் உண்மையில் கடத்தியது போலீஸ்...
பின்னர் விழாவுக்கு அதே செல்வி காக்கி யூனிபார்ஃம் மாட்டிக்கொண்டு அரசியாக வந்து அமர்ந்திருக்க, அரசியாக அமர்ந்திருக்கும் செல்வியிடம், செல்வியைக்கடத்திவிட்டதாக ஜி.ஜே. பதறிக்கொண்டு வந்து சொல்ல, நான் பார்க்கிறேன் என்று கிளபிப்போகும் செல்வி, மீண்டும் பட்டுப்புடவை சகிதம் செல்வியாக அமர்ந்து, நல்லதம்பியின் ஆட்கள் கடத்தியதாகவும் போலீஸ் மீட்டதாகவும் பேட்டி கொடுக்கிறார். (நல்லா குழப்பிட்டேனா?)
நேற்று திடீரென ஒருவன் கமிஷனர் அலுவலகத்துக்குள் நுழைந்து, தனக்கு அரசியைப்பற்றித் தெரியுமென்றும் அதை டி.ஜி.பி.யிடம்தான் சொல்வேனென்றும் சொல்ல, டி.ஜி.பி.யிட்ம் அழைத்துப்போகப்படும் அவன் அவரிடம் ஒரு மினி கேஸட்டைக்கொடுக்க, அதை பிளே பண்ணினால், மலையடிவாரத்தில் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் அரசியைச்சுற்றி ஏகப்பட்ட ஆட்கள். அதில் தலைவனாக வந்து போலீஸை மிரட்டுவது... அட.... ராகவ்.
-
10th January 2009, 07:44 PM
#380
Moderator
Diamond Hubber

Originally Posted by
saradhaa_sn
சிங்கத்தின் பெயர் லியாகத் அலிகான்.


Originally Posted by
saradhaa_sn
ஆனால் அவரது செயல்களைப்பார்க்கும்போது 'நரிபெருமாள்' என்று வைத்திருக்கலாம்.
Bookmarks